மகிழ்ச்சியான திருமணத்திற்கான திறவுகோல்கள்!

வேதபாடங்கள்   5

ஏறக்குறைய பாதி திருமணங்கள், தங்களுடைய கசப்பான துணைகளையும் குழம்பியிருக்கிற இளம் குழந்தைகளையும் கைவிடுகிற விவாகரத்தில் முடிவடைகின்றன என்கிறதை நீங்கள் கேட்டிருக்கலாம்.  இது உங்களுக்கு சம்பவிக்க அனுமதிக்காதீர்கள்.

உங்கள் திருமணம் கடினமான காலத்திலிருந்தாலும் அல்லது நீங்கள் ஆசீர்வாதத்தை உணர்ந்துகொண்டிருந்தாலும், அல்லது இன்னமும் திருமணம் ஆகாமல் அதைக்குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தாலும்கூட உங்கள் திருமணத்தை நிலைநிறுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட உண்மையான உதவிகள் சில இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இவைகள், திருமணத்தை ஸ்தாபித்து அதை உண்டாக்கின தேவனிடமிருந்தே வந்திருக்கின்றன.  நீங்கள் ஒருவேளை மற்ற அனைத்து உதவிகளையும் உபயோகித்திருந்தால்கூட, ஏன் தேவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது?  இந்தக் கையேட்டில் கொடுத்திருக்கிறவைகளைப் பின்பற்றினால் உங்கள் திருமணத்தை காப்பாற்றமுடியும்.

தேவனுடைய  மாபெரும் புத்தகத்திலிருந்து பதினேழு கட்டளைகள்

1. உங்களுடைய சொந்த வீட்டை ஏற்படுத்துங்கள்.

“இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” – ஆதியாகமம் 2:24.

கருத்துரை: தேவனுடைய சட்டம் குறிப்பானது.  திருமணமான ஒரு தம்பதி தங்களுடைய தகப்பனையும் தாயையும் விட்டுவந்து, வருமானத்திற்கேற்ப தங்கள் சொந்த இல்லத்தை அமைக்கவேண்டும்.  இப்படிப்பட்ட கொள்கைகளைக்குறித்து கணவனும் மனைவியும் இணைந்து தீர்மானிக்கவேண்டும்.  பின்னர் அவள் அவளுடைய உறவினர்களுக்கும் அவன் அவனுடைய உறவினர்களுக்கும் இதை தெரிவிக்கவேண்டும்.  யார் எதிர்ப்பினும் அவர்கள் உறுதியாக இருக்கவேண்டும்.  இந்த சட்டம் கவனமாக பின்பற்றப் படுமானால், ஆயிரக்கணக்கான திருமண முறிவுகள் தடுக்கப்படலாம்.

2. உங்கள் அன்பான உறவைத் தொடருங்கள்.

“எல்லாவற்றிற்கும் மேலான ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்” – 1 பேதுரு 4:8;

“அவள் புருஷனும்…. அவளைப் புகழுகிறான்” – நீதிமொழிகள் 31:28;

“விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று…. கவலைப்படுகிறாள்” – 1 கொரிந்தியர் 7:34;

“சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” – ரோமர் 12:10.

கருத்துரை:  உங்கள் திருமண வாழ்க்கையில் உறவின் மரியாதைகளைத் தொடருங்கள். வெற்றிகரமான திருமணங்கள் அப்படியே உண்டாகிவிடுவதில்லை; மாறாக, வளர்க்கப்படுகின்றன.

  ஒருவரையொவர் தனக்கு சாதகமானவராகக் காணக்கூடாது; சலிப்பு திருமணத்தை அழித்துவிடும்.  ஒருவருக்கொருவர் நித்தமும் அன்பு காண்பித்து அதை வளருங்கள்; இல்லாதபட்சத்தில் அன்பு இறந்துவிடும்.  உங்களிடையே இடைவெளி அதிகரிக்கும்.  தங்களுக்கென்று தேடுவதால் அன்பும் மகிழ்ச்சியும் வருவதில்லை.

 மாறாக, மற்றவர்களுக்குக் கொடுப்பதனால் வருகிறது.  எனவே  இணைந்து செல்லவேண்டுமெனில் கூடுமானவரையும் இணைந்தே காரியங்களைச் செய்யுங்கள்.  உற்சாகமாக ஒருவரையொருவர் வாழ்த்தக் கற்றுக்கொள்ளுங்கள்.  ஒன்றாக ஒய்வெடுத்து, கடைகளுக்குச் சென்று, இடங்களை சுற்றிப்பார்த்து, உண்டு மகிழுங்கள்.  சிறிய சிறிய மரியாதைகளையும், ஊக்கப்படுத்துதலையும், அன்பான செயல்களையும் தவிர்க்காதிருங்கள்.  சிறு பரிசுகள் அல்லது எதிர்பாராத உதவிகள்மூலம் ஒலுவரையொருவர் ஆச்சரியப்படுத்துங்கள்.  துணை காண்பிப்பதைவிட அதிகமான அன்புகாண்பிக்க இருவரும் முயலுங்கள்.  கொடுப்பதைக்காட்டிலும் அதிகம் எதிர்பார்க்காதீர்கள்.  திருமணத்தை அழிக்கும் மிகப் பெரிய கருவி விவாகரத்து அல்ல மாறாக அன்பில்லாமையே.  சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள். அன்பு எப்போதும் வெற்றியடையும்.

3.தேவனே உங்களை திருமணத்தில் இணைத்திருக்கிறார் என்பதை நினைவுகூருங்கள்.

“இதினிமித்தம் பிருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;…

இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” – மத்தேயு 19:5,6.

