வேதபாடம் 3
பசிகொண்ட பயங்கரமான சுறாக்கள் நெருங்கிகொண்டிருக்க, பிரமிக்க வைக்கும் சமுத்திரத்தில் நீங்கள் மாட்டி தவித்துக்கொண்டிருக்கிற பயப்படக்கூடிய நிலையை கற்பனை செய்துபாருங்கள். அங்கேயிருந்து காப்பாற்றபடுவீர்களானால், எவ்வளவு நன்றியோடு இருப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உண்மை என்னவெனில் ஒவ்வொரு நபரும் ஆபத்துகள் நிறைந்த சமுத்திரமான இந்த பூமியில் தொலைந்து போயிருக்கிறோம். மிக அவசரமான மீட்பு நமக்குத் தேவைப்படுகிறது.

அது கப்பலினாலோ அல்லது ஹெலிக்காப்டரினாலோ வரும் மீட்பு அல்ல; பரலோகப்பிதாவிடமிருந்து கிடைக்கவேண்டிய மீட்பு!உங்களுக்காக தமது சொந்தக் குமாரனையே அனுப்புமளவு தேவன் உங்களை நேசிக்கிறார். இவைகளையெல்லாம் நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கிறீர்கள், ஆனால் இவை எதைக் குறித்துப்பேசுகின்றன என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்களா?
அது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? அது உங்கள் வாழ்க்கையை மாற்றமுடியுமா?
1. உண்மையிலேயே தேவன் என்மேல் கரிசனையாக இருக்கிறாரா?
“நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்குஈடாக ஜனங்களையும்கொடுப்பேன்.” – எசாயா – 43: 4 “ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்.” (எரேமியா – 31:3)

பதில்: தேவன் உங்கள்மேலும் என்மேலும் வைத்திருக்கிற ஒருபோதும் முடிவில்லாத அன்பு நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. அண்டசராசரத்திலேயே நீங்கள் ஒருவர்தான் தொலைந்துபோன ஆத்துமா என்பதுபோல அவர் உங்களை நேசிக்கிறார். மீட்கப்படுவதற்கு வேறு ஒரு பாவியுமே இல்லை என்றிருந்திருந்தாலும் உங்களையும் என்னையும் மீட்கும்படி அவர் தமது ஜீவனைக் கொடுத்திருப்பார். இதை நீங்கள் ஒருபோதும் மறவாதீர்கள். நீங்கள் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்; அவர் உங்களை நேசிக்கிறார்.
2. தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை எவ்விதம் விளங்கப்பண்ணினார்?
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” யோவான் – 3: 16 “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.” 1 யோவான்- 4: 9, 10
பதில்: நம்மை மிகவும் ஆழமாக நேசிப்பதினால், உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் நித்தியத்திற்குமாகப் பிரிந்திருப்பதற்குப்பதிலாக, தமது ஒரேபேறான குமாரன் வேதனைப்படுவதையும் மரிப்பதையும் காண அவர் சித்தமாயிருந்தார். நம்மால் இதைப்புரிந்துகொள்ள முடியாது. ஆனால் உங்களுக்காகவும் எனக்காகவும் அவர் இதைச் செய்தார்

