வேதபாடங்கள் 19
பஞ்சாயத்துக் குழு உள்ளே இருக்கிறது! தீர்ப்பு வாசிக்கப்பட்டது …! வழக்கு மூடப்பட்டது. சில நினைவுகள் மற்றதைக் காட்டிலும் அதிகம் தெளிவாக இருக்கும்.

இதுவரையிலும் பூமியில் வசித்திருந்த ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையும், அனைத்தைம் அறிகிற தேவனுடைய பார்வைக்குமுன் (2 கொரிந்தியர் 5:10)
திருப்பிப் பார்க்கப்படுகிற அந்த நாள் வேகமாக வந்துகொண்டிருக்கிறது. எனினும் இது உங்களை அச்சுறுத்த வேண்டியதில்லை. இலட்சக்கணக்கானோர் இந்த வேதபாடத்தின் நியாயத்தீர்ப்புச் செய்தியை நல்லசெய்தியென்று கண்டிருக்கிறார்கள். வெளிப்படுத்தல் புத்தகம், மாபெரும் நியாயத்தீர்ப்பை குறிப்பிடுகிற நான்கு இடங்களிலும் தேவனுக்கு துதி செலுத்தி நன்றி கூறுகிறது. வேதாகமம் ஆயிரம் தடவைகளுக்கும்மேல் நியாயத்தீர்ப்பைக் குறித்து பேசுகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? ஏறக்குறைய வேதாகமத்தை எழுதிய ஒவ்வொருவரும் அதை குறிப்பிடுகிறார்கள். எனவே இதன் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்படவில்லை. வரும் சில நிமிடங்களுக்கு, நெகிழப்பட்டிருக்கிற இந்தப் பொருளைக் குறித்தவைகளுக்கு நம் கண்களை நாம் திறக்கப்போகிறோம். குறிப்பு : இறுதி நியாயத்தீர்ப்பில் மூன்று கட்டங்கள் உள்ளன. இந்த பாடத்தை படிக்கும்போது இதனை கவனிக்கவும்.
இறுதி நியாயத்தீர்ப்பின் முதல் கட்டம்
1. 1844ல் துவங்கிய பரலோக நியாயத்தீர்ப்பைக்குறித்த தீர்க்கதரிசனத்தை காபிரியேல் தூதன் தானியேலிடம் கொடுத்தான். அதன் முந்தைய பகுதி வருகைக்குமுன்பான நியாயத்தீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அது இயேசுவின் இரண்டாம் வருகைக்குமுன் நடக்கிறது. முதல் கட்ட நியாயத்தீர்ப்பில் யார் தீர்க்கப்படுகிறார்கள்? அது எப்போது முடியும்?
“நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குங்காலமாயிருக்கிறது;” – 1 பேதுரு 4:17;
“ஆநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” – வெளிப்படுத்தல் 22:11,12 (1 தீமோத்தேயு 3:15 யும் பார்க்கவும்).
பதில்: இது இயேசுவின் இரண்டாம் வருகைக்கு சற்றுமுன்பு முடிவடைகிறது. “தேவனுடைய சபை” – தங்களை கிறிஸ்தவர்களென்று அழைத்துக்கொண்ட அனைவருடைய (உயிரோடிருக்கிற மற்றும் மரித்த) வாழ்க்கையும், வருகைக்கு முந்திய நியாயத்தீர்ப்பில் பங்குபெறுகிறது. (1844 ம் வருடத்தைக்குறித்து வேதபாடம் 18 ல் விளக்கப்பட்டிருக்கிறது.)

2. நியாயத்தீர்ப்பில் யார் தலைமை தாங்குகிறார்கள்? நமக்காக வாதாடும் வழக்கறிஞர் யார்? நீதிபதி யார்? குற்றப்படுத்துகிறவர் யார்? சாட்சிகள் யார்?
“நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்;… அவருடைய சிங்காசனம் அக்கினிஜீவாலையுமாயிருந்தது …. நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது” – தானியேல் 7:9,10; “நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” – 1 யோவான் 2:1; “பிதாவானவர் … நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புகொடுத்திருக்கிறார்” – யோவான் 5:22; “பிசாசு … இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்” – வெளிப்படுத்தல் 12:9,10; “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது” – வெளிப்படுத்தல் 3:14 (கொலோசெயர் 1:12-15ஐ பார்க்கவும்.)
பதில்: நீண்ட ஆயுசுள்ளவரான பிதாவாகிய தேவன் நியாயத்தீர்ப்புக்குத் தலைமை தாங்குகிறார். அவர் உங்களை அதிகம் நேசிக்கிறார் (யோவான் 16:27). உங்களைக் குற்றப்படுத்தும் ஒரே நபர் சாத்தான். உங்களை நேசிக்கிற, உங்களுடைய மிகச் சிறந்த நண்பராயிருக்கிற இயேசு பரலோக நீதிமான்றத்தில் உங்கள் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும், சாட்சியாகவும் இருக்கிறார். நியாயத்தீர்ப்பு பரிசுத்தவான்களுக்கு சாதகமாக கொடுக்கப்படும் என்று அவர் வாக்குக்கொடுக்கிறார்.
3. வருகைக்கு முந்தின நியாயத்தீர்ப்பில் சாட்சிகளின் ஆதாரம் எது? எதன்படி அனைவரும் தீர்க்கப்படுகிறார்கள்? ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் தேவன் ஏற்கனவே அறிந்திருக்கிறாரே, பின்னர் ஏன் ஒரு நியாயத்தீர்ப்பு?
“நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது” – தானியேல் 7:9,10; “புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்” – வெளிப்படுத்தல் 20:12; “சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய்” – யாக்கோபு 2:12; “நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்” – 1 கொரிந்தியர் 4:9.
பதில்: நீதிமன்றத்திற்கான சான்றுகள், ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையும் பதிவுசெய்யப்பட்டிருக்கிற புத்தகங்களிலிருந்து வருகின்றன.

உண்மையுள்ள மக்களுக்கு, அவர்களுடைய ஜெபம், மனந்திரும்புதல் மற்றும் பாவமன்னிப்பைக் குறித்த பதிவுகள், அனைவரும் காணும்படி அங்கே இருக்கும்.
