நன்கு விற்பனையாகிற எங்கள் வேதபாடங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோரை உலக அளவில் பல முக்கியமான, உணர்வுள்ள வேதத்தின் சத்தியங்களைக் கண்டறிய உதவியுள்ளன. இப்பொழுதும் இது உங்கள் முறையாகும்! இந்த வண்ணமயமான, கண்கவரும் கிராபிக்ஸ் கொண்ட புத்தகங்கள், அற்புதமான உண்மைகள் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய, படிப்படியாகக் கற்கும் முறையை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். இதன்மூலம் வேதத்தின் மிக முக்கியமானப் போதனைகளைத் தெளிவாகவும் முழுமையாகவும் சிறந்தமுறையில் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
இவை தனிப்பட்ட ஆராய்ச்சி அல்லது குழுவாக சேர்ந்து படிப்பதற்கு மிகச்சிறந்ததாகும். இருதயத்தைக் கவருகிற,எழுச்சியூட்டுகிற இந்தப் பாடங்கள் உங்களையும் நீங்கள் யாருடன் பகிர்ந்துகொள்ளுகிறீர்களோ அவர்களுக்கும் விசுவாசம், நம்பிக்கை மற்றும் தெளிவைக் கொடுக்கும்.
உலகத்திலுள்ள அநேகருடைய வாழ்கையை இப்பாடங்கள் மாற்றியுள்ளன; இப்பொழுதும் இது இலங்கையிலும் கிடைக்கப்பெறுகிறது!

நீங்கள் நம்பக்கூடிய ஏதாவது இருக்கிறதா?
இன்றைய நிச்சயமற்ற உலகில் நீங்கள் ஏன் பரிசுத்த வேதாகமத்தை நம்பலாம் என்பதை ஆராய்ந்துப் பாருங்கள்.

பிசாசு எங்கிருந்து வந்தான்? அவன் பரலோகத்தில் ஒரு தேவதூதனாக இருந்தானா? அவன் எப்படி வீழ்ந்து, பிசாசாக மாறினான்?

நிச்சயமான மரணத்திலிருந்து மீட்பு
இரட்சிப்பின் பரிசாகிய மனிதகுலத்திற்கான தேவனுடைய மீட்பின் திட்டம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

மகிழ்ச்சியான திருமணத்திற்கான திறவுகோல்கள்!
உங்களுடைய திருமண வாழ்கை மகிழ்ச்சியானதாக உள்ளதா? இல்லை என்றால், ஏன் இல்லை? பரிசுத்த வேதாகமம் போதிக்கும் திருமண நியமங்கள் ஏதேனும் இன்றைக்குப் பொருந்துமா?

ஏன் பத்து கட்டளைகள் கல்லில் எழுதப்பட்டுள்ளன? கட்டளைகள் மாற்றப்பட்டதா? நாம் இன்னும் கட்டளைகளின் கீழ் இருக்கிறோமா?

சரித்திரத்தின் தொலைந்துபோன நாள்!
ஓய்வுநாள் நான்காவது கட்டளையாகவும், படைப்பின் நினைவுச் சின்னமாகவும் உள்ளது.

முழுக்கு ஞானஸ்நானம் என்பது தேவனுடன் ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு அடையாளமாகும்.

மரித்தவர்கள் உண்மையில் மரித்தவர்களா?
நீங்கள் மரித்தப்பின் என்ன நடக்கும்? ஆத்துமா என்றால் என்ன, ஒரு ஆத்துமா மரிக்க முடியுமா? எல்லோரும் பரலோகத்திற்கு செல்கிறார்களா? நான் பேசலாமா…

பிசாசு நரகத்திற்குப் பொறுப்பாளியா?
நரகத்தை ஆளுவது யார்? இப்போது நரகத்தில் மக்கள் இருக்கிறார்களா? நரகம் எப்படி இருக்கும், அது எவ்வளவு பெரியது? தேவன் நரகத்தை உருவாக்கினாரா…

வெளிப்படுத்தல் 20-ஆம் அதிகாரத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் மற்றும் கிறிஸ்து திரும்பியப்பின் நடக்கும் நிகழ்வுகள்.

தேவனுடைய இலவச சுகாதார திட்டம்!
வேதாகமத்தின் உணவு அல்லது வேதாகமத்தின் சுகாதாரத் திட்டம் என ஏதேனும் உள்ளதா? தேவனிடம் நமக்கான உணவுப் பட்டியல் இருக்கிறதா? …

கிரியையினால் இரட்சிப்பை சம்பாதிக்க முடியுமா?
விசுவாசத்தின் மூலம் கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டால், நாம் ஏன் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

அந்திக்கிறிஸ்து பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது? அந்திக்கிறிஸ்துவைக் குறித்த விளக்கம் அல்லது அதன் பண்புகளைப் பற்றி கூறுகிறதா? தானியேலா…

விண்வெளியிலிருந்து தூதனின் செய்திகள்!
வெளிப்படுத்தல் 14-ஆம் அதிகாரத்தில் உள்ள “மூன்று தூதர்களின் செய்தி” இன்றைய காலத்திற்கான கடுமையான எச்சரிக்கைகளைக் கொண்டிருக்கிறது.

இன்று ஆசரிப்புக்கூடாரம் நமக்கு என்ன அர்த்தம் தருகிறது? எதற்காக ஆசரிப்புக்கூடாரம் பற்றின விவரங்கள் வேதாகமத்தில் இடம் பிடித்துள்ளது?

சரியான நேரத்தில் தீர்க்கதரிசன நியமங்கள் வெளிப்பட்டன!
தானியல் 8 மற்றும் 9 அதிகாரங்களில் உள்ள முக்கிய கால தீர்க்கதரிசனங்களின் உண்மையை வெளிப்படுத்தும் பார்வை.

எச்சரிக்கை: பிசாசு நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை! மிருகத்தின் முத்திரை என்பது மைக்ரோசிப் அல்லது பச்சை குத்துதல் அல்ல. ஆனாலும் …

வேதாகம தீர்க்கதரிசனத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள்!
வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களுடன் அமெரிக்கா எங்கு பொருந்துகிறது என்பதைப் பார்ப்போமா…

வெளிப்படுத்துதல் 17-ஆம் அதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பாபிலோன் என்று அழைக்கப்படும் “இரத்தாம்பர வேசியை” வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்துவின் மணவாட்டி வேதாகமம் முழுவதும் காட்சியளித்து கடைசிக்கால தீர்க்கதரிசனங்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறாள்…

சோதிடர்களையும் மனம்சார்ந்த சக்திகள் கொண்டவர்களையும் தேவன் ஏவுகிறாரா?
உளவியல் நிபுணர்கள் கூறும் கணிப்புகளுக்குப் பின்னால் தேவன் இருக்கிறாரா? தவறாக வழிநடத்தப்பட வேண்டாம்.

தேவனுடைய வாக்குறுதிகளால் ஆதரிக்கப்படும் நிதி பாதுகாப்பிற்கான வேதாகமத்தின் விதிமுறைகள்.

தேவனால் மன்னிக்க முடியாத பாவம் ஒன்று இருப்பதாக வேதாகமம் சொல்கிறது. அது என்னவாக இருக்கும்?



