தேவன் பிசாசை  உண்டாக்கினாரா ?

வேதபாடங்கள்  2

பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிற மிகவும் ஞானமுள்ள,  மனிதருடைய வாழ்க்கையை அழிக்கும் தீர்மானங்கொண்டிருக்கிற ஒருவனால் உலகத்தின் அநேக மக்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் இந்த அந்தகாரத்தின் அதிபதி நீங்கள் நினைத்திருப்பதைக்காட்டிலும் மிகவும் வேறுபட்டவன்.  அநேகர் அவனை ஒரு கற்பனைப் பாத்திரம் என்கிறார்கள். 

ஆனால் அவன் உண்மையானவன் என்று வேதாகமம் சொல்லுகிறது.  குடும்பங்களிலும், சபைகளிலும், துக்கத்தையும் வேதனயையும் அதிகரிக்க தேசங்களையும் அவன் வஞ்சித்துக்கொண்டிருக்கிறான்.  அந்தகார அதிபதியைக் குறித்த சில ஆச்சிரியமான வேதாகம உண்மைகளை கீழே படிக்கலாம்.  அவனை நீங்கள் வெற்றிகொள்ள முடியும்.

1. பாவம் யாரிடம் தோன்றியது?

“பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்;“ – 1 யோவான் 3:8  “பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்” – வெளிப்படுத்தல் 12:9

பதில்:   பிசாசு என்று அழைக்கப்படுகிற சாத்தான்தான் பாவத்திற்குக் காரணமானவன்.  வேதவாக்கியங்கள் இல்லாத பட்சத்தில் தீமையின் துவக்கம் விளக்கப்படாமலேயே இருந்திருக்கும்,

2.பாவத்திற்குமுன் சாத்தானுடைய பெயரென்ன?  அப்போது அவன் எங்கே இருந்தான்?

“அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே!  ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!“ – ஏசாயா 14:12; 

“சாத்தான் மின்னலைப்போ  வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்”  (லுக்கா 10:18)

என்று இயேசு கூறினார்.  “நீ …. அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்” ? எசேக்கியேல் 28:14.

பதில்:  அவன் பெயர் லூசிபர் (ஆங்கிலத்தில்).  அவன் பரலோகத்தில் வாழ்ந்திருந்தான். – ஏசாயா 14 –ல் அவன் பாபிலோனின் இராஜாவாகவும், – எசேக்கியல் 28 –ல் தீருவின் இராஜாவாகவும் காட்டப்படுகிறான்.

3. லூசிபரின் துவக்கம் என்ன?  அவன் என்ன பதவியிலிருந்தான்?  வேதாகமம் அவனை எவ்விதம் வர்ணிக்கிறது?

“நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில்”  ”நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவங்கி” – எசேக்கியேல் 28:13,15;  “நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப்;“ – எசேக்கியேல் 28:14;  “நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்;  நீ ஞானத்தால் நிறைந்தவன்;  பூரண அழகுள்ளவன் … சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது;  நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது … நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவங்கி உன்னில் அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்” – எசேக்கியேல் 28:12-15.

பதில்:  லூசிபர் மற்ற தூதர்களைப்போலவே தேவனால் உண்டாக்கப்பட்டவன்  (எபேசியர் 3:9).  லூசிபர் காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப் – ஒரு தூதன்.  ஒரு பெரிய தூதன் தேவனுடைய  சிங்காசனத்தின் வலதுபக்கத்திலும், மற்ற ஒரு தூதன் தேவனுடைய சிங்காசனத்தின் இடதுபக்கத்திலும் நின்றிருந்தனர் (சங்கீதம் 99:1).  மிகவும் உயர்த்தப்பட்ட தூதர் தலைவர்களில் லூசிபர் ஒருவனாயிருந்தான்.  லூசிபரின் அழகு குறைவற்றதும் திகைப்பூட்டுகிறதுமாயிருந்தது.  அவனுடைய ஞானம் பூரணமானதாயிருந்தது.  அவனுடைய பிரகாசம் பிரமிப்பூட்டுகிறதாயிருந்தது. – எசேக்கியேல் 28:13-ன்படி அவனுடைய தொண்டை முன்னனி இசைக்கலைஞனைப்போல இருப்பதற்காக விசேஷமாக ஆயத்தப்படுத்தப்பட்டதென்று தோன்றுகிறது.  அவன் பரலோகப் பாடல் குழுவை நடத்தி வந்ததாக சிலர் எண்ணுகின்றனர்.

4. பாவத்திற்கு நடத்தக்கூடிய என்ன காரியம் லூசிபரின் வாழ்க்கையில் சம்பவித்தது?  அவன் என்ன ஒரு தூஷணமான பாவத்தை செய்தான்?

“உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்;” – எசேக்கியேல் 28:17; “நான் … தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; … உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே” – எசாயா 14:13,14.

பதில்:  பெருமை, பொறாமை, திருப்தியின்மை, சுயத்தை உயர்த்துதல் ஆகிய அனைத்தும் அவன் வாழ்க்கையில் எழும்பியது.  தேவனை அவருடைய சிங்காசனத்திலிருந்து அப்புறப்படுத்த முயன்று, பின்னர் தன்னை தொழுதுகொள்ளவேண்டும் என்று அனைவரையும் நிர்பந்திக்க அவன் தீர்மானித்தான்,  அது மிக மோசமான துரோகம்.