மாறின வாழ்க்கை வாழ கிறிஸ்தவர்களை தேவனுடைய வல்லமை தகுதிப்படுத்தியது என்பதை இந்தப் பதிவுகள் நிரூபிக்கும். தேவன் தம்முடைய பரிசுத்தவான்களில் பிரியம்கொண்டு, அவர்களுடைய வாழ்க்கையின் சான்றுகளை பகிர்ந்துகொள்ளுவதில் இன்பம் கொள்வார். “கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1) என்கிறதை நியாயத்தீர்ப்பு உறுதிப்படுத்தும்.
பத்து கற்பனைகளே நியாயத்தீர்ப்பில் தேவனுயை அளவுகோல் (யாக்கோபு 2:10-12); அவருடைய பிரமாணத்தை மீறுவது பாவம் (1 யோவான் 3:4); நியாயப்பிரமாணத்தின் நீதி இயேசுவினால் அவருடைய மக்கள் அனைவைருக்காகவும் நிறைவேற்றப்படும் (ரோமர் 8:3,4); இது கூடாத காரியம் என்று சொல்லுவது இயேசுவின் வார்த்தையையும் வல்லமையையும் சந்தேகிப்பதாகும்.
இந்த நியாயத்தீர்ப்பு தேவனுக்கு அறிவிப்பதற்காக அல்ல. அவருக்கு ஏற்கனவே முழுவதும் தெரியும் (2 தீமோத்தேயு 2:19). பாவத்தினால் தரந்தாழ்ந்துபோன உலகத்தின் அனைத்து இடங்களிலுமிருந்து மீட்கப்பட்டவர்கள் பரலோகத்திற்கு வருவார்கள். மீண்டும் பாவத்தை துவக்கக்கூடிய எவரையும் தேவனுடைய இராஜ்யத்திற்குள் அனுமதிப்பதற்கு தேவதூதர்களும் விழுந்துபோகாத உலகத்தின் குடிகளும் மிகவும் தயங்குவார்கள். எனவே இந்த நியாயத்தீர்ப்பு மீட்கப்பட்டவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு குறிப்பையும் அவர்களுக்குக் காண்பித்து, ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும். தேவன் நியாயமற்றவர், இரக்கமற்றவர், அன்பற்றவர், உண்மையற்றவர் என்று சொல்லுவதே எப்போதும் சாத்தானுடைய மெய்யான நோக்கமாயிருக்கிறது. தேவன் பாவிகளிடம் எவ்விதம் மிக அதிக பொறுடையோடிருந்தார் என்கிறதை அண்ட சராசரத்திலிருக்கும் அனைவரும் தாங்களாகவே காணவேண்டுமென்பதை அவனுடைய குற்றச்சாட்டு இன்னும் அதிக அவசியமாக்குகிறது. தேவனுடைய குணத்தை நிரூபிப்பதே நியாயத்தீர்ப்பின் முதன்மை நோக்கம் (வெளிப்படுத்தல் 11:16-19; 15:2-4; 16:5,7; 19:1,2; தானியேல் 4:36,37). தேவன் நியாயத்தீர்ப்பை நடத்துகிற விதத்தைக்குறித்து அவருக்கு எவ்விதம் துதியும் மகிமையும் கொடுக்கப்படுகிறது என்பதை கவனியுங்கள்.

4. வருகைக்கு முந்தைய நியாத்தீர்ப்பில் ஒரு நபருடைய வாழ்க்கையின் எந்த பகுதி கவனத்தில் கொள்ளப்படுகிறது? எது உறுதிப்படுத்தப்படுகிறது? அவர்களுடைய பலன்கள் எவ்விதம் தீர்மானிக்கப்படுகிறது?
“ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்” – பிரசங்கி 12:14;
“இரண்டையும் (கோதுமையையும் களையையும்) அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.” “மனுஷகுமராரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் … சேர்த்து” – மத்தேயு 13:29, 41;
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” – வெளிப்படுத்தல் 22:12.
பதில்: இரகசிய நினைவுகளும் செயல்களும் உட்பட, வாழ்க்கையின் ஒவ்வொரு விவரமும் திருப்பிப் பார்க்கப்படும். இதனால் இந்த முதல் கட்ட நியாயத்தீர்ப்பு நுட்ப நியாய விசாரணை என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களாக தங்களை அழைத்துக்கொண்டவர்களில் யார் யார் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை நியாயத்தீர்ப்பு உறுதிப்படுத்தும். இந்த வருகைக்கு முந்தைய நியாயத்தீர்ப்பில் பங்கெடுக்கக்கூடாத அத்தனைபேரும் சந்தேகத்திற்கிடமின்றி இரட்சிப்பை இழந்தவர்களாக உறுதிபண்ணப்படுவார்கள். நாம் கிருபையினால் இரட்சிக்கப்படும்போதும், கிரியைகள் நடக்கைகளின் அடிப்படையிலேயே பலன் கொடுக்கப்படும். இது கிறிஸ்தவனுடைய விசுவாசத்தின் உண்மையை நிரூபிக்கிறது (யாக்கோபு 2:26).
இறுதி நியாயத்தீர்ப்பின் இரண்டாவது கட்டம்
5. வெளிப்படுத்தல் 20ன் ஆயிர வருட காலத்தில் எந்த கூட்டத்தார் பரலோக நியாயத்தீர்ப்பில் பங்கெடுக்கிறார்கள்? இந்த இரண்டாலது கட்ட நியாயத்தீர்ப்பின் நோக்கமென்ன?
“பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? … தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா?” 1 கொரிந்தியர் 6:2,3; “நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது” – வெளிப்படுத்தல் 20:4.
பதில்: கிறிஸ்துவினால் இரண்டாவது வருகையில் மேகங்கள்மேல் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படப்போகிற யுகங்கள் நெடுகிலும் வாழ்ந்த

பரிசுத்தவான்கள் இரண்டாவது கட்ட நியாயத்தீர்ப்பில் பங்கெடுப்பார்கள். தாங்கள் மிக அதிகம் நேசித்திருந்து கொலைசெய்யப்பட்ட தங்களுடைய மகன் பரலோகத்தில் இல்லையென்கிறதை ஒரு குடும்பம் காண்கிறது.