கருத்துரை:  உங்கள் இல்லத்திலிருந்து அன்பு ஏறக்குறைய மறைந்துவிட்டதா?  (குடும்பத்தை முறிப்பதில் பேர்பெற்றவனான) பிசாசே இதற்குக் காரணம்.  தேவனே உங்களை திருமணத்தில் இணைத்திருக்கிறார் என்பதை மறக்காதீர்கள்.  நீங்கள் இணைந்து மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று அவர் எண்ணங்கொண்டிருக்கிறார்.  அவருடைய தெய்வீக சட்டங்களுக்குக் கீழ்ப்படியும்போது அவர் மகிழ்ச்சியையும் அன்பையும் உங்கள் வாழ்க்கையில் கொண்டுவருவார்.  “தேவனாலே எல்லாம் கூடும்” – மத்தேயு 19:26.  விரக்தியடைய வேண்டாம்.  மிக இழிவான காட்டுமிராண்டிகள் மேல் ஒரு மேன்மையான அன்பை ஒரு மிஷனரியின் இருதயத்தில் வைக்கும் ஆண்டவரால், நீங்கள் அனுமதிக்கும்போது உங்கள் இருவரின் இருதயத்திற்குள்ளும்கூட அன்பை வைக்கமுடியும்.

4. சிந்தைகளைக் கட்டுப்படுத்துங்கள்.  உங்கள் உணர்வுகளே உங்களுக்கு கண்ணியாக விடாதிருங்கள்.

“அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” – நீதி. 23:7; “பிறனுடைய மனைவியையும்,…. இச்சியாதிருப்பாயாக” – யாத். 20:17;

“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” – நீதி. 4:23;

“கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவை…., நீதியுள்ளவை…., கற்புள்ளவை…, அன்புள்ளவை…., நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்” – பிலிப்பியர் 4:8.

கருத்துரை:  தவறானவிதங்களில் சிந்திப்பது உங்கள் திருமணத்தை அழிக்கும்.  “எங்களுடைய திருமணம் தவறான ஒன்று.”  “அவள் என்னைப் புரிந்துகொள்ளுவதில்லை,” “இதற்குமேல் என்னால் சகிக்கமுடியாது,” தேவைப்பட்டால் எப்போதுவேண்டுமானாலும் விவாகரத்து பெறலாம்,” “நான் என் தாயிடம் போகிறேன்,” “அவன் வேறு ஒருத்தியைப் பார்த்து புன்னகைத்தான்” என்பதுபோன்ற எண்ணங்களால் பிசாசு உங்களை பிடிக்கப்பார்ப்பான்.  இப்படிப்பட்ட எண்ணங்களையோ அல்லது உங்களுடைய திருமணம் சரிசெய்யமுடியாத ஒன்று என்றோ சிந்திக்காதீர்கள்.  ஏனெனில் உங்கள் நினைவுகளும் உணர்வுகளும் உங்கள் செய்கைகளை கட்டுப்படுத்துகின்றன.  அசுத்தத்தையோ அல்லது உண்மையற்றிருப்பதையோ ஆலோசனைகூறுகிற எதையும் (எந்த நபரையும்) பார்ப்பதையோ, சொல்வதையோ, படிப்பதையோ அல்லது கேட்பதையோ தவிர்த்திடுங்கள்.  கட்டுப்படுத்தப்படாத சிந்தைகள் மலைசரிவிலிருக்கும் வாகனத்தைப்போன்றது.  எதுவானாலும் நடக்கலாம்.  விளைவு எப்படியும் அழிவிற்கேதுவானதே.

5. ஒருவர்மேலொருவர் கொண்டிருக்கும் கோபத்தை தீர்க்காது ஒருபோதும் படுக்கைக்குக் செல்லாதீர்கள்.

“சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” – எபே. 4:26; “உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு” – யாக்கோபு – 5:16; “பின்னானவைகளை மறந்து” – பிலிப்பியர் – 3:13; “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” – எபே. 4:32.

கருத்துரை:  காயங்களும் வருத்தங்களும் (சிறியதோ அல்லது பெரியதோ) ஏற்படும்போது அவைகளால் வரும் கோபத்தையும் மனஇளைப்பையும் தொடர்ந்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது.  உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், சிறிய பிரச்சனைகள்கூட உங்கள் மனதில் பதிந்து, மனநிலையை மாற்றி, உங்கள் முழு வாழ்க்கையின் கொள்கைகளையும் தவறாக பாதிக்கும்.  எனவேதான் இரவில் படுப்பதற்குமுன்பாக உங்கள் கோபம் தணியட்டும் என்று தேவன் கூறுகிறார்.  மன்னிப்பதற்கு மிகப் பெரிய மனதோடிருங்கள்.  “என்னை மன்னித்துவிடுங்கள்” என்று முழுமனதோடு கூறுங்கள்.  எவரும் பூரணமானவர் கிடையாது.  நீங்கள் இருவரும் அதே குழுவில்தான் இருக்கிறீர்கள்.  எனவே ஒரு தவறு செய்துவிடும்போது அதை ஒப்புக்கொள்ள தீவிரமாயிருங்கள்.  மேலும், இணங்குவது மிகவும் இனிமையான அனுபவம்.  அது, திருமண தம்பதிகளை நெருக்கமாக இணைக்க அசாதாரணமான வல்லமைகளைச் செயல்படுத்துகிறது.  தேவன் இவ்விதம் ஆலோசனை கூறுகிறார்!  இது மெய்யாலுமே வேலைசெய்யும்!

6. கிறிஸ்துவை உங்கள் இல்லத்தின் மையமாக வைத்திருங்கள்.

“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” – சங். 127:1;

“உன் வழிகளிலெல்லாம் அலரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” – நீதி. 3:6; “அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” – பிலிப்பியர் 4:7.

கருத்துரை: இதுதான் மாபெரும் சட்டம்.  இது மற்ற அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது.  கிறிஸ்துவை முதன்மைப்படுத்துங்கள்!  இல்லத்தின் மெய்யான மகிழ்ச்சிக்கான இரகசியம் இராஜ தந்திரத்திலோ, ஞானத்திலோ, பிரச்சனைகளை மேற்கொள்ள எடுக்கும் சோர்வற்ற  முயற்சிகளிலோ இல்லை.  மாறாக, கிறிஸ்துவோடு இணைந்திருப்பதில் இருக்கிறது.  கிறிஸ்துவின் அன்பினால் இணைந்த இருதயங்கள் ஒருபோதும் வெகுதூரம் பிரிந்து செல்லாது.  கிறிஸ்து இல்லத்தில் இருக்கும்போது, திருமணங்கள் வெற்றியுள்ளதாக இருக்கும்.  பகையினாலும் கசப்பினாலும் ஏமாற்றங்களினாலும் நிறைந்திருக்கிற திருமணங்களை சுவிசேஷம் மாத்திரமே குணப்படுத்தமுடியும்.  அன்பையும் மகிழ்ச்சியையும் திரும்பவும் அற்புதமாகக் கொண்டுவருவதன்மூலம், ஆயிரக்கணக்கான திருமண முறிவுகளை அது தடுக்கிறது.  நீங்கள் விரும்பினால் அது உங்கள் திருமணத்தையும் காப்பாற்றும்.

