வேதபாடங்கள் 13
கரிசனையான மருத்துவ கவனிப்பு விலைமதிப்பற்றதுதான். ஆனால் இனிமேல் மருத்துவர்களே அவசியமில்லை என்று இருந்தால் அது மிகவும் பெரியதல்லவா?

அதற்கு நிரூபிக்கப்பட்ட ஒரு பாதை இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கொழுப்பு, புகையிலை, மனஅழுத்தம், உடல் பருமன் போன்றவற்றைக்குறித்து அச்சுறுத்தும் எச்சரிப்புகளை அறிவியல் அறிஞர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியிருக்க நீங்கள் ஏன் அதிஷ்டத்தை நம்பியிருக்கவேண்டும்? மருத்துவமனைகளும் மனநல இல்லங்களும் இந்த எச்சரிப்புகளை அலட்சியம் செய்யும் மக்களால் நிரம்பியிருக்கிறது. நீங்கள் உங்கள் சரீரத்தை எவ்விதம் கவனிக்கிறீர்கள் என்பதில் தேவன் மெய்யாகவே கரிசனையோடிருக்கிறார். அவர் உங்களுக்கு இலவச சுகாதார திட்டத்தைக் கொடுத்து, அதற்கு கீழ்ப்படிவதைக்குறித்த கையேடாக வேதாகமத்தையும் கொடுத்திருக்கிறார். எவ்விதம் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெறுவதைக்குறித்த இந்த ஆச்சரியமான பாடத்தைப் படியுங்கள். முழுமையாகப் படிப்பதற்குமுன் முடிவுகளுக்கு வரவேண்டாம்.
1. ஆரோக்கிய கொள்கைகள் வேதாகமத்தின் ஒரு பகுதியா?
“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” – 3 யோவான் 1:2.

பதில்: ஆமாம். உண்மையில் முக்கியமான காரியங்களின் பட்டியலில், வேதாகமம் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது. மனிதனுடைய மனமும், ஆவிக்குரிய தன்மையும் அவனுடைய சரீரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் ஒன்றையொன்று சார்ந்ததாகவும் இருக்கிறது. ஒன்றை பாதிக்கிறது மற்றதையும் பாதிக்கிறது. நம்முடைய சரீரங்கள் தவறாக உபயோகப்படும்போது, நம்முடைய மனங்களும் ஆவிக்குரிய தன்மைகளும் ஆண்டவர் விரும்புகிறபடி இருக்கமுடியாது.
2. ஏன் தேவன் தமது மக்களுக்கு ஆரோக்கிய சட்டங்களைக் கொடுத்தார்?
“நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்” – உபா. 6:24;
“உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” – யாத். 23:25.
பதில்: மனித சரீரத்திற்கு எது மிகச் சிறப்பானது என்பதை தேவன் அறிந்திருந்தபடியினால் ஆரோக்கிய சட்டங்களைக் கொடுத்தார். வாகனங்களைத் தயாரிக்கிறவர்கள், தாங்கள் தயாரித்த பொருளுக்கு மிகச் சிறந்தது எது என்பதை அறிந்திருக்கிறபடியால், அதைக் கையாளுவதற்கான கையேடு ஒன்றை வைத்திருப்பார்கள். அவ்விதமே நம்முடைய சரீரங்களை உண்டாக்கின தேவனும் அதைக் கையாளும் கையேடு ஒன்றை வைத்திருக்கிறார். அது பரிசுத்த வேதாகமம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு வாகனத்தை (அதை உண்டாக்கினவனுடைய ஆலோசனைக்கு எதிராக) தவறாக உபயோகப்படுத்தும்போது, அது கடுமையான பிரச்சனைகளில் முடிவதைப்போல, தேவனுடைய ஆரோக்கிய கையேட்டை நிராகரிப்பது வியாதியிலோ, மாறுபாடான யோசனைகளிலோ, நொந்துபோன வாழ்க்கையிலோ முடியும். தேவனுடைய திட்டங்களைப் பின்பற்றுவது ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் (சங்கீதம் 67:2) இன்னும் தாராளமான வாழ்க்கையிலும் (யோவான் 10:10) முடிவடையும். இந்த மாபெரும் ஆரோக்கிய சட்டங்கள், சாத்தானுடைய வியாதிகளை அப்புறப்படுத்துகிற அல்லது வேலியாக இருக்கின்றன. இந்த சட்டங்கள் என்னவென்று தேவன் சொல்லுகிறபடியால் பிசாசினுடைய கண்ணிகளிலிருந்து நாம் தப்பலாம். (சங்கீதம் 103:2,3)
3. தேவனுடைய ஆரோக்கிய சட்டம் புசிப்பதையும் குடிப்பதையும் உள்ளடக்கியிருக்கிறதா?

“நலமானதைச் சாப்பிடுங்கள்” – ஏசாயா 55:2;
“ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” – 1 கொரிந்தியர் 10:31.
பதில்: ஒரு கிறிஸ்தவன் எப்போதும் “நலமானதை” மாத்திரம் உபயோகித்து, தேவனுக்கு மகிமை உண்டாவதற்கேதுவாக வேறுவிதமாக புசித்து வேறுவிதமாக குடிப்பான். இது உண்பதற்கு நல்லதல்ல என்று தேவன் சொல்லும்போது அவரிடம் சரியான ஒரு காரணம் இருக்கும். அவர் கடுமையான சர்வாதிகாரியல்ல. மாறாக, அன்பான தகப்பனாக இருக்கிறார். அவருடைய ஆலோசனைகௌல்லாம் எப்போதும் நமக்கு நன்மைக்கேதுவானவைகளே. “உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்” (சங்கீதம் 84:11) என்று வேதாகமம் வாக்களிக்கிறது. எனவே, தேவன் ஒரு காரியத்தை வேண்டாம் என்று விலக்கும்போது அது நமக்கு நன்மையுள்ளதாகவே இருக்கும்.
குறிப்பு: எந்த மனிதனும் சரியானதை சாப்பிடுவதால் பரலோகத்திற்கு போய்விடமுடியாது. தூதர்களின் உணவை சாப்பிடுவதுங்கூட மக்களை பரலோகத்திற்குக் கொண்டுசெல்லாது. இயேசுகிறிஸ்துவை ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்ளுவது மாத்திரமே தேவன் ஏற்றுக்கொள்ளுகிற ஒன்று. தேவனுடைய ஆரோக்கிய சட்டங்களை நிராகரிக்கும்போது ஒரு மனிதன் இரட்சிப்பை இழந்துபோகக்கூடும். ஏனெனில் அவனுடைய நிதானத்தை அவன் இழந்து பாவம் செய்ய தூண்டப்படலாம்.