குறிப்பு:  தொழுகை ஏன் அவ்வளவு பெரிய காரியமாயிருக்கிறது?  தேவனுக்கும் சாத்தானுக்குமிடையே நடந்துகொண்டிருக்கிற யுத்தத்தில் தொழுகையே முக்கியக் காரணி.  மகிழ்ச்சியாக இருக்கும்படியாக மக்கள் உண்டாக்கப்பட்டனர்,  தேவனை மாத்திரம் தொழும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.  பரலோகத்தில் இருக்கிற விழுந்துபோகாத தூதர்களைக்கூட தொழக்கூடாது (வெளிப்படுத்தல் 22:8,9).  அனைவரும் தன்னை ஆராதிக்கவேண்டுமென்று சாத்தான் ஆதியில் விரும்பினான்.  நூற்றாண்டுகளுக்குப்பின்னர் இயேசுவை அவன் வனாந்தரத்தில் சோதித்தபோதும் தொழுகையே மையக்காரியமாயிருந்தது. (மத்தேயு 4:8-11).  இந்தக் கடைசி நாட்களில் தம்மை வணங்கும்படி தேவன் அனைத்து மக்களையும் அழைக்கிறார் (வெளிப்படுத்தல் 14:6,7).  இது சாத்தானுக்கு வெறி ஏற்படுவதினால், தன்னை வணங்கும்படி மக்களை பலவந்தப்படுத்த அவன் முயற்சிப்பான்.  தொழாதபட்சத்தில் கொலையும் செய்வான் (வெளிப்படுத்தல் 13:15).  ஒவ்வொருவரும் ஒரு நபரையோ அல்லது ஏதாவது ஒரு காரியத்தையோ தொழுது கொண்டிருக்கிறோம்:  அதிகாரம், கௌரவம், ஆகாரம், இன்பம், சொத்துக்கள், ஒருவருடைய சொந்தக்கருத்து.  இப்படிப்பட்டவை பல வகைகளில் அடங்கியிருக்கின்றன.  தேவன்: “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.” (யாத்திராகமம் 20 :3) என்று கூறுகிறார்.  நாம் அவரை முழுமையாக தொழாதபோது அவருக்கு எதிராக இருப்பதாக அவர் எண்ணுகிறார் (மத்தேயு 12:30).  இந்தச் செய்தி அதிர்ச்சி கொடுப்பதாயிருக்கும்.  ஆனால் இது உண்மை.  தேவனைத் தவிர வேறு பொருளோ அல்லது நபரோ நமது வாழ்க்கையில் முதலிடம் பெறுவார்களானால், நாம் அறியாமலே சாத்தானைத் தொழுதுகொள்ளுகிறோம் அல்லது அவனுக்கு ஆதரவாயிருக்கிறோம்.  என்னுடைய வாழ்க்கையில் தேவனுக்கு முதலிடம் இருக்கிறதா?  அல்லது அறியாமலே சாத்தானை நான் உயர்த்திக் கொண்டிருக்கிறேனா?  இது விழிப்புடன் சிந்திக்கக்கூடிய முக்கியமான கேள்வி.  அப்படித்தானே?

[ என் வாழ்க்கையில் முதலிடம் பெறுகிற எதுவும் நான் ஆராதிக்கிற தெய்வமாகிறது.]

5. சாத்தானுடைய கலகத்தின் விளைவாக பரலோகத்தில் என்ன நடந்தது?

“வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.  வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று.  உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது.  அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்” – வெளிப்படுத்தல் 12:7-9.

பதில்:  லூசிபர் மூன்றிலொருபங்கு தூதர்களின் ஆதரவை சம்பாதித்து (வெளிப்படுதல் 12:3,4), பரலோகத்திலும் ஒரு கிளர்ச்சிக்குக் காரணமானான்.  லூசிபரையும் அவனுடைய தூதரையும் வெளியே தள்ளுவதைத் தவிர்த்து தேவனுக்கு வேறு எதுவும் தெரிந்தெடுக்கக்கூடாதிருந்தது.  இதுவரையிலும் நடந்திருக்கிற யுத்தங்களிலேயே இதுதான் மிகப்பெரிய யுத்தம்.  ஒருவேளை கொலையின் முடிவதாயிருந்தாலும்  (யோவான் 8:44). தேவனுடைய சங்காசனத்தைப் பறித்துக்கொள்ளவேண்டுமென்பது லூசிபருடைய எண்ணம். பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டபின் லூசிபர் சாத்தான் (சத்துரு) என்றும், பிசாசு (தூஷிக்கிறவன்) என்றும் அழைக்கப்பட்டான்; அவனுடைய தூதர்கள் பிசாசுகள் எனப்பட்டனர்.

6. சாத்தானுடைய தலைமையகம் இப்போது எங்கே இருக்கிறது?  மக்களைக் குறித்து அவன் என்ன நினைக்கிறான்?

“கர்த்தர் சாத்தனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்;  சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்” –யோபு 2:2; “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே!  ஜயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” –வெளிப்டுத்தல் 12:12; “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” -1 பேதுரு 5:8.

பதில்:  பொதுவான கருத்திற்கு மாறாக, சாத்தானுடைய தலைமையகம் நரகமல்ல, இந்த பூமிதான்.  ஆதாமிற்கும் ஏவாளிற்கும் தேவன் பூமியின்மேல் அதிகாரம் கொடுத்திருந்தார் (அதியாகமம்  1:26).  பாவம் செய்தபோது, அவர்கள் அதை சாத்தானிடம் விட்டுவிட்டனர் (ரோமர் 6:16).  அவன் பூமியின் அதிபதியாக – பிரபுவாக மாறினான் (யோவான் 12:31).  சாத்தான் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்ட மனிதர்களை மிகவும் கசப்பாக வெறுக்கிறான்.  அவனால் தேவனைத் தொடமுடியாது.  அதனால், தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக அவனுடைய விஷம் திருப்பப்பட்டிருக்கிறது.  அவன் வெறுப்புமிக்க தீய கொலைகாரன்; அவனுடைய நோக்கமெல்லாம் உங்களை அழித்து தேவனைக் காயப்படுத்துவதுதான்.

7. தேவன் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கினபோது என்ன ஒரு தடையை விதித்திருந்தார்?  அந்தக் கீழ்ப்படியாமையின் விளைவு என்னவாயிருந்தது?

“ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்.  அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” – ஆதியாகமம் 2:17.

பதில்:  நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கூடாது என்ற தடையை தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் விதித்திருந்தார்.  அந்த கனியைப் புசிப்பதன் பலன் மரணமாயிருந்தது.

குறிப்பு: தேவன் ஆதாமையும் ஏவாளையும் தமது சொந்த கரங்களால் சிருஷ்டித்து, ஒரு அழகான தோட்டத்தில் அவர்களை வைத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஒரு விருட்சத்தின் கனியைத் தவிர மற்ற ஒவ்வொரு விதமான விருட்சத்தின் கனிகளை உண்டு அங்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் (ஆதி 2:7-9). தெரிந்துகொள்ளும் உரிமையை அவர்களுக்கு கொடுத்தது  தேவனுடைய கிருபையான செயலாகும்.  தேவனை நம்புவதினாலும், தடைசெய்யப்பட்ட விருட்சத்தின் கனியை சாப்பிடாமல் இருப்பதாலும் அவர்கள் நித்தியத்திற்கும் பரதீசில் வாழ்வார்கள்.  சாத்தானுக்கு செவிகொடுக்க தேர்ந்தெடுப்பதன்மூலம், அவர்கள் எல்லா ஜீவனுக்கும் ஆதாரமான தேவனைவிட்டு விலகிஒடுவதை தெரிந்துகொண்டார்கள்.  அதன் விளைவாக மரணத்தை ருசிபார்த்தார்கள்.

8. ஏவாளை வஞ்சிக்க சாத்தான் என்ன ஊடகத்தை உபயோகித்தான்?  அவளிடம் அவன் என்ன பொய்களை கூறினான்?

“தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.  அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.”  “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி:  நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” – ஆதியாகமம் 3:1,4,5.