7. இணைந்து ஜெபியுங்கள்.

“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” – மத்தேயு 26:41;

“ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்” – யாக்கோபு 5:16;

“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும்… தேவனிடத்தில் கேட்கக்கடவன்” – யாக்கோபு 1:5.

கருத்துரை:  மற்றவருக்காக சத்தமாக ஜெபியுங்கள்.  நீங்கள் என்றுமே எதிர்பார்த்திராத நம்பமுடியாத அதிக வெற்றியை கொடுக்கும் ஆச்சரியமான சட்டம் இது.  முழங்கால்படியிட்டு, ஒருவர்மேலொருவர் வைக்கும் உண்மையான அன்பிற்காகவும், மன்னிப்பிற்காகவும், பெலத்திற்காகவும், பிரச்சனைகளை தீர்க்கும் ஞானத்திற்காகவும் ஜெபியுங்கள்.  பதில் தருவதாக அவர் தனிப்பட்டமுறையில் வாக்குக்கொடுக்கிறார். ஜெபிக்கும் நபர் தாமாகவே தன்னுடைய குறைகளை சரிசெய்துகொள்வதில்லை.  மாறாக, சரியானதைச் செய்ய விரும்பும் இருதயம் அவருக்கு இருக்கும்.  தேவனுடைய உதவிக்காக ஜெபிக்கும் எந்த குடும்பமும் ஒருபோதும் பிரிவதில்லை.

8. விவாகரத்து விடிவு இல்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.

“தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” – மத். 19:6;

“ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்” – மத். 19:9; “புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்” – ரோமர் 7:2.

கருத்துரை:  வேதாகமம் தெளிவாகப் பேசுகிறது.  திருமணபந்தம் கரைந்துபோகவோ அல்லது அழியவோகூடாது.  வேசித்தனத்தினிமித்தம் மாத்திரமே விவாகரத்து அனுமதிக்கப்பட்டிருக்கிறது,  அப்படிப்பட்ட நிலையிலும் அது கட்டாயமல்ல.  அனுமதிக்கப்பட்டிருக்கிறது அவ்வளவே!  சன்மார்க்கத் தவறு நடக்கும்போதுங்கூட விவாகரத்தைவிடவும் மன்னிப்பது எப்போதுமே மேன்மையானது.  திருமணம் வாழ்நாள் முழுமைக்குமானது. தேவன் ஏதேனில் முதலாவது திருமணத்தை நடத்தினபோது இவ்விதம் நியமித்தார்.

 விவாகரத்துதான் பிரச்சனைக்கு முடிவு என்கிறதுபோன்ற நினைவுகள் திருமணத்தை அழித்துவிடும்.  இயேசு அதை தள்ளுபடி செய்ததற்கு இது ஒரு காரணம்.  விவாகரத்து எப்போதுமே அழிவிற்கேதுவானது.  அநேக வேளைகளில் அது பிரச்சனைக்கான விடுதலையாக இருப்பதில்லை; மாறாக, இன்னமும் மகா பெரிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.  எனவே அதை எண்ணிப்பார்க்கவே கூடாது.  நொருங்கிப்போன, விரக்தியடைந்த, மகிழ்ச்சியிழந்த தாறுமாறான வாழ்க்கையே மிகஅதிகமான விவாகரத்துக்களைத் தொடருகிறது.  மேலும் வாழ்க்கையின் வெற்றியே இதன்மூலம் கவிழ்க்கப்படுகிறது.  மக்களின் தூய்மையையும் மகிழ்ச்சியையும் பாதுகாக்கவும், அவர்களுடைய சமூக தேவைகளைச் சந்திக்கவும், அவர்களுடைய சரீர, மன, சன்மார்க்க இயல்புகளை உயர்த்தவுமே தேவன் திருமணத்தை நியமித்தார்.  மனிதர்கள் தங்கள்மேல் நேர்ந்துகொள்ளுகிற கடமைகளுள், தலையாய பவித்திரமும் உடைக்கக்கூடாத பிணைப்பும் கொண்டதாக திருமணத்தின் பொருத்தனைகள் இருக்கின்றன.  அவைகளை இலகுவாக அப்புறம் தள்ளுவது, தேவனுடைய விருப்பத்திலிருந்தும் ஆசீர்வாதத்திலிருந்தும் ஒருவரை அப்புறப்படுத்துவதில் முடியும்.

9. குடும்ப வட்டத்தை நெருக்கமாக மூடிவையுங்கள்.

“விபசாரம் செய்யாதிருப்பாயாக” – யாத். 20:14; ”அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்;…. அவள் உயிரோடிருக்கிற நௌல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்” – நீதி. 31:11,12;

“கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே” – மல். 2:14;

“உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும்…. விலக்கிக்காக்கும்.  உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே…. தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?   பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும் ஆக்கினைக்குத் தப்பான்” – நீதி. 6:24-29.