4. தேவன் மனிதரை உண்டாக்கினபோது அவர்களுக்கு என்ன பரிபூரண ஆகாரத்தைக் கொடுத்தார்?
பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவிதப் விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன்” “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்” – ஆதியாகமம் 1:29; 2:16.
பதில்: தேவன் மக்களுக்கு ஆதியிலே கொடுத்த உணவு பழங்களும் தானியங்களும் கொட்டைகளுமே. சற்றுக் காலத்திற்குப்பின் காய்கறி சேர்க்கப்பட்டது (ஆதியாகமம் 3:18).
5. என்ன ஆகாரங்கள் அசுத்தமானதும் தடைசெய்யப்பட்டதுமாக தேவனால் குறிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது?

பதில்: லேவியராகமம் 11லும், உபாகமம் 14லும் கீழ்கண்டவற்றை அசுத்தமானவைகளாக தேவன் மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இரண்டு அதிகாரங்களையும் முழுமையாகப் படியுங்கள்.
அ. விரிகுளம்பு இல்லாத அசைபோடாத மிருகங்கள் அனைத்தும் (உபாகமம் 14:6).
ஆ. சிறகும் செதிளும் இல்லாத அனைத்து மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும். அநேக மீன்கள் சுத்தமானவைகள் (உபாகமம் 14:6).
இ. மற்றவைகளை அடித்து சாப்பிடும் அனைத்து பறவைகளும், அழுகின உடல்களை உண்பவைகளும், மீன்களை சாப்பிடுகிறவைகளும் (லேவியராகமம் 11:13-30).
ஈ. ஏறக்குறைய அனைத்து ஊர்வனவும் (அல்லது முதுகெலும்பற்றவைகளும்) (லேவியராகமம் 11:21-47).
குறிப்பு: மனிதர்கள் சாதாரணமாக சாப்பிடுகிற அநேக மிருகங்களும், பறவைகளும், மீன் வகைகளும் சுத்தமானவை என்று இந்த அதிகாரங்கள் சொல்லுகின்றன். எனினும் சில குறிப்பிடும்படியான தவிர்ப்புகளும் இருக்கின்றன. தேவனுடைய சட்டங்களின்படி, காட்டுப்பன்றி, அனில், முயல், ஈல் மீன், கடல் நண்டு, கிளிஞ்சல்கள், இறால் மீன், நண்டு, சிப்பியில் வளருபவை, தவளைகள் இன்னும் அநேக அசுத்தமான மீன்கள் இருக்கின்றன. அவைகளை நாம் சாப்பிடக்கூடாது.

6. ஆனால் எனக்கு பன்றி இறைச்சி பிடிக்கும். அதை சாப்பிட்டால் தேவன் என்னை அழித்துவிடுவாரா?
“இதோ … கர்த்தர் அக்கினியோடும் வருவார் … தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள். தங்களைத் தாங்களே பரிசுத்தப் படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” – ஏசாயா 66:15-17.
பதில்: இது அதிர்ச்சி கொடுக்கிறதாயிருக்கலாம். ஆனால் உண்மை கட்டாயம் சொல்லவேண்டிய ஒன்றாக இருக்கிறது. பன்றி இறைச்சியையும் எலியையும் மற்ற அசுத்தமான பொருட்களையும் சாப்பிடுகிறவர்கள் தேவனுக்கு அருவருப்பானவர்கள் என்றும், அவர்கள் அக்கினியால் அழிக்கப்படுவார்கள் என்றும் வேதாகமம் குறிப்பிடுகிறது. ஏதாவது ஒரு காரியத்தை தொடவேண்டாம் என்றும் புசிக்கவேண்டாம் என்றும் ஆண்டவர் சொல்லும்போது எல்லாவிதத்திலும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். பாவமில்லாத தம்பதிகளாயிருந்த ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட கனியை புசித்ததே இந்த உலகத்தில் பாவத்தையும் மரணத்தையும் கொண்டுவந்தது. அது முக்கியமானது என்று தேவன் சொல்லும்போது இது முக்கியமல்ல என்று நாம் சொல்லக்கூடுமா? “நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம்” (ஏசாயா 66:4) அழிக்கப்படுவார்கள் என்று தேவன் சொல்லுகிறார்.
7. ஆனால் சுத்தமான மற்றும் சுத்தமில்லாத மிருகங்களைக் குறித்த சட்டம் சீனாயில்தானே துவங்கியது. அது யூதர்களுக்கு மட்டுந்தானே? அது சிலுவையில் முடிந்துபோய்விடவில்லையா?

