வேதபாடம் 1
நம்பியிருந்த பெரும் நிருவன மோசடிகளால் இலட்சக்கணக்கானோர் கொள்ளையாடபட்டு, மதஅதிகாரிகள்பொய்யானவர்களென்று நிரூபிக்கப்பட்டு, அரசியலில் பொய்சொல்லுவது சாதாரணமாகி, நீங்கள் அதிகம் நம்பியிருந்தவர்கள் உங்களை அதிக ஆழமாக காயப்படுத்தும் – சன்மார்க்க சவால்கள் நிறைந்த இந்தக் காலங்களில் – நம்பக்கூடிய ஏதாகிலும் உங்களுக்கு இருக்கிறதா? ஆம்! நீங்கள் வேதாகமத்தை முழமையாக நம்பலாம்! ஏன்? சான்றுகளை சற்று கவனியுங்கள்.

1. வேதாகமம் தன்னைக்குறித்து என்ன சொல்லுகிறது?
“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது;” -2 தீமோத்தேயு 3:16; “தீர்க்கதரிசனமானதுஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்தஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” -2 பேதுரு 1:21; “வேதவாக்கியமும் தவறாததாயிருக்க , “ –யோவான் 10:35.
பதில்: தான் ஏவப்பட்டு எழுதப்பட்டதாக அது உரிமை பாராட்டுகிறது. பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்ட மனிதர்களால் அதுஎழுதப்பட்டது. அது தவறாது ; அதைப் பொய்யென்று நி௹பிக்கவும் முடியாது.
2. வேதவாக்கியங்களின் மேலிருந்த தமது நம்பிக்கையை இயேசு எவ்விதம் விளக்கினார்?
இயேசு: “மனுஷன் அப்பத்தினலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்றுஎழுதியிருக்கிறதே;“ “உன்தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே.” “உன் தேவனாகியகர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே “ – மத்தேயு 4: 4,7,10; “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும் ; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17: 17) என்றுகூறினார்.

பதில்: சாத்தானுடைய சோதனைகளைச் சந்தித்தபோது இயேசு வேதவாக்கியங்களை மேற்கோளாகக் காட்டினார். வேதாகமத்தை சத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டார் (யோவான் 17: 17 ). தாம் போதித்த சத்தியத்திற்கான அதிகாரமாகஅவர் வேதவாக்கியங்களை மேற்கோளாகக் காட்டினார்.
3. தேவ ஆவியினால் எழுதப்பட்டதென்கிறதை வேதாகம தீர்க்கதரிசனங்கள் உறுதிபடுத்துகின்றனவா?
“நான் கர்த்தர்…. புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன் ; அவைகள் தோன்றாததற்குமுன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்” –ஏசாயா 42: 8,9; “நானே தேவன்…. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; “ (ஏசாயா 46: 9,10)

பதில்: எதிர்காலத்தில் நடக்கவிருப்பவைகளாக வேதாகமம் அறிவித்திருக்கிற சம்பவங்கள், வேதவாக்கியம் தேவ ஆவியினால்எழுதப்பட்டது என்பதை அவைகள் நடக்கும்போது உறுதிப்படுத்துகின்றன. நிறைவேறியிருக்கிற கீழ்கண்ட வேதாகமதர்க்கதரிசனங்களை கவனியங்கள்:
அ. நான்கு உலக சாம்ராஜ்யங்கள் எழும்பும். பாபிலோன், மேதிய-பெரிசியா, கிரேக்கம், ரோம் ; தானியேல் 2,7,8.
ஆ. பாபிலோனை மாவீரன் கோரேசு பிடிப்பான். ஏசாயா 45:1-3.
இ. பாபிலோனின் அழிவிற்குப் பிறகு மீண்டும் அதில் ஒருபோதும் ஒருவரும் குடியேறமாட்டார்கள். ஏசாயா 13:19,20; ஏரேமியா 51: 37.
ஈ. தேசங்களின் நடுவே எகிப்து தன் அதிகாரத்தை மீண்டும் ஒருபோதும் அடையாது. எசேக்கியேல் 29:14,15; 30: 12,13.
உ. காலங்களின் முடிவில் உலகையே அசைக்கும் பேரழிவுகள் சம்பவிக்கும். லூக்கா 21: 25,26.
ஊ. கடைசி நாட்களில் சன்மார்க்க சீரழிவும் மார்க்கச் சரிவும் ஏற்படும். 2 தீமோ. 3:1-5.
4. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அறிவியலறிக்கைகள் துல்லியமானவை என்று நாம் எதிர்பார்க்கமுடியுமா?
“உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம்” – சங்கீதம் 119: 160 ; “சத்திய ஆவியாகிய அவர்…. சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.” (யோவான் 16 :13)

