வேதபாடங்கள் 27
விமானத்திலிருந்து குதிக்கிறவர், விமானக் கதவின் விளிம்பிற்கு வந்து குதித்தபின், இனி திரும்பிச்செல்ல முடியாது என்பதை அறிந்திருப்பார். அவர் மிக அதிகதூரம் சென்று விட்டார். அப்போது, தன்னுடைய பாராசூட்டை எடுத்துக்கொள்ள மறந்திருப்பாரெனில், அவர் நிச்சயமாக பயங்கரமான மரணத்தை சந்திப்பாரேயன்றி, காப்பாற்றமுடியாது. என்ன பரிதாபம்!

அதைவிடவும் மோசமான காரியம் ஒன்று இருக்கிறது. தேவனுடனான உறவில் சரிசெய்யக்கூடாத ஒரு நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்களெனில் அது மிகவும் மோசமானதாயிருக்கும். எனினும் இலட்சக்கணக்கானோர் இந்த இடத்திற்கு எந்த ஒரு சிந்தையும் இல்லாது வருகிறார்கள். உங்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு சாத்தியமிருக்கிறதா? இப்படிப்பட்ட ஆபத்தான இடத்திற்கு நடத்துகிற பெரிய பாவம் என்ன? ஏன் தேவனால் அதை மன்னிக்கக்கூடாது? மிகவும் தெளிவான, ஆழமான, கூடவே நம்பிக்கையான பதிலை அறியும்படியாக இந்த வேதபாடத்தை படிக்க சிலநேரம் செலவுசெய்யுங்கள்.
1. தேவனால் மன்னிக்கமுடியாத பாவம் எது?
“எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை” – மத்தேயு 12:31.

பதில்: “பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவமே” தேவனால் மன்னிக்கமுடியாத பாவம். ஆனால் “பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவம்” எது? இந்தப் பாவத்தைக்குறித்த வெவ்வேறுவிதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. சிலர் கொலைசெய்வதே அது என்கிறார்கள்; சிலர் பரிசுத்த ஆவியானவரை சபிப்பது என்கிறார்கள்; சிலரோ, தற்கொலை செய்துகொள்வது என்றும், கருக்கலைப்பு செய்வது என்றும், கிறிஸ்துவை மறுதலிப்பது என்றும், கொடிய பயங்கரமான மிகவும் துன்மார்க்கமான பாவத்தை செய்வது என்றும் சொல்லுகிறார்கள்; மற்றவர்கள், பொய் தேவனை ஆராதிப்பது என்று கூறுகிறார்கள். இந்த முக்கியமான காரியத்திற்கு அடுத்த கேள்வி தெளிவான பதிலைத் தரக்கூடும்.

2. பாவத்தைக்குறித்தும் தேவதூஷணத்தைக்குறித்தும் வேதாகமம் என்ன சொல்லுகிறது?
“எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்” – மத்தேயு 12:31.
பதில்: அனைத்துவிதமான பாவங்களும் தூஷணங்களும் மன்னிக்கப்படும் என்று வேதாகமம் தெளிவாகச் சொல்லுகிறது. எனவே மேற்கூறிய பதிலில் பட்டியலிடப்பட்டிருக்கிற எந்த பாவமும் தேவனால் மன்னிக்கக்கூடாத பாவமல்ல. எந்தவொரு செய்கையும் மன்னிக்கப்படக்கூடியதே.
முரண்பாடாகத் தோன்றுகிறதா? ஆமாம், முரண்பாடாகத்தான் தோன்றுகிறது. எனினும் கீழ்வரும் இரண்டு வாக்கியங்களுமே முக்கியமானவை.
அ. அனைத்து விதமான பாவமும் தூஷணமும் மன்னிக்கப்படும்.
ஆ. பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவமும் தூஷணமும் மன்னிக்கப்படாது.
இயேசுதான் இந்த இரண்டு வாக்கியங்களையும் கூறினார். மத்தேயு 12:31ல் இயேசுதாமே இந்த இரண்டு காரியங்களையும் கூறியிருக்கிறார். எனவே அங்கே தவறு இருக்கமுடியாது. இந்த வாக்கியங்கள் இணைந்துபோகவேண்டுமெனில் நாம் பரிசுத்த ஆவியானவரின் வேலை என்ன என்பதை கண்டுபிடிக்கவேண்டும்.
3. பரிசுத்த ஆவியானவரின் வேலை என்ன?
“அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.” “சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” – யோவான் 16:8,13.
பதில்: பாவத்தைக்குறித்து என்னை உணர்த்தி, சகல கத்தியத்திற்குள்ளும் நடத்துவதே பரிசுத்த ஆவியானவரின் வேலை. மனமாற்றத்திற்கு நடத்தும் தேவனுடைய முகவரே பரிசுத்த ஆவியானவர். அவர் இல்லாதபோது எவரும் பாவத்திற்காக மனம் வருந்தமாட்டார்; எவரும் எப்போதும் மனந்திரும்பவும் மட்டார்.

4. பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக்குறித்து என்னை உணர்த்தும்போது நான் மன்னிக்கப்பட என்ன
செய்யவேண்டு ?
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” – 1 யோவான் 1:9.
பதில்: பாவத்தைக்குறித்து ஆவியானவரால் உணர்த்தப்படும்போது, மன்னிக்கப்படும்படி நான் அவைகளை அறிக்கை செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது அதை மன்னிப்பதுமாத்திரமல்ல, அனைத்துவிதமான அநீதியிலிருந்தும் தேவன் என்னை அற்புதமானவிதத்தில் கழுவுகிறார். நான் செய்யக்கூடிய அனைத்துப் பாவங்களையும் எனக்கு மன்னிக்கும்படி அவர் ஆவலோடு காத்திருக்கிறார் (சங்கீதம் 86:5). ஆனால் நான் அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடவேண்டும்.
5. பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்படும்போது நான் என் பாவங்களை அறிக்கை செய்யவில்லையெனில் என்ன நடக்கிறது?
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவன் இரக்கம் பெறுவான்” – நீதிமொழிகள் 28:13.