கருத்துரை:  குடும்ப சம்பவங்கள் எவரோடும்-பெற்றோரோடு கூடவும் பகிர்ந்துகொள்ளப்படக்கூடாது.  தேவன் கொடுத்திருக்கிற இந்தச் சட்டத்தை மீறுவது மிகப்பெரிய பாவமும் துக்கமானதும்கூட.  மூன்றாவது நபர் குடும்ப குற்றச்சாட்டுகளைக் கேட்பதும் அதற்காகப் பரிதாபப்படுவதும் கணவன் மற்றும் மனைவியின் இருதயங்களைக் பிரிக்க சாத்தான் உபயோகிக்கும் கருவி.  உங்கள் வீட்டுப் பிரச்சனையை தனிமையாக தீர்த்திடுங்கள். (உங்கள் போதகர் அல்லது திருமண ஆலோசகர் தவிர) வேறு எவரும் இதில் ஈடுபடுத்தப்படக்கூடாது.  எப்போதும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள்.  மற்றவரிடமிருந்து எதையும் மறைக்காதீர்கள்.  உங்கள் துணையின் உணர்வுகளைக் காயப்படுத்தும் எந்த கேலியையும் பேசாதீர்கள்.  ஒருவர் மற்றவரை மிகத் தீவிரமாகத் தாங்கி, இடையே நுழைய முயலும் எவரையும் தீர்மானமாக அப்புறப்படுத்துங்கள்.  வேசித்தனத்தைப் பொருத்தமட்டில், (திருமண ஆலோசகர் என்ன சொன்னாலும்) அது எப்போதும் உங்களையும் அதில் ஈடுபட்டிருக்கிற அனைவரையும் பாதிக்கிறது.  நம்முடைய மனதையும் சரீரத்தையும், உணர்வுகளின் அமைப்பையும் (எது நமக்கு உதவும் அல்லது நம்மைக் காயப்படுத்தும் என்கிறதை) அறிந்திருக்கிற தேவன்:  “செய்யாதிருப்பாயாக” என்கிறார்.  அவர்:  “வேண்டாம்” என்று சொல்லும்போது அது நமக்கு நன்மையானதாக இருக்காது.  அவருடைய கட்டளைகளை நிராகரிப்பவர்கள் மிகப்பெரிய தண்டனையைப் பெறுவார்கள்.  எனவே தவறான நடத்தை துவங்குமாயின் அதை உடனடியாக முறித்துப் போடுங்கள்.  இல்லாதபோது அப்புறப்படுத்தக்கூடாத நிழல் உங்கள் வாழ்க்கையில் தங்கிவிடும்.

10. தேவன் அன்பை விவரிக்கிறார்.  அளந்து பார்க்கும் அளவானியாக அதை வையுங்கள்.

“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.  சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்” –  1 கொரிந்தியர் 13:4-7.

கருத்துரை: மேலேயுள்ள வேதவாக்கியத்தை மீண்டும் வாசியுங்கள்.  இதுதான் அன்பைக்குறித்த தேவனுடைய மெய்யான விளக்கம்.  நீங்கள் எவ்விதம் அன்பை அளக்கிறீர்கள்?  அன்பு உணர்ச்சிகளின் துடிப்பு அல்ல, மாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் செயலையும் உள்ளடக்குகிற பரிசுத்த கொள்கை!  உண்மையான அன்பு இருக்கும்போது உங்கள் திருமணம் முறியாது; அன்பு இல்லாதபோது அது வெற்றிபெறாது.

11. விமர்சனம் செய்வதும் தொல்லை கொடுப்பதும் அன்பை அழிக்கும்.

“புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்” – கொலோ. 3:19; “சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்” – நீதி. 21:19;

“அடைமழைநாளில் ஒளாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி” – நீதி. 27:15;

“நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?” – மத்தேயு 7:3;

“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது” – 1 கொரி. 13:4.

கருத்துரை: விமர்சிப்பதையும் தொல்லை கொடுப்பதையும் குற்றங்காணுவதையும் நிறுத்துங்கள்.  உங்கள் கணவனோ அல்லது மனைவியோ அநேக குறைகளோடிருக்கலாம்.  ஆனால் தொல்லைபடுத்துவது உதவாது.  பூரணத்தை எதிர்பார்க்காதீர்கள்; கசப்புதான் விளையும்.

குற்றங்களை காணாதிருந்து நல்ல காரியங்களைத் தேடுங்கள்.  மாற்றவோ கட்டுப்படுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முயற்சிக்காதீர்கள்.  அன்பை அழித்துவிடுவீர்கள்.  தேவன் மாத்திரமே மனிதரை மாற்றமுடியும்.  ஒரு மகிழ்ச்சியான உணர்வு, சந்தோஷமான இருதயம், தயவு, பொறுமை, பிரியம் இவை உங்கள் திருமண பிரச்சனைகளை முக்கால்பகுதி துரத்திவிடும்.  உங்கள் துணையை நன்றாக வைத்திருப்பதைக்காட்டிலும் மகிழ்ச்சியாக வைக்க முயலுங்கள்.  தானாகவே நன்றாக இருப்பார்கள்.  திருமணத்தின் வெற்றி சரியான துணை அமைவதில் இல்லை; சரியான துணையாக இருப்பதில் இருக்கிறது.

12. எதிலும் அளவை மீறாதீர்கள்.  கட்டுப்பாட்டோடு இருங்கள்.

“பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்” – 1 கொரி. 9:25;

“….தற்பொழிவை நாடாது” “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” “என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” – 1 கொரி. 13:5; 10:31; 9:27;

“ஓருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று” – 2 தெச. 3:10; “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாத்தாயுமிருப்பதாக” – எபிரெயர் 13:4;

“ஆகையால், நீங்கள் சீரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கோதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.  நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல்” – ரோமர் 6:12,13.