“கர்த்தர் நோவாவை நோக்கி … நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும் … உன்னிடத்தில் சேர்த்துக்கொள்” – ஆதியாகமம் 7:1-3.
பதல்: அப்படியல்ல. சிருஷ்டிப்பின் துவக்கத்திலிருந்தே சுத்தமான மற்றும் சுத்தமில்லாத மிருகங்கள் இருந்தன என்பதற்கு வேதாகமம் போதுமான சான்றுகளைக் கொடுக்கிறது. யூதர்களுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நோவா வாழ்ந்திருந்தான். எனினும் அவைகளை வேறுபடுத்த அவன் அறிந்திருந்தான். பேழைக்குள் சுத்தமானவை ஏழு ஜோடிகளும் சுத்தமற்றவை இரண்டு ஜோடிகளுமென்று அவன் சேர்த்துக்கொண்டான். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு சற்றுமுன்பாக, சில பறவைகளை அசுத்தமானவைகள் என்று வெளிப்படுத்தல் 18:2 சொல்லுகிறது. இயேசு மீண்டும் வரும்போது இந்தச் சட்டங்களை முறியடித்த அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்று வேதாகமம் சொல்லுவதால், கிறிஸ்துவின் மரணம் இந்த ஆரோக்கிய சட்டங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஏசாயா 66:15-17 யூதர்களுடைய சீரண அமைப்பு எவ்விதத்திலும் புறஜாதிகளுடைய சீரண அமைப்பிற்கு வேறுபட்டதல்ல. ஆரோக்கிய சட்டங்கள் அனைத்து காலத்திலும் வாழுகிற அனைத்து மக்களுக்கும் உரியது.

8. மதுபான வகைகளை வேதாகமம் தடைசெய்கிறதா?
“திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.” “மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்” – நீதிமொழிகள் 20:1; 23:31,32;
“வேசிமார்க்கத்தாரும் …. வெறியரும் …. தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” – 1 கொரிந்தியர் 6:9,10.
பதில்: ஆமாம், மதுபான உபயோகத்தை வேதாகமம் தெளிவாகத் தடைசெய்கிறது.
9. புகையிலை உபயோகத்தை வேதாகமம் கண்டிக்கிறதா?
பதில்: ஆமாம். புகையிலை உபயோகம் ஏன் தேவனுக்கு அதிருப்தியானது என்பதற்கு வேதாகமம் ஆறு காரணங்களைக் கொடுக்கிறது.

அ. அது ஆரோக்கியத்தைப் பாதித்து சரீரத்தைத் தீட்டுப்படுத்துகிறது. “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்” – 1 கொரிந்தியர் 3:16,17.
ஆ. நிக்கோடின் என்னும் பொருள் மக்களை அடிமைப்படுத்துகிற குணம்கொண்டது, யாருக்கு (அல்லது எதற்கு) நாம் நம்மை ஒப்புக்கொடுக்கிறோமோ அவருக்கு (அல்லது அதற்கு) அடிமைகளாக இருக்கிறோம் என்று ரோமர் 6:16 சொல்லுகிறது. புகையிலை உபயோகிக்கிறவர்கள் நிக்கோட்டினுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” (மத்தேயு 4:10) என்று இயேசு சொல்லுகிறார்.
இ. புகையிலை உபயோகம் அசுத்தமானது. “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு” – 2 கொரிந்தியர் 6:17,18. கிறிஸ்து எந்தவிதத்திலாவது புகையிலையை உபயோகித்திருப்பார் என்று நினைப்பது உண்மையில் அபத்தமானதாக இல்லையா?
ஈ. புகையிலையின் உபயோகம் பணத்தை விரயமாக்குகிறது. “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும் … செலவழிப்பானேன்?” – ஏசாயா 55:2; நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணத்திற்கு நாம் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும். “உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியமாம்” – 1 கொரிந்தியர் 4:2.
உ. புகையிலை உபயோகிப்பது ஒருபோதும் எவரையும் கிறிஸ்துவிடம் கொண்டுவருவதில்லை. “ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்சஇச்சைகளை விட்டு விலகி” – 1 பேதுரு 2:11. புகையிலை உபயோகம் ஒரு மாமிச இச்சை.
ஊ. புகையிலை உபயோகம் வாழ்நாளைக் குறைகிறது. புகையிலையை உபயோகிப்பதால் ஏறக்குறைய மூன்றில் ஒருபங்கு வாழ்நாள் குறைந்துபோகிறது என்கிற உண்மையை சமீபித்திய அறிவியல் கண்டுபிடிப்பு உறுதிபடுத்துகிறது. இது கொலை செய்யாதிருப்பாயாக (யாத்திராகமம் 20:13) என்கிற தேவனுடைய கட்டளையை மீறுவதாகும். மெதுவான கொலையாக இருந்தாலும் அது கொலையே. உங்களுடைய மரணத்தை தள்ளிப்போட சிறந்த வழிகளில் ஒன்று புகையிலை உபயோகத்தை நிறுத்துவதுதான்.