பதில்: நான் என் பாவங்களை அறிக்கைசெய்யாதபோது இயேசுவால் என்னை மன்னிக்கமுடியாது. இவ்விதம் அறிக்கை செய்யாத பாவங்கள் அறிக்கை செய்யப்படும்வரையிலும் மன்னிக்கப்படாமலிருக்கும். ஏனெனில் பாவமன்னிப்பு பாவ அறிக்கையை பின்தொடருகிறது; அதற்கு முன்செல்லுவதில்லை.
பரிசுத்த ஆவியானவரை தடுப்பதன் பயங்கரமான ஆபத்து
பரிசுத்த ஆவியானவரை தடுக்கும்போது, அது அவரை நிராகரிப்பதற்கு மிக எளிதாக நடத்திவிடுமாகையால், பயங்கரமான ஆபத்தாகும். இதைத்தான் தேவன் ஒருபோதும் மன்னிப்பதில்லை. இது திரும்பிவரக்கூடாத எல்லையை கடந்துசெல்வதைப்போன்றது. பரிசுத்த ஆவியானவரே எனக்கு உணர்த்துதலைக் கொண்டுவரும் ஒரே முகவராக இருப்பதினால், அவரை நான் நிராகரிக்கும்போது என்னுடைய வாழ்க்கை நம்பிக்கையற்றதாகப் போய்விடுகிறது. இது மிகவும் முக்கியமானதால் தேவன் வேதவாக்கியங்களில் வெவ்வேறு விதங்களில் இதை விளக்கி விவரிக்கிறார். இந்த வேதபாடத்தை படிக்கும்போது அதை கவனியுங்கள்.
6. பரிசுத்த ஆவியானவர் பாவங்களைக்குறித்து உணர்த்தி, என்னைப் புதிய சத்தியங்களுக்குள் நடத்தும்போது நான் எந்த நேரத்தில் செயல்படவேண்டும்.
பதில்: வேதாகமம் சொல்லுகிறது.
அ. “அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்” – சங்கீதம் 18:44.
ஆ. “உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்” – சங்கீதம் 119:60.
இ. “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்” – 2 கொரிந்தியர் 6:2.
ஈ. “இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு” – அப்போஸ்தலர் 22:16.
பாவங்களைக்குறித்து உணர்த்தப்படும்போது, நான் உடனடியாக அவைகளை அறிக்கைசெய்ய வேண்டும் என்று வேதாகமம் திரும்பத்திரும்பக் கூறுகிறது. புதிய சத்தியத்தை நான் அறிந்து கொள்ளும்போதும் உடனடியாக தாமதமின்றி அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
7. தமது பரிசுத்த ஆவியானவரின் மன்றாட்டுக்களைக்குறித்த என்ன பவித்திரமான எச்சரிப்பை தேவன் கொடுக்கிறார்?
“என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை” – ஆதியாகமம் 6:3.
பதில்: பாவத்தைவிட்டு திரும்பி தேவனுக்குக் கீழப்படியும்படி பரிசுத்த ஆவியானவர் முடிவில்லாத காலமாக ஒரு நபரிடம் மன்றாடிக்கொண்டிருக்கமாட்டார் என்று தேவன் பவித்திரமாக எச்சரிக்கிறார்.

8. எந்த இடத்த்லி பரிசுத்த ஆவியானவர் ஒரு நபரிடம் மன்றாடுவதை நிறுத்துகிறார்?
“அவரக்ள …. கேட்டும் கேளாதவர்களாயும் … இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்” – மத்தேயு 13:13.
பதில்: பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்கு ஒருவர் செவிடாகும்போது அவர் அந்த நபரிடம் பேசுவதை நிறுத்திவிடுகிறார். வேதாகமம் இவர்களை கேட்டும் கோளாதவர்கள் என்று விவரிக்கிறது. காதுகேளாதவரின் அறையில் ஒரு அலார கடிகாரத்தை வைப்பதைப்போன்றது இது. அவர் அதைக் கேட்கமாட்டார். அதைப்போல உறக்கத்திலிருந்து எழும்பாது, திரும்ப திரும்ப கடிகாரத்தின் அலார ஓசையை அடக்குவதைப்போன்று ஒருநபர் தன்னை வைக்கும்போது இவ்விதமே சம்பவிக்கும். முடிவாக அந்த ஓசை ஒலிக்காத ஒருநாள் வரும். பரிசுத்த ஆவியானவரை வெளியே அடைக்கவேண்டாம். இவ்விதமே பரிசுத்த ஆவியானவரிடமும்! அவரை நான் வெளியே தொடர்ந்து அடைக்கும்போது ஒருநாள் அவர் என்னிடம் பேசியும் அவரை கேட்கமுடியாதுபோகும். அந்தநாள் வரும்போது அவருடைய மன்றாட்டுக்கு நான் செவிடாகிவிட்டதால் அவர் வருத்தத்தோடு திரும்பிவிடுவார். திரும்பி வரக்கூடாத ஒரு எல்லையை நான் கடந்துவிட்டேன். பரிசுத்த ஆவியானவரை எதிர்ப்பதற்கெதிரான என்ன பவித்திரமான, சிந்திக்கவைக்கிற எச்சரிப்பு!
9. தேவன் தமது பரிசுத்த ஆவியானவரின்வழியாக பூமியிலிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் வெளிச்சத்தையும் (யோவான் 1:9)

உணர்த்துதலையும் (யோவான் 16:8) கொண்டுவருகிறார். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வெளிச்சத்தைப் பெறும்போது நான் என்ன செய்யவேண்டும் ?
“நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். துன்மார்க்கருடைய
பாதையோ காரிருளைப்போலிருக்கும்” – நீதிமொழிகள் 4:18,19; “இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்.” – யோவான் 12:35.
பதில்: பரிசுத்த ஆவியானவர் புதிய வெளிச்சத்தையோ அல்லது பாவத்தைக்குறித்த உணர்வையோ கொண்டுவரும்போது தாமதமின்றி உடனடியாகச் செயல்பட்டு, அதற்குக் கீழப்படியவேண்டும் என்பது வேதாகமச் சட்டமாயிருக்கிறது. வெளிச்சம் வரும்போது அதற்கு கீழப்படிந்து நடந்தால் தேவன் எனக்கு தொடர்ந்து வெளிச்சம் கொடுப்பார். அதை நிராகரிப்பேனானால் நான் பெற்றுக்கொண்ட வெளிச்சமும் போய்விட, நான் இருளில் விடப்படுவேன். ஒளியைப் பின்பற்ற பிடிவாதமாகவும் முடிவாகவும் நிராகரிக்கிறதினால் வரும் இருள், ஆவியானவரை நிராகரிப்பதன் விளைவே. அது என்னை நம்பிக்கையற்றவனாக விட்டுவிடும்.