கருத்துரை:  அளவை மீறுவது உங்கள் திருமணத்தைக் கெடுத்துவிடும்.  அதைப்போனறே அளவில் குறைவதும்! வேலை, அன்பு, ஒய்வு, உடற்பயிற்சி, விளையாட்டு, ஆராதனை, உணவு, மற்றவர்களுடனான தொடர்பு அனைத்தும் உங்கள் திருமணத்தில் சமநிலையில் இருக்கவேண்டும்.  இல்லையென்றால் ஏதாவது நொடித்துவிடும்.  மிஞ்சின வேலையும், தூக்கமின்மையும், சரியான உணவோ அல்லது உடற்பயிற்சியோ இல்லாததும் ஒரு நபரை விமரிசகராகவும், சகிக்கக்கூடாதவராகவும், எதிர்மறையானவராகவும் ஆக்குகிறது. தொடர்ச்சியாக அதிகம் உண்பது கீழான இயல்பை பலப்படுத்தி, மனசாட்சியை மந்தமாக்குகிறது.  பாலியல் மீறல்கள் பரிசுத்த காரியங்களின்மீதான அன்பை அழித்து, உடல்பலத்தை குறைத்துப்போடுகிறது.  அளவைத் தாண்டுவதற்கு திருமணம் உரிமை வழங்குவதில்லை.  இழிவான, உருக்குலைந்த அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் செயல்கள் அன்பையும் ஒருவர்மேல் ஒருவருக்கிருக்கும் மரியாதையையும் அழித்துவிடும்.  கட்டுப்பாடான பாலியல் வாழ்க்கையைத்தான் வேதாகமம் பரிந்துரைசெய்கிறது (1 கொரிந்தியர் 7:3-7).  மற்றவர்களோடு வைக்கும் சமூகத் தொடர்பு அவசியம்.  தனிமையில் உண்மையான மகிழ்ச்சி காணப்படுவதில்லை.  ஆரோக்கியமான நல்ல நேரங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கவேண்டும்.  அதிக தீவிரமாயிருப்பதும் ஆபத்தானது.  எதிலும் அதிகமாகச் செய்வதோ அல்லது குறைவாகச் செய்வதோ மனதையும், சரீரத்தையும், மனச்சாட்சியையும் ஒருவரையொருவர் நேசித்து மதிக்கும் திறனையும் பெலவீனப்படுத்துகிறது.  கட்டுப்பாடின்மை உங்கள் திருமணத்தை சேதப்படுத்த அனுமதிக்காதீர்கள்.

13. துணையினுடைய தனிப்பட்ட உரிமைகளையும் அந்தரங்கங்களையும் மதியுங்கள்.

“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்பாடாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்…. சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்” – 1 கொரி. 13:4-7;

“சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” – ரோமர் 12:10.

கருத்துரை:  விளக்கம்கொடுக்க அவசியமில்லாத சில தனிப்பட்ட அந்தரங்கங்களைக்குறித்த உரிமையை தேவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார்.  அடுத்தவருடைய பைகளையோ அல்லது தனிப்பட்ட தாபல்கள் மற்றும் பொருட்களையோ அனுமதி இல்லாது தொடாதீர்கள்.  ஆழ்ந்த சிந்தனையில் ஒருவர் அமைதியாக தனித்திருக்க விரும்புவது மதிக்கப்படவேண்டும்.  திருமண பங்காளிகளில் ஒருவர் மற்றவருக்கு கடனாளியல்ல.  சிலவேளைகளில் தவறு செய்யக்கூட உரிமை உண்டு.  அவ்வாறு நடந்தாலும் அமைதியாயிருங்கள்.  ஒருபோதும் மற்றவரின் தனித்தன்மையை மாற்ற காட்டாயப்படுத்தக்கூடாது. தேவன் மாத்திரமே மாற்றங்களை உண்டாக்கமுடியும்.  இந்தக் காரியத்தில் நாம் அனைவரும் அவருக்கு தனிப்பட்டவிதத்தில் கணக்குக் கொடுக்கவேண்டும் (ரோமர் 14:12).  ஒருவர்மேல்ஒருவர் வைக்கும் பூரண நம்பிக்கையும், ஒருவர் மற்றவரை உளவு பார்க்காதிருப்பதும் மகிழ்ச்சிக்கான அத்தியாவசியத் தேவைகள்.  அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கண்டுபிடிப்பதில் நேரம் செலவழிப்பதைவிடுத்து, அவரை மகிழ்வூட்ட அதிக நேரம் செலவிடுங்கள்.  இது ஆச்சரியங்களை நடப்பிக்கும்.

14. சுத்தமாகவும் அடக்கமாகவும் கடமையுணர்வோடும் இருங்கள்.

“ஸ்திரீகளும்…. தகுதியான வஸ்திரத்தினாலும்,…. தங்களை அலங்கரிக்கவேண்டும்” – 1 தீமோ. 2:9;

“இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்” “அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்” – நீதிமொழிகள் 31:13,15,27; “உங்களைச் சுத்திகரியுங்கள்” – ஏசாயா 52:11;

“சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” – 1 கொரி. 14:40;

“ஒருவன் … தன் வீட்டாரையும் விசாரியமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்” – 1 தீமோத்தேயு 5:8; “நீங்கள் அசதியாயிராமல்” – எபிரெயர் 6:12.

கருத்துரை:  சோம்பேறித்தனம், ஒழுங்கின்மை, அழுக்கு, இதெல்லாம் ஒருவர்மேல் ஒருவர் காண்பிக்கிற மரியாதையையும் அன்பையும் அழிக்கிற சாத்தானுடைய கருவிகளாக இருக்கின்றன.  இவைகள் உங்களுடைய திருமணத்தை நாசப்படுத்தக்கூடும்.  நேர்த்தியான, அடக்கமான, சுத்தமான துணியும், நன்கு வைக்கப்பட்ட சரீரமும் கணவனுக்கும் மனைவிக்கும் மிக அவசியம்.  உணவு சத்தானதாக, கவர்ச்சிகரமானதாக இருந்து, குறிப்பிட்ட நேரத்தில் பரிமாறப்படவேண்டும். வீடும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்கவேண்டும்.  ஏனெனில் அது சமாதானத்தையும் அமைதியையும் திருப்தியையும் அனைவருக்கும் கொண்டுவரும்.  தன்னுடைய  வீட்டுக்காரியங்களை செய்யாத சோம்பேறித்தனமான திறமையற்ற கணவன், அவனுடைய குடும்பத்திற்கு சாபத்தையும் தேவனுக்கு அவகீர்த்தியையும் கொண்டுவருகிறான்.  சிறியதாகத் தோன்றுகிற இந்தக் காரியங்களில் கவனமின்மை, ஆயிரக்கணக்கானோரின் இல்லங்களை அழித்துக்கொண்டிருக்கிறது. 