மாபெரும் அன்பைக்குறித்து சிலுவையில் கொடுக்கப்பட்டதைப்போன்றஒரு விளக்கம் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை.
3. அவர் எவ்விதம் என்னைப்போன்ற ஒருவனை நேசிக்கமுடியும்?
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” ரோமர் – 5: 8
பதில்: நிச்சயமாக, நான் அந்த அன்பிற்கேற்ப நடந்துகொண்டதாலோ அல்லது அதற்குத் தகுதியுள்ளவனாகவோ இருந்ததாலோ அல்ல;நம்மில் ஒருவனும் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தைத்தவிர்த்து வேறு எதையும் சம்பாதித்திருக்கவில்லை. (ரோமர்- 6: 23).ஆனால் தேவனுடைய அன்பு நிபந்தனைக்குட்பட்டதல்ல. அவர் திருடரையும், விபசாரரையும், கொலைகாரரையும் நேசிக்கிறார். அவ்விதமே சுயநலவாதிகளையும், மாய்மாலக்காரரையும், தூஷிக்கிறவர்களையும் நேசிக்கிறார். ஆனால் இவை எல்லாவற்றிற்கும்மேலாக என்னை அவர் நேசிக்கிறார். என்னுடைய பாவங்கள் துயரத்திற்கும் மரணத்திற்குமே என்னை நடத்தும் என்பதை அறிந்தவராக, அவைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற அவர் விரும்புகிறார். எனவேதான் மரித்தார்.
4. அவருடைய மரணம் எனக்கு என்ன செய்கிறது?
“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்;” 1 யோவான் 3:1; “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” யோவான்- 1: 12
பதில்: எனக்கு எதிராக இருந்த மரணதண்டனையை திருப்திப்படுத்த கிறிஸ்து மரித்தார். நான் அடையவேண்டிய மரணத்தை அடையும்படி அவர் ஒரு மனிதனாகப் பிறந்தார். பின்னர், அவர் செய்ததன் நன்மையை எனக்குத் தருவதாகக் கூறுகிறார். அதாவது, நான் நீதிமானாக எண்ணப்படுவதற்காக அவருடைய பாவமில்லாத வாழ்க்கை என் கணக்கில் சேருகிறது. அவருடைய மரணம் என் பழைய பாவங்கள் அனைத்திற்கும் முழுமையான நிவாரணமாக தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவர் செய்ததை ஈவாக ஏற்றுக்கொள்வதனால் நான் தேவனுடைய பிள்ளையாக அவருடைய சொந்தக் குடும்பத்திற்குள் சேர்க்கப்படுகிறேன். இது மனதை அசைக்கிறது!
5. எவ்விதம் நான் அவரைப் பெற்றுக்கொண்டு மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துசெல்லமுடியும்?
பதில்: தேவனுடைய மாபெரும் ஈவான நம்முடைய ஆண்டவருக்காக ஜெபித்து, அவரை நம்பி ஏற்றுக்கொள்ளுவதன் வழியாக, அவரை நான் பெற்றுக்கொண்டு மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துபோகிறேன்.
மூன்று காரியங்களை ஒப்புக்கொள்ளுங்கள்:
- நான் ஒரு பாவி. “எல்லாரும் பாவஞ்செய்து…” . ரோமர் – 3: 23
- நான் மரணத்திற்குக் குறிக்கப்பட்டிருக்கிறேன். “பாவத்தின் சம்பளம் மரணம்”. ரோமர் – 6: 23
- என்னால் என்னைக் காப்பாற்ற முடியாது. “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” யோவான் – 15: 5
பின்னர் மூன்று காரியங்களை நம்புங்கள்:
- அவர் எனக்காக மரித்தார். “ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு.” எபிரெயர் – 2:9.
- அவர் என்னை மன்னிக்கிறார். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்…. எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” 1 யோவான் – 1:9.
- அவர் என்னை இரட்சிக்கிறார். “என்னிடத்தில் விசுவாசமாயிரு க்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று …. சொல்லுகிறேன்.” யோவான் – 6:47.

இந்த எளிமையான உண்மைகளை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்:
- என்னுடைய பாவங்களினால் நான் மரணத்திற்குக் குறிக்கப்பட்டேன்.
- என்னுடைய பாவங்களுக்காக நான் மரிப்பேனானால் மீண்டும் என்னால் உயிரோடு எழும்ப முடியாது; என்றைக்குமாக மரித்திருப்பேன். அது நித்திய மரணமே! எனவே, நித்திய வாழ்க்கையை இழக்காமல் பாவத்தின் தண்டனையை நான் செலுத்தமுடியாது.
- செலுத்தமுடியாத ஒன்று என்மேல் விழுந்திருக்கிறது! ஆனால் இயேசு என்னும் நபரில் ஒரு நண்பர் அருகே வந்து: “நான் செலுத்துகிறேன். உன்னுடைய இடத்தில் நான் மரித்து அதன் நன்மையை உனக்குக் கொடுக்கிறேன். உன்னுடைய பாவங்களுக்காக நீ மரிக்கவேண்டுவதில்லை;” என்று கூறுகிறார்.
- அந்த ஈவை நான் ஏற்றுக்கொள்ளவேண்டும்! மிக எளிமையாக இருக்கிறதல்லவா? நான் வெளிப்படையாக என்னுடைய பாவங்களுக்கான அவருடைய மரணத்தை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்ளுகிறேன். இதைச் செய்கிற அந்த நொடியிலேயே நான் தேவனுக்கு மகனாகவோ அல்லது மகளாகவோ மாறுகிறேன்.
6. இரட்சிப்பின் ஈவை அடைந்துகொள்ள நான் என்ன செய்யவேண்டும்?
“இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.” ரோமர்– 3:24 “…மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான்…” ரோமர் – 3: 28.
பதில்: நான் அதை முழுமையான ஈவாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளமுடியும். என்னுடைய கீழ்ப்படிதலான கிரியைகள் நீதிமானாக எனக்கு அணுவளவும் உதவாது. விசுவாசத்தினால் இரட்சிப்பைத் தேடும் அனைவரும் அதைப் பெற்றுகொள்ளுவார்கள். மிகவும் கொள்கையற்றபாவியுங்கூட அதன் அடிப்படையிலேயே மிகவும் முழுமையான மனிதனைப்போல ஏற்றுக்கொள்ளப்படுவான். கடந்தகாலம் கணக்கில் வருவதில்லை. தேவன் ஒவ்வொருவரையும் ஒரேவிதமாக நேசிக்கிறார் என்பதையும், கேட்கிறவர்களுக்கு மன்னிப்புக்கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.”