10. அனைத்துப் பாவமும் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவமாகக்கூடுமா?
பதில்: ஆமாம். எந்த பாவத்தையும் அறிக்கை செய்துவிட்டுவிட நான் உறுதியாக மறுப்பேனானால், பரிசுத்த ஆவியானவரின் மன்றாட்டுக்கு நான் செவிடனாகி, திரும்பக்கூடாத எல்லையை இவ்விதம் கடக்கிறேன். கீழே சில வேதாகம உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அ. யூதாசின் மன்னிக்கப்படக்கூடாத பாவம் இச்சையே. ஏன்? தேவனால் அது மன்னிக்கமுடியாது என்பதலா? இல்லை. தன்னுடைய இச்சை எனும் பாவத்தை உணர்த்திய பரிசுத்த ஆவியானவருக்கு செவிகொடுத்து அதை அறிக்கைசெய்ய மறுத்ததே அவனுக்கு மன்னிக்கக்கூடாத பாவமாயிற்று. முடிவாக அவன் பரிசுத்த ஆவியனாவரின் சத்தத்திற்கு செவிடனானான்.
ஆ. லூசிபரின் மன்னிக்கப்படமுடியாத பாவம் பெருமையும் சுய உயர்த்துதலுமே (ஏசாயா 14:12-14). தேவனால் அவனை மன்னிக்கமுடியும். லூசிபரும் மன்னிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அவன் ஆவியானவரின் சத்தத்தைக் கேட்கக்கூடாத எல்லைக்குப் போகும்வரை கவனித்துக் கேட்க மறுத்துவிட்டான்.
இ. பரிசேயரின் மன்னிக்கப்படாத பாவம் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மறுத்ததே (மாற்கு 3:22-30). பரலோகத்தின் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசுதான் மேசியா என்கிற ஆழமான உணர்த்துதல்களால் அவர்கள் மீண்டும் மீண்டும் உணர்த்தப்பட்டார்கள். ஆனாலும் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, அவரை மேசியாவாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுத்தார்கள். முடிவாக ஆவியானவரின் சத்தத்திற்கு செவிடரானார்கள். பின்னதாக ஒருநாள் இயேசுவின் மிகப்பெரிய அற்புதத்திற்குப்பின்னர், இயேசு அவருடைய வல்லமையை பிசாசிடமிருந்து பெற்றதாக அவர்கள் திரளானவர்களிடம் கூறினார்கள்.
தம்முடைய அற்புதம் செய்யும் வல்லமையை பிசாசினுடையதாக கூறிய அந்த நேரத்தில் திரும்பிவரக்கூடாத எல்லைக்குப்போய், பரிசுத்த ஆவியானவரை தூஷித்ததாக கிறிஸ்து உடனே கூறினார். தேவன் மகிழ்ச்சியோடு அவர்களுடைய அந்தப் பாவத்தை மன்னித்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய சத்தம் எட்டக்கூடாத தூரத்திற்கு செல்லும்வரை மறுத்துவிட்டார்கள்.
விளைவுகளை நான் தெரிந்தெடுக்கமுடியாது.
ஆவியானவர் நம்மிடம் மன்றாடும்போது அவருக்கு செவிகொடுக்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அதன் விளைவுகளை நாம் தெரிந்தெடுக்கமுடியாது. அவைகள் நிலையானவை. தொடர்ந்து அவருக்கு செவிகொடுக்கும்போது நான் இயேசுவைப்போல மாறுவேன். பரிசுத்த ஆவியானவர் என்னுடைய நெற்றியில் முத்திரையிடுவார். (வெளிப்படுத்தல் 7:2,3). இவ்விதம் தேவனுடைய பரலோக இராஜ்யத்தில் எனக்கு ஒரு இடம் கொடுப்பார். நான் பிடிவாதமாக செவிகொடுக்க மறுக்கும்போது, பரிசுத்த ஆவியானவரை வேதனைப்படுத்துகிறேன்; அவன் என்றைக்குமாக என்னை விட்டுசென்று என்னுடைய அழிவை முத்தரிக்கிறார். பரிசுத்த ஆவியானவரை நெகிழ்வதற்கெதிரான என்ன பவித்திரமான எச்சரிப்பு!

11. விபாசாரம் கொலை என்கிற பயங்கரமான இரட்டைப் பாவத்தைச் செய்தபின்னர் தாவீது இராஜா என்ன வேதனையான ஜெபத்தை ஏறெடுத்தார்?
“உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்” – சங்கீதம் 51:11.
பதில்: தன்னிடமிருந்து பரிசுத்த ஆவியானவரை எடுத்துக்கொள்ளக்கூடாதென்று அவன் தேவனிடம் மன்றாடினான். ஏன்? ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தன்னைவிட்டு எடுபடுவாரானால் அந்த நொடியிலிருந்து தான் அழிவிற்கு நியமிக்கப்பட்டிருப்பேன் என்பதை அவன் உணர்ந்திருந்தான். பாவத்தைக்குறித்த வருத்தத்திற்கும், திரும்ப பரிசுத்த நிலையில் வைக்கப்படுவதற்கும் பரிசுத்த ஆவியானவரே நடத்தமுடியும் என்பதை அறிந்திருந்து, அவருடைய குரலுக்குச் செவிடாவதைக்குறித்த எண்ணத்தினால் அவன் நடுங்கினான். எப்பீராயீம் விக்கிரங்களோடு இணைந்திருந்து, ஆவியானவரின் சத்தத்திற்கு செவிகொடுக்கமாட்டான் என்பதால் தேவன் முடிவாக எப்பீராயீமை தனியாகவிட்டார் என்று வேதாகமம் மற்றொரு இடத்தில் சொல்லுகிறது (ஓசியா 4:17). அவன் ஆவிக்குரிய விதத்தில் செவிடனானான். ஒரு நபருக்கு சம்பவிக்கக்கூடிய மிகவும் ஆபத்தான காரியம், தேவன் அவனை விட்டுச்சென்று அவனைத் தனியே விடுவதுதான். அது உங்களுக்கு சம்பவிக்க அனுமதிக்காதீர்கள்.