பதில்: ஆமாம், வேதாகமம் சத்தியமே; வேதாகம எழுத்தாளர்களை நடத்தின பரிசுத்த ஆவியானவர் எப்போதும் சத்தியத்தையே பேசுகிறார். அறிவியலால் உறுதிப்பண்ணப்பட்ட சில வேதாகம வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அ. “பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.” – யோபு 26: 7. இந்த அறிவியல் உண்மை வேதாகமத்தின் மிகப் பழமையானபுத்தகமாகிய யோபிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆ. “அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்.” – ஏசாயா 40: 22. மனிதன் கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கானவருடங்களுக்கு முன்பே வேதாகமம் இதை கூறியிருக்கிறது.
இ. “அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து,” – யோபு 28 :25. அறிவியல் ஆய்வாளர்கள் அறிந்துகொண்டதற்கும் அநேகவருடங்களுக்கு முன்பாகவே காற்றிற்கு நிறை உண்டென்று தேவன் சொல்லியிருக்கிறார்.
5. வேதாகம ஆரோக்கிய கொள்கைகள் இருபத்தியோராம் நூற்றாண்டின் மனங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா?
வேதம் சொல்கிறது: “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.” 3 யோவான் 1:2
பதில்: தேவன் தமது படைப்புகள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகிறார். பின்வரும் சில எடுத்துக்காட்டுகள் அதன் தெய்வீக ஏவுதலை உறுதிப்படுத்தும் வேதாகம ஆரோக்கிய கொள்கைகளாகும்.
A. உடல் அசுத்தத்தை மண்ணினால் மூடவேண்டும். உபாகமம் 23: 12,13. உடல் அசுத்தத்தை புதைக்கவேண்டும் என்று மோசேயின் காலத்தில் வேதாகமம் ஏற்பாடு செய்திருந்தது, நாம்அதைப் புரிந்துகொண்டதற்கு 3500 வருடங்களுக்கு முன்பாகவே அது எண்ணிக்கைக்கடங்காத ஆயிரக்கணக்கானயூதர்களின் வாழ்க்கையை காப்பாற்றியிருந்தது . சரியான சுகாதாரமுறைகள் கையாளப்படாத்தால் மிகப்பெரியபிரச்சனைகள் இன்னமும் எழுகின்றன.
B. “நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக” – 1 கொரிந்தியர் 10: 8. “வேசித்தனம்” என்கிற வார்த்தைஅனைத்துவிதமான முறையற்ற உடலுறவுகளையும் குறிக்கிறது. இந்த சமயத்திற்கேற்ற வேதாகம ஆலோசனைகீழ்ப்படியப்பட்டிருக்குமானால் எய்ட்ஸ் வியாதியே வந்திருக்காது. கருக்கலைப்பும் இப்போதிருப்பதைப்போலசர்வதேச அவதூறாக இருந்திருக்காது.
C. மதுபானங்களை கைவிடவேண்டும். நீதி. 23: 29-32. மிகவும் பயனுள்ள இந்த வேதாகம தீர்வுசெயல்படுத்தப்பட்டிருக்குமானால் எப்படியிருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
அ. இலட்சக்கணக்கான குடிகாரர்கள் தெளிவான – மதிப்பிற்குரிய குடிமக்களாகியிருப்பார்கள்.
ஆ. இலட்சக்கணக்கான குடும்பங்கள் இணைந்திருக்கும்.
இ. பிரிந்துபோன இலட்சக்கணக்கான இல்லங்கள் சரிசெய்யப் பட்டிருக்கும்.
ஈ. தெளிவான சிந்தையோடு வாகனம் ஓட்டுவதினால் பல ஆயிரம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
உ. ஆயிரக்கணக்கான அரசியல், தொழில், வர்த்தக அதிபதிகள் தெளிவான தீர்மானங்கள் செய்திருப்பார்கள்.
ஊ. மனித நேயத்திற்காக கோடிக்கணக்கான பணம் இருந்திருக்கும்.
குறிப்பு: பயமுறுத்தும் இன்றைய பிரச்சனைகளுக்கு மத்தியில் எவ்விதம் மகிழ்ச்சியாக இருப்பது என்பதை மாத்திரம் தேவன் சொல்லவில்லை. அப்படி இருப்பதற்கான அற்புதமான வல்லமையையும் கொடுக்கிறார். (1 கொரி. 15: 57, பிலி. 4: 13, ரோமர்1: 16). வேதாகம ஆரோக்கிய கொள்கைகள் பொருத்தமானதும் அவசியம் தேவைப்படுகிறவைகளுமாக இருக்கிறது. எனினும் சிலரே அவைகளை கவனிக்கிறார்கள். ஆரோக்கியத்திற்கடுத்த அதிக போதனைகளுக்கு பாடம் 13- ஐ பார்க்கவும். (மதுபானஉபயோகம் அநேக மக்களுக்கு சொல்லமுடியாத வேதனையைக் கொண்டுவந்திருக்கிறது.)
6. வேதாகமத்தின் சரித்திர அறிவிப்புகள் மிகச் சரியானவையா?

“நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்” (ஏசாயா 45:19)
பதில்: ஆமாம், வேதாகம சரித்திர அறிவிப்புகள் மிகத் துல்லியமானவையே. தேவன் தமது புத்தகத்தில் சொல்லியிருக்கிறவைஉண்மையே. சிலவேளைகளில் சில சரித்திர உண்மைகளை உறுதிப்படுத்த போதுமான சான்றுகள் தற்காலிகமாக காணப்படாதிருக்கலாம். ஆனால் அதன் காலத்தில் சான்றுகள் தென்படும். கீழே கொடுக்கப்பட்டிருப்பவைகளை கவனியுங்கள்:
A. ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்று தாங்கள் மறுதலிக்கிற ஏத்தியர்களையும் (உபாகமம் 7: 1), நினிவே (யோனா 1: 1,2) சோதோம் (ஆதியாகமம் 19: 1) போன்ற பட்டணங்களையும் குறிப்பிடுவதால் வேதாகமம் நம்பத்தகுந்ததல்ல என்றுசந்தேகவாதிகள் பலவருடங்களாக சொல்லிவந்தார்கள். ஆனால் இந்த மூன்றுமே இருந்திருக்கிறது என்று நவீன ஆழ்வாராய்ச்சிஇப்போது உறுதிபடுத்துகிறது.
B. பெல்சாத்சார் (தானியேல் 5: 1) மற்றும் சர்கோன் (ஏசாயா 20: 1) என்று வேதாகமம் குறிப்பிடுகிற இராஜாக்கள் ஒருபோதும்இருந்திருக்கவில்லை என்றும் விமர்சகர்கள் சொல்லுகிறார்கள். அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதுஉறுதிபண்ணப்பட்டிருக்கிறது.
C. மோசேயின் பதிவுகள் அப்போது இருந்திராத எழுத்தையும் (யாத்திராகமம் 24: 4) சக்கரங்கொண்ட வாகனங்களையும்(யாத்திராகமம் 14: 25) குறிப்பிடுவதால் அவை நம்பத்தகுந்தவை அல்ல என்றும் சந்தேகவாதிகள் சொல்லுகிறார்கள். அவர்கள்இன்றைக்கு இதைக்குறித்து அதிகம் அறிந்திருக்கிறார்கள்.
D. ஒருகாலத்தின் முற்கால இஸ்ரவேலையும் யூதாவையும் ஆண்ட 39 இராஜாக்களும் வேதாகமத்தால் மாத்திரமேஅங்கீகரிக்கப்பட்டிருந்தார்கள். எனவே விமர்சகர்கள் அவைகளை நம்பவில்லை. ஆனால் பின்னர், இந்த இராஜாக்களில்அநேகரைக் குறிப்பிட்டிருக்கிற மண்ணோட்டுப் பதிவுகளை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்ததால் மீண்டும் ஒருமுறைவேதாகம பதிவு மிகவும் சரியானதென்று நிரூபிக்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்புகள் வேதாகம மனிதர்களையும் இடங்களையும்நம்பவங்களையும் உறுதிபடுத்தியதால் விமர்சகர்கள் அடுத்தடுத்து தவறென்று நிரூபிக்கப்பட்டனர். அது அவ்வாறே இருக்கும்
7. வேதாகமத்தைப்பற்றி வேறு என்ன உண்மைகள் அதன் தெய்வீக ஏவுதலை நிரூபிக்கின்றன?
“வேதம் சொல்கிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” (2 தீமோ 3:16)