பதில்:  தேவன் உண்டாக்கின மிருகங்களில் மிகவும் புத்தியுள்ள, மனதை மிகவும் கவரக்கூடிய சர்ப்பத்தை, ஏவாளை வஞ்சிக்கும்படியாக சாத்தான் உபயோகித்தான்.  சர்ப்பத்திற்கு ஆதியில் இறகுகள் இருந்து, அவைகள் பறந்தன என்று சிலர் நினைக்கிறார்கள் (ஏசாயா 14:29; 30:6). தேவன் சபிக்கும் வரையிலும் (ஆதியாகமம் 3:14) அது ஊர்ந்து செல்லவில்லை என்பதை நினைவுகூறுங்கள்.  (1) நீங்கள் சாகமாட்டீர்கள் என்பதும், (2) அந்த மரத்தின் கனியைப் புசிப்பதால் நீங்கள் ஞானமடைவீர்கள் என்பதும் சாத்தனுடைய பொய்களாக இருந்தன.  பொய்யைக் கண்டுப்பிடித்த சாத்தான் (யோவான் 8:44), சத்தியத்தை பொய்யோடு கலந்து ஏவாளிடம் சொன்னான்.  பகுதி சத்தியத்தை உள்ளடக்கிய பொய்களே மிகவும் வல்லமையான பொய்களாயிருக்கிறது.  பாவத்திற்குபிறகு தீமையை அறிந்துகொள்வார்கள் என்பது உண்மைதான். தேவன் தமது அன்பினிமித்தம் மனவேதனை, வருத்தம், துன்பம், வலி மற்றும் மரணம் போன்றவைகளைக் குறித்த அறிவை அவர்களிடமிருந்து விலக்கி வைத்திருந்தார்.  சாத்தான் இன்று செய்வதைப்போலவே அன்றும் தீமையைக்குறித்த அறிவை கவர்ச்சியானதாகத் தோன்றச் செய்தான். தேவனுடைய குணத்தை தவறாக புரிந்துகொண்டாலொழிய அப்படிப்பட்ட அன்பான தேவனிடமிருந்து எவரும் விலகிச்  செல்லமாட்டார்கள் என்பதை சாத்தான் அறிந்திருந்ததினால் அவருடைய குணத்தைத் தவறாக எடுத்துக்காட்ட பொய்களைக் கூறினான்.

9. ஒரு பழத்தை உண்பது அவ்வளவு கெட்ட காரியமா?  ஆதாமும் ஏவாளும் ஏன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்?

“ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால்,  அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” – யாக்கோபு 4:17;  “நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” – 1 யோவான் 3:4;  “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்” – 1 யோவான் 3:8;  “ பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று”  “அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்;” – ஆதியாகமம் 3:22,24.

பதில்:  தேவன் கொடுத்திருந்த கட்டளைகளுள் ஒன்றை நேரடியாக நிராகரித்ததினால், அந்தப் பழத்தை உண்பது பாவமே.  அது தேவனுடைய பிரமாணத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிரான  வெளிப்படையான கலகமாயிருந்தது.

தேவனுடைய பிரமாணங்களில் ஒன்றை நெகிழ்ந்ததினால் ஆதாமும் ஏவாளும் தேவனுடைய சத்துருவாயிருந்த சாத்தானோடு தங்களை இணைத்துக்கொண்டு, இவ்விதம் தேவனுக்கும் தங்களுக்குமிடையே ஒரு பிரிவினையைக் கொண்டுவந்தனர் (ஏசாயா 59:2).  அந்தத் தம்பதியினர் பாவம் செய்தபிறகு ஜீவவிருட்சத்தின் கனியை புசிப்பார்கள் என்றும், இவ்விதம் நித்தியமாக வாழும் பாவிகளாவார்கள் என்றும் சாத்தான் எதிர்பார்த்திருந்தான்.  ஆனால் அப்படிப்பட்ட துன்பத்தைத் தவிர்ப்பதற்காக தேவன் அவர்களை தோட்டத்திலிருந்து வெளியேற்றினார்.

10. மக்களைக் காயப்படுத்தி, வஞ்சித்து சோர்வுக்குள்ளாக்கி அழிக்கும் சாத்தானுடைய முறைகளைக்குறித்து என்ன ஆச்சரியமான உண்மைகளை வேதாகமம் வெளிப்படுத்துகிறது?

பதில்:  மக்களை வஞ்சித்து அழிக்கும்படி ஒவ்வொரு முறையையும் சாத்தான் கையாளுகிறான்.  அவனுடைய பிசாசுகளால் நீதிமான்களைப்போல, ஏன் சபைத் தலைவர்களைப் போலவுங்கூட தோன்றமுடியும்.  வானத்திலிருந்து அக்கினியை வரவழைக்கிற வல்லமையோடு மகிமையுள்ள ஒளியின் தூதனாக சாத்தான் தோன்றுவான்.  அவன் இயேசுவைப்போல ஆள்மாறாட்டம் செய்வான்.  ஆனால் நீங்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.  எனவே அதில் விழவேண்டியதில்லை.  இயேசு வரும்போது கண்கள் யாவும் அவரைக் காணும் (வெளிப்படுத்தல் 1:7).  அவர் மேகங்கள்மேலேயே இருப்பார்.  பூமியை தொடமாட்டார் (1 தெசலோனிக்கேயர் 4:17).

வேதாகமம் சொல்வதைக் கவனியுங்கள்
சாத்தான் ஏமாற்றுகிறான். துன்பப்படுத்துகிறான்
(வெளி. 12:9,13
வேதாகமத்தை சாதகமாக தவறாக குறிப்பிடுகிறான்
(மத்தேயு 4:5,6)
தவறாக குற்றப்படுத்துகிறான், கொலைசெய்கிறான்  (வெளி. 12:10; யோவான் 8:44)கண்ணி வைக்கிறான், கண்ணியில் பிடிக்கிறான் (2 தீமோ. 2:26; 1 பேதுரு 5:8)
தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக யுத்தம்செய்கிறான்
(வெளி. 12:17)
கட்டுகிறான், காட்டிக் கொடுக்கத் தூண்டுகிறான் (லூக்கா 13:16; யோவான் 13:2,21)
சறைப்படுத்துகிறான்  (வெளி 2:10)ஆட்கொள்ளுகிறான், தடைசெய்கிறான் (லூக்கத 22:3-5;  1 தெச. 2:18)
அற்புதங்கள் நடப்பிக்கிறான், பொய் சொல்லுகிறான் (வெளி. 16:13,14; யோவான் 8:44)ஒளியின் தூதனாகத் தோன்றுகிறான் (2 கொரிந்தியர் 11:13-15)
வியாதியைக் கொண்டுவருகிறான், துன்பப்படுத்துகிறான் (யோபு 2:7)அவனுடைய பிசாசுகள் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள்
(2 கொரிந்தியர் 11:13-15)
தூஷிக்கிறான் (பிசாசு என்பதற்கு தூஷிக்கிறவன் என்று பொருள்)வானத்திலிருந்து அக்கினியை வரவழைப்பான் (வெளி. 13:13)
11. சாத்தானுடைய சோதனைகளும் வழிமுறைகளும் எவ்வளவு வல்லமையானவைகள்?