10. வேதாகமத்தில் காணப்படுகிற எளிமையான அதே நேரம் மிக முக்கியமான ஆரோக்கிய சட்டங்கள் சிலவற்றைச் சொல்லுங்கள்.
பதில்: 11 வேதாகம ஆரோக்கிய சட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அ. உங்கள் ஆகாரத்தை சரியான இடைவேளையில் எடுத்துக் கொள்ளுங்கள். மிருக கொழுப்பையோ அல்லது இரத்தத்தையோ உபயோகிக்கவேண்டாம். “ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட” – பிர. 10:17; “கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது … நித்திய கட்டளையாயிருக்கும்” – லேவி. 3:17.
குறிப்பு: இரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பினால்தான் அதிக மாரடைப்புகள் நடப்பதாக சமீபித்திய அறிவியல் ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. உணவில் அதிக கொழுப்புகளை உபயோகிப்பதே இதற்குக் காரணம். தேவன் தாம் என்ன பேசுகிறார் என்பதை அறிந்திருக்கிறார்! அப்படித்தானே?
ஆ. அதிகம் சாப்பிடாதீர்கள். “நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையில் கத்தியை வை” – நீதி. 23:2; லூக்கா 21:34ல் கடைசி நாட்களில் அதிகம் உண்பதை கிறிஸ்து குறிப்பாக எச்சரிக்கிறார். மிஞ்சி சாப்பிடுவது வாழ்நாளைக் குறைக்கும், வியாதிகளுக்கு காரணமாகிறது.
ஆ. அதிகம் சாப்பிடாதீர்கள். “நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையில் கத்தியை வை” – நீதி. 23:2; லூக்கா 21:34ல் கடைசி நாட்களில் அதிகம் உண்பதை கிறிஸ்து குறிப்பாக எச்சரிக்கிறார். மிஞ்சி சாப்பிடுவது வாழ்நாளைக் குறைக்கும், வியாதிகளுக்கு காரணமாகிறது.

இ. பொறாமையையோ காழ்ப்புணர்வையோ மனதில் வைக்கவேண்டாம். “பொறாமையோ எலும்புருக்கி” (நீதி. 14:30) என்று வேதாகமம் சொல்லுகிறது. நமக்கு எதிராக மற்றவர்கள் வைத்திருக்கிற காழ்ப்புணர்வுகளையும் சரிசெய்ய இயேசு நமக்கு கட்டளை கொடுக்கிறார் (மத்தேயு 5:23,24).

ஈ. முகத்தை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். “மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.” “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” – நீதி. 17:22; 23:7. இன்றைய அநேக வியாதிகள் மன அழுத்தத்தின் விளைவுகளே. மகிழ்ச்சியான சந்தோஷமான முகம் ஆரோக்கியத்தை கொடுத்து வாழ்நாளை நீட்டிக்கிறது.

உ. தேவனை முழுவதும் நம்புங்கள். “கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; – நீதி. 19:23; “என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி்;…. அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்” -நீதி. 4:20-22. தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதினாலும் அவரை முழுமையாக நம்புவதாலும் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.
ஊ. தூக்கத்தோடும் இளைப்பாறுதலோடும் வேலையையும் உடற் பயிற்சியையும் சமநிலைப் படுத்துங்கள். “ஆறுநாளும் நீ வேலை செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும் … யாதொரு வேலையும் செய்யவேண்டாம்” – யாத். 20:9,10; “வேலை செய்கிறவன் … நித்திரை இன்பமாயிருக்கும்;” – பிர. 5:12; “உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; – ஆதி. 3:19; “நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து … விருதா;” – சங்கீதம் 127:2; “மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? … இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே” – பிர. 2:22,23.
எ. உங்கள் சரீரத்தை சுத்தமாக வைத்திருங்கள். “உங்களைச் சுத்திகரியுங்கள்” – ஏசாயா 52:11.

ஏ. எல்லாவற்றிலும் கட்டுப் பாட்டோடு இருங்கள். “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்” – 1 கொரி. 9:25; “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக” – பிலி. 4:5.
கிறிஸ்தவன் தீமையான அனைத்து காரியங்களையும் முழுமையாக ஒதுக்கி, நன்மையான காரியங்களை அளவாக உபயோகிப்பான். ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பழக்கம், கொலை செய்யாதிருப்பாயாக என்கிற கட்டளையை மீறுவதாகும்.

ஜ. பாதிப்பை ஏற்படுத்தும் ஊக்கிகள் எல்லாவற்றையும் தவிருங்கள். 1 கொரி. 3:16.17. அடிமைப்படுத்தும் “காபின்”ஐயும் தீமையிழைக்கும் பொருட்களையும் கொண்டிருக்கிற டீ, காபி, மற்றும் மென்பானங்கள் மனித சரீரத்தை சேதப்படுத்துகின்றன.
ஆபத்தான போலியான உற்சாகத்தை சரீரத்திற்குக் கொடுக்கும் தூண்டிவிடும் உணவுகள் ஒரு சாதாரண வண்டியில் ஆயிரம் கிலோ பொருளை சுமப்பதைப் போன்றது. இந்த பானங்களிலிருக்கும் காபீனின் அளவே அவைகள் பிரபலமாயிருக்கக் காரணம், உண்மையான வருத்தம் என்னவென்றால், சாமாதானத்தையும் பெலத்தையும் வாஞ்சிக்கிற ஆண்களும் பெண்களும் ஜெபத்திற்கும் வேத ஆராய்ச்சிக்கும் பதிலாக டீயையும் காபியையும் வைக்கின்றனர். இது பிசாசிற்கு இன்பமளித்து, மனித வாழ்க்கைகளை உடைக்கிறது.
ஒ. சாப்பிடும் நேரத்தை மகிழ்ச்சியான நேரமாக்குங்கள். “மனுஷர் யாவரும் பிசித்துக் குடித்துத் தங்கள் சகல பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” – பி. 3:13. சாப்பிடும் நேரத்தில் மகிழ்ச்சியில்லாத காட்சிகள் ஜீரணத்தைத் தடுக்கின்றன. அவைகளை தவிருங்கள்.
ஓ. தேவையில் இருக்கிறவர்களுக்கு உதவிசெய்யுங்கள். “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் … அப்பொழுது … உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து” – ஏசாயா 58:6-8. ஏழை மக்களுக்கும் தேவையிலிருப்போருக்கும் உதவும்போது நமது சொந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறோம் என்று இது மிகத் தெளிவாகக் காண்பிக்கிறது.
11. தேவனுடைய சட்டங்களை நிராகரிப்பவர்களுக்கு என்ன பவித்திரமான நினைவுபடுத்துதல் கொடுக்கப்பட்டிருக்கிறது?

“மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ண வொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” – கலாத்தியர் 6:7.
பதில்: தவறவிடக்கூடாதபடி பதில் மிகத் தெளிவாக இருக்கிறது. சரீர இயந்திரத்தை கவனிக்காமல் வாகனத்தை தவறாக உபயோகப்படுத்துவது ஆபத்தான பிரச்சனைகளுக்கு நடத்துவதைப் போலவே, தேவனுடைய சட்டங்களை மீறுகிறவர்கள், உடைந்துபோன சரீரங்களையும் நொந்துபோன வாழ்க்கைகளையும் சந்திக்கவேண்டியதிருக்கும். தேவனுடைய ஆரோக்கிய சட்டங்களை தொடர்ந்து மீறுகிறவர்கள் ஆண்டவரால்தாமே முடிவாக அழிக்கப்படுவார்கள் (1 கொரி. 3:16,17). தேவனுடைய ஆரோக்கிய சட்டங்கள் மனம்போனபோக்கில் கொடுக்கப்பட்டவை அல்ல, புவியீர்ப்பு சட்டத்தைப்போலவே அவைகள் பிரபஞ்சம் முழுவதிலும் ஸ்தாபிக்கப்பட்ட இயற்கைச் சட்டங்கள். இவைகளை மீறுவது எப்போதும் அழிவிற்கேதுவான விளைவுகளிலேயே முடிவடையும். “காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது” (நீதி. 26:2) என்று வேதாகமம் சொல்லுகிறது. ஆரோக்கிய சட்டங்களை நிராகரிக்கும்போது பிரச்சனைகள் வருகின்றன. சோகமான விளைவுகளை தவிர்க்கும்படியாக தேவன் தமது இரக்கத்தினால் இவைகளைச் சொல்லிக்கொடுக்கிறார்.

12. நம்முடைய பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் உள்ளடக்குகிற என்ன அதிர்ச்சியளிக்கும் உண்மை இருக்கிறது?
“நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது” – உபா. 12:25;
“உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்” – யாத். 20:5.
பதில்: தேவனுடைய ஆரோக்கிய சட்டங்களை அலட்சியப்படுத்துகிற பெற்றோர்களின் மதியீனத்தை (நான்கு தலைமுறைவரைக்கும்) பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அனுபவிக்கவேண்டும் என்று தேவன் தெளிவாக கூறுகிறார். தகப்பனும் தாயும் தங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய சட்டங்களை அவமதிக்கும்போது, பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வியாதிகொண்ட பெலவீனமான சரீரங்களை சுதந்தரிக்கிறார்கள். இதுவா நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுக்க விரும்புவது?
13. தேவனுடைய வார்த்தை இன்னும் என்ன பயங்கரமான தெளிவான உண்மைகளை வெளிக்காட்டுகிறது?
“தீட்டுள்ளதும் … நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை” – வெளி. 21:27;

“சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” – எசேக்கியேல் 11:21.
பதில்: தீட்டுப்படுத்துகிறதும் அசுத்தமானதும் தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்காது. அனைத்து கெட்ட பழக்கங்களும் ஒரு நபரை தீட்டுப்படுத்துகின்றன. சரியில்லாத உணவுகளை எடுத்துக்கொள்ளுவது ஒரு நபரை தீட்டுப்படுத்துகிறது (தானியேல் 1:8). இது மிக தெளிவானதும் உண்மையுமாயிருக்கிறது. “தங்கள் வழியையும்” “தேவனுக்குப் பிரியமில்லாததையும்” தெரிந்துகொள்ளும்போது மக்கள் தங்களுடைய நித்திய வாழ்க்கையை-இரட்சிப்பையே விலைகொடுக்கவேண்டியதாயிருக்கும். (ஏசாயா 66:3,4,15-17).

14. ஒவ்வொரு கிறிஸ்தவனும் உடனடியாக செய்ய முயற்சிக்கவேண்டியது என்ன?
“மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு,” – 2 கொரிந்தியர் 7:1;
“அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” – 1 யோவான் 3:3;
“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” – யோவான் 14:15.
பதில்: உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையை தேவனுடைய சட்டங்களுக்கு இசைவாக உடனடியாகக் கொண்டுவர விரும்புவார்கள். ஏனெனில் அவர்கள் அவரை நேசிக்கிறார்கள். அவருடைய சட்டங்கள் தங்களுடைய சந்தோஷத்தை அதிகப்படுத்தி, பிசாசினுடைய வியாதிகளிலிருந்து தங்களைப் பாதுகாக்கும் என்று (அப்போஸ்தலர் 10:38) அவர்கள் அறிவார்கள். எவ்விதம் பெற்றோரின் சட்டங்களும் ஆலோசனைகளும் பிள்ளைகளுக்கு சிறந்தவைகளாக இருக்கின்றனவோ, அவ்விதமே தேவனுடைய சட்டங்களும் ஆலோசனைகளும் நம்முடைய நன்மைக்கானவையே. அதிகம் அறிந்துகொள்ளும்போது அதிகம் கணக்குக்கொடுக்கவேண்டியதிருக்கும். “ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” – யாக்கோபு 4:17.
15. ஆனால் சில கெட்ட பழக்கங்கள் என்னை வலிமையாக கட்டிவைத்திருப்பதைக்குறித்து நான் கவலைப்படுகிறேன். நான் என்ன செய்யக்கூடும்?

“அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” – யோவான் 1:12; “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” – பிலி. 4:13.
பதில்: இந்த பழக்கங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்று கிறிஸ்துவின் பாதத்தில் வையுங்கள். அவர் புதிய இருதயத்தையும், எப்படிப்பட்ட தீய பழக்கமானாலும் அதை உடைத்தெறிவதற்கான வல்லமையையும், நீங்கள் தேவனுக்கு குமாரனும் குமாரத்தியுமாகக்கூடிய அதிகாரத்தையும் மகிழ்ச்சியோடு உங்களுக்குத் தருவார் (எசேக்கியேல் 11:18,19). “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்பதை அறிவது மனதிற்கு எவ்வளவு இரம்மியமானதாக இருக்கிறது! “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37) என்று இயேசு கூறுகிறார். உங்களைக் கட்டியிருக்கிற சங்கிலிகளை உடைக்க இயேசு ஆயத்தமாயிருக்கிறார். நாம் அனுமதிக்கும்போது அவர் நம்மை விடுதலையாக்குவார்; விடுதலையாக்க அவர் காத்து நிற்கிறார். நம்முடைய கவலைகளும், தீய பழக்கங்களும், பதற்றங்களும், பயங்களும் அவரை அழைக்கும்போது அகன்றுபோகும். என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11) என்று அவர் சொல்லுகிறார். கீழ்ப்படியாமலிருக்கும்போதே நமக்கு சுதந்திரம் கிடைக்குமென்று பிசாசு வாதிடுகிறான். ஆனால் இது பொய் (யோவான் 8:44).

16. தேவனுடைய புதிய இராஜ்யத்தைக் குறித்த என்ன சிலிர்ப்பூட்டும் வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
“வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லுவதில்லை” – ஏசாயா 33:24;
“இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” – வெளி. 21:4;
“புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஒடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” – ஏசாயா 40:31.
பதில்: தேவனுடைய புதிய இராஜ்யத்தின் குடிமக்கள், அவருடைய ஆரோக்கிய சட்டத்தைப் பின்பற்றுவார்கள். அங்கே வியாதியும் நோயும் இருக்காது. அவர்கள் நித்திய பலத்தோடு வாலிபமும் கொடுக்கப்பட்டு, மிக உன்னத மகிழ்ச்சியோடும் களிப்போடும் நித்திய காலமாக தேவனோடு வசிப்பார்கள்.
17. ஆரோக்கியமாக வாழ்வது வேதாகமத்தின் ஒரு பகுதியாக இருப்பதினால் தேவனுடைய ஆரோக்கிய சட்டங்களைப் நீங்கள் பின்பற்றுவீர்களா?