பதில்: வேதாகமத்தின் மாபெரும் அற்புதங்களில் ஒன்று அதன் ஒற்றுமை. கீழே கொடுக்கப்பட்டிருக்கிற உண்மைகளை சற்றுகவனியுங்கள்:
வேதாகமத்திலுள்ள 66 புத்தகங்களும்:
- மூன்று கண்டங்களில் எழுதப்பட்டவை.
- மூன்று மொழிகளில் எழுதப்பட்டவை.
- இராஜாக்கள், மேய்ப்பர்கள், அறிவியல் அறிஞர்கள், வக்கீல்கள், ஒரு படை தளபதி, மீன் பிடிப்பவர்கள், ஆசாரியர்கள் மற்றும் ஒருவைத்தியனால் என்று, நாற்பது வெவ்வேறு மனிதர்களால் எழுதப்பட்டன.
- ஏறக்குறைய 1,500 வருட காலத்தில் எழுதப்பட்டன.
- மிகவும் எதிரிடையான பொருட்களைக்குறித்து எழுதப்பட்டிருக்கின்றது.
- எழுதினவர்களில் அநேகர் ஒருவரையொருவர் சந்தித்ததே இல்லை.
- எழுத்தாளர்களின் கல்வியும் பின்னணியும் மிகவும் வேறுபட்டவை.

இவை நினைத்துப் பார்க்கக் கூடாதவைகளாயிருப்பினும்…
1. 66 புத்தகங்களும் ஒன்றோடொன்று இசைவாக இருக்கின்றன. 2. பலவேளைகளில் ஒரு பொருளைக்குறித்த புதிய கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. எனினும் அவை அதைக்குறித்துமற்ற வேதாகம எழுத்தாளர்கள் சொல்லுவதை குறைத்துக் காண்பிப்பதில்லை.
ஆச்சரியப்படுத்துகின்றன. ஒரே சம்பவத்தைக் கண்டிருந்த மக்களிடம் நடந்ததைக்குறித்த அறிக்கை தரும்படி கேளுங்கள். அவர்கள் மிகவும் வேறுபட்ட அறிக்கையை கொடுப்பார்கள். அது எப்போதும் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவருடையதிற்குஎதிரானதாயிருக்கும். வேதாகமம் 40 மனிதர்களால் 1,500 வருட காலத்தில் எழுதப்பட்டிருந்தபோதும், ஒரு மாபெரும்ஞானியால் எழுதப்பட்டதைப்போன்று இருக்கிறது. உண்மையில் அது அப்படிப்பட்டதே. “தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள்பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” 2 பேதுரு 1: 21. பரிசுத்த ஆவியானவர் அவர்களை ஏவினார். அவரேவேதாகமத்தின் மெய்யான எழுத்தாளர். ஒரே சம்பவத்தை நான்கு சுவிசேஷங்களும் வெவ்வேறுவிதமாக அறிவிப்பினும் அவைகள்ஒன்றுக்கொன்று ஈடு அளிக்கின்றன.

8. வேதாகமம் தேவஆவியினால் எழுதப்பட்டது என்பதற்கான என்ன சான்றை மக்களின் வாழ்க்கையில் காணலாம்?
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான் ; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” (2 கொரிந்தியர் 5: 17)
பதில்: குடிகாரன் தெளிந்த புத்தியுள்ளவனாகவும், ஒழுக்கமில்லாதவன் தூய்மையானவனாகவும், போதைகளுக்கு அடிமைப்பட்டவன்சுதந்தரவாளியாகவும், தூஷிக்கிறவன் பயபக்தியுள்ளவனாகவும், பயப்படுகிறவன் தைரியவானாகவும், முரடன் தயவுள்ளவனாகவும்மாறியிருக்கிற – இயேசுவை பின்பற்றி வேதவாக்கியங்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களின் வாழ்க்கைகள் வேதாகமம் ஏவப்பட்டுஎழுதப்பட்டது என்பதற்கான மனதை உணர்த்துகிற நிரூபணங்களாக இருக்கின்றன. ஒரு அமெரிக்க இல்லைவாதி, மனிதர்களைசாப்பிடுகிறவர்கள் வாழ்ந்திருந்த ஒரு தீவிற்குச் சென்றான். அங்கே ஒரு வயதான மனிதன் வேதாகமத்தை வாசிக்கிறதைக் கண்டு, “முழுவதும் கற்பனைக் கதைகள் கொண்டதென்று ஏற்கனவே வெளியரங்கமான ஒரு புத்தகத்தை” படிக்கிறவனாக கேலிசெய்யப்பட்டான். அந்த மனிதன் புன்முறுவலோடு அவனை நோக்கி: “என் நண்பனே, நாங்கள் இந்த புத்தகத்தை வாசிப்பதற்காகநீ நன்றியோடு இரு. அப்படியில்லாதிருந்தால், இன்று இரவு உன்னை சாப்பிட்டிருப்போம்” என்றாராம். வேதாகமம்உண்மையாகவே மனிதர்களை மாற்றுகிறது. இது ஆச்சரியமான உண்மை. அது தேவஆவியினால் எழுதப்பட்டதைஉறுதிப்படுத்துகிறது.
9. வரவிருந்த மேசியாவைக்குறித்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை இயேசுவின் வாழ்க்கையைக்குறித்த புதிய ஏற்பாட்டுச்சம்பவங்களோடு ஒப்பிடும்போது வேதாகமம் தேவஆவியினால் எழுதப்பட்டதற்கு என்ன சான்றுகள் கிடைக்கின்றன?
“மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளைஅவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்,” – லூக்கா 24:27; அவன் (அப்பொல்லோ) அங்கே வந்தபின்பு வெளியரங்கமாகயூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால்,” (அப்போஸ்தலர் 18:28)