அவன் மூன்றிலொருபங்கு தூதரையும் (வெளிப்படுத்தல் 12:3-9),

ஆதாமையும் ஏவாளையும் (ஆதியாகமம் 3), நோவாவின் நாட்களில் எட்டுபேரைத் தவிர மற்ற அனைவரையும் (1 பேதுரு 3:20) நம்பவைத்தான்.  இரட்சிப்பை இழந்தவர்களை இரட்சிக்கப்பட்டவர்களென்று உணரச்செய்தான் (மத்தேயு 7:21-23).  ஏறக்குறைய முழு உலகமும் அவனைப் பின்பற்றும் (வெளிப்படுத்தல் 13:3). சிலரே இரட்சிக்கப்படுவார்கள் (மத்தேயு 7:14; 22:14).

பதில்:  சாத்தனுடைய வெற்றிவிகிதம் அதிர்ச்சியூட்டுமளவு உயர்ந்திருப்பதால், நம்பகூடாததாயிருக்கிறது.  அவன் பரலோகத்தில் மூன்றிலொருபங்கு தூதர்களை வஞ்சித்தான்.  நோவாவின் காலத்தில் எட்டுபேரைத்தவிர மற்ற அனைவரையும் வஞ்சித்தான்.  இயேசு இரண்டாம் முறை வருவதற்குமுன்பாக தன்னைக் கிறிஸ்து என்று காட்டிக்கொண்டு சாத்தான் தோன்றுவான்.  அவனுடைய வஞ்சிக்கும் வல்லமை மிகப்பெரியதாக இருக்கப்போவதினால், அவனைப் பார்க்கும்படி செல்ல மறுப்பதிலேயே நம்முடைய ஒரே பாதுகாப்பு இருக்கும் (மத்தேயு 24:23-26).  அவனைப் பார்க்கவோ அவன் சொல்வதைக் கேட்கவோ முழுமையாக மறுப்பீர்களெனில் இயேசு ஏமாற்றத்திலிருந்து உங்களை பாதுகாப்பார் (யோவான் 10:29).

12. பிசாசு எங்கேயிருந்து எப்போது தன் தண்டனையைப் பெற்றுக்கொள்வான்?  அவனுடைய தண்டனை என்னவாக இருக்கும்?

“களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.  மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்” – மத்தேயு 13:40-42;  “மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்” –வெளிப்படுத்தல் 20:10; “சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்” – மத்தேயு 25:41; “ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படபண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன் … இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்” – எசேக்கியேல் 28:18,19.

பதில்:  உலகத்தின் முடிவில் பிசாசானவன் இந்த பூமியின்மேல் அக்கினிக்கடலில் தள்ளப்படுவான்.  அக்கினி அவனைப் பட்சித்து,

அவனை சாம்பலாக்கி, அவனுக்கு நித்தியமான முடிவைக் கொண்டுவரும்.  இதே அக்கினி அனைத்துப் பாவிகளையும் அழிக்கும்.  இந்த கடைசிகாட்சியில் தேவன்பக்கமிருக்கும் ஒருவர்கூட மரிக்கமாட்டார்கள்.  சாத்தானுடைய பக்கத்திலிருக்கும் ஒருவர்கூட பிழைக்கமாட்டார்கள்.

குறிப்பு:  சாத்தானுடைய அழிவைக்குறித்து பிதாவும் குமாரனும் அடையும் துக்கத்தையும் வேதனையையும் விவரிக்க போதுமான வார்த்தைகள் இல்லை.  அவன் வேறு எவரைவிடவும் தேவனுக்கு மிக அருகில், ஒரு நெருக்கமான நண்பனாக இருந்திருந்தான்.  அவனையும் அவனைப் பின்பற்றின இலட்சக்கணக்கானோரையும் அழிப்பதில் தேவனுடைய வேதனை, அக்கினியில் அவர்கள் அடையும் வேதனையைவிடவும் அதிகமாயிருக்கும்.

13. பாவத்தின் பயங்கரமான பிரச்சனையை என்றென்றுமாக முடிவிற்குக் கொண்டுவருவது எது? பாவம் மீண்டும் எழும்புமா?

“அந்தப்படி முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார்” – ரோமர் 14:11; (பிலிப்பியர் 2:10,11; ஏசாயா 45:23-யும் பார்க்கவும்); “இடுக்கம் மறுபடியும் உண்டாகாது” – நாகூம் 1:9.

பதில்:  பாவப்பிரச்சனையை இரண்டு முக்கியமான சம்பவங்கள் முடிவிற்குக் கொண்டுவரும். 

முதலாவது:  பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற சாத்தானும் அவனுடைய தூதர்களும் உட்பட அனைவரும் அவர்களுடைய சொந்த தெரிந்துகொள்ளுதலின்படியே தேவன்முன் முழங்கால் படியிட்டு, அவர் சத்தியமுள்ளவரும் நீதியுள்ளவருமாயிருக்கிறார் என்று அறிக்கை பண்ணுவார்கள்.  எந்த ஒரு கேள்வியும் பதில்பெறாமல் இருக்காது.  தேவனுடைய அன்பையும் இரட்சிப்பையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்ற தங்களுடைய தீர்மானமான மறுப்பினாலேயே தாங்கள் இரட்சிக்கப்படவில்லை என்பதை அனைத்து பாவிகளும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுவார்கள்.  அவர்கள் சாகவேவேண்டும் என்று நீதி கோருகிறதை ஏற்றுக்கொள்ளுவார்கள்.  தங்களுக்கு நித்திய மரணம் நீதியானதே என்றும் அறிக்கை செய்வார்கள்.

இரண்டாவது:  பாவத்தையும் பாவிகளையும், பிசாசையும் அவனுடைய தூதரையும் முழுமையாகவும் முடிவாகாவும் அடிப்பதினால் பாவம் அண்ட சராசரத்திலிருந்தும் நீக்கப்படும்.  தேவன் இதை உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.  இந்த பிரபஞ்சத்தைத் தீட்டுப்படுத்த பாவம் என்றுமே இனி எழும்பாது.

14. அண்ட சராசரத்திலிருந்து பாவம் முழுமையாக முடிவாக அழிக்கப்படும் என்கிறதை யார் உறுதிப்படுத்துகிறார்கள்?

“பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” – 1 யோவான் 3:8; “ஆதலால்,  பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்” – எபிரெயர் 2:14.

பதில்:  தமது வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதலின் வழியாக பாவத்தை ஒழிப்பதை இயேசு உறுதிப்படுத்தியிருக்கிறார்.

15. தேவன் தமது மக்களைக் குறித்து எவ்விதம் உணருகிறார்?

“பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” – யோவான் 16:27; (யோவான் 3:16; 17:22,23 –யும் பார்க்கவும்).

பதில்:  குமாரன் தம்முடைய பிள்ளைகளை நேசிப்பதைப்போலவே பிதாவானவரும் அவர்களை நேசிக்கிறார்.  உண்மையில் பிதா எவ்வளவு அன்பானவர் என்பதையும், நம்மேல் எவ்வளவு கவனம்கொண்டிருக்கிறார் என்பதையும் மக்களுக்கு உணர்த்துவதற்கேதுவாக, பிதாவின் குணத்தை தம்முடைய வாழ்க்கையின் மூலமாய் விளக்கிக் காண்பிப்பதே இயேசுவினுடைய நோக்கமாயிருந்தது (யோவான் 5:19),

சாத்தான் பிதாவை தவறாக எடுத்துக்காட்டுகிறான்

சாத்தான் பிதாவை உணர்வற்றவராகவும், நம்மிடமிருந்து விலகியிருப்பராகவும், நம்மை வற்புறுத்துகிறவராகவும், கடுமையானவராகவும் நெருங்கக்கூடாதவராகவும் தவறாக எடுத்துக்காட்டுகிறான். (இவைகௌல்லாம் பிசாசின் சொந்த குணங்கள்).  அவன் தன்னுடை சொந்த, அழகற்ற, பேரழிவைக் கொண்டுவரும் செயல்களைக்கூட தேவனுடைய செயல் என்று அடையாளப்படுத்துகிறான்.  பிதாவின்மேல் வந்த இந்த தூஷணத்தைத் துடைக்கவும், ஒரு தாய் தன்னுடைய குழந்தையை நேசிப்பதைக்காட்டிலும் (ஏசாயா 49:15)  நம்முடைய பரலோகத் தகப்பன் நம்மை அதிகம் நேசிக்கிறார் என்பதை விளக்கிக் காண்பிக்கவுமே இயேசு வந்தார்.  இயேசு அதிகம் பேசிய காரியம் தேவனுடைய பொறுமையும் இளகிய தன்மையும் தாராளமான கிருபையுமே.

பிதா எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்

மக்களை மிகவும் அதிக சந்தோஷப்படுத்துவதற்கு அவர்களுக்காக நமது பரலோகப்பிதா கற்பனைக்கு எட்டாத நித்திய இல்லத்தை ஆயத்தம் செய்திருக்கிறார்.  நமக்காக அவர் வைத்திருக்கிறவைகளுக்கு நம்முடைய எந்த கற்பனையும் ஈடாகாது.  விரைவில் நடக்கவிருக்கிற மகிழ்ச்சியான வீடு திரும்பலில் தமது பிள்ளைகளை வரவேற்கும்படி அவர் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்.  அவருடைய வார்த்தையை எடுத்துச் சொல்லி, நாம் ஆயத்தப்படுவோம்.  குறிப்பிட்ட நேரத்தை நோக்கி கடிகாரம் சுழல துவங்கிவிட்டது.

16. இயேசு என்னை நேசிப்பதைப்போலவே பிதாவாகிய தேவனும் என்னை நேசிக்கிறார் என்பதை நீ உணருகிறாயா?

உங்கள் பதில்: _______________________

சிந்தனை கோள்விகள்

1.  ஆதாமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் ஆப்பிள் பழமா?

பதில்: நமக்குத் தெரியாது.  வேதாகமம் அப்படி எதுவும் சொல்லவில்லை.

2. சிவப்பு நிற கொம்புகளையும் வாலையுமுடைய பாதி மனிதனும் பாதி மிருகமுமாக பிசாசு வருணிக்கப்படுவது எங்கேயிருந்து துவங்கியது?

பதில்:  இது பிறஜாதிகளின் கற்பனைக் கதையிலிருந்து வந்தது.  இப்படிச் சொல்லுவது பிசாசிற்கு மிக பிடித்தமானது.  சிந்திக்கக்கூடிய மக்கள் மிகப் கொடூரமான மிருயங்களை கற்பனையென்று நிராகரித்துவிடுவார்கள் என்பதையும், இவ்விதம் அவன் இருப்பதையே மறுதலிக்க அவர்கள் நடத்தப்படுவார்கள் என்பதையும் சாத்தான் அறிவான்.  பிசாசு இருக்கிறான் என்கிறதை நம்பாதவர்களே அவனுடைய தந்திரங்களில் முதலாவது பிடிக்கப்படுவார்கள்.

3. “அதை நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்” (ஆதியாகமம் 2:17) என்று தேவன் ஆதாமிடமும் ஏவாளிடமும் சொன்னாரே, பின்னர் ஏன் அவர்கள் அந்த நாளிலேதானே மரிக்கவில்லை?

பதில்:

வேதாகமம் இரண்டுவிதமான மரணத்தைக்குறித்துப் பேசுகிறது.

  1.  நாம் அனைவரும் சந்திக்கிற “முதலாவது” மரணம் (எபிரெயர் 9:27).
  2. காலத்தின் முடிவில் நரக அக்கினியில் துன்மார்க்கர் அடையப்போகிற “இரண்டாவது” மரணம் (வெளிப்படுத்தல் 21:8). இரண்டாம் மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் இல்லை, அது நித்தியமானது என்பதே இவைகளிடையே இருக்கிற வேறுபாடு.

இயேசு ஒவ்வொரு நபருக்காகவும் இரண்டாம் மரணத்தை அடைந்தார்.

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, ஒவ்வொரு நபருக்காகவும் கல்வாரியில் இரண்டாம் மரணத்தை ஏற்றுக்கொள்ள இயேசு உடனடியாக முன்வந்திருக்காவிடில், அவர்கள் அப்போதே இரண்டாம் மரணத்தை அடைந்திருப்பார்கள்.  அவருடைய உன்னதத் தியாகம் அவர்களைக் காப்பாற்றியது (எபிரெயர் 2:9).