12. என்ன தீவிரமான முக்கியமான கட்டளையை தெசலோனிக்கேயாவிலிருந்த சபைக்கு புவுலார் கொடுத்தார்?

“ஆவியை அவித்துப்போடாதிருங்கள்” – 1 தெசலோனிக்கேயர் 5:19.
பதில்: பரிசுத்த ஆவியானவரின் மன்றாட்டு ஒரு நபருடைய இருதயத்திலும் மனதிலும் எரிகிற அக்கினியைப்போன்றது. தீயின்மேல் வேலைசெய்யும் தண்ணீரின் அதே விளைவுகளை பாவம் பரிசுத்த ஆவியானவர்மேல் ஏற்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவரை நான் நிராகரித்து பாவத்தில் தொடரும்போது, அக்கினியாகிய பரிசுத்த ஆவியானவர்மேல் நான் தண்ணீரை ஊற்றுகிறேன். தெசலோனிக்கேயருக்கு வந்த பவுலாரின் எச்சரிப்பான வார்த்தைகள் இன்று நமக்கும் பொருந்துகின்றன. ஆவியானவரின் சத்தத்திற்கு செவிகொடுக்க மீண்டும் மீண்டும் மறுப்பதினால் அக்கினியை அவித்துப்போடுகிறோம். அக்கினியை அவித்துப்போட்டேனானால் நான் திரும்பி வரக்குடாத எல்லையைக் கடந்துவிட்டேன் என்று பொருள்.
எந்த பாவமும் அக்கினியே அவிக்கக்கூடும்
அறிக்கை செய்யப்படாத அல்லது விட்டுவிடப்பாடாத எந்த பாவமும் கடைசியில் பரிசுத்த ஆவி என்றும் அக்கினியை அவிக்கக்கூடும். அது தேவனுடைய பரிசுத்த ஏழாம்நாள் ஆசரிப்பை நெகிழ்வதாக இருக்கவாம்; அது புகையிலை உபயோகமாகக்கூட இருக்கலாம்; உங்களைக் காட்டிக்கொடுத்து அல்லது காயப்படுத்தின ஒருவரை மன்னிக்க மறுப்பதாகவும் இருக்கலாம்; அது சன்மார்க்கமற்ற செயலாக இருக்கலாம்; அது தேவனுடைய தசமபாகத்தை நம்மிடமே வைத்துக்கொள்வதாக இருக்கலாம்; இதில் எந்தக் காரியத்திலாகிலும் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்கு செவிகொடுக்க மறுக்கும்போது, அது அவர்மேல் தண்ணீரை ஊற்றுவதற்குச் சமம். பரிசுத்த ஆவியை அவித்துப்போடாதிருங்கள். அதைக் காட்டிலும் கொடிய ஆபத்து வேறு எதுவும் இருக்கமுடியாது.
13. வேறு என்ன அதிர்ச்சிதரும், ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளக் கடினமான வாக்கியத்தை பவுல் தெசலோனிக்கேயர் விசுவாசிகளுக்கு எழுதினார்?
“கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்” – 2 தெசலோனிக்கேயர் 2:10-12.
பதில்: என்ன வல்லமையான அதிர்ச்சியளிக்கும் வார்த்தைகள்! சத்தியத்தையும், பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்கள் (ஆவியானவர் விட்டுச்சென்றபின்னர்), பொய்யை சத்தியமென்று நம்பத்தக்கதாக பலமான வஞ்சகத்திற்குள் போவார்கள் என்று தேவன் கூறுகிறார். பயங்கரமான காரியத்தைக் குறித்கு இது பேசுகிறது!
14. இப்படி கொடிய வஞ்சகத்தில் அகப்பட்ட சிலர் நியாயத்தீர்ப்பு நாளில் எப்படிப்பட்ட நெருக்கும் உனுபவத்தைச் சந்திப்பார்கள்?

“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” – மத்தேயு 7:22,23.
பதில்: “கர்த்தாவே! கர்த்தாவே!” என்று சொல்லுகிற அநேகர் பரலோகத்திற்கு வெளியே அடைக்கப்பட்டதினால் அதிர்ச்சியடைவார்கள். தாங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதாக முழுவதும் நம்பியிருப்பார்கள். பரிசுத்த ஆவியானவர் புதிய சத்திங்களையும் உணர்த்துதல்களையும் அவர்கள் வாழ்க்கையில் கொண்டுவந்த முக்கியமான நேரங்களை இயேசு அப்போது சந்தேகமின்றி அவர்களுக்கு நினைப்பூட்டுவார். அது தெள்ளத்தெளிவாகவும் சத்தியமாகவும் இருந்தது. அது அவர்களை அநேக இரவுகள் தூங்கவிடவில்லை. ஒரு தீர்மானத்தைக்குறித்த நெருக்கடியையும் போராட்டத்தையும் அது உள்ளடக்கியிருக்கிறது. அப்போது அவர்கள் இருதயம் எவ்விதம் கொளுந்துவிட்டு எரிந்தது! ஆனால் முடிவாக மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்! கூடவே மேற்படியான பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தையும் மறுத்துவிட்டார்கள்! பின்னர் இரட்சிப்பை இழந்துபோன நேரத்தில், தங்களை இரட்சிக்கப்பட்டவர்களென்று நம்பக்கூடிய கொடிய வஞ்சகம் அவர்கள்மேல் வந்தது. இதைக் காட்டிலும் பெரிய ஆபத்தை ஒரு நபர் சந்திக்கக்கூடுமா?

15. இரட்சிப்பை இழந்திருக்கும்போது இரட்சிக்கப் பட்டிருக்கிறோம் என்று நம்பியிருப்பதை தவிர்க்க எப்படிப்பட்ட விசேஷ எச்சரிப்பை இயேசு நமக்குக் கொடுக்கிறார்?