15.மென்மையாகவும் தயவாகவும் பேசத் தீர்மானியுங்கள்.

“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” – நீதி. 15:1;

“நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்க்கை அநுபவி” – பிரசங்கி 9:9; “நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” – 1 கொரி. 13:11.

கருத்துரை:  உங்கள் துணையோடு மென்மையாகவும் தயவாகவும் பேச உங்களைக் கட்டாயப்படுத்துங்கள்.  தாக்கப்படும்போது அமைதிகாப்பது கோபத்தை சாந்தப்படுத்தும் சிறந்த முறையாக பலவேளைகளில் இருக்கிறது.  கோபமாகவோ சோர்வாகவோ அல்லது ஊக்கமிழந்தோ இருக்கும்போது எடுக்கும் தீர்மானங்கள் எவ்விதத்திலும் நம்பக்கூடாதவைகள்.  எனவே இளைப்பாறி, கோபம் தணிய அனுமதிப்பது மிகச் சிறந்தது.  நீங்கள் பேசும்போது உங்கள் பேச்சு எப்போதும் அமைதியானதும் அன்பானதுமாக இருக்கட்டும்.  வேகமான கோபமான வார்த்தைகள் உங்களை பிரியப்படுத்த உங்கள் துணை கொண்டிருக்கும் ஆசையை நசுக்கிப்போடுகிறது.

16. பண விஷயங்களில் நியாயமாக இருங்கள்.

“அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,…. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது” – 1 கொரி. 13:4.5;

“உற்காகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” – 2 கொரி. 9:7.

கருத்துரை:  திருமணத்தில் சம்பாதிக்கும் அனைத்து சம்பாத்தியமும் வருமானமும் உன்னுடையது என்னுடையது என்று அல்ல, நம்முடையது என்று இருக்கவேண்டும்.  வெளியே சென்று வேலைசெய்யாத மனைவிகள் மளிகை பொருட்களுக்காகவும், ஆடைகளுக்காகவும், மற்ற காரியங்களுக்காகவும் போதுமான பணம் கொடுக்கப்படவேண்டும்.  எதிர்ப்போடு விருப்பமின்றி கொடுக்கப்படுவதற்குப் பதிலாக சந்தோஷமாக அவைகள்  கொடுக்கப்படவேண்டும்.  கணக்குக் கொடுக்காது தாங்கள் விரும்பினபடி செலவுசெய்ய, கணவனும் மனைவியும் குறிப்பிட்ட சமஅளவு பணம் வைத்துக்கொள்ளவேண்டும்.  கஞ்சத்தனமான கணவன்மேல் கோபமடைகிற மனைவி அதிகமாக செலவுசெய்கிறாள்.  அவ்விதமே வீணான செலவு செய்யும் கணவன் தன் மனைவியை கஞ்சத்தனத்திற்கு நடத்துகிறான்.  உங்கள் துணையின் திறமையின்மேல் நீங்கள் காண்பிக்கும் நம்பிக்கை, அவரையோ அல்லது அவளையோ தன் வேளையில் மிகவும் கைதேர்ந்தவராக்கும்.

17. காரியங்களை மனம்விட்டுப் பேசி, சேர்ந்து ஆலோசியுங்கள்.

“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது;  அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது” – 1 கொரி. 13:4,5;

“புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்”;  “தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்” – நீதி. 15:32; 26:12.

கருத்துரை: பெரிய காரியங்களில்  ஆலோசிப்பது போன்று வேறு எதுவும் உங்கள் திருமணத்தைப் பலப்படுத்தாது.  வேலையை மாற்றுவதோ அல்லது அதிக செலவில் பொருட்கள் வாங்குவதோ கணவனையும் மனைவியையும் உள்ளடக்கியிருக்கவேண்டும்; அவைகளில் இருவருடைய கருத்தும் கவனிக்கப்படவேண்டும்.  மனம்விட்டு பேசுவது உங்கள் திருமணத்தை அழிக்கக்கூடிய அநேக தவறுகளை தவிர்க்கும்.  அதிகம் பேசி ஊக்கமாக ஜெபித்த பின்பும் கருத்து வேறுபடுமாயின் மனைவி கணவனுடைய தீர்மானத்திற்கு விட்டுக் கொடுக்கவேண்டும்.  வேதவாக்கியம் இதில் அதிக தீர்மானமாக இருக்கிறது. (எபேசியர் 5:22-24 ஐ பார்க்கவும்).

18.பரலோகத்தின் தூதர்கள் சௌகரியமாக உணருகிற இடமாக உங்கள் வீடு இருக்கவேண்டும் என்று நீங்கள் ஜெபிக்கிறீர்களா?

உங்கள் பதில்: ____________________

சிந்தனைக் கேள்விகள்

1. வாக்குவாத்த்திற்குப்பிறகு யார் முதலாவது இறங்கிவரவேண்டும்?

பதில்:  யார் சரியாக இருந்தாரோ அவர்.

2. மாமியாருக்கு ஏதாகிலும் ஆலோசனைகள் கொடுக்கமுடியுமா?

பதில்:  ஆமாம் அமைதியாக இருந்து உங்கள் சொந்தக் காரியத்தை கவனியுங்கள்.  (1 தெசலோனிக்கேயர் 4:11 ஐ பார்க்கவும்). உண்மையில் இந்த சட்டம் அனைத்து உறவினர்களுக்கும் பொருந்தும்.  இந்த பூமியிலே சிறிய பரலோகமாக இருந்திருக்கக்கூடிய அநேக திருமணங்கள் உறவினர்களால் நரகமாக மாற்றப்பட்டிருக்கிறது.  புதிதாக வீட்டை ஸ்தாபித்திருக்கிறவர்களை தனிமையில் விடுவது அனைத்து உறவினர்களின் கடமையாகவும் இருக்கிறது.

3.  கணவன் தேவபக்தியற்ற மனிதன்.  நான் கிறிஸ்தவளாக இருக்க முயற்சிக்கிறேன்.  அவனுடைய செல்வாக்கு கொடுமையாக இருக்கிறது.  அவனிடமிருந்து விவாகரத்து பெறவேண்டுமா?