ஆதாம் பாவம் செய்தபோது மரிக்கக்கூடாத அவனுடைய தன்மை மரிக்கக்கூடியதாக மாறியது.  முதலாவது மரணத்தைக்குறித்து: “சாவாய்” என்று ஆதியாகமம் 2:17 குறிப்பிடும் வார்த்தை, “சாவதில் நீ சாவாய்” என்ற பொருளுடையதாகும்.  இதை அநேக வேதாகம மொழிபெயர்ப்புகளின் ஓரத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.  இது,, சாகும் செயல்முறையில் ஆதாமும் ஏவாளும் நுழைவார்கள் என்று பொருள்படுகிறது.  பாவம் செய்வதற்குமுன்பாக இந்தத் தம்பதி சாகக்கூடாத பாவமில்லாத தன்மையைக் கொண்டிருந்தனர்.  இந்த இயல்பு ஜீவவிருட்சத்தின் கனியை புசிப்பதினால் தொடர்ந்துகொண்டிருந்தது.  பாவம் செய்த நிமிடத்தில், அவர்களுடைய இயல்பு சாகக்கூடிய பாவ இயல்பாக மாறியது.  இதைத்தான் தேவன் முன்னதாகவே சொன்னார்.  ஜீவவிருட்சத்திலிருந்து துரத்தப்பட்டதினால் முடிவாக அவர்களை மரணத்திற்கு நடத்துகிற அழிவும் குறைபாடும் உடனடியாக துவங்கியது.  கல்லறை நிச்சயமான ஒன்றாக மாறியது.  “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் தீரும்புமட்டும்” (ஆதியாகமம் 3:19) என்று ஆண்டவர் அவர்களிடம் பின்னர் சொன்னபோது இதை உறுதிப்படுத்தினார்.

4. தேவன்தானே லூசிபரை உண்டாக்கினார்.  எனவே அவர்தானே பாவத்திற்கு உண்மையில் பொறுப்பாளி?

பதில்:  இல்லவே இல்லை. தேவன் லூசிபரை பரிபூரணமாக பாவமில்லாத தூதனாக உண்டாக்கினார்.  லூசிபர்தானே தன்னை பிசாசாக மாற்றிக்கொண்டான்.  தேவனுடைய இராஜ்யத்தில் தெரிந்தெடுக்கும் சுதந்திரம்தான் அஸ்திபாரக்கொள்கையாக இருக்கிறது.  லூசிபரை உண்டாக்கும்போதே அவன் பாவம் செய்வான் என்பதை ஆண்டவர் அறிந்திருந்தார்.  அந்த நேரத்தில் அவனை உண்டாக்க மறுத்திருந்தால், தெரிந்தெடுக்கும் சுதந்திரம் என்கிற பிரதான கொள்ளையை அவர் மதித்திருக்கமுடியாது.

தெரிந்தெடுக்கும் உரிமை

தேவனுடைய வழிமுறை!

இவ்விதம் லூசிபர் என்ன செய்வான் என்பதை முழுமையாக அறிந்திருந்தும் தேவன் அவனை உண்டாக்கினார்.  அதே உண்மைதான் ஆதாம் ஏவாளை உண்டாக்கினதிலும் பொருந்துகிறது.  இன்று உங்களுக்கும் எனக்கும்கூட இதே உண்மைதான் பொருந்தும்.  பிறப்பதற்கு முன்பாகவே நாம் எவ்விதம் பிழைப்போம் என்று ஆண்டவர் அறிந்திருக்கிறார்.  அப்படியிருந்தும், வாழ்ந்திருந்து தேவனுடைய அரசாட்சியோ அல்லது சாத்தானுடையதையோ தெரிந்துகொள்ள நம்மை அனுமதிக்கிறார்.  யாரை பின்பற்றலாம் என்பதை ஒவ்வொரு மனிதனும் சுதந்தரமாகத் தெரிந்தெடுக்க அவனுக்கு நேரம் கொடுத்தவராக, தாம் தவறாக புரிந்துகொள்ளப்படுவதற்கும், பொய்யாக குற்றஞ்சாட்டப்படுவதற்கும், காலங்களாக குற்றப்படுத்தப்படுவதற்கும் ஆண்டவர் ஆயத்தமாயிருக்கிறார்.

ஒரு அன்பான தெய்வம்மாத்திரமே அனைவருக்கும் முழு சுதந்தரத்தை கொடுப்பதன் ஆபத்தை செயல்படுத்தமுடியும்.

இந்த மகிமையான அத்தியாவசியமான சுதந்தரம், அன்பான, நீதியுள்ள, வெளிப்படையான தேவனிடமிருந்து மாத்திரமே வரமுடியும்.  அப்படிப்பட்ட ஒரு ஆண்டவரும் நண்பருமானவரை சேவிப்பது நமக்கு கனமும் மகிழ்ச்சியுமாகும்.

தேவனுக்கு சேவை  செய்ய தெரிந்துகொள்ளுங்கள்.

பாவப்பிரச்சனை வெகு விரைவில் முடிவிற்கு வந்துவிடும்.  ஆதியில் அனைவரும் “மிகவும் நன்றாயிருந்தது” – ஆதியாகமம் 1:31.  இப்போது “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது” – 1 யோவான் 5:19, எவ்விடத்திலுமிருக்கிற மக்கள் தேவனுக்கோ அல்லது சாத்தானுக்கோ சேவை செய்ய தெரிந்துகொள்ளுகிறார்கள். உங்களுடைய தேவன் கொடுத்த அற்புதமான சுதந்திரத்தால் ஆண்டவருக்குச் சேவை செய்ய தெரிந்துகொள்ளுங்கள். 

5. பிசாசு பாவம் செய்தபோது அவனை அழித்து பாவப்பிரச்சனையை ஏன் தேவன் முடிவிற்குக் கொண்டுவரவில்லை?

பதில்: பாவம் என்பது தேவனுடைய அண்ட சராசரத்திலும் முற்றிலும் புதிய ஒன்றாக இருந்ததால், அதன் குடிகள் அதைப் புரிந்துகொள்ளவில்லை.  லூசிபர்தானும் முதலில் அதை முழுமையாக புரிந்திருக்கமாட்டான்.  லூசிபர் ஞானம் மிகுந்த, உயர்வாக கனப்படுத்தப்பட்ட தூதர்களின் தலைவனாயிருந்தான்.  அவனுடைய செயல்பாடு பரலோகம் மற்றும் தூதர்களுடைய கவனத்தை கண்டிப்பாக சந்தேகத்திர்கிடமின்றி அதிகம் கவர்ந்திருக்கும்.  “பரலோகம் நன்மையான இடம்.  தூதர்களின் ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்படுமானால் அது இன்னமும் முன்னேறும்; கேள்வி கேட்கமுடியாத அதிகப்படியான அதிகாரம் (பிதா மற்றும் குமாரனுடையதைப்போன்ற), அதிபதிகளை நிஜ வாழ்க்கைக்கு குருடாக்குகிறது.  தூதர்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படி கோரப்படக்கூடாது.  நாம் கட்டளைகள் கொடுக்கவேண்டும். தேவனுக்கு என்னுடைய ஆலாசனைகள் சரியென்று தெரியும்; அவர் பயமுறுத்தப்பட்ட உணர்வில் இருக்கிறார்.  நம்முடைய காரியங்களில் அனுபவமில்லாத உன்னத தலைவர்கள் பரலோகத்தையே ஆபத்துக்குள்ளாக்கிவிடக்கூடாது.  நாம் ஒற்றுமையாக முன்னேறினால் அவர்கள் கவனிப்பார்கள்.  நாம் பெலவீனர்களாயிருக்கக்கூடாது; செயல்படவேண்டும்.  இல்லையெனில் நம்மைப் போற்றாத அரசங்கத்தினால் நாம் எல்லோரும் அழிக்கப்படுவோம்” என்று அவன் கூறியிருக்கலாம்.