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” – மத்தேயு 7:21.
பதில்: இரட்சிக்கப்பட்டோம் என்கிற உணர்த்துதலைக் கொண்டிருக்கிறவர்கள் அல்ல, தமது சித்தத்தைச் செய்கிறவர்களே தமது இராஜ்யத்திற்குள் நுழைவார்கள் என்று இயேசு பவித்திரமாக எச்சரித்தார். இரட்சிப்பைக்குறித்த நிச்சயத்தை நாம் அனைவரும் வாஞ்சிக்கிறோம். இது தேவனிடமிருந்து வரும் உந்துதலே. எனினும் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றத்தையும் வெளிக்கொண்டுவராது, பாவத்திலே தொடரும்போதும் இரட்சிப்பைக்குறித்து கொடுக்கப்படுகிற பொய் வாக்குறுதிகள் இன்றைக்கு கிறிஸ்தவ உலகத்தை அடித்துச் சென்றுகொண்டிருக்கிறது.
போதகர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்
இரட்சிக்கப்பட்டோம் என்கிற உணர்வைக் கொண்டிருந்து, அதே சமயம் இயேசுகிறிஸ்துவினால் மெய்யாக மாற்றப்படாத மக்களால் அநேக ஆலய கட்டடங்கள் நிரம்பி இருக்கிறதைக்குறித்து முன்னணியிலிருக்கும் அநேக சபைத் தலைவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். அவர்களுங்கூட அவருக்குக் கீழப்படிவதில்லை.
இயேசு தெளிவாகப் பேசுகிறார்
தமது பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களுக்கே மெய்யான நிச்சயம் இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இயேசுவை நான் என் வாழ்க்கையின் அதிபதியும் ஆண்டவருமாக்கும்போது என்னுடைய வாழ்க்கைமுறை முற்றிலும் மாறுகிறது. நான் முழுமையான புதுசிருஷ்டி ஆகிறேன். (2 கொரிந்தியர் 5:17). நான் மகிழ்ச்சியோடு அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய சித்தத்தின்படி செய்து (யோவான் 14:15), அவர் நடத்துமிடத்தில் சந்தோஷமாக அவரைப் பின்செல்லுகிறேன் (1 பேதுரு 2:21). அற்புதமான அவருடைய உயிர்த்தெழுப்பும் வல்லமை (பிலிப்பியர் 3:10) என்னை அவருடைய சாயலுக்கு மாற்றுகிறது ( 2 கொரிந்தியர் 3:18). அவருடைய மகிமையான சமாதானம் என் வாழ்க்கையில் பாய்ந்தோடுகிறது (யோவான் 14:27). இயேசு தமது ஆவியானவரின் மூலமாக நம்மில் வாசம் செய்யும்பொழுது (எபேசியர் 3:16,17). “எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலப்பியர் 4:13); “கூடாத காரியம் ஒன்றுமிராது” – மத்தேயு 17:20).
அற்புதமான மெய்வாக்குறுதி போலிவாக்குறுதிக்கு எதிரானது
இரட்சகர் நடத்தும் வழியில் செல்லும்போது, எவரும் அவருடைய கையிலிருந்து என்னைப் பறித்துக்கொள்ளக்கூடாதென்றும் (யோவான் 10:28), எனக்காக ஒரு ஜீவகிரீடம் காத்திருக்கிறதென்றும் (வெளிப்படுத்தல் 2:10) அவர் வாக்குக்கொடுக்கிறார்! என்ன ஆச்சரியமான மெய்யான பாதுகாப்பை இயேசு தமது பின்னடியார்களுக்குக் கொடுக்கிறார்! வேறு எப்படிப்பட்ட நிபந்தனைகளின்கீழும் கொடுக்கப்படுகிற வாக்குறுதிகள் போலியானவைகளே. இரட்சிக்கப்பட்டோம் என்ற எண்ணத்தோடு இரட்சிப்பை இழந்து நிற்பவர்கள் பரலோக நியாயஸ்தலத்தில் ஆக்கினைக்கு அவர்களை வழிநடத்தும்.
16. தேவனை தங்களுடைய வாழ்க்கையின் ஆண்டவராக முடிசூட்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கொடுக்கும் ஆச்சரியமான வாக்குறுதி என்ன?

“உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவார் …” “ஏனெனில் தேவனே தம்முடைய சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” – பிலிப்பியர் 1:6; 2:13.
பதில்: தேவனுக்கு தோத்திரம். இயேசுவை தங்களுடைய வாழ்க்கையின் ஆண்டவரும் அதிபதியுமாக்குகிறவர்களுக்கு அவருடைய நித்திய இராஜ்யத்திற்குள் பத்திரமாகக் கொண்டுசெல்லப்படுவார்கள் என்கிற வாக்குப்பண்ணப்பட்ட அற்புதங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குமேல் வேறு எதுவும் மேன்மையானதாயிருக்கமுடியாது.

17. இன்னும் என்ன கூடுதலான மகிமையின் வாக்குதத்தங்களை இயேசு நம் அனைவருக்கும் கொடுக்கிறார்?
“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” – வெளிப்படுத்தல் 3:20.
பதில்: நாம் இயேசுவுக்கு கதவை திறக்கும்போது அவர் நம் வாழ்க்கையில் நுழைவதாக வாக்குக் கொடுக்கிறார். இயேசுவானவரே தமது பரிசுத்த ஆவியானவரின் வழியாக உங்களுடைய மற்றும் என்னுடைய இருதயக்கதவை தட்டி நிற்கிறார். இராஜாதி இராஜவான அவர், உலகத்தின் இரட்சகராகிய அவர், அண்ட சராசரத்தையும் பராமரிப்பதிலிருந்து நேரம் ஒதுக்கி, சிநேக வார்த்தைகளோடும் ஆலோசனைகளோடும் நம்மை சந்திக்கிறார். இயேசுவுடன் அன்பான நிலையான இனிமையான நெருக்கமான உறவை உண்டாக்குவதில் விருப்பம் காண்பிக்காத அளவு நாம் எப்போதும் பிற வேலைகளில் ஈடுபட்டிருப்போமென்றால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமும் நம்பக் கடினமான பேரழிவுமாயிருக்கிறது! இயேசுவின் நெருங்கிய நண்பர்களுக்கு நியாயத்தீர்ப்புநாளில் நிராகரிக்கப்படுவோம் என்கிற ஆபத்து இருக்காது. இயேசுதாமே தனிப்பட்டவித்த்தில் அவர்களை தமது இராஜ்யத்திற்குள் வரவேற்பார் (மத்தேயு 25:34).