உங்கள் பதில்: ____________________
சிந்தனைக் கேள்விகள்
1. தீமோத்தேயு 4:4 “தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல” என்று சொல்லுகிறதே! இதை நீங்கள் விவரிக்கமுடியுமா?
பதில்: இந்த வேத வாக்கியம் (வசனம் 3 தேவன் உண்டாக்கின, நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுகிற உணவுகளையே குறிக்கிறது. நாம் ஏற்கனவே படித்ததன்படி இந்த மாமிசங்கள் லேவியராகமம் 11லும், உபாகமம் 14லும் கொடுக்கப்பட்டுள்ள சுத்தமான மிருகங்களையே குறிப்பிடுகிறது. தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாயின் (சுத்தமான மிருகங்கள்) தேவன் உண்டாக்கின அனைத்தும் நல்லவைகளும் தவிர்க்க அவசியமில்லாதவைகளுமாக இருக்கிறதென்று வசனம் 4 தெளிவாக்குகிறது. இவைகள் சுத்தமானவைகளாக இருந்து, ஆகாரத்திற்கு முன்பு ஏறெடுக்கப்படும் நன்றியான ஜெபத்தினால் ஆசிர்வதிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தையினாலே பரிசுத்தமாக்கப்படுகின்றன. எனவே இந்த மிருகங்கள் (உணவுகள்) ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று வசனம் 5 சொல்லுகிறது. அசுத்தமான உணவுகளை உண்டு, தங்களைத்தாங்களே பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுகிற மக்களை தேவன் அழிப்பார் (ஏசாயா 66:17) என்கிறதை தயவுசெய்து கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
2. “வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” என்று மத்தேயு 15:11 சொல்லுகிறதே, இதை விளக்கமுடியுமா?
பதில்: மத்தேயு 15:1-20 வரை இருப்பது கைகழுவாமல் சாப்பிடுவதைக்குறித்து பேசுவதாகும். அதில் சாப்பிடுவது நோக்கமல்ல, கழுவுவதுதான் அங்கேயிருந்த கருத்து. வேதபாரகர்கள் சடங்கான கழுவுதல் இல்லாமல் ஆகாரத்தை உண்ணுவது சாப்பிடுகிறவனை தீட்டுப்படுத்தும் என்று போதித்தனர். ஆனால் இயேசு சடங்கான கழுவுதல்கள் அர்த்தமற்றவை என்று கூறினார். வசனம் 19ல் கொலை, விபசாரம், களவு போன்ற தீமையான காரியங்களை அவர் பட்டியலிடுகிறார். பின்னர் வசனம் 20ல் “இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுவது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது” என்று அதை முடித்தார்.
3. அப்போஸ்தலர் 10ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி பேதுருவின் தரிசனத்தில் இயேசு அனைத்து மிருகங்களையும் பரிசுத்தப்படுத்தவில்லையா?
பதில்: இல்லை. உண்மையில் சொல்லப்போனால் இந்த தரிசனத்தின் பொருள் மிருகங்களல்ல, மனிதர்கள். யூதர்கள் நம்பியிருந்ததைப்போல புறஜாதிகள் தீட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதைக் காண்பிக்கவே தேவன் பேதுருவிற்கு இந்த தரிசனத்தைக் கொடுத்தார். இரண்டு மனிதர்களை அனுப்பும்படியாக தேவன் புறஜாதியானாகிய கொர்னேலியுவுக்கு போதித்தார். இந்த தரிசனத்தை அவர் பேதுருவிற்குக் கொடுக்காதிருந்தால், அவன் அவர்களைப் பார்க்க மறுத்திருப்பான். ஏனெனில் புறஜாதிகளை உபசரிப்பதற்கு யூத சட்டம் தடை செய்திருந்தது 9வசனம் 28). இந்த மனிதர்கள் வந்தபோது இதற்குமுன் செய்திராதவிதமாக பேதுரு அவர்களை வரவேற்று, “அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதானானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்” (வசனம் 28) என்று கூறினான். அடுத்த அதிகாரத்தில் (அப்போஸ்தலர் 11) புறஜாதிகளோடு பேசினதினிமித்தம் சபை உறுப்பினர்கள் பேதுருவை விமர்சித்தார்கள். எனவே தனது தரிசனத்தின் முழு கதையையும் அதன் பொருளையும் அவன் கூறினான். “இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திருப்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்” என்று அப்போஸ்தலர் 11:18 சொல்லுகிறது.
4. புசிக்கக்கூடாது என்றால் ஏன் தேவன் பன்றியை உண்டாக்கினார்?
பதில்: குப்பையையும் அழுக்கையும் சுத்தம் செய்யவேண்டுமென்று பெரிய பருந்துவை உண்டாக்கின தேவன், அதே நோக்கத்திற்காகத்தான் பன்றியையும் உண்டாக்கினார். சொல்லக்கூடிய விதத்தில் பன்றி இந்த வேலையை செய்து இந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறது.
5. “புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக;” “ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்ல,” “எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்;” என்று ரோமர் 14:3,14,20 சொல்லுகிறதே இதை உங்களால் விளக்க முடியுமா?
பதில்: சில காரியங்களை சாப்பிடுகிறவர்களுக்கும் சாப்பிடாதவர்களுக்கும் இடையே நடந்த ஒரு சம்பாஷணையே வசனம் 3-6 வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் எவரும் சரியென்று இந்த பகுதி கூறவில்லை. மாறாக, மற்றவர்களை நியாயந்தீர்க்கவேண்டாம் என்றே ஆலோசனை கூறுகிறது. தேவன் மாத்திரமே நியாயதிபதி (வசனம் 4,10-12). வசனங்கள் 14-20 விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவுகளைக் குறிக்கிறதேயல்லாது (அவைகள் சடங்குகளினிமித்தம் அசுத்தமாயின), லேவியராகமம் 11 குறிப்பிடும் சுத்தமான மற்றும் அசுத்தமான மிருகங்களைக் குறிப்பிடவில்லை. (1 கொரிந்தியர் 8:1,4,10,13ஜ வாசிக்கவும்). விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டதினாலே உணவு அசுத்தமானது என்பதல்ல அங்கிருக்கிற உரையாடல். ஏனெனில், விக்கிரகங்கள் ஒரு பொருட்டல்ல என்று வேதாகமம் சொல்லுகிறது. ஆனால் ஒரு நபருடைய மனச்சாட்சி அவரைத் தாக்கும்போது, அப்படிப்பட்ட உணவை சாப்பிடக்கூடாதென்று அவரை உணர்த்தும்போது, அவர் அதை சாப்பிடக்கூடாது. அது அவரது சகோதரரை பெலவீனப்படுத்தும் என்றாலும் அதை தவிர்க்கவேண்டும்.