மூன்றில் ஒருபங்கு தூதர்கள் லூசிபரோடு  இணைந்தனர் (வெளிப்படுத்தல் 12:3,4) லூசிபரின் வாதங்கள் அநேக தூதர்களை நம்பவைத்தது.

எனவே மூன்றிலொரு பங்கு அவனோடு சேர்ந்தனர். தேவன் ஒருவேளை லூசிபரை உடனடியாக அழித்திருப்பாரானால், தேவனுடைய குணத்தை முழுமையாகப் புரிந்துகொண்டிருக்காத சில தூதர்கள் பயத்தினிமித்தம்: “லூசிபர் சரியாகவே இருந்திருக்கவேண்டும்; கவனமாக இரு.  தேவனோடு நீ ஒத்துப்போகவில்லையெனில் உன்னையும் அவர் கொன்றுவிடுவார்” என்று சொன்னவர்களாக பயத்தினால் அவரை தொழுதிருக்கலாம்.  அப்படியிருந்தால், எதுவுமே நிரந்தரமாக இருந்திருக்காது.  பிரச்சனை இன்னமும் பெரியதாகியிருந்திருக்கும்.

தேவன் ஏற்றுக்கொள்ளுகிற ஒரே சேவை, அன்பினால் தூண்டப்பட்டு மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் வலிய செய்யப்படுகிற சேவைதான்.

வேறு எந்த காரணத்தினிமித்தம் கீழ்ப்படிந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

சாத்தான் தன்னுடைய கொள்கைகளை விளக்கிக்காண்பிக்கும்படி தேவன் அவனுக்கு நேரம் கொடுத்திருக்கிறார்.

பிரபஞ்சத்தின் அரசாட்சிக்கு மேம்பாடான திட்டங்களை தான் வைத்திருப்பதாக சாத்தான் கூறினான்.  எனவே அவனுடைய கொள்கைகளை விளக்கிக் காண்பிக்கும்படி தேவன் அவனுக்குக் காலம் கொடுத்திருக்கிறார்.  சாத்தானுடைய அரசாங்கம் மேன்மையற்றதும், வெறுக்கக்கூடியதும், இரக்கமற்றதும், பொய்யானதும், அழிவுக்கு நடத்துகிற தன்மையும் உடையது என்று பிரபஞ்சத்திலிருக்கிற ஒவ்வொரு ஆத்துமாவும் ஒப்புக்கொண்டபிறகே ஆண்டவர் பாவத்தை அழிப்பார்.

பிரபஞ்சம் முழுவதும் உலகத்தை கவனித்துகொண்டிருக்கிறது.

“நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்”  (1 கொரிந்தியர் 4:9) என்று வேதாகமம் சொல்லுகிறது.  கிறிஸ்துவிற்கும் சாத்தானுக்குமிடையே நடக்கிற போராட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒரு பங்கு வகிக்கிறதை அண்ட சராசரமும் கவனித்துக்கொண்டிருக்கிறது.  போராட்டம் முடிவிற்கு வரும்போது ஒவ்வொரு ஆத்துமாவும் இவ்விரண்டு இராஜ்யங்களின் கொள்கைகளை முழுமையாக புரிந்திருந்து, கிறிஸ்துவையோ அல்லது சாத்தானையோ பின்பற்ற தெரிந்துகொண்டிருக்கும்.  பாவத்தோடும் சாத்தானோடும் சேர்ந்துகொண்டவர்கள் அவனோடுகூட அழிந்துபோவார்கள். தேவனுடைய மக்களோ அவர்களுடைய நித்திய பாதுகாப்பான பரலோக வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவார்கள்.

கோள்விகள்

1. பாவம் யாரிடம் துவங்கியது? (1)

_____ மிகாவேல்.
_____ லூசிபர்
_____ காபிரியேல்


2. முதலில் பாவம் செய்தபோது லூசிபர் எங்கே இருந்தான்? (1)

_____ பூமியில்.
_____ பரலோகத்தில்.
_____ துருவ நட்சத்திரத்தில்


3. ஒருகாலத்தில் லூசிபரை விவரித்திருந்தவைகள்: (6)

_____ உண்டாக்கப்பட்ட தூதன்.
_____ ஞானத்தால் நிறைந்தவன்.
_____ பரலோக வெள்ளைக் குதிரையில் பயணித்தவன்.
_____ தன் வழிகளில் குறையற்றிருந்தவன்.
_____ பரலோக வாசலைக் காத்திருந்தவன்.
_____ பிரபலமான இசையமைப்பாளன்.
_____ பூரண அழகுள்ளவன்.
_____ காப்பாற்றுகிற கேரூப்.


4. லூசிபரின் கலகம்பற்றிய உண்மைகள்: (5)

_____ அவன் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான்.
_____ அவன் மனந்திரும்பி பரலோகத்திலேயே காக்கப்பட்டான்.
_____ அவன் ஒரு அறைக்குள் ஒளித்துக்கொண்டான்.
_____ அவன் பெயர் சாத்தான் என்றாகியது.
_____ அவன்தான் முதலாவது பாவி.
_____ அவன் தள்ளப்படுவதை இயேசு பார்த்தார்.
_____ அவனோடுகூட மூன்றிலொருபங்கு தூதர்கள் விழுந்தனர்.


5. லூசிபர் விரும்பியது என்ன? (2)

_____ ஆராதிக்கப்பட.
_____ தேவனை அப்புயப்படுத்தி அவருடைய இடத்தை எடுத்துக்கொள்ள.
_____ அண்டசராசரம் நெடுகிலும் பறந்துசெல்ல.


6. பிசாசாகிய சாத்தான்பற்றிய
உண்மைகள்:(4)

_____ கொம்புகளோடும் விரிகுளம்புகளோடும் அவன் சிவப்பாயிருப்பான்.
_____ அவனுடைய வீடு நரகத்திலிருக்கிறது.
_____ சாத்தான் தூதனாக வேடமிட்டிருந்தான்.
_____ அவன் தேவனை பொய்யரென்றான்.
_____ சாத்தான் அவர்களுக்கு ஆப்பிள் பழங்களைக் கொடுத்ததை அறிவோம்.
_____ சாத்தான் முதலாவது ஆதாமிடம் வந்தான்.
_____ அவர்கள் அழியாத பாவிகளாவார்கள் என்று சாத்தான் நம்பியிருந்தான்.
_____ சோதனையில் பொய்களை உண்மையோடு கலந்திருந்தான்.