பதில்: வரவிருந்த மேசியாவைக்குறித்த பழையஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் மிகவும் குறிப்பாகவும் தெளிவாகவும் நசரேயனாகிய இயேசுவினால் நிறைவேற்றப்பட்டன. அப்பொல்லோவும் பவுலும் இயேசுவே மேசியா என்று யூதர்களிடம் நிரூபிக்க இந்ததீர்க்கதரிகனங்களை உபயோகித்தனர். 125- கும் அதிகமான தீர்க்கதரிசனங்கள் இருந்தாலும் நாம் 12ஜ மாத்திரம் பார்போம்:
| தீர்க்கதரிசனம் | பழைய ஏற்பாட்டு வாக்கியம் | புதிய ஏற்பாட்டு வாக்கியம் |
|---|---|---|
| 1. பெத்லகேமில் பிறப்பார் | மீகா 5:2 | மத்தேயு 2:1 |
| 2. கன்னியினிடம் பிறப்பார் | ஏசாயா 7:14 | மத்தேயு 1:18-23 |
| 3. தாவீதின் சந்ததியில் | எரேமியா 23:5 | வெளி 22: 16 |
| 4. ஏரோது கொலைசெய்ய முயற்சிப்பான் | எரேமியா 31:15 | மத்தேயு 2:16-18 |
| 5. நண்பனால் காட்டிக் கொடுக்கப்படல் | சங்கீதம் 41:9 | யோவான் 13:18,19,26 |
| 6. முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படல் | சகரியா 11:12 | மத்தேயு 26:14-16 |
| 7. சிலுவை மரணம் | சகரியா 12:10 | யோவான் 19:16-18, 37 |
| 8. அவருடைய வஸ்திரத்தின் மேல் சீட்டு | சங்கீதம் 22:18 | மத்தேயு 27:35 |
| 9. எலும்புகளிலொன்றும் முறிக்கப்படவில்லை | சங்கீதம் 34:20 | யோவான் 19:31–36 |
| 10. ஐசுவரியவானுடைய கல்லறையில் | ஏசாயா 53:9 | மத்தேயு 27:57–60 |
| 11. அவருடைய மரணத்தின் வருடமும் நாளும், மணிவேளையும் | தானியேல் 9:26,27; யாத்திராகமம்12:6 | மத்தேயு 27:45-50 |
| 12. மூன்றாம் நாளில் ஏழுப்பப் படுவார் | ஒசியா 6:2 | அப் 10:38-40 |
கலிபோர்னியாவின் பசாடெனா கல்லூரியில் கணிதம், வானியல் மற்றும் பொறியியல் துறைகளின் முன்னாள்தலைவராயிருந்த டாக்டர். பீட்டர் ஸ்டோனர் என்பவர் அநேக வருடங்களாக 600 மாணவர்களிடம் “நிகழ்தகவின் கொள்கை” யை “ Principle of Probability”யை மேசியாவின் வருகையைக் குறித்த தீர்க்கதரிசனங்களின்மேல்செயல்படுத்தி ஒரு ஆய்வு செய்தார். அநேகமானவைகளில் 8 தீர்க்கதரிசனங்களை மாத்திரம் தெரிந்துகொண்டனர். முடிவாக, ஒரு மனிதனின் வாழ்க்கையில் அனைத்து எட்டு தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும் வாய்ப்பு1,000,000,000,000,000,000,000,000,000,000,000 நபரில் ஒருவருக்குக் கிடைக்கும் என்று தீர்மானித்தனர். மேசியாவைக்குறித்த 125 தீர்க்கதரிசனங்களும் நிறைவேறவேண்டுமெனில் அது எப்படிப்பட்ட எண்ணாக இருக்கும்? அது சம்பவிக்கவே முடியாது.
10. வேதாகமம் தேவஆவியினால் எழுதப்பட்டதென்று ஏற்றுக்கொள்ளும் மனிதனுக்கு என்ன மாபெரும் நன்மை இருக்கிறது?

“உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும்ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.” – சங்கீதம் 119:100; “நிர் … என்னை என் சத்துருக்களிலும் அதிகஞானமுள்ளவனாக்குகிறீர்.” – சங்கீதம் 119:98; “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே… உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.” (ஏசாயா 55:9)
பதில்: தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் ஒரு நபர், அதற்கு வெளியே இருக்கும் படித்த மேதைகளால் ஒருபோதும் தீர்க்ககூடாத அநேக சவால்களுக்கு பதில் பெறுவார். உதாரணமாக வேதாகமம் கீழ்கண்டவாறு போதிக்கிறது:

அ. தேவன் பூமியையும் உயிர்வாழும் அனைத்தையும் ஆறு எழுத்தின்படியான நாட்களில் – 24 மணி நேரம் கொண்டநாட்களில் உண்டாக்கினார். யாத். 20:11; சங். 33:6,9.
ஆ. கடல் உயிரினங்களையும் நோவாவின் பேழைக்குள் இருந்தவர்களையும் தவிர்த்து மற்ற அனைத்து ஜீவன்களையும்உலகளாவிய வெள்ளம் ஒன்று அழித்து விட்டது. ஆதியாகமம் 6,7,8.
இ. உலகத்தின் வெவ்வேறு மொழிகள் பாபேல் கோபுரத்தில் துவங்கின. ஆதியாகமம் 11:1-9. எப்போதும் இருந்துஅனைத்தையும் அறிந்திருக்கிற தேவன் மேற்கண்ட மூன்று சத்தியங்களையும் – அவைகளை நாமாகாவே கண்டுகொள்ள முடியாதுஎன்பதை உணர்ந்தவராக நம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறார். நாம் குறைவாகவே அறிந்திருக்கிறோம். (1 கொரி.13:9).
தேவனுடைய அறிவு “ஆராயப்படாதவைகள்” – ரோமர் 11:33. ஆதாம் மற்றும் ஏவாளைப்போலவே பூமியும் முதிர்ந்ததாகஉண்டாக்கப்பட்டதால் பரிணாமவாதிகள் அதன் வயதை ஒருபோதும் அறியமாட்டார்கள். அந்த தம்பதிகள் அவர்களுடையஇரண்டாம் நாளில் ஒரே நாள் வயதை அடைந்திருந்தார்கள். ஏனினும் முதிர்ந்தவர்களாக இருந்தார்கள். மனிதனுடைய அளவிடும்கருவிகள் சரியான வயதை அளக்கக்கூடாது. அப்படியிருந்தபோது, அவைகள் நம்பத்தகாதவைகள். வேதாகமத்தை நம்புங்கள், மதசார்பற் மேதைகள் மற்றும் உலக ஞானிகளின் கற்பனைகளுக்கு மிக அப்பால் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்.

11. வேதாகமத்தின் வல்லமையையும் வேண்டுகோளையும் கவனத்திற்கு கொண்டுவந்த சமீபகால நிகழ்வுகள் என்ன?
பதில்: அதிகரித்துவரும் இயற்கை பேரழிவுகள் மற்றும் உலகளாவிய தீவிரவாதத்தின் எழுச்சி ஆகியவை வேதம் முன்னுரைத்தஅடையாளங்களாகும். காலத்தின் முடிவில் “… பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும். சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.” (லூக்கா 21:25) என்று வேதம் கூறுகிறது. டிசம்பர் 26, 2004 அன்று வந்த சுனாமிஒரு உதாரணமாகும். நவீன வரலாற்றில் நடந்த மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் அது ஒன்றாகும். இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஜனங்கள் மரித்துபோனதாகவும், காணாமற்போனதாகவும் கூறப்படுகிறது. ஒரு வருடம் கழித்து, கத்ரினா சூறாவளி புயல் நியு ஒர்லியன்ஸ் முழுவதையும் அழித்துபோட்டது. “அலைகளும் முழக்கமாயிருக்கும்”; என்று கூறப்பட்டஇயேசுவின் வார்த்தைகளின் தீர்க்கதரிசன வல்லமையை மீண்டும் நமக்கு நினைப்பூட்டுகிறதாயிருக்கிறது.
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனம் எழும்பும்” (மத் 24:7) என்றும் வேதம் முன்னுரைத்திருக்கிறது. செப்டம்பர் 11, 2001 அன்று உலகவர்த்தக மைய கோபுரங்கள்மீது நடந்த மோசமான தாக்குதலுக்கு பிறகு எந்த தேசமும் உண்மையிலேயே பாதுகாப்பாக இல்லைஎன்பதை ஜனங்கள் உணர்ந்தனர். மத்திய கிழக்கு பகுதியில் நடந்துவரும் சண்டைகளும், தொடர்ந்து நடைபெற்று வரும். பயங்கரவாதத்தின் வேதனைகளும், பெலத்திற்கும் நம்பிக்கைக்கும் ஆதாரமான வேதாகமத்திடம் ஜனங்களைகொண்டுவந்துள்ளன.

உலகம் பரிணாமத்தால் உண்டானது என்று கூறுவதற்கு பதிலாக உண்டாக்கப்பட்டது என்று வேதாகமம் கூறுவதால் சிலர் அதைகேள்வி எழுப்புகிறார்கள். “ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தை காண்பாரோ என்றார்.” (லூக்கா 18:8) என்று இயேசு கேட்டார். பரிணாம கோட்பாடானது இப்பொழுது பரவலாக நம்பகமற்றதாகிகொண்டுவருகிறது. உதாரணமாக, மூலக்கூறு உயிரியல், ஒற்றை உயிரணு நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது என்றும் ஒற்றை உயிரணுவில் தற்செயலாகஉருவாகும் உயிரின் தோற்றமானது நம்புவதற்கரிதானது மட்டுமல்ல அது சாத்தியமற்றதும்கூட என்று விளக்குகிறது.
ஃபிரட் ஹோயில் மற்றும் ஒரு காலத்தில் மோசமான நாத்திகவாதியான அந்தோணி ஃப்லு உட்பட அநேகமுன்னாள் நாத்திகர்கள் இப்பொழுது உலகம் படைக்கப்பட்டது என்று நம்புகிறார்கள். “கடவுள் இருக்கிறார்” என்கிறகருத்துக்கான வாதங்கள் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஆதரிக்கப்படுகின்றன என்று அந்தோணி கூறினார்.”
மனிதர்களும், மனித குரங்குகளும் ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து வந்தனர் என்று பரிணாம கோட்பாடுபோதிக்கிறது. தேவசாயலில் மனிதர்கள் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் நித்தியமாக தேவனோடு வாழுவேண்டும்என்பதுதான் நீங்கள் கொண்டிருக்கும் உண்மையான நோக்கம் என்பதையும் அது மறுக்கிறது. பரிணாமக் கொள்கையின்வீழ்ச்சியும், வேதாகமத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல்களும், உங்களை தேவனுடைய வார்த்தையின்மேல் உள்ளவிசுவாசத்தை நலைக்கச் செய்கிறது.

