
போதகர் டக்கின் வாழ்க்கைப் பயணம்…
டக் பேட்சிலர் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய சூழ்நிலைகளை அதின் உச்சக்கட்டத்தில் சந்தித்துள்ளார். அவருடைய நீண்ட மற்றும் குழப்பமான பயணத்தில் சமூக விரோதியாக, போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த அவர் உலகளாவிய ஊழியத்தின் தலைவராக மாறினார். மேலும் இது உலக அளவில் மக்கள் அவரை அடையாளம் காணத்தக்கதாக மாபெரும் பேச்சாளராக அவரை உருவாக்கியது.
இன்று கலிபோர்னியாவில் உள்ள கிராநைட் பே சபைக்கு இவர் மூத்தப் போதகராகவும், அமேசிங் ஃபேக்ட்ஸ் ஊழியத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய “அமேசிங் ஃபேக்ட்ஸ் வித் டக் பேட்சிலர்” மற்றும் “பைபிள் ஆன்சர்ஸ் லைவ் ரேடியோ ப்ராட்கேஸ்ட்” போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

விமானப் போக்குவரத்துத் துறைத் தொழிலதிபரின் டீனேஜ் மகனான இளம் டக் பணத்தைக்கொண்டு அனைத்தையும் வாங்கியிருக்க முடியும், எனினும் அவரால்
உண்மையான நிம்மதி மற்றும் சந்தோஷத்தைப் பெறமுடியவில்லை. குழப்பத்தில் இருந்த அந்த இளம் வாலிபன் பள்ளியில் சண்டையிடுகிறான், தற்கொலை முயற்ச்சிகளில் ஈடுபடுகிறான்,இறுதியில் தன்னுடைய 15ம் வயதில் வீட்டில் இருந்து ஓடிப்போகிறான்.
வாழ்க்கையை வெறுத்து, அதில் அர்த்தம் ஏதுமில்லை என்ற முடிவிருக்கு வந்தவராக, பொறுப்பில்லாமல் சுற்றித்திரிந்தவர்களுடன் வாழ்க்கையை அனுபவிக்க முடிவுசெய்தார். போதைப்பொருட்களை உபயோகித்து,குற்றங்கள் பல செய்து, சிறையில் சில நாட்களைக் கழித்த இவர், சூறாவளி போன்ற சூழ்நிலைகள் முதல் தீவிரமான வெப்பம் நிறைந்த பாலைவன அனுபவம் போன்ற அனுபவங்களையும் கடந்துவந்தார். ஆனால் வருடங்கள் கழித்து, பாம் ஸ்பிரிங்க்ஸ் என்ற இடத்திற்கு மேலுள்ள மலை உச்சியில் இருந்த ஒதுக்குப்புறமான குகை ஒன்று அவருடைய வீடாக மாறியது. அவருடைய தந்தை உல்லாசப் படகு, ஜெட் விமானம் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை வைத்திருந்தபோதிலும், டக் உணவுக்காக குப்பைத்தொட்டிகளைத் தேடிக்கொண்டிருந்தார்.
டக் தேடிய சந்தோஷம் பலவருடங்களுக்கு அவரை தேவனிடமிருந்து தப்பிக்கச் செய்தது. ஒருநாள் அவர் இருந்த குகையில் யாரோ ஒருவர் விட்டுச்சென்ற, தூசிப்படிந்த வேதாகமம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. அவர் அதைப் படிக்கத் துவங்கியபோது, அதை அவர் விசுவாசித்து கிறிஸ்துவைத் தன்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
இன்று, டக் பேட்சிலர், சபை மக்களிடம் மட்டுமல்ல பிற மதத்தவரிடமும் இல்லைவாதிகளிடமும் சத்தியத்தைப் பகரும் அளவிற்கு அசாதாரமான ஆற்றல்கொண்ட பேச்சாளர் ஆவார். சமயத்திற்கேற்ற வகையில் வெளிப்படும் நகைச்சுவைத் திறனும், கிறிஸ்தவ ஜீவியத்திற்குரிய தாழ்மையுள்ள அணுகுமுறையும், பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையையும் அர்த்தத்தையும் கொடுக்கிறது.

போதகர் டக் மற்றும் அவருடைய மனைவி கரேனுக்கு ஐந்து பிள்ளைகள். இவர்கள் சாக்ரமெண்ட்டோவில் வசிக்கிறார்கள். கிட்டார் வாசிப்பது, ஆழ்கடல் நீச்சல், மற்றும் ராக்கெட்பந்து போன்றவை இவருடைய பொழுதுபோக்காகும். இவருடைய தந்தையைப் போலவே, இவரும் விமானத்துறையில் ஆர்வமுள்ளவரும் விமான ஓட்டுனரும் ஆவார். கேவ்மேன் தியாலஜி, ப்ரோக்கன் செயின்ஸ், அட் ஜீசஸ் ஃபீட்: காஸ்பல் அக்கார்டிங் டு மேரி மேகதலீன் மற்றும் ஹூ டூ யூ திங்க் யூ ஆர்? போன்றவை இவர் எழுதிய மற்றப் புத்தகங்களாம்.
- www.afbookstore.com என்ற வலைதளத்திற்கு வருகைத் தருவதன்மூலம் போதகர் டக்கின் புத்தகங்களை நீங்கள் வாங்கலாம்.
நமது நம்பிக்கை
வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்றும், அவை உபதேசத்திற்கும்,கடிந்துகொள்ளுதலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2 தீமோ. 3:16ஐ பார்க்கவும்) என்றும் விசுவாசிக்கிறோம். …
எங்கள் ஊழியம்
வெளி. 14:6-12 வரை யுள்ள நித்திய சுவிசேஷத்தை இவ்வுலகத்திற்கு அறிவிப்பதும், மீதமான திருச்சபையில் உள்ளவர்களை எழுப்புதலடைய ஊக்குவித்து, இயேசுவின்மீதான விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிப்பு என்ற சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மக்களை வழிநடத்துகிறோம். …