ஆனால் கொலை செய்தவன் பரலோகத்தில் இருக்கிறான்! சந்தேகத்திற்கிடமின்றி அவர்களுக்கு சில பதில்கள் கொடுக்கப்பட வேண்டும். இந்த இரண்டாம் கட்ட நியாயத்தீர்ப்பு நீதிமான்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும். இழந்துபோன (சாத்தானும் அவனுடைய தூதரும் உட்பட) ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையும் மிகவும் கவனமாக நீதிமான்களால் திருப்பிப் பார்க்கப்படும். ஒவ்வொருவருக்கும் பலனாக கொடுக்கப்பட்ட இயேசுவின் தீர்மானத்தை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். நியாயத்தீர்ப்பு வெறும் தன்னிச்சையான செயலாக இல்லாமல், இயேசுவையோ அல்லது வேறொரு அதிபதியையோ சேவிக்கும்படி மக்கள் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை உறுதியாக்குவதே என்பது அனைவருக்கும் வெளிப்படையாகும் (வெளிப்படுத்தல் 22:11,12).
(ஆயிர வருடங்களைக்குறித்து பாடம் 12 ல் பார்க்கவும்).
இறுதி நியாயத்தீர்ப்பின் மூன்றாவது கட்டம்
6. இந்த மூன்றாவது கட்ட நியாயத்தீர்ப்பு எங்கே எப்போது நடக்கிறது? இந்த கட்டத்தில் யார் புதியதாக இருப்பார்கள்?
“அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்;” “என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.” “தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்;” – சகரியா 14:4,5,10; “யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்;” – வெளிப்படுத்தல் 21:2; “அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் … மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்பட்டான்;” – வெளிப்படுத்தல் 20:7,8.
பதில்: மூன்றாவது கட்ட நியாயத்தீர்ப்பு வெளிப்படுத்தல் 20 ல் கொடுக்கப்பட்டுள்ள ஆயிர வருட அரசாட்சிக்குப்பின், இயேசு பரிசுத்த நகரத்தோடு பூமிக்குத் திரும்பினபின்னர் நடக்கும்.

பிசாசும் அவனுடைய தூதரும் உட்பட இதுவரை வாழ்ந்திருந்த துன்மார்க்கர் அதில் இருப்பார்கள். ஆயிர வருடங்களின் முடிவில் அனைத்து யுகங்களிலும் வாழ்ந்திருந்த துன்மார்க்கர் உயிரோடு எழுப்பப்படுவார்கள் (வெளிப்படுத்தல் 20:5). சாத்தான் உடனடியாக அவர்களை வஞ்சிக்க வல்லமையாக பிரச்சாரம் பண்ணுவான். பரிசுத்த நகரத்தை பிடித்துவிடலாம் என்று பூமியிலிருக்கும் அனைவரையும் நம்பவைப்பதில் அவன் ஆச்சரியப்படும்விதமாக வெற்றியடைகிறான்.

7. அதற்கடுத்து என்ன சம்பவிக்கும்?
“அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைத்துகொண்டார்கள்;” – வெளிப்படுத்தல் 20:9.
பதில்: துன்மார்க்கர் நகரத்தை வளைத்து அதை தாக்க ஆயத்தப்படுகிறார்கள்.
8. அவர்களுடைய யுத்த திட்டத்தை தடுப்பது எது? அதன் விளைவு என்ன?
“மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேநனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்” – வெளிப்படுத்தல் 20:12; “நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்” – 2 கொரிந்தியர் 5:10; “முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” – ரோமர் 14:11,12.
பதில்: எதிர்பாராதவிதமாகவும் எச்சரிப்பின்றியும் ஏறக்குறைய முடங்கச் செய்யும் பிரகாசத்தோடு (வெளிப்படுத்தல் 19:11-21) நகரத்தின்மேல் தேவன் காணப்படுவார். சத்தியத்தின் நேரம் வந்தது. சாத்தானும் அவனுடைய தூதர்களும் உட்பட, உலகத்தின் துவக்கத்திலிருந்து இரட்சிப்பை இழந்துபோன ஒவ்வொரு ஆத்துமாவும் நியாயத்தீர்ப்பில் இப்போது தேவனை சந்திக்கும். ஒவ்வொரு கண்ணும் இராஜாதி இராஜாவின்மேல் பதிந்திருக்கிறது (வெளிப்படுத்தல் 20:12).
தன்னுடைய சொந்த வாழ்க்கை திருப்பிக் காட்டப்படுவதை ஒவ்வொரு நபரும் காண்கிறான்.
பின்னர் இரட்சிப்பை இழந்துபோன ஒவ்வொரு ஆத்துமாவும், தன் சொந்த வாழ்க்கை சரித்திரத்தை -மனந்திரும்பும்படி அழைத்த தேவனுடைய நிலையான அன்பான மன்றாட்டுகளை, மனதை உந்திய அவருடைய அமர்ந்த மெல்லிய சத்தத்தை, பலவேளைகளில் வந்த அச்சமூட்டுகிற உணர்த்துதல்களை, மீண்டும் மீண்டும் பதிலளிக்க மறுத்ததை -அனைத்தையும் பார்க்கும். அவை அனைத்தும் அங்கே இருக்கின்றன. அதன் துல்லியம் நிகரற்றது! அதன் உண்மைகள் மறுக்கக்கூடாதவை! துன்மார்க்கர் முழுமையாக புரிந்துகொள்ளவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அனைத்து காரியங்களும் தெளிவாக்கப்படுவதற்கு வேண்டிய ஒவ்வொரு விவரத்தையும் அவர் ஏற்பாடு செய்வார். புத்தகங்களும் பதிவுகளும் அங்கே இருக்கின்றன.
மூடி மறைப்பதே இல்லை.
விண்வெளியில் தேவன் எதையும் மூடிவைப்பதில்லை. எந்த சான்றையும் அவர் அழிக்கவில்லை; எந்த பதிவையும் துடைக்கவில்லை;

மறைப்பதற்கு அங்கே எதுவுமே இல்லை. அனைத்தும் வெளிப்படையாக இருக்கிறது. இந்த நடக்கைகளை நல்ல மற்றும் அனைத்து தீய தூதர்களோடு பூமியில் இதுவரையில் வாழ்ந்திருந்த ஒவ்வொரு நபரும் காண்பார்கள்.