6. ஆரோக்கிய சட்டங்களும், புசிப்பதும் குடிப்பதும் உண்மையிலேயே எனக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமானவையா? நான் இயேசுவை நேசிக்கிறேன் அது போதாதா?
பதில்: இவை வாழ்வா சாவா என்கிறதைக் குறித்தது. ஏனெனில் இந்த சட்டங்கள் கீழ்ப்படிதலை உள்ளடக்கியிருக்கின்றன. “தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி” – எபிரெயர் 5:9; “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் விரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தவே! கர்த்தவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” – மத்தேயு 7:21. கிறிஸ்துவை நேசிப்பதென்பது அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை உள்ளடக்கியிருக்கிறது. ஏனெனில் “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று அவர் சொல்லுகிறார் ஆண்டவரை நாம் மெய்யாகவே நேசிக்கும்போது, நழுவாமலும் சாக்கு கூறாமலும் மகிழ்ச்சியோடு அவருக்குக் கீழ்ப்படிவோம். இதுவே நமக்குக் கொடுக்கப்படுகிற உன்னதமான சோதனை.
கேள்விகள்
1) சரீரத்திற்கான தேவனுடைய ஆரோக்கிய சட்டங்களைப் பின்பற்றுவது: (1)
_____ குழந்தைகளுக்கு மிக அவசியம்; பெரியவர்களுக்கு அப்படி அல்ல.
_____ உண்மையான மதத்தின் மிகவும் முக்கியமான பகுதி.
_____ ஒரு நபருடைய மதத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை.
2) தேவனுடைய ஆரோக்கிய சட்டங்கள்: (1)
_____ ஆதியிலே நம்மை உண்டாக்கி நம்முடைய மகிழ்ச்சிக்கு எது சிறப்பானது என்று அறிந்திருக்கிற அன்பின் தேவானால் கொடுக்கப்பட்டது.
_____ யூதர்களுக்கே கொடுக்கப்பட்டது; நமக்கு இன்றைக்குப் பொருந்தாது.
_____ அவர் நம்முடைய சர்வாதிகாரி நம்மைக் கட்டுப்படுத்த அவரால் முடியும் எனக் காட்ட கொடுக்கப்பட்டது.
3) உண்மையான கிறிஸ்தவன்: (1)
_____ தான் விரும்புகிற எதையும் புசித்து குடிப்பான்.
_____ கிறிஸ்துவை மேலாக நேசித்து, அவருடைய ஆரோக்கிய சட்டங்கள் சிலுவையில் அறையப்பட்டன என்று அவைகளை நிராகரிப்பான்.
_____ சரீரத்தையும் மனதையும் குணத்தையும் பெலப்படுத்தி, தேவனுக்கு கனத்தை கொண்டுவருகிறதை மாத்திரமே புசித்துக் குடிப்பான்.
4) மனிதனுடைய முதல் உணவு: (1)
_____ பழங்களும் தானியங்களும்; விதைகளும் கொட்டைகளும்.
_____ மதுபானங்களையும் மாமிச உணவுகளையும் சேர்த்திருந்தது.
_____ ஆதாமும் ஏவாளும் விரும்பின எதையும், அனைத்தையும் கொண்டிருந்தது.
5) தேவன் குறிப்பிடும் அசுத்த மிருகங்கள்: (7)
_____ மாடு
_____ பன்றி
_____கோழி
_____ அணில்
_____ முயல்
_____ பூனை மீன்
_____ மான்
_____ செதிலுள்ள மீன்
_____ கிளிஞ்சல்
_____ இறால்மீன்
_____ கடல்நண்டு
_____ ஆடு
6) மதுபானங்கள்: (1)
_____ அளவாக உபயோகிக்கப்பட்டால் கிறிஸ்தவனுக்கு நல்லதே.
_____ தவறு என்று நினைக்கும்போது மாத்திரமே அது தவறாகும்.
_____ கிறிஸ்தவன் உபயோகிக்கக்கூடாது.
7) புகையிலை உபயோகம்: (1)
_____ ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட கருத்து. அதில் மதத்திற்கு இடமில்லை.
_____ எந்த வடிவத்திலும் கிறிஸ்தவன் அதை உபயோகிக்கமாட்டான்.
_____ கிறிஸ்தவனுக்கு நன்மையானதே.
8) தேவனுடைய ஆரோக்கிய சட்டங்களை தெரிந்தெடுங்கள். (9)
_____ அளவிற்கதிகமாக சாப்பிடக்கூடாது.
_____ ஒவ்வொரு முறை ஆகாரத்திற்குப் பிறகும் புகை பிடிக்கவேண்டும்.
_____ மகிழ்வோடு குதுகலமாயிருங்கள்.
_____ ஆகாரத்திற்குமுன்பாக சற்று மதுபானம் குடியுங்கள்.
_____ சரீரத்தை சுத்தமாக வைத்திருங்கள்.
_____ அதிகமாக பன்றியிறைச்சி சாப்பிடுங்கள்.
_____ தாராளமாக டீ காபி குடியுங்கள்.
_____ அனைத்திலும் கட்டுப்பாடாயிருங்கள்.
_____ முறையான இடைவேளைகளில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
_____ மனதில் காழ்ப்புணர்வு வேண்டாம்.
_____ வேலையையும் உடற்பயிற்சியையும் தூக்கத்தையும் சமநிலைப்படுத்துங்கள்.
_____ ஆண்டவரை முழுமையாக நம்புங்கள்.
_____ மிருக கொழுப்பு இரத்தம் தவிருங்கள்.
9) தேவனுடைய ஆரோக்கிய சட்டத்தைக்குறித்த மிக முக்கியமான உண்மை: (1)
_____ தேவனுடைய ஆரோக்கிய சட்டங்களை பெற்றோர் நிராகரிப்பதால் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பலவேளைகளில் பெலவீனமான சரீரங்களையும் மனங்களையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
_____ இந்த சட்டங்கள் யூதர்களுக்கே. இன்றைக்குப் பொருந்தாது.
_____ கிறிஸ்துவை மெய்யாக நேசிப்போமானால் ஆரோக்கிய சட்டங்கள் முக்கியமானவை அல்ல.
10) பாவ பழக்கங்களை மேற்கொள்ள சிறந்த வழி: (1)
_____ அவைகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள்.
_____ இவைகளையெல்லாம் செய்ய வல்லமை கொடுக்கிற கிறிஸ்துவிடம் முழுமையாக ஒப்படையுங்கள்.
_____ அவைகள் சென்றுவிடும் என்று நம்புங்கள்.
11) தேவனுடைய ஆரோக்கிய சட்டங்கள்: (1)
_____ ஒரு வாகனத்தை இயக்கும் சட்டங்களைப் போன்றவை. அவைகள் நமக்கு சிறப்பானவை. அவைகளை நிராகரிப்பதால் ஆபத்தான பிரச்சனைகளுக்கு உள்ளாவோம்.
_____ மோசேயினுடைய சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து, சிலுவையோடு முடிந்துபோனது.
_____ நல்ல கருத்துதான். ஆனால் தேவனுடனான ஒரு நபரின் உறவை பாதிப்பதில்லை.
12) உண்மையான கிறிஸ்தவன்: (1)
_____ அதிக நேரம் ஜெபத்தில் செலவிட்டு தேவனுடைய ஆரோக்கிய சட்டங்களை நிராகரிப்பான்.
_____ கிறிஸ்துவை நேசிக்கும்போது அவருடைய சட்டங்களையும் பிரமாணங்களையும் மகிழ்ச்சியோடு கைக்கொள்வோமாகையால், அவருடைய சட்டங்களுக்கு முரணான எந்த பழக்கத்தையும் உடனடியாக மாற்றுவான்.
_____ புகையிலையை உபயோகிக்க சுதந்திரவாளியாக இருப்பான்.
13) தேவனுடைய ஆரோக்கியச் சட்டங்களைப் பின்பற்ற தீர்மானிக்கிறேன்.
_____ ஆம்.
_____ இல்லை.