பதில்:  இல்லை. 1 கொரிந்தியர் 7:12-14 யும், 1 பேதுரு 3:1,2 யும் வாசியுங்கள்.  தேவன் குறிப்பான பதில் தருகிறார்.

4. என் கணவன் என்னை வருத்தப்படுத்தும்போது அவரோடுகூட நான் படுப்பதில்லை.  நான் தவறு செய்வதாக அவர் சொல்லுகிறார். அப்படியா?

பதில்:  ஆமாம் இந்த கேள்விக்கு 1 கொரிந்தியர் 7:4,5-ல் தேவன் குறிப்பாக பதில் கொடுக்கிறார்.

5. என் மனைவி வேறொரு மனிதனோடு சென்றுவிட்டாள்.  இப்போது மனம் வருந்தி வீடு திரும்ப விரும்புகிறாள்.  அவளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று என் போதகர் கூறுகிறார்.  ஆனால் தேவன் இதை தடைசெய்கிறார்.  அப்படித்தானே?

பதில்:  இல்லை.  இல்லவே இல்லை.  விபசாரத்தினிமித்தம் மாத்திரமே தேவன் விவாகரத்தை அனுமதித்தார்.  எனினும் அதைக் கட்டளையாக கொடுக்கவில்லை.  மன்னிப்பு எப்போதுமே மேன்மையானது.  அது எப்போதும் முறையானதுங்கூட (மத்தேயு 6:14,15 ஐ பார்க்கவும்).  விவாகரத்து உங்கள் வாழ்க்கையையும் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் மிக மோசமாகக் கெடுக்கும்.  அவளுக்கு மற்றொரு சந்தர்ப்பம் கொடுங்கள். பொற்கட்டளை (மத்தேயு 7:12)  இங்கே பொருந்துகிறது.  நீங்களும் உங்கள் மனைவியும் கிறிஸ்துவிடம் உங்கள் வாழ்க்கையை திருப்புங்கள்; அவர் அதை மிகவும் மகிழ்ச்சியுள்ளதாக்குவார்.  இன்னும் காலம் இருக்கிறது.

6.  நான் என்ன செய்யவேண்டும்?  ஆண்கள் எப்போதும் என்னிடம் பழக முயற்சிக்கிறார்கள்.

பதில்:  உங்கள் நடக்கையைக்குறித்து கவனமாயிருங்கள். “பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:22) என்று தேவன் சொல்லுகிறார்.  ஒருவேளை ஆண்கள் அருகில் இருக்கும்போது உங்கள் நடத்தையோ, புன்முறுவலோ, அடக்கமில்லாத ஆடையோ, பொருந்தாத கேலி பேச்சுக்களோ அல்லது உங்களுடைய மிகவும் தளர்வான குணமோ உங்களை நெருங்க அவர்களை ஊக்கப்படுத்தலாம்.  கிறிஸ்தவ நடக்கையும் கௌரவமும் ஒரு மனிதனை அவனுக்குரிய இடத்தில் வைக்கும் வல்லமைகொண்டது.  “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்று கிறிஸ்து கூறினார்.  உண்மையில் கிறிஸ்து உங்களுடைய வாழ்க்கையில் பிரகாசிக்கும்போது துன்மார்க்க மனிதரோ அவர்களுடைய பழக்கங்களோ உங்களை நெருங்க முடியாது.

7. விழுந்துபோய் மெய்யாலுமே மனந்திரும்புகிற ஒருவருக்கு தேவனுடைய ஆலோசனை என்ன என்பதை நேரடியாகவும் தெளிவாகவும் உங்களால் கூறமுடியுமா?

பதில்:  சன்மார்க்க தவறு செய்து, பின்னர் மனந்திரும்பின ஒருவருக்கு: “நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” (யோவான் 8:11) என்று அநேக வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து குறிப்பான ஆறுதலளிக்கும் பதிலைக் கொடுத்தார்.  அந்த ஆலோசனை இன்றைக்கும் பொருந்தும்.

8. விவாகரத்து செய்வதில் குற்றஞ்செய்யாத நபரும் சில வேளைகளில் பாதிக் குற்றவாளிதானே?

பதில்:  நிச்சயமாக! குற்றம் செய்யாத நபர், அன்பு காண்பிக்காதிருந்து, கவனம் கொடுக்காததாலும், சுயநீதியோடு, தயவில்லாமல், நச்சரித்து, தன்னுயை அலட்சியப்போக்கினால் தீய நினைவுகளையும் செயல்களையும் தன் துணையில் ஊக்கப்படுத்தியிருக்கலாம்.  சிலவேளைகளில் தவறு செய்த நபரைப்போலவே குற்றமில்லாதவர் என்று சொல்லப்படுகிற நபரும் தேவனுக்கு முன்பாக சமநிலையான குற்றத்தில் இருக்கலாம்.  தேவன் நம்முடைய நோக்கங்களைப் பார்த்து அதற்கேற்ப நியாயந்தீர்க்கிறார்.  “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்” – 1 சாமுவேல் 16:7.

9. சரீரப்பிரகாரமாக என்னை தவறாக நடத்தும் துணையோடு வாழவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறாரா?

பதில்:  சரீரத்தை தவறாக நடத்துவது (அடிப்பது மிரட்டுவதுபோன்ற செயல்கள்) வாழ்க்கையையே பயமுறுத்தக்கூடிய, உடனடியான கவனம் கொடுக்கவேண்டிய ஆபத்தான ஒரு பிரச்சனை.  தவறாக நடத்தப்படுகிற துணையும் குடும்ப நபர்களும் பாதுகாப்பான ஒரு சுற்றுச்சூழலைத் தெரிந்தெடுக்கவேண்டும்.  தகுதியான கிறிஸ்தவ திருமண ஆலோசகரிடமிருந்து கணவனும் மனைவியும் உதவிபெற வேண்டும்.

 கோள்விகள்

1.	திருமணம்:   (1)
_____ தேவன் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் வாழ்நாள் முழுமைக்கும் இணைத்திருப்பது.
_____ பொருத்தத்தை பரிசோதனைசெய்யும் ஒரு தற்காலிக ஏற்பாடு.
_____ அவசியமேயில்லை! திருமணமின்றியே ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழலாம்.