இழந்துபோனவர்கள் தங்கள் முழங்காலில் விழுகிறார்கள்
சடிதியில் ஒரு அசைவு வருகிறது. தேவன் தன்னிடம் மிக நேர்மையாக நடந்துகொண்டார் என்கிறதை முழங்காலில் விழுந்து அறிக்கையிட்டு, தான் செய்த குற்றத்தை ஒரு ஆத்துமா வெளிப்படையாக ஒத்துக்கொள்ளுகிறது. அவனுடைய சொந்த பிடிவாதமான பெருமையே பதில் தராதபடி அவனை தடுத்திருந்தது. இப்போது ஒவ்வொரு பக்கத்திலும் மக்களும் தீய தூதர்களும் அவ்விதமே முழங்காலில் விழுகிறார்கள். முடிவில் ஏறக்குறைய பெரிய அசைவாக, சாத்தான் உட்பட தீய தூதர்கள் அனைவரும் தேவன்முன் முகங்குப்புற விழுகிறார்கள் (ரோமர் 14:11). வெளிப்படையாக தேவன்மேல் சாட்டின பொய்குற்றச்சாட்டுகளனைத்தையும் விலக்கி, அவருடைய அன்பான நேர்மையான இரக்கமுள்ள நடத்துதலுக்கு சாட்சி பகருகிறார்கள்.
நியாயத்தீர்ப்பு நீதியானதே என்று அனைவரும் அறிக்கையிடுகின்றனர்
தங்கள்மேல் அறிவிக்கப்பட்ட மரணத்தீர்ப்பு நீதியானதென்றும், பாவத்தை கையாளக்கூடிய ஒரே பாதுகாப்பான வழி அதுதான் என்றும் அனைவரும் அறிக்கையிடுகிறார்கள். இழந்துபோன ஒவ்வொருவரைக்குறித்தும்: “நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்” (ஒசியா 13:9) என்று சொல்லமுடியும். தேவன் பிரபஞ்சத்திற்குமுன்பு இப்போது உண்மையானவராக நிற்கிறார். சாத்தானுடைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெளியாக்கப்பட்டு, இருதய கடினமடைந்த பாவியினுடைய பொய்களே அவைகள் என்று சந்தேகத்திற்கிடமின்றி அறிக்கை செய்யப்படுகின்றன.
9. என்ன முடிவான நடவடிக்கை அண்டசராசரத்திலிருந்தும் பாவத்தை அழித்து, நீதிமான்களுக்கு பாதுகாப்பான வீட்டையும் எதிர்காலத்தையும் ஏற்பாடு செய்யும்?

“அவர்கள்….. பரிசுத்தவான்களுடைய பாளையத்தை … வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது … அவர்களை மோசம்போக்கின பிசாசானவன் … அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்” – வெளிப்படுத்தல் 20:9,10; “அவர்கள் (துன்மார்க்கர்) உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள்” – மல்கியா 4:3; “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” – ஏசாயா 65:17; “நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” – 2 பேதுரு 3:13; “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது … அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” – வெளிப்படுத்தல் 21:3.
பதில்: வானத்திலிருந்து வரும் அக்கினி துன்மார்க்கர்மேல் விழுகிறது. இந்த அக்கினி பாவத்தையும் பாவிகளையும் பிரபஞ்சத்திலிருந்து முழுமையாக அழிக்கும். (நகர அக்கினியைக் குறித்த விவரங்களுக்கு பாடம் 11 படிக்கவும்.) இது தேவனுடைய மக்களுக்கு நிஜமாகவே மிக ஆழ்ந்த துக்கமும் வேதனையும் நிறைந்த நேரமாயிருக்கும். தாங்கள் வருடங்களாக நேசித்திருந்து பாதுகாத்திருந்தவர்களுக்காக தூதர்கள் பெரும்பாலும் கண்ணீர் சிந்துவார்கள். கிறிஸ்துதாமும் சந்தேகத்திற்கிடமின்றி தாம் நேசித்திருந்து நீண்ட காலம் போராடின மக்களுக்காக கண்ணீர் விடுவார். அந்த பயமுறுத்தும் மணித்துளிகளில் பாவத்தின் பயங்கர விலையைக்குறித்த நம்முடைய அன்பான பிதாவாகிய தேவனின் வேதனை விவரிக்கக்கூடாததாயிருக்கும்.
புதிய வானங்களும் பூமியும்
பின்னர் ஆண்டவர் மீட்கப்பட்ட தமது மக்களின் கண்களிலிருந்து கண்ணீரைத் துடைத்து (வெளிப்படுத்தல் 21:4),

புதிய வானங்களையும் தம்முடைய பரிசுத்தவான்களுக்காக வர்ணனைக்கு அப்பாற்பட்ட இனிமையான புதிய பூமியையும் உண்டாக்குவார். அவர் தாமும் தமது மக்களோடு நித்தியத்திற்கும் வாசம் செய்வார். சிந்திக்கக்கூடிய எந்த நபரும் இதை இழந்துபோக விரும்பமாட்டார்.

10. இப்பிரபஞ்கத்திலிருந்து பாவத்தை அழித்து பூரணமான இணக்கத்தை மீண்டும் கொண்டுவரும் தேவனுடைய திட்டத்தையும் அவருடைய நியாயத்தீர்ப்பையும், பழைய ஏற்பாட்டின் பூமிக்குரிய ஆசரிப்புக்கூடாரத்தின்
இப்பிரபஞ்கத்திலிருந்து பாவத்தை அழித்து பூரணமான இணக்கத்தை மீண்டும் கொண்டுவரும் தேவனுடைய திட்டத்தையும் அவருடைய நியாயத்தீர்ப்பையும், பழைய ஏற்பாட்டின் பூமிக்குரிய ஆசரிப்புக்கூடாரத்தின்
பதில்: பாடம் 2 ல் சாத்தான் எவ்விதம் தேவனைக் குற்றப்படுத்தி, அவருக்கு சவால்விட்டு, தொற்று வியாதியான பாவத்தை பிரபஞ்சத்திற்குள் கொண்டுவந்தான் என்கிறதை நாம் படித்தோம். தேவன் எவ்விதம் இந்த பாவ பிரச்சனையை கையாண்டு, ஒரு நிவாரணத்தின் வழியாக பிரபஞ்சத்தில் இணக்கத்தை திரும்பக் கொண்டுவருவார் என்பதை முற்கால இஸ்ரவேலரின் பாவநிவாரணநாள் அடையாளங்கள் வழியாக போதித்தது. (பாவநிவாரணம் என்றால் “அனைத்தையும் தெய்வீக இணக்கத்திற்குள் கொண்டுவருவது” அல்லது “பாவத்திற்கு நிவாரணம்” என்று பொருள்).