12. ஏன் வேதாகமம் உலகம் முழுவதையும் கவர்ந்திழுக்கிறது?
“உம்முடைய வசனம் … என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது,” – சங். 119:105; “உங்கள் சந்தோஷம்நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.” – யோவான் 15:11; “தேவன் தம்முடைய சாயாலாகமனுஷனைச் சிருஷ்டித்தார்.” – ஆதி. 1:27; “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நறிகிரியைகளைக் கண்டு, பரலேகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப்பிரகாசிக்கக்கடவது,” – மத். 5:16; “நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்துஉங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” (யோவான் 14:3).
பதில்: ஏனெனில் அது வாழ்க்கையின் மிகவும் குழப்பமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறது:
அ. நான் எங்கேயிருந்து வந்தேன்?தேவன் நம்மை தமது சாயலில் படைத்தார். ஏதோ பழைய சகதிகளிலிருந்து விளக்கம் சொல்லக்கூடாத விதத்தில் தற்செயலாகநாம் எழும்பிவிடவில்லை. நாம் வல்லமையான அரசரின் குமாரரும் குமாரத்திகளுமாக இருக்கிறோம். (கலா. 3:26), நாம்தேவனுக்கு மிகவும் விலையேறப்பெற்றவர்களானதால், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, நாம் விடுதலையடையும்படிநம்முடைய பாவங்களின் அபராதமாக தம்முடைய குமாரனை அவர் நமக்காக மரிக்கக் கொடுத்தார். நம்மை அவருடையசாயலுக்குத் திரும்பவும் கொண்டுவர, ஆதாமும் ஏவாளும் இழந்துபோன ஏதேனுக்குக் கொண்டுவர அவர் விரும்புகிறார்.