18. இயேசு உங்கள் இருதயக் கதவை தட்டும்போது அவருக்குத் திறந்து, அவர் நடத்தும் இடம் எதுவாயினும் அவரைப் பின்பற்ற நீங்கள் தீர்மானிக்கிறீர்களா?
பதில்: ________________________________

பிரிவுச் செய்தி
27 பாடங்கள் கொண்ட வேதபாட வரிசையில் இது கடைசி பாடம். நீங்கள் இயேசுவின் சமூகத்திற்குள் நடத்தப்பட்டு அவரோடுகூட ஒரு அற்புதமான புதிய உறவை வளர்த்திருப்பீர்கள் என்றே எதிர்பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஆண்டவரோடு நெருக்கமாக நடந்து, அவர் வரும்போது அவருயை பரிசுத்தமான இராஜ்யத்திற்குள் மறுரூபமடைந்து சேருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உலகத்தில் நாம் சந்திக்காவிடில், அந்த மாபெரும் நாளில் மேகங்கள்மேல் சந்திக்கலாம். பரலோகத்தை நோக்கிய உங்கள் பயணத்தில் மேலும் உதவிகள் தேவைப்படுமானால், எங்களை அழையுங்கள் அல்லது எங்களுக்கு எழுதுங்கள்.
கேள்விகள்
1. தேவன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார் என்று வேதாகமம் சொல்லுகிறது (யாத்திராகமம் 9:12). இது நியாயமாகத் தோன்றவில்லையே. அப்படியானால் இதன் பொருள் என்ன?
பதில்: சூரியன் எவ்விதம் அனைத்தின்மேலும் பிரகாசிக்கிறதோ, அவ்விதம் பரிசுத்த ஆவியானவர் அனைத்து மக்களிடமும் மன்றாடுகிறார் (யோவான் 1:9). ஒரேசூரியன்தான் களிமண்ணை இருகவைத்து, மெழுகை உருக்குகிறது. அவ்வாறே பரிசுத்த ஆவியானவர் தமது மன்றாட்டுக்கு நாம் கொடுக்கும் பதிலைப் பொறுத்து வெவ்வேறுவிளைவுகளை நம் இருதயத்தில் ஏற்படுத்துகிறார். நான் பதில் கொடுப்பேனானால், என்னுடைய இருதயம் மென்மையடையும்; நான் முற்றிலும் மனம் மாறுவேன் (1 சாமுவேல் 10:6). ஆவியானவருக்கு எதிர்த்து நிற்கும்போது என்னுடைய இருதயம் கடினமடையும். (சகரியா 7:12).
பார்வோனின் பதில்
பரிசுத்த ஆவியானவரை எதிர்த்ததால் பார்வோன்தான் உண்மையில் தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான் (யாத்திரகாமம் 8:15,32; 9:34). பரிசுத்த ஆவியானவர் அவனிடம் மன்றாடிக்கொண்டிருந்தபடியால் தேவன் அவன் இருதயத்தை கடினப்படுத்தினார் என்றும் வேதாகமம் சொல்லுகிறது. பார்வோன் தொடர்ந்து அவரை எதிர்த்துக் கொண்டிருந்ததினால், சூரியன் களிமண்ணை இருக்கியதைப்போல அவனுடைய இருதம் கடினமடைந்தது. அவன் செவிகொடுத்திருந்தால் சூரியனால் மெழுகு மென்மையாவதைப்போல அவனுடைய இருதயமும் மென்மையாகியிருந்திருக்கும்.
யூதாசும் பேதுருவும்
இயேசவின் அப்போஸ்தலரான பேதுருவும் யூதாசும் இதே கொள்கையை விளக்குகிறார்கள். இருவரும் வேதனையளிக்கும் பாவத்தை செய்தனர். ஒருவன் இயேசுவை காட்டிக்கொடுத்தான்; மற்றவன் அவரை மறுதலித்தான். இதில் எது மோசமான பாவம்? யாரால் அதைச் சொல்லக்கூடும்? அதே அனலூட்டும் பரிசுத்த ஆவியானவர் இருவரிடமும் மன்றாடினார். யூதாஸ் தன்னை அடைத்துக்கொண்டான்; அவனுடைய இருதயம் கல்லாகியது. பேதுருவோ ஆவியானவரை வரவேற்றான்; அவனுடைய இருதயம் உருகியது. அவன் மெய்யாகவே மனந்திரும்பி, பின்னர் அப்போஸ்தலர் சபையின் மிகப்பெரிய போதகனானான். பரிசுத்த ஆவியானவருடைய மான்றாட்டுகளை கேட்டு கீழ்ப்படிவதற்கெதிராக நம்முடைய இருதயத்தை கடினப்படுத்துகிறதைக்குறித்த தேவனுடைய பவித்திரமான எச்சரிப்பை சகரியா 7:12,13ல் வாசிக்கவும்.
2. ஆண்டவரிடமிருந்து அடையாளங்கள் கேட்பதைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: புதிய ஏற்பாட்டில் இயேசு அதற்கு எதிராக தீர்மானமாகப் பேசினார். “இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்” (மத்தேயு 12:39) என்றார். அப்போது, அவர்கள் பெற்றிருந்த பழைய ஏற்பாட்டின் ஆதாரங்களோடு அவர் சத்தியத்தைப் போதித்தார். அவர்கள் அவர் சொன்னதை மிக நன்றாக புரிந்துகொண்டார்கள்; அவருடைய அற்புதங்களையும் கண்டார்கள்; எனினும் அவரை நிராகரித்தார்கள். பின்னர் அவர்: “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்” (லூக்கா 16:31 என்றார். வேதவாக்கியங்களோடு அனைத்தையும் சோதித்துப் பார்க்கும்படி ஏசாயா 8:19,20 கூறுகிறது. இயேசுவின் சித்தத்தைச் செய்து அவர் நடத்துமிடத்தில் அவர்பின்செல்ல நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, பொய்யிலிருந்து சத்தியத்தை அடையாளம்காண நமக்கு உதவுவதாக நமக்கு வாக்குக்கொடுக்கிறார் (யோவான் 7:17).