தேவனுடைய பிரபஞ்சத்தின் தலைமையகமாகிய பரலோக ஆசரிப்புக் கூடாரத்தின் மெய்யான பாவநிவாரண சம்பவங்களை இந்த ஐந்து அடையாளமான படிகளும் காட்டுகின்றன. மேலே கொடுக்கப்பட்ட அடையாளங்கள் கீழே இருக்கும் மெய்யான சம்பவங்களின் ஒப்புமைகளே. தேவன் எவ்விதம் இந்த மாபெரும் பாவநிவாரண சம்பவங்களை தெளிவாக அடையாளப்படுத்தியிருக்கிறார் என்பதை கவனியுங்கள். அ. மனிதனின் பதிலாளியான இயேசுவின் தியாக மரணம் (1 கொரிந்தியர் 15:3; 5:7)
- இயேசு நம்முடைய மகா பிரதான ஆசாரியராக தேவ சாயலை மக்களில் திரும்பவும் நிலைநிறுத்துகிறார் (எபிரெயர் 4:14-16; ரோமர் 8:29).
- வாழ்க்கைகள் நல்லவைகளா கெட்டவைகளா என்பதை உறுதிசெய்யும் பதிவுகள் நியாயத்தீர்ப்பில் கொண்டுவரப்பட்டு, பின்னர் பாவபதிவுகள் பரலோக ஆசாரிப்புக்கூடாரத்திலிருந்து அகற்றப்படுகின்றன (வெளிப்படுத்தல் 20:12; அப்போஸ்தலர் 3:19-21).
- பாவத்தை துவக்கி, மற்றவர்களையும் பாவம் செய்ய நடத்தின குற்றம் சாத்தான்மேல் வைக்கப்படுகிறது (1 யோவான் 3:8; வெளிப்படுத்தல் 22:12).
- சாத்தான் வனாந்தரத்திற்கு துரத்தப்படுகிறான் (வெளிப்படுத்தல் 20ன் ஆயிர வருட காலம்).
- சாத்தானும், பாவமும், பாவிகளும் நிரந்தரமாக அழிக்கப்படுகிறார்கள் (வெளிப்படுத்தல் 20:10; 21:8; சங்கீதம் 37:10,20; நாகூம் 1:9).
- தேவமக்களுக்காக புதிய பூமி சிருஷ்டிக்கப்படுகிறது. பாவத்தினால் இழந்துபோன அனைத்தும் ஆண்டவருடைய பரிசுத்தவான்களுக்கு திரும்பவும் கொடுக்கப்படுகிறது (2 பேதுரு 3:13; அப்போஸ்தலர் 3:20,21).
பாவம் மீண்டும் எழும்பாது என்கிற உறுதியோடு, பாவத்திற்கு முன்னிருந்த நிலையில் பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் திரும்பவும் நிலைநிறுத்தப்படும்வரை பாவநிவாரணம் முழுமையடையாது.
11. இந்த வேதபாடத்தில் வெளிக்காட்டப்பட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறவைகளின் அடிப்படையில் நியாயத்தீர்ப்பைக்குறித்த நல்ல செய்தி என்ன?

பதில்:
- தேவனும், பாவ பிரச்சனையை அவர் கையாண்ட விதமும் அண்ட சராசரத்திற்கும் முன்பாக நிரூபிக்கப்படும். இதுதான் நியாயத்தீர்ப்பின் மைய நோக்கம்.
- நியாயத்தீர்ப்பு தேவனுடைய மக்களுக்குக் சாதகமாக தீர்மானிக்கப்படும்.
- நீதிமான்கள் நித்தியத்திற்கும் பாவத்திலிருந்து பாதுகாப்பாயிருப்பார்கள்.
- பாவம் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் ஒருபோதும் எழும்பாது.
- ஆதாமும் ஏவாளும் பாவத்தினால் இழந்துபோன அனைத்தும் மீட்கப்பட்டவர்களுக்கு திரும்பக் கொடுக்கப்படும்.
- துன்மார்க்கர் முடிவில்லாது வாதிக்கப்படமாட்டார்கள். மாறாக சாம்பலாவார்கள்.
- நியாயத்தீர்ப்பில் இயேசுதான் நமது நீதிபதி, நமது வழக்கறிஞர், நமது சாட்சி.
- பிதாவும் குமாரனும் நம்மை நேசிக்கிறார்கள். பிசாசுதான் நம்மைக் குற்றப்படுத்துகிறவன்.
- சுவிசேஷத்தின் கிருபை தங்கள் வாழ்க்கையை எவ்விதம் மாற்றியிருக்கிறது என்று காண்பிக்கிற பரலோகப் புத்தகங்கள் நீதிமான்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- கிறிஸ்து இயேசுவிற்குள் இருக்கிறவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பில்லை என்கிற சத்தியத்தை நியாயத்தீர்ப்பு மாத்திரமே தெளிவாக்கும்.
- தேவன் அநீதியானவர் என்று ஒரு ஆத்துமாகூட (மனிதனானாலும் தூதனானாலும்) குற்றப்படுத்தாது. தேவன் அனைவரோடும் நடந்துகொண்டவிதத்தில் மிகவும் அன்பானவராகவும், நீதியுள்ளவராகவும், கிருபையுள்ளவராகவும், தயவுள்ளவராகவும் இருந்தார் என்பது ஒருமனதாக ஒப்புகொள்ளப்படும்.

12. நீங்கள் தேவனை உங்கள் வாழ்க்கையில் நுழையும்படி வருந்தி அழைத்து, உங்களுடனேயே தங்க அனுமதிப்பீர்களானால், பரலோக நியாயத்தீர்ப்பில் உங்களை விடுதலைபண்ணுவதாக அவர் வாக்குக் கொடுக்கிறார்.
உங்கள் வாழ்க்கையில் நுழைய இன்றைக்கு அவரை வருந்தி அழைப்பீர்களா?
உங்கள் பதில்: ________________________________________
சிந்தனைக் கேள்விகள்
1. இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவதற்கும் என் ஆண்டவராக ஒப்புக்கொள்ளுவதற்கும் வேறுபாடு இருக்கிறதா?