ஆ. நான் ஏன் இங்கே இருக்கிறேன்?வாழ்க்கையின் குழப்பான பிரச்சனைகளுக்கு வேதாகமத்திலிருந்து அற்புமான பதில்களைப் பெறுவதும் அவருடைய சாயாலைநம்மில் கொண்டுவரும் இயேசுவின் தயவை ஏற்றுகொள்ளுவதும் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாகஇருக்கவேண்டும். ரோமர் 8:29.
இ. எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது?எதிர்காலத்தைக்குறித்த வெறும் யூகங்கள் வேண்டாம். இயேசு தம்முடைய பிள்ளைகளுக்காக பரலோகத்தில் ஆயத்தப்படுத்தியிருக்கிற அற்புதமான வீட்டிற்கு அவர்களைக் கொண்டுசெல்லுவதற்காக வெகு விரைவில் வரவிருக்கிறார். அங்கே மிகஉயர்ந்த மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் என்றென்றைக்கும் அவர்கள் வாழுவார்கள். யோவான் 14:1-3; வெளிப்படுத்தல் 21:3,4.
13. வாழ்க்கையின் மிகவும் குழப்பமான கேள்விகளுக்கு உறுதியான பதிலை கொடுத்ததற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாகஇருக்கிறீர்களா?
உங்கள் பதில்: ______________________
சிந்தனை கேள்விகள்
1. வேதாகமம் அதன் நாயகர்களைப்பற்றிய சரித்திர பதிவுகளில், பாவத்தைக் குறித்த விரும்பத்தகாத விவரமான விளக்கங்களைக்கொடுத்திருப்பதை நான் விரும்பவில்லை. இது உண்மையில் தேவையா?
பதில்: ஆமாம், வேதாகமத்தை நம்பக்கூடியதாக ஆக்கியிருக்கிற மாபெரும் உண்மைகளில் இதுவும் ஒன்று. மிக அதிகமானசுயசரிதைகள் தவறுகளை மழுப்பியோ அல்லது குறைத்தோ கூறி, நன்மைகளை மிகைப்படுத்தியிருக்கின்றன. ஆனால் வேதாகமம் இவ்விதமாக கொடுத்திருப்பதினால், அது மூடி மறைப்பதில்லை என்ற நம்பிக்கையைமக்களுக்குக் கொடுக்கிறது. நீங்கள் மாபெரும் பாவிகள், தேவனால் உங்களை காப்பாற்ற முடியாது, அவர்காப்பாற்றவும் மாட்டார் என்று மக்களை நம்பவைப்பது சாத்தானுடைய தந்திரங்களில் ஒன்று. அவர்களைப்போன்றும்அவர்களைவிட மோசமாகவும் இருந்த மக்களை தேவன் பாவத்திலிருந்து விடுவித்து நீதிமான்களாக்கியிருக்கிறார்(ரோமர் 15:4) என்பதைக் காண்பிக்கும்போது அவர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி என்ன!
2. வேதாகமம் முழுவதும் தேவாவியால் எழுதப்பட்டதா? அநேகர் அதன் ஒரு பகுதியே அவ்விதம் எழுதப்பட்டது என்றுநம்புகிறார்களே?
பதில்: வேதாகமத்தில் இதற்கு பதில் இருக்கிறது. “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், அந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக “- 2 தீமோத்தேயு 3:16. வேதாகமத்திற்குள் தேவனுடைய வார்த்தை இருக்கிறது என்பது மாத்திரமல்ல, வேதாகமமே தேவனுடையவார்த்தையாக இருக்கிறது. வேதாகமம் மனிதனுக்கு தகவல் மற்றும் நடக்கைகளின் கையேடாக இருக்கிறது. அதில்எதையாவதை புறக்கணித்தால் உங்களுக்கு தேவையில்லாத கஷ்டங்களும் பிரச்சனைகளும் உண்டாகும்.
3. வேதாகமம் பழைய நடக்கைகளும் வார்த்தைகளும் கருத்துக்களும் கொண்ட பழமையான ஒரு புத்தகம். அறிவு பிரகாசிக்கிற இந்தக் காலத்திலிருந்து வெகுதூரத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டிருக்கிற சிலதை நம்பியிருப்பது பாதுகாப்பல்ல என்று நீங்கள்உணரவில்லையா?
பதில்: இல்லை. அதனுடைய வயது அதற்கு சாதகமாயிருக்கிறது. அதுவே அது தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டதென்கிறஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. வேதாகமம், “கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” (1 பேதுரு1:25) என்று சொல்லுகிறது. வேதாகமம் கன்மலையைப்போல நிற்கிறது; அது தேவனுடைய புத்தகம் ; அவருடைய வார்த்தை; அதை அழிக்கமுடியாது. மனிதர்களும் முழு தேசமுமேகூட அதை எரித்து, தடைசெய்து, அதை இழிவாகப் பேசி, அழிக்கமுயற்சித்திருக்கிறது. அதன் விளைவு – அவர்கள் தங்களையேதான் இழிவாக்கினார்கள். அவர்கள் இப்போது இல்லை; வேதாகமத்தின்மேல் அவர்கள் தொடுத்த தாக்குதல்கள் மறக்கப்பட்டுவிட்டன; எனினும் வேதாகமம் விற்பனையில்முதன்மையானதும் எப்போதும் தேவைப்படுகிற ஒன்றாகவும் இருக்கிறது. நிர்பந்தமேற்பட்டால் இலட்சக்கணக்கானோர் அதற்காகமரிக்கவும் ஆயத்தமாயிருப்பார்கள். அதன் செய்திகள் தேவனால் கொடுக்கப்பட்டவை, அது நூறு சதவீதம் இன்றைக்கும்நவீனமானதாக இருக்கிறது, அதைப் படிக்கும்முன்பாக உங்கள் இருதயத்தை திறக்கவேண்டுமென்று தேவனிடம் ஜெபித்துகேளுங்கள்.
4. வேதாகமத்தை கவனமாகப் படித்த உலகத்தின் மிக அறிவான மக்களில் சிலர், அதைப் புரிந்தகொள்ளமுடியாது என்றுநம்புகிறார்களே. வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய புத்தகமாக இருக்குமானால் ஒவ்வொருவராலும் அதைப் புரிந்துகொள்ளமுடியவேண்டுமல்லவா?
பதில்: ஆவிக்குரிய காரியங்கள் “ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதாணிக்கப்படுகிறவைகளானதால்” (1 கொரிந்தியர் 2:13,14), எதையும் புரிந்துகொண்டு விளக்கக்கூடிய அறிவானவர்கள் வேதாகமத்தைப் படிக்கும்போது பலவேளைகளில் சடிதியாகநின்றுவிடுகிறார்கள். தேவனுடைய வார்த்தையின் ஆழமான காரியங்களை லௌகீக மனதால் – அது எவ்வளவு ஞானமானதாகஇருந்தாலும் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது. தேவனுடனான ஒரு அனுபவத்திற்காக உண்மையாகத் தேடாதபோது, தேவனுடைய காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாது. வேதாகமத்தை விளக்குகிற ஆவியானவர் (யோவான் 16:13; 14:26) மாம்ச லௌகீக மனங்களால் புரிந்துகொள்ளப்படுவதில்லை. மறுபக்கம், வேதத்தைப் படிக்கிற தாழ்மையான படிப்பறிவில்லாதகிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து ஆச்சரியப்படக்கூடிய புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுகிறான். மத்தேயு11:25; 1 கொரிந்தியர் 2:9,10.
5. வேதாகமம் முழுவதும் தவறுகளைக் கொண்டிருக்கிறது. அது ஏவப்பட்டு எழுதப்பட்டதென்று எவ்விதம் நீங்கள் நம்பமுடியும்?