3. ஜெயம் உபயோகப்படாத ஏதாவது காலம் இருக்கிறதா?
பதில்: ஆமாம், இருக்கிறது. ஒரு நலர் அறிந்தே கீழப்படியாதிருந்து (சங்கீதம் 66:18), தன்னை ஆசிர்வதிக்கும்படி தேவனிடம் கூறும்போது (மாறும் எண்ணம் இல்லாதிருந்தால்) அவருயை ஜெபம் மதிப்பற்றதாகிறது. அது தமக்கு அருவருப்பு என்று தேவன் கூறுகிறார் (நீதிமொழிகள் 28:9).
4. நான் பரிசுத்த ஆவியானவரை நிராகரித்திருக்கிறேன்; எனவே மன்னிக்கப்படமுடியாது என்று ஆழமாக வருத்தப்படுகிறேன். எனக்கு உங்களால் உதவமுடியுமா?
பதில்: நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நிராகரிக்கவில்லை. ஏனெனில், உணர்த்தப்படுகிறீர்கள்! பரிசுத்த ஆவியானவர்மாத்திரமே உணர்த்துதலைக் கொண்டுவருகிறார் (யோவான் 16:8-13) அவர் உங்களை விட்டுச்சென்றிருப்பாரெனில் உங்கள் இருதயத்தில் எந்த உணர்த்துதலையும் பெறமாட்டீர்கள். மகிழ்ந்து தேவனைத் துதியுங்கள். உங்களுடைய வாழ்க்கையை அவருக்குக் கொடுங்கள். பின்னர் ஜெபத்தோடு அவருக்குக் கீழ்ப்படிந்து அவரை பின்பற்றுங்கள். அவர் உங்களுக்கு வெற்றிகொடுத்து (1 கொரிந்தியர் 15:57), உங்களை உயர்த்தி (பிலிப்பியர் 2:13) தமது இரண்டாம் வருகைவரையிலும் காத்துக்கொள்வார் (பிலிப்பியர் 1:6).
5. விதைக்கிறவனின் உவமையில் (லூக்கா 8:5-15), வழியருகே விழுந்து பறவைகளால் பட்சித்துப்போடப்பட்ட விதைகள் எதைக் குறிக்கின்றன?
பதில: “விதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தை கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான்” (லூக்கா 8:11,12) என்று வேதாகமம் சொல்லுகிறது. வேதவாக்கியங்களிலிருந்து வரும் புதிய வெளிச்சத்தைக்குறித்து நாம் என்ன செய்யவேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் உணர்த்துகிறதை புரிந்துகொள்ளும்போது, உடனே செயல்படவேண்டும் என்று இயேசு கூறுகிறார். இல்லாவிடில் பிசாசானவன் நம்முடைய மனங்களிலிருந்து அந்த சத்தியத்தை அகற்றும் சந்தர்ப்பத்தைப் பெறுவான்.
6. மத்தேயு 7:21-23ல் வரும் மக்களைப் பார்த்து: ”உங்களை அறியேன்” என்று கர்த்தரால் எப்படிச் சொல்லமுடியும்? தேவன் அனைவரையும் அனைத்தையும் அறிவார் என்று நான் நினைத்திருந்தேன்!
பதில்: தனிப்பட்ட நண்பராக ஒருவரை அறிந்திருப்பதைக்குறித்து இங்கே தேவன் கூறுகிறார். அனுதினமும் அவருடன் தொடர்புகொண்டு, மகிழ்வோடு அவரைப் பின்பற்றி, உலக நண்பரிடம் பகிர்ந்துகொள்வதைப்போன்று மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் அவரோடு பகிர்ந்துகொள்ளும்போது, அவரை ஒரு நண்பராக நாம் அறிந்திருப்போம். இயேசுதாமும் யோவான் 15:14ல் “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” என்று கூறுகிறார். மத்தேயு 7ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிற மக்கள் அவருடைய பரிசுத்த ஆவியானவரை நிராகரித்திருக்கிறார்கள். பாவத்துடனேயே இரட்சிக்கப்படும் கொள்கை அல்லது கிரியையினால் இரட்சிக்கப்படும் கொள்கையை அவர்கள் தழுவியிருந்தார்கள். இதில் எதற்கும் இயேசு அவசியமில்லை. அவர்கள் சுயநீதியுள்ள மக்கள்! இயேசுவோடு அறிமுகமாவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே அவர்களோடு பழகவில்லை என்று, அல்லது அவர்களை சொந்த நண்பர்களாக அறிந்திருக்கவில்லை என்று தேவன் விளக்குகிறார்.
7. எபேசியர் 4:30ஐ உங்களால் விளக்கமுடியுமா?
பதில்: இந்த வசனம், “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என்று சொல்லுகிறது. பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர் என்று பவுலார் இங்கே தெளிவாகக் கூறுகிறார். ஏனெனில் நபர்களால் மாத்திரமே துக்கப்படமுடியும். கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவருடைய அன்பின் மன்றாட்டுகளை நிராகரிப்பதினால் இன்னும் அதிகமாக அவரை வேதனைப்படுத்தமுடியும் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார். ஒருவரையொருவர் நேசிக்கும் நாட்களில், ஒருவர் மற்றவரை தொடர்ந்து நிராகரிப்பதினால் அந்த உறவு என்றைக்குமாக முடிந்துபோவதைப்போல, பரிசுத்த ஆவியானவருடனான நம் உறவும், அவருடைய அன்பின் மன்றாட்டுகளை நாம் தொடர்ச்சியாக நிராகரிப்பதினால் நிரந்தரமாக முடிவடையக்கூடும்.