பதில்: கணிசமான வேறுபாடு இருக்கிறது. அவரை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது பாவத்திலிருந்தும் பாவதண்டனையிலிருந்தும் அவர் என்னை காப்பாற்றி, புது பிறப்பைக் கொடுக்கிறார். அவர் என்னை பாவியிலிருந்து பரிசுத்தவானாக மாற்றுகிறார். இந்த மாற்றம் மகிமையுள்ள அற்புதமும், இரட்சிப்பிற்கு அத்தியாவசியமானதுமாயிருக்கிறது. இது இல்லாது எவரும் இரட்சிக்கப்படமுடியாது. எனினும் இந்த இடத்தோடு இயேசு நின்றுவிடுவதில்லை. நான் இப்போது பிறந்திருக்கிறேன். ஆனால் அவருடைய திட்டம், அவரைப்போல நான் வளரவேண்டுமென்பதே (எபேசியர் 4:13). அவரை அனுதினமும் என் வாழ்க்கையின் அதிபதியாகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும்போது, கிருபையிலும் கிறிஸ்துவின் குணத்திலும் கிறிஸ்துவின் அளவுவரையிலும் வளர அவர் தமது அற்புதங்களின் வழியாக எனக்கு உதவுகிறார் (2 பேதுரு 3:18).
என்னுடைய சொந்த வழியை நான் விரும்புவதுதான் பிரச்சனை
என் சொந்த வழியிலேயே ஓட நான் விரும்புவதுதான் பிரச்சனையே. இதை வேதாகமம் “பாவம்” அல்லது “அக்கிரமம்” என்று அழைக்கிறது (ஏசாயா 53:6). இயேசுவை என் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளுவது மிகவும் முக்கியம். புதிய ஏற்பாடு அவரை “ஆண்டவர்” என்று 766 முறைகள் குறிப்பிடுகிறது. அப்போஸ்தலரில் மாத்திரம் 110 முறை ஆண்டவர் என்று அவர் அழைக்கப்படுகிறார். இரட்சகரென்று 2 முறை மாத்திரமே அழைக்கப்படுகிறார். இது, நான் அவரை என் வாழ்க்கையின் ஆண்டவராகவும் அதிபதியாகவும் அறிந்திருப்பது எவ்வளவு முக்கியம் என்று காட்டுகிறது.
அவரை ஆண்டவராக்குவது-நெகிழப்பட்ட முக்கியமான ஒன்று
அவரை ஆண்டவராக முடிசூட்டுவது மறக்கப்பட்டு நெகிழப்பட்ட முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று அறிந்திருந்ததால், தாம் ஆண்டவர் என்பதற்கு இயேசு தொடர்ச்சியாக அதிக அழுத்தம் கொடுத்திருந்தார் (2 கொரிந்தியர் 4:5) அவரை என் வாழ்க்கையில் ஆண்டவராக்காதபோது முழுமையாக வளர்ந்த கிறிஸ்தவனாகி, கிறிஸ்துவின் நீதியினால் நான் மூடப்படுவது சாத்தியமுமில்லை. மாறாக, “நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாய்” இருப்பதிலும், இன்னும் சற்று கீழேபோய் அதிலும் மோசமாக “எனக்கு ஒரு குறைவுமில்லையென்று” (வெளிப்படுத்தல் 3:17) சொல்லுவதிலுமே அது முடிவடையும்.
2. தேவனுடைய மக்களின் பாவ பதிவுகள் பாவநிவாரண நாளில் போக்காட்டின்மேல் மாற்றப் பட்டதினால், அவனும்கூட நம்முடைய பாவங்களைச் சுமக்கிறானல்லவா? இயேசு மாத்திரமே நம்முடைய பாவங்களைச் சுமக்கிறான் என்று நான் நினைத்திருந்தேன்.
பதில்: சாத்தானை சுட்டிக்காட்டிய போக்காடு எவ்விதத்திலும் நம்முடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்யவில்லை. பாவநிவாரண நாளில் கொல்லப்பட்ட கர்த்தருடைய ஆடு, கல்வாரியில் நம்முடைய பாவங்களின் பரிகாரத்தை ஏற்றுக்கொண்ட இயேசுவைக் குறிக்கிறது. இயேசு மாத்திரமே “உலகத்தின் பாவத்தைச் சுமந்து” தீர்க்கிறார் (யோவான் 1:29). சாத்தான் (மற்ற பாவிகளைப்போலவே-வெளிப்படுத்தல் 20:12-15) அவனுடைய சொந்த பாவங்களுக்காக- (1) பாவம் என்று ஒன்று வந்ததற்காக, (2) அவனுடைய சொந்த தீய செய்கைகளுக்காக, (3) பாவம் செய்ய பூமியி்ன் ஒவ்வொரு மனிதனையும் தூண்டியதற்காக-தண்டிக்கப்படுவான். தீமைக்கு அவன்தான் காரணமென்று தேவன் தெளிவாக்குவார். இதுதான் பாவநிவாரண நாளில் போக்காட்டின்மேல் (சாத்தான்மேல்) மாற்றப்பட்ட பாவத்தினால் கொடுக்கப்பட்ட செய்தி.
3. அறிக்கை செய்யப்பட்ட அனைத்து பாவங்களையும் தேவன் மன்னிக்கிறார் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது (1 யோவான் 1:9). மன்னிக்கப்பட்டபோதும், காலங்களின் முடிவுவரையிலும் இந்த பாவ பதிவு பரலோக புத்தகங்களில் இருக்கும் என்றும் (அப்போஸ்தலர் 3:19-21) தெளிவாக இருக்கிறது. மன்னிக்கப்பட்டதும் பாவங்கள் ஏன் அழிக்கப்படவில்லை?
பதில்: இதற்கு மிக நல்ல காரணம் இருக்கிறது. உலகத்தின் முடிவில் துன்மார்க்கருடைய அழிவிற்கு சற்றுமுன்பாக நடக்கிற துன்மார்க்கருக்கான நியாயத்தீர்ப்பு முடியும்வரையும் பரலோக நியாயத்தீர்ப்பு முழுமையடைவதில்லை. தேவன் இந்த கடைசிகட்ட நியாாயத்தீர்ப்புக்குமுன் பதிவுகளை அழிப்பாரென்றால், மிகப் பெரிய காரியத்தை மூடி மறைத்ததாக குற்றஞ்சாட்டப்படுவார். நடக்கையைக்குறித்த அனைத்து பதிவுகளும் நியாயத்தீர்ப்பு முடிவடையும்வரை பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
4. நியாயத்தீர்ப்பு சிலுவையில் நடந்ததென்று சிலர் சொல்லுகிறார்கள். வேறுசிலர், ஒரு நபரின் மரணத்தில் அது நடக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த வேதபாடத்தில் காட்டப்பட்டிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்த காலம் சரியென்று நான் நிச்சயமாயிருக்கலாமா?