7. ஆதாம் ஏவாளின்
விழுகையைக்குறித்த உண்மைகள்:(3)

_____ சாத்தான் தூதனாக வேடமிட்டிருந்தான்.
_____ அவன் தேவனை பொய்யரென்றான்.
_____ சாத்தான் அவர்களுக்கு ஆப்பிள் பழங்களைக் கொடுத்ததை அறிவோம்.
_____ சாத்தான் முதலாவது ஆதாமிடம் வந்தான்.
_____ அவர்கள் அழியாத பாவிகளாவார்கள் என்று சாத்தான் நம்பியிருந்தான்.
_____ சோதனையில் பொய்களை உண்மையோடு கலந்திருந்தான்.


8. சாத்தானுடைய முடிவான தண்டனைளைக் குறித்த உண்மைகள்:(4)

_____ அவன் அக்கினியினால் சாம்பலாவான்.
_____ அவனுடைய தூதர்கள் தப்பிவிடுவார்கள்.
_____ அக்கினி பரலோகத்தில் இருக்கும்.
_____ சாத்தானும் அவன் தூதரும் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளுவார்கள்.
_____ அக்கினி பாவத்தையும் பாவிகளையும்கூட அழித்துவிடும்.
_____ தேவனுடைய நீதியை சாத்தான் அறிக்கைபண்ணுவான்.


( ) அவன் மக்களை நேசிக்கிறான்.
( ) அவனால் பரலோகத்
தூதனைப்போல காணப்படமுடியும்.
( ) அவனால் அற்புதம்
செய்யமுடியாது.
( ) அவன் பொய்யனும்
கொலைகாரனும்!
( ) அவனால் வானத்திலிருந்து
அக்கினியை அனுப்பமுடியும்
( ) அநேக மக்கள் அவனைப்
பின்பற்றி தொலைந்துபோவார்கள்.
1. ஆதாம் ஏவாளின்
விழுகையைக்குறித்த உண்மைகள்: (3)
( ) சாத்தான் தூதனாக வேடமிட்டிருந்தான்.
( ) அவன் தேவனை பொய்யரென்றான்.
( ) சாத்தான் அவர்களுக்கு ஆப்பிள் பழங்களைக் கொடுத்ததை அறிவோம்.
( ) சாத்தான் முதலாவது ஆதாமிடம் வந்தான்.
( ) அவர்கள் அழியாத பாவிகளாவார்கள் என்று சாத்தான் நம்பியிருந்தான்.
( ) சோதனையில் பொய்களை உண்மையோடு கலந்திருந்தான்.
8, சாத்தானுடைய முடிவான தண்டனைளைக் குறித்த உண்மைகள்:
(4)
( ) அவன் அக்கினியினால் சாம்பலாவான்.
( ) அவனுடைய தூதர்கள் தப்பிவிடுவார்கள்.
( ) அக்கினி பரலோகத்தில் இருக்கும்.
( ) சாத்தானும் அவன் தூதரும் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளுவார்கள்.
( ) அக்கினி பாவத்தையும் பாவிகளையும்கூட அழித்துவிடும்.
( ) தேவனுடைய நீதியை சாத்தான் அறிக்கைபண்ணுவான்.



9. லூசிபர் பாவம் செய்தபோது ஏன் தேவன் அவனைக் கொல்லவில்லை? (4)

_____ தூதர்கள் தவறாக புரிந்து கொள்ளுவார்கள் என்று.
_____ சிலர் தேவனைக்குறித்த பயத்தோடிருப்பார்கள் என்று.
_____ லூசிபர் தேவனைவிடவும் பலசாலியாயிருந்தான் என்று.
_____ நல்ல தூதர்கள் அவ்விதம் செய்ய அவரை விடமாட்டார்கள் என்பதினால்.
_____ லூசிபரின் திட்டங்களை விளக்கிக் காண்பிக்க காலம் தேவைப்பட்டதால்.
_____ தேவனுடைய திட்டம் சரியானதே என்று நிரூபிக்கப்பட காலம் தேவைப்பட்டதால்


10. எந்தவொரு காரியம் தேவனுடைய இராஜ்யத்தை சரியானது என்று நிரூபிக்கும்? (1)

_____ தேவன் சில அற்புதங்கள் செய்வார்.
_____ பிரபஞ்சத்தின் அனைத்து ஆத்துமாக்களும் முழங்கால்படியிட்டு தேவன் அன்பும் நீதியுமுள்ளவர் என்றும் அறிக்கையிடும்.
______ பரலோகத் தூதர்கள் தேவனை சேவிக்கும்படி ஒவ்வொருவரையும் கேட்பார்கள்.


11. பாவத்தைக்குறித்த உண்மைகள்:
(5)

______ பாவத்தின் அழிவை இயேசு உறுதிப்படுத்தியிருக்கிறார்.
______ தேவனுடைய பிரமாணத்தை மீறுவதே பாவம்.
______ பாவம் தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது.
______ பாவம் வெற்றிகொள்ள மிக எளிமையான ஒன்று.
_____ சாத்தான்தான் பொய்யென்னும் பாவத்தை கண்டுபிடித்தான்.
______ ஒருமுறை அழிக்கப்பட்டபிறகு பாவம் மீண்டும் எழும்பாது.


12. உண்மைகளை தெரிந்தெடுங்கள். (5)

_____ சாத்தான் தன்னுடைய குணங்களை தேவன்மேல் சாட்டுகிறான்.
_____ நம்முடைய பெற்றோரைக்காட்டிலும் தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்.
_____ தேவனுடைய செயல்களாக அழைக்கப்படுகிற அநேக செயல்கள் சாத்தானுடைய செயல்கள்.
_____ இயேசுவின் வாழ்க்கை தேவனுடைய குணத்தை வெளிப்படுத்தியது.
_____ பிதாவாகிய தேவனானவர் கடுமையானவர்.
______ மிக அதிகமாக மக்கள் தேவனை தவறாக புரிந்துகொள்ளுகின்றனர்.


13. இயேசுவைப்போன்றே பிதாவும் என்னை நேசிக்கிறார் என்பதை அறிவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
_____ ஆம்.
_____ இல்லை.