கேள்விகள்
1. எந்த பாவமும் தேவன் மன்னிக்க கூடாத பாவமாகலாம். (1)
_____ ஆம்.
_____ இல்லை.
2. பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவம்: (1)
_____ கொலை.
_____ தேவனை சபிப்பது.
_____ அவரை நிராகரிப்பது.
3. சிலவேளைகளில் பரிசுத்த ஆவியானவர் பாவியிடமிருந்து வருத்தத்தோடு விலகிக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனெனில்: (1)
_____ செய்யவேண்டிய மற்ற வேலைகள் அவருக்கு இருக்கிறது.
_____ பாவியின் தவறான நடக்கையைக் குறித்து அவருக்கு நீதியான கோபம் ஏற்படுகிறது.
_____ தேவன் வேறு ஏதோ செய்யும்படி அவரிடம் கூறுகிறார்.
______ பாவி அவருடைய மன்றாட்டுதலுக்கு செவிடனாகிறான்.
4. தவறென்று அறிந்தும் பாவத்தில் தொடரும்போது பரிசுத்த ஆவியானவர் அவிக்கப்படுகிறார்: (1)
_____ ஆம்.
_____ இல்லை.
5. எப்படிப்பட்ட பாவமும் தூஷணமும் எப்போது மன்னிக்கப்படும்? (1)
_____ நான் அதைக்குறித்து போதுமான அளவு ஜெபிக்கும்போது.
_____ நான் அதை உண்மையாக இயேசுவிடம் அறிக்கைசெய்யும்போது.
_____ நான் அதிக நாட்கள் உபவாசமிருக்கும்போது.
_____ நான் அதிகமாக சாட்சிபகரும்போது.
6. பரிசுத்த ஆவியானவர் இல்லாதபோது எவரும் ஒருபோதும் பாவத்தைக்குறித்து வருத்தப்பட்டு மனந்திரும்பமாட்டார். (1)
_____ ஆம்.
_____ இல்லை.
7. இரட்சிப்பைக்குறித்த வாக்குறுதி சில வேளைகளில் போலியாக இருக்கமுடியும். இரட்சிக்கப்பட்ட நிச்சயத்தைக்பெற்றுள்ள சில மக்கள் உண்மையில் இரட்சிப்பை இழந்தவர்கள்: (1)
_____ ஆம்.
_____ இல்லை.
8. யோவான் 16:8,13ன்படி பரிசுத்த ஆவியானவரின் வேலைகள்: (2)
_____ எப்படிப் பாடவேண்டும் என்று எனக்குப் போதிப்பது.
_____ தீர்க்கதரிசன வரத்தை எனக்குக் கொடுப்பது.
_____ என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது.
_____ பாவத்தைக்குறித்து என்னை உணர்த்துவது.
_____ சத்தியத்திற்குள் என்னை நடத்துவது.
9. பரிசுத்த ஆவியானவர் புதிய சத்தியத்தை எனக்கு உணர்த்தி, என் வாழ்க்கையிலிருக்கும் பாவத்தைச் சுட்டிக்காட்டும்போது நான்: (1)
_____ அதைக்குறித்து போதகரிடம் கேட்கவேண்டும்.
_____ மனம்சார்ந்த சக்தி கொண்டவர்களைபோய் பார்க்கவேண்டும்.
_____ தேவனிடம் ஒரு அடையாளத்தைக் கேட்கவேண்டும்.
_____ தயக்கமின்றி ஆவியானவரின் நடத்துதலைப் பின்பற்றவேண்டும்.
_____ காசை சுண்டிவிடவேண்டும்.
10. தம்மிடமிருந்து பரிசுத்த ஆவியானவரை எடுத்துக்கொள்ளக்கூடாதென்று தாவீது ஏன் தேவனிடம் மன்றாடினான்? (1)
_____ சுரமண்டலம் வாசிக்க அவனுக்கு பரிகத்த ஆவியானவர்தான் உதவினார்.
_____ அவர் தன்னைக் கொன்றுவிடுவார் என்று அவன் பயந்தான்.
_____ அவர் தன்னைவிட்டு எடுபடுவாரானால் தான் இரட்சிப்பை இழந்தவன் என்று அவன் அறிந்திருந்தான்.
11. மத்தேயு 7:21-23ன்படி அற்புதங்கள் செய்து, பிசாசுகளைத் துரத்தி, இயேசுவின் நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்து,அவரை ஆண்டவராக உரிமை பாராட்டியிருப்பது நியாயத்தீர்ப்புநாளில் போதுமானதாக இருக்காது. வேறு எது கண்டிப்பாக அவசியம் என்று இயேசு கூறுகிறார்? (1)
_____ அதிக சாட்சி பகருவது.
_____ பொது இடங்களில் பரவேளைகள் ஜெபிப்பது.
_____ பல வேளைகளில் உபவாசம் இருப்பது.
_____ ஆலயத்திற்கு தவறாது செல்வது.
_____ பரலோகப் பிதாவின் சித்தத்தைச் செய்வது.
12. 2 தெசலோனிக்கேயர் 2:10-12ன்படி சத்தியத்தைப் பெற மறுப்பவருக்கு என்ன சம்பவிக்கும்? (1)
_____ எப்படியும் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.
_____ மீண்டும் திருப்பிப் பார்க்கும்படி தேவன் அவர்களைக் கேட்பார்.
_____ அசத்தியத்தை சத்தியமென்று விசுவாசிக்கும்படி தேவன் கொடிய வஞ்சகத்தை அவர்களுக்கு அனுப்புவார்.
13. நியாயத்தீர்ப்பில் ஆண்டவர் “உங்களை அறியேன்” என்று சொல்லும்போது குறிப்பிடுவது: (1)
_____ அந்த நபர் யாரென்றே தெரியாது என்கிறார்.
_____ முகம் அடையாளம் தெரிகிறது. அவர்கள் பெயரை மறந்துவிட்டார்.
_____ ஒரு தனிப்பட்ட நபராக அவருடன் பழக அந்த நபர் ஒருபோதும் நேரம் செலவழிக்கவில்லை.
14. அடையாளங்கள் கேட்பதற்கு எதிராக இயேசு புதிய ஏற்பாட்டில் போதித்தார்: (1)
_____ ஆம்.
_____ இல்லை
15. பரிசுத்த ஆவியானவர் வழியாக இயேசுவானவர் உங்களிடம் பேசும்போது எப்போதும் அவரை கவனித்துக்கேட்க விருப்பமாயிருக்கிறீர்களா?
_____ ஆம்.
_____ இல்லை.