பதில்: ஆமாம் நிச்சயமாயிருக்கலாம். நியாயத்தீர்ப்பு வேளையைக்குறித்த நிச்சயம் நமக்கு இருக்க தேவன் இதை தானியேல் 7 ல் 3 முறை குறிப்பிடுகிறார். தேவனுடைய குறிப்பிட்ட நேரத்தை கவனியுங்கள். எந்த சந்தேகத்திற்கும் அவர் இடம்வைக்கவில்லை. இந்த ஒரு அதிகாரத்தில் தெய்வீக கிரமம் கீழே கண்டவாறு 3 முறை அறிவிக்கப்படுகிறது (வசனம் 8-14; 20-22; 24-27).
- சின்ன கொம்பின் வல்லமை-கி்பி் 538 லிருந்து 1798 வரை ஆட்சி செய்தது (பாடம் 15ஐ பார்க்கவும்).
- நியாயத்தீர்ப்பு-1798க்குப்பின் துவங்கி (1844ல்) இயேசுகிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகை வரைக்கும் தொடருகிறது.
- தேவனுடைய புதிய இராஜ்யம்-நியாயத்தீர்ப்பின் முடிவில் ஸ்தாபிக்கப்படுகிறது. இவ்விதம் நியாயத்தீர்ப்பு சிலுவையிலோ அல்லது ஒரு நபரின் மரணத்திலோ நடக்கவில்லையென்றும், மாறாக, 1798 க்கும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கும் இடையிலே நடக்கிறது என்றும் தேவன் தெளிவாக்குகிறார். “அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது” (வெளிப்படுத்தல் 14:6,7) என்பது முதலாவது தூதின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவனுடைய முடிவுகால மக்கள், இப்போது இறுதி நியாயத்தீர்ப்பு நடந்துகொண்டிருக்கிறது என்பதை உலகத்திற்குக் கட்டாயம் சொல்லவேண்டும்.
5. நியாயத்தீர்ப்பைக்குறித்த நமது ஆராய்ச்சியில் என்ன முக்கியமான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?
பதில்: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 5 குறிப்புகளை கவனியுங்கள்.
- தேவன் செயல்படுவதற்குமுன்பாக மிகவும் நீண்ட காலத்தை எடுத்துக்கொள்வதுபோலத் தோன்றலாம். ஆனால் அவருடைய காலங்கள் மிகச் சரியானவை. நான் புரிந்து கொள்ளவில்லை என்றோ அல்லது எனக்குத் தெரியவில்லை என்றோ இழந்துபோன ஒருநபர்கூட சொல்லமுடியாது.
- சாத்தானும் அனைத்துவிதமான தீமைகளும் முடிவாக நியாயத்தீர்ப்பில் தேவனால் சந்திக்கப்படும். நியாயத்தீர்ப்பு தேவனுடையது என்பதினாலும், அனைத்து உண்மைகளும் அவருக்குத் தெரியும் என்பதினாாலும், நாம் மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்தி, அதை தேவனிடம் விட்டுவிட வேண்டும். நியாயத்தீர்ப்பை நம்முடைய கைகளில் எடுத்துக்கொள்ளுவது ஆபத்தான ஒன்று. அது, அவருடைய அதிகாரத்தை பறிப்பதைப் போன்றது.
- அவரோடு நாம் எவ்விதம் உறவு வைத்துக்கொள்ளுவோம் என்றும், யாரைச் சேவிப்போம் என்றும் தீர்மானிப்பதற்கு தேவன் நமக்குச் சுதந்திரம் கொடுக்கிறார். எனினும் அவருடைய வார்த்தைக்கு எதிராகப் போகும்போது தீவிரமான விளைவுகளுக்கு நாம் ஆயத்தப்படவேண்டியிருக்கும்.
- தேவன் நம்மை மிக அதிகமாக நேசிப்பதினால்தான் முடிவுகால சம்பவங்களை தெளிவாக்க தானியேல் வெளிப்படுத்தல் புத்தகங்களை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவருக்கு செவிகொடுத்து கேட்பதும், இந்த தீர்க்கதரிசன புத்தகங்களிலிருக்கும் ஆலோசனைகளை பின்பற்றுவதிலும்தான் நமது ஒரே பாதுகாப்பு இருக்கிறது.
- நம் ஒவ்வொருவரையும் அழித்துவிடுவதில் சாத்தான் தீர்மானமாக இருக்கிறான். அவனுடைய வஞ்சிக்கும் தந்திரங்களெல்லாம் மிக வல்லமையுள்ளதாகவும், ஒரு சிலர் மாத்திரமே தப்பிக்கக்கூடிய அளவு மிகவும் ஆற்றல்மிக்கதாகவும் இருக்கிறது. பிசாசின் கண்ணிகளிலிருந்து நம்மை அனுதினமும் பாதுகாக்கும் இயேசுவின் உயிர்த்தெழுப்பும் வல்லமை நம்மிடம் இல்லாதபோது நாம் சாத்தானால் சிதறடிக்கப்படுவோம்.
கேள்விகள்
1. நியாயத்தீர்ப்பில் எத்தனை கட்டங்கள் இருக்கின்றன? (1)
_____ 6.
_____ 1.
_____ 3.
2. முதல் கட்ட நியாயத்தீர்ப்பைக்குறித்த சத்தியங்கள்: (7)
_____ அது வருகைக்கு முன்னதான நியாயத்தீர்ப்பு.
_____ அது 1844ல் துவங்கியது.
_____ இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
_____ சாத்தான் குற்றப்படத்துகிறவன்.
_____ காபிரியேல் தூதன்தான் நீதிபதி.
_____ தேவன் தலைமைதாங்குகிறார்.
_____ யோனா தீர்க்கன் இதை அறிவித்தான்.
_____ பிரமாணமே அதன் அளவுகோல்.
_____ கிறிஸ்தவர்களென அழைக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தீர்க்கப்படும்.
3. ஆயிர வருட காலத்தில் நடக்கவிருக்கும் இரண்டாவது கட்ட நியாயத்தீர்ப்பைக் குறித்த உண்மைகள்: (3)