2. விவாகரத்திற்கு தேவன் ஒரே ஒரு காரணத்தை மாத்திரமே கொடுக்கிறார்; அது: (1)
_____ ஒத்துப்போகாதிருப்பது.
_____ எரிச்சலூட்டுகிற துணை.
_____ விபசாரம் அல்லது வேசித்தனம்.
_____ திருமண துணையின் பக்தியின்மை.

3. திருமணத்திற்குமுன்பு உள்ள அன்பின் மரியாதைகள்: (1)
_____ வாழ்நாள் முழுதும் தொடரவேண்டும்.
_____ திருமணத்தோடு முடித்துவிடவேண்டும்.
_____ அது அவசியமே இல்லை! அற்பமானதும் அவசியமற்றதும்.

4. திருமணத்தில் வெற்றி பெறுவதற்கான மிகச் சிறந்த உத்திரவாதம் (1)
_____ இருதயத்திலும் இல்லத்திலும் கிறிஸ்துவைக் கொண்டிருப்பது.
_____ கணவன் மனைவியை நிர்ப்பந்திப்பது.
_____ விவாகரத்தைக்குறித்து பயமுறுத்தி தன் காரியங்களைச் சாதிப்பது.

5. வாக்குவாதங்களில் பாதுகாப்பாயிருக்க: (3)
_____ ஒருவருக்கொருவர் தயவாகவும் மென்மையாகவும் பேசுங்கள்.
_____ தவறை ஒப்புக்கொள்ள உங்கள் துணையை கட்டாயப்படுத்துங்கள்.
_____ காரியங்களை முடிவெடுக்க அயலகத்தாரை அழையுங்கள்.
_____ அமைதியாக இருக்கும்படி உங்கள் துணையைக் கட்டாயப்படுத்துங்கள்.
_____ சிலநாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேருங்கள்.
_____ இணைந்து ஜெபியுங்கள்.
_____ இரவிற்கு முன் உங்கள் கோபத்திலிருந்து மீண்டுவாருங்கள்.

6. திருமண வெற்றிக்கான காரணிகள்: (2)
_____ அனைத்து மூன்றாவது நபருக்கும் குடும்ப வட்டத்தை மூடுவது.
_____ பெற்றோரின் வீட்டில் வசிப்பது.
_____ கோபம் வரும்போது தாயிடம் ஓடுவது.
_____ துணையின் குற்றங்களை நெருங்கின நண்பரிடம் கூறுவது.
_____ உங்கள் சொந்த இல்லத்தை அமைப்பது.
_____ ஆலோசனைக்காக பழைய ஆண் அல்லது பெண் நண்பரை அழைப்பது.
_____ சண்டைக்குப்பின் ஒருபோதும் தவறை ஒப்புக்கொள்ளாதிருப்பது.

7. உங்கள் துணையை முன்னேற்ற சிறந்த வழிகள்: (2)
_____ வழிக்கு வராவிட்டால் தனியேவிட்டுச் செல்வேன் என்று பயமுறுத்துதல்.
_____ நச்சரித்து விமர்சித்தல்.
_____ இயேசுவுடனான உறவை வளர்த்தல்.
_____ துனையை தனியாக உறங்கவிடுதல்.
_____ அன்பாயிருந்து போற்றி மன்னித்தல்.
_____ மாறும்படியாக துணையை வற்புறுத்துதல்.

8. திருமணத்திற்கு ஆபத்தாயிருக்கிறவைகள்: (6)
_____ விமர்சனங்கள்.
_____ கணவனின் கஞ்சத்தனம்.
_____ மனைவியின் வீண் செலவு.
_____ சோம்பல்.
_____ ஒரு கிறிஸ்தவக் குடும்பம்.
_____ இணைந்து ஜெபித்தல்,
_____ ஒழுங்கின்மையும் அசுத்தமும்.
_____ மன்னிக்கும் ஆவி.
_____ பொறாமை.

9. முக்கிய தீர்மானங்களில் வெற்றிபெற: (2)
_____ கணவனும் மனைவியும் இணைந்து ஆலோசிக்கவேண்டும்.
_____ கணவன் தன் விருப்பத்தை மனைவியின் மேல் திணிக்கவேண்டும்.
_____ ஜெபத்தின் வழியாக ஒன்றாக தேவனைத் தேடவேண்டும்.
_____ தன் சொந்த விருப்பத்தையே வற்புறுத்தவேண்டும்

10. உறவினர்களுக்கான ஒரு நல்ல சட்டம்: (1)
_____ புதிதாக திருமணமானவர்களை தனிமையில் விடுதல்.
_____ புதிதாக திருமணமானவர்கள் தங்களோடு வாழவேண்டும் என்று வற்புறுத்துதல்.
_____ புதிதாக திருமணமானவர்கள் விரும்பினாலும் விரும்பாவிடினும் அவர்கள்மேல் தங்கள் ஆலோசனையைத் திணிப்பது.

11. துணை உண்மையாக இல்லாதபோது செய்யவேண்டிய மிகச் சிறப்பான செய்கை: (1)
_____ உடனடியாக வெளியேறுங்கள். மீண்டும் திரும்பவேண்டாம்.
_____ துணையைக் குறித்த தீய செய்தியை உடனடியாக பிறரிடம் பரப்புங்கள்.
_____ கூடுமானவரையில் மன்னித்து, குடும்பத்தைக் காப்பாற்ற முயலுங்கள்.

12. சிந்தைகள் ஏன் கவனமாக காக்கப்பட வேண்டும்: (2)
_____ தூய்மையற்ற சிந்தைகள் தூய்மையற்ற செயல்களுக்கு நடத்தும்.
_____ உங்கள் துணையால் உங்கள் சிந்தைகளைப் படிக்கமுடியும்.
_____ தவறான சிந்தை திருமணத்தை அழித்துவிடும்.
13. பரலோக தூதர்கள் மகிழ்ச்சியோடு வரும் ஒரு இடமாக என் வீடு இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்:
_____ ஆம்.
_____ இல்லை.