பதில்: வேதாகமத்தில் தவறுகளென்று கூறப்படுகிறவைகள் அவ்விதம் குற்றப்படுத்துகிறவர்களின் புரிந்துகொள்ளாமை மற்றும் தவறானபுரிந்துகொள்ளுதலின் விளைவே என்று விளக்கப்பட்டிருக்கிறது. அவைகள் தவறுகளே அல்ல; தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டவைகள். தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதாகமம்:
அ. எப்போதும் சத்தியத்தையே பேசுகிறது.
ஆ. ஒருபோதும் தவறாக நடத்தாது.
இ. அதை முழுமையாக நம்பலாம்.
ஈ. அது நம்பக்கூடியதும், ஆவிக்குரிய காரியங்களில் மாத்திரமல்ல, அது அறிவிக்கிற சரித்திரம் மற்றும் அறிவியல் உட்படஅனைத்துக் காரியங்களிலும் அதிகாரம் கொண்டதாக இருக்கிறது.
வேதவாக்கியத்தில் தவறு என்று யூகிக்கப்படுகிற பகுதியை சாத்தான் எப்போதும் தோண்டிக்கொண்டே இருக்கிறான். அதுஆச்சரியமானதல்ல. அவன் பரலோகத்தின் தேவனிடமே தவறு கண்டுபிடித்தான். பார்த்து எழுதினவர்கள் சில இடங்களில் தவறாகஎழுதியிருக்கலாம். எனினும் அப்படிப்பட்ட காரியங்கள் தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை பாதிப்பதில்லை. ஒரு வேதவசனத்திலிருந்து ஒரு போதனை எழுப்பப்படுவதில்லை. மாறாக, தேவன் கொடுத்திருக்கிற அனைத்து குறிப்புகளிலுமிருந்தேஅவை வருகின்றன. வேதவாக்கியங்களின் உண்மையை பாதிக்கக்கூடிய அப்படிப்பட்ட எந்தத் தவறையும் நாம் காண்பதில்லை. வேதவாக்கியத்திலுள்ள சில காரியங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளக் கடினமானவை. சந்தேகிக்க விரும்புகிறவர்களுக்குசந்தேகப்பட எப்போதும் இடமிருக்கும். தவறென்று கூறப்பட்டு இன்னமும் முழுமையாக விளக்கப்படாதவைகளும், முந்தையநாட்களில் செய்யப்பட்டதுபோலவே தவறான அறிக்கைகள் என்று விரைவில் வெளியே கொண்டுவரப்படும். வேதாகமத்தைகீழடக்க எவ்வளவு கடினமாக மக்கள் உழைக்கிறார்களோ, அவ்வளவு பிரகாசமாக அது ஒளிவீசும்.
கேள்விகள்
1. வேதாகமம் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை எந்த நிறைவேறின தீர்க்கதரிசனங்கள் உறுதிப்படுத்துகின்றன? (4) _____ கோரேசு பாபிலோனை பிடிப்பான். _____ ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமர் ஆவார். _____ எகிப்து மீண்டும் உறுதியான முன்னணி நாடாக ஆகாது. _____ கடைசி நாட்களில் சன்மார்க்கம் சீரழியும். _____ ஜெர்மனியில் 20 வருடப் பஞ்சம் இருக்கும். _____ ஒருமுறை அழிக்கப்படும் பாபிலோன் ஒருபோதும் குடியேற்றப்படாது. 2. வேதாகமம் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை இயேசு எவ்விதம் காண்பித்தார்? (1) _____ அந்தக் காரியத்தைக் குறித்து சத்தமாகப் பேசினதன்மூலம். _____ தாம் போதித்தபோது அதிலுள்ளவைகளை குறிப்பிட்டதன்மூலம். _____ சந்தேகிக்கிறவர்கள் மேல் வானத்திலிருந்து அக்கினியை வரச்செய்ததன்மூலம். _____ ஆலயத்தின் படிகளில் நின்று வேதத்தை அறிவித்ததன்மூலம் . 3. கீழே கொடுக்கப் பட்டுள்ள எந்த அறிவியல் உண்மையை வேதாகமம் அறிவிக்கிறது? (2) _____ பூமி உருண்டையானது. _____ காற்றிற்கு நிறையுண்டு. _____ நீரின் சூத்திரம் H2O. _____ கடல்நீர் உப்பாயிருக்கும். 4. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எந்த ஆரேக்கிய சட்டம் வேதாகமத்தில் காணப்படுகிறது? (2) _____ தினமும் 12 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். _____ மதுபானங்களை தொட வேண்டாம். _____ ஒவ்வொரு நாள் கலையிலும் மாலையிலும் ஓடுங்கள். _____ வேசித்தனத்திற்கு விலகுங்கள். 5. வேதாகமத்தைக்குறித்த உண்மைகள்: (3) _____ ஏறக்குறைய நாற்பது மனிதர்கள் வேதாகமத்தை எழுதியிருக்கிறார்கள். _____ வேதாகமம் ஏறக்குறைய 10,000 வருடங்களாக எழுதப்பட்டது. _____ வேதாகமத்தில் ஒரு சில பகுதிகளே தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை. _____ வேதாகமத்தின் மெய்யான எழுத்தாளர் பரிசுத்த ஆவியானவரே. _____ வேதாகமம் அதிகமாக விற்கப் படுகின்ற ஒரு புத்தகம். 6. மேசியாவின் வாழ்க்கையைக்குறித்து வேதாகமத்தில் முன் சொல்லப்பட்டவைகள்: (3) _____ நாசரேத்தில் பிறப்பார். _____ அடிக்கடி பரலோகத்திற்குப் பறந்து செல்லுவார். _____ முப்பது வெள்ளிக்காசிற்கு விற்கப்படுவார். _____ ஏரோது அவரைக் கொல்ல முயற்சிப்பான். _____ சிலுவையில் அறையப்படுவார். _____ ஏழு வருடங்களுக்குப் பிறகு உயிரோடு எழுப்பப்படுவார். 7. எந்த வேதாகமச் சட்டம் பின்பற்றப்படுமானால் எய்ட்ஸ் நோய் தடுக்கப்படும்? _____ விபசாரம் செய்யாதிருப்பாயாக. _____ விக்கிரகங்களை வணங்காதிருப்பாயாக. _____ முறையாக உணவு சாப்பிடுவாயாக. 8. பரிணாமத்தைக்குறித்த உண்மைகள்: (3) _____ அது மெய்ப்பிக்கப்படாத கொள்கை. _____ அது கிறிஸ்தவத்தை அழிக்கிறது. _____ அது நிரூபிக்கப்பட்ட உண்மை. 9. கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த அறிக்கைகள் வேதாகமத்தை ஏவப்பட்டு எழுதப்பட்டதென்று நிரூபிக்க உதவுகிறது? (5) _____ அதன் சரித்திரங்கள் நல்லவைகளைப்போலவே தீயவைகளையும் சேர்த்திருக்கிறது. _____ அதை பின்பற்றுகிறவர்களின் வாழ்க்கைகளை அது மாற்றுகிறது. _____ மேசியாவைக்குறித்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் இயேசுவால் நிறைவேற்றப்பட்டன. _____ நான்கு உலக சாம்ராஜ்யங்களைக்குறித்து அது முன்னறிவிக்கிறது. _____ அதன் ஜக்கியம். _____ அது இயேசுவின் இரண்டாம் வருகைக்கான நாளையும் மணி நேரத்தையும் அறிவிக்கிறது. 10. தேவன் உலகத்தை ஏழுத்தின்படியான 24 மணி நேரம்கொண்ட ஆறு நாட்களில் உண்டாக்கினார்.(1) _____ ஆம் _____ இல்லை 11. நோவாவின் நாட்களில் உலகளாவிய வெள்ளம் கடல் உயிரினங்களையும் பேழைக்குள் இருந்தவைகளையும் தவிர்த்து அனைத்து உயிர்களையும் அழித்தது. (1) _____ ஆம் _____ இல்லை 12. உலகத்தின் வெவ்வேறு மொழிகள் பாபேல் கோபுரத்தில் துவங்கின. (1) _____ ஆம் _____ இல்லை 13. வாழ்க்கையின் மிகவும் குழப்பமான கேள்விகளுக்கு உறுதியான பதிலை கொடுப்பதற்காக நான் தேவனுக்கு நன்றியோடு இருக்கிறேன். _____ ஆம் _____ இல்லை