_____ அனைத்து யுகத்திலும் வாழ்ந்த நீதிமான்கள் அதில் இருப்பார்கள்.
_____ நீதிமன்றத்தின் முன்னேற்றத்தை சாத்தான் தொடர்ச்சியாக தடுப்பான்.
_____ சாத்தானின் தண்டனை நீதியானது என்று யாவரும் ஒப்புக்கொள்வார்கள்.
_____ சாத்தானுடைய தூதர்கள் மன்னிக்கப்படுவார்கள்.
_____ துன்மார்க்கர் தங்களுடைய உரிமைகளை கோருவார்கள்.
_____ ஏன் சிலர் இரட்சிக்கப்படவில்லை என்று நீதிமான்கள் அறிவார்கள்.
4. இயேசு மூன்று நிலைகளில் ஊழியம் செய்கிறார். அவை: (3)
_____ நீதிபதி.
_____ சாட்சி.
_____ நீதிமன்ற அதிகாரி.
_____ நீதிமன்ற குமஸ்தா.
_____ நமது தரப்பு வக்கீல்.
5. ஆயிர வருடங்களின் முடிவில் துன்மார்க்கர் பரிசுத்த நகரத்தை சூழ்ந்துகொள்ளும்போது நியாயத்தீர்ப்பில் பங்கடைகிறார்கள். (1)
_____ ஆம்.
_____ இல்லை.
6. ஏன் இரட்சிக்கப்படவில்லை என்பதை தேவன் ஒவ்வொரு நபருக்கும் தெளிவாக்குவார். (1)
_____ ஆம்.
_____ இல்லை.
7. நியாயத்திர்ப்பின் ஒரு கட்டத்தில் இதுவரை வாழ்ந்திருந்த ஒவ்வொரு நபரும் (நல்லவர்களும் கெட்டவர்களும்), அவர்களோடு அனைத்து தீய தூதர்களும் சாத்தானும் இருப்பார்கள். அது எந்த கட்டம்? (1)
_____ முதல் கட்டம் - இப்போதைய நியாயத்தீர்ப்பு.
_____ இரண்டாம் கட்டம் - ஆயிர வருட காலத்தில்.
_____ மூன்றாவது கட்டம் - ஆயிர வருட முடிவில்.
8. பரலோக நியாயத்தீர்ப்புக்கு பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் ஏன் அவசியம்? (1)
_____ தேவனுக்கு உண்மைகளை அறிவிக்கும்படி.
_____ தேவன் மறந்துபோனவைகளை அவருக்கு நினைவூட்டும்படி.
_____ தூதர்களுக்கு செய்யும்படியான ஒரு வேலை கொடுக்கும்படி.
_____ மனிதருக்கும் தூதருக்கும் விழுந்து போகாத உலகவாசிகளுக்கும் நியாயத்தீர்ப்பில் தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணும்படி.
9. “பாவநிவாரணம்” என்றால் “அனைத்து காரியங்களையும் முழுமையான தெய்வீக இணக்கத்திற்குக் கொண்டுவருவது” என்று பொருள். பரலோக பாவநிவாரணத்தில் பங்கு பெறுபவை: (5)
_____ சிலுவையில் இயேசுவின் மரணம்.
_____ நியாயத்தீர்ப்பு.
_____ நம்முடைய பிரதான ஆசாரியராக இயேசுவின் ஊழியம்.
_____ நோவா காலத்து வெள்ளம்.
_____ சிங்கங்களின் குகையில் தானியேல்.
_____ பாவங்களும் பாவியும் முடிவாக அழிக்கப்படுதல்.
_____ புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாக்கப்படுதல்.
10. நியாயத்தீர்ப்பிலிருந்து வரும் நற்செய்தி: (5)
_____ நியாயத்தீர்ப்பு பரிசுத்தவான்களுக்கு சாதகமாக முடியும்.
_____ பிசாசு நித்தியமாக நரகத்தில் எரிவான்.
_____ பாவம் மீண்டும் எழும்பாது.
_____ வெகு தூரத்திலிருக்கும் எதிர் காலத்தில் பாவம் வெகு எளிதாக மீண்டும் எழும்பும் வாய்ப்பிருக்கிறது.
_____ இயேசு நமது நீதிபதியாகவும், வழக்கறிஞராகவும், சாட்சியாகவும் இருக்கிறார்.
_____ ஆண்டவர் பாவத்தையும் இரட்சிப்பையும் கையாண்டவிதங்கள் முழுமையாக காட்டப்படும்.
_____ பாவத்தினால் ஆதாமும் ஏவாளும் இழந்த எல்லாம் நிலைநிறுத்தப்படும்.
11. நியாயத்தீர்ப்பின் போக்காடான சாத்தனைக் குறித்த உண்மைகள்: (3)
_____ பாவத்தை துவக்கினதற்காக அவன் தண்டிக்கப்படுகிறான்.
_____ ஒவ்வொரு நபரையும் பாவஞ்செய்யத் தூண்டினதால் தண்டிக்கப்படுகிறான்.
_____ நம்முடைய பாவங்களுக்கான எவ்வித பரிகாரமும் அவனிடமில்லை.
_____ சாத்தான் போக்காடாக இருக்க மறுத்து தப்பித்துவிடுவான்.
12. நியாயத்தீர்ப்பு தன்னிச்சையான ஒன்றல்ல, இயேசுவையோ அல்லது வேறொருவரையோ சேவிக்க மக்கள் ஏற்கனவே தெரிந்தெடுத்த தீர்மானத்தையே அது உறுதிப்படுத்துகிறது. (1)
_____ ஆம்.
_____ இல்லை.
13. பாவம் கர்ப்பந்தரித்ததிலிருந்து, அந்த இடரைக் கையாண்டதில் தேவன் ஞானமும், நீதியும், நியாயமுமானவராகச் செயல்பட்டார் என்கிறதை மக்களுக்கும், சாத்தானுக்கும், நல்ல மற்றும் தீய தூதர்களுக்கும், மற்ற அனைத்து உலகவாசிகளுக்கும் தெளிவாக்குவதே நியாயத்தீர்ப்பின் முக்கிய நோக்கம். (1)
_____ ஆம்.
_____ இல்லை.
14. உங்கள் வாழ்க்கையில் பிரவேசித்து, உங்களைக் கட்டுப்படுத்த தேவனை அழைப்பீர்களெனில், பரலோக நியாயத்தீர்ப்பில் உங்களுக்கு விடுதலை அளிப்பதாக அவர் வாக்குக்கொடுக்கிறார். உங்கள் வாழ்க்கையில் பிரவேசிக்க அவரை இன்று அழைப்பீர்களா?
_____ ஆம்.
_____ இல்லை.