7. நான் விசுவாசத்தினால் அவருடைய குடும்பத்தில் சேரும்போது, இயேசு என்ன மாற்றத்தை என் வாழ்க்கையில் உண்டாக்குகிறார்?
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” 2 கொரிந்தியர் – 5: 17
பதில்: இயேசு என் இருதயத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படும்போது, அவர் என்னுடைய பழைய பாவமனிதனை அழித்து, என்னைப் புதிய சிருஷ்டியாக மாற்றுகிறார். பழைய பாவவாழ்க்கை நான் வெறுக்ககூடியதும் விருப்பமற்றதுமாக மாறுகிறது. முதல்முறையாக குற்ற உணர்விலிருந்தும் அதன் ஆக்கினையிலிருந்தும் மகிமையான விடுதலையை மகிழ்ச்சியோடு உணர ஆரம்பிக்கிறேன். கிறிஸ்து இல்லாத என் வாழ்க்கை எவ்வளவு வெறுமையாக இருந்தது என்பதைப் பார்க்கத் துவங்குகிறேன். மேசையின் கீழிருக்கும் தவிட்டை உண்பதற்குப்பதிலாக, இராஜாவின் விருந்திலே நான் கலந்துகொள்ளுகிறேன். தேவனோடுகூட இருக்கும் ஒரு நிமிடம், வாழ்நாள் முழுவதும் பிசாசை சேவிப்பதின் மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. என்ன ஒரு மாற்றம்! ஏன் அதை ஏற்றுக்கொள்ள நான் இவ்வளவு காலம் காத்திருந்தேன்.
8. பழைய வழ்க்கையின் இன்பங்களைவிட இந்த வாழ்க்கையின் மாற்றம் உன்மையிலேயே மகிழ்ச்சியானதாக இருக்குமா?
“…உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.” யோவான் – 15:11; “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.” யோவான் – 8: 36; “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” யோவான் – 10: 10

பதில்: சுயமறுப்பு காரணமாக கிறிஸ்தவ வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்காது என்று பலர் நினைக்கிறார்கள். இயேசுவின் அன்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, மகிழ்ச்சி உங்களுக்குள் உருவாகும். கடினமான காலங்கள் வரும்போதும்கூட, அதை மேற்கொள்வதற்கும், “ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவதற்கும்” (எபி- 4:16), கிறிஸ்தவன், தேவனுடைய நிச்சயமான மற்றும் வல்லமையான பிரசன்னத்தை உணரமுடியும்.

9. கிறிஸ்தவன் செய்யவேன்டியதை எல்லாம் என்னால் செய்யமுடியுமா?
“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்.” கலா – 2: 20.
“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” பிலி – 4: 13
பதில்: கிறிஸ்தவ வாழ்க்கையின் மாபெரும் அற்புதம் இங்கேதான் வெளியாகிறது. நல்லவனாக இருப்பதற்கு நீங்கள் உங்களை கட்டாயப் படுத்தவில்லை; உங்களுக்குள் இருக்கும் வேறு ஒருவருடைய வாழ்க்கையின் வெளிப்பாட்டைத் தான் கிறுஸ்தவனாக நீங்கள் காண்பிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பின் இயற்கையான வெளிக்காட்டுதலே கீழ்ப்படிதல். அவருடைய வாழ்க்கை உங்களுடைய வாழ்க்கையின் ஒரு பங்கானதால் தேவனால் பிறந்தவர்களாக, புதுசிருஷ்டியாக நீங்கள் கீழ்ப்படிய விரும்புவீர்கள். நீங்கள் நேசிக்கிற ஒருவரை பிரியப்படுத்துவது உங்களுக்குப் பாரமல்ல, இன்பமானதே. “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது…” சங்கீதம் – 40: 8
10. பத்துக் கற்பனைகளுங்கூட கீழ்ப்படிய கடினமானதல்ல என்று சொல்லுகிறீர்களா?
“If you love Me, keep My commandments” (John 14:15).

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.” யோவான் – 14: 15 “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” 1 யோவான் – 5: 3 “அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்…” 1 யோவான் – 2: 5
வேதாகமம் எப்போதும் கீழ்ப்படிதலை அன்பான உறவோடு பிணைத்திருக்கிறது. மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் பத்துக்கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதை சோர்வுண்டாக்கும் போராட்டமாகக் காண்பதில்லை. கிறிஸ்துவின் மீட்கும் மரணத்தினால் என்னுடைய கடந்தகாலப் பாவங்கள் அனைத்தும் மூடப்பட, எனக்குள் இருக்கும் வெற்றிகரமான வாழ்க்கையில் என்னுடைய தற்போதைய மற்றும் எதிர்காலக் கீழ்ப்படிதல் அஸ்திபாரப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், என்னுடைய வாழ்க்கையை மாற்றினதற்காக நான் அவரை மிகவும் ஆழமாக நேசிப்பதினால், உண்மையில் பத்துக் கற்பனைகளையும் கடந்து அவருக்குக் கீழ்ப்படிய விரும்புகிறேன். அவர்மேல் இருக்கும் என் அன்பை விளக்குவதற்கான அதிகப்படியான வழிகளைக் கண்டுபிடிப்பதற்காக, அனுதினமும் அவருடைய சித்தத்தைத் தேடி வேதாகமத்தை ஆராய்வேன். “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.” 1 யோவான் – 3: 22.

இரட்சிப்பை சம்பாதிக்கும் முயற்சியாக பத்துக் கற்பனைகளைக் கைக்கொள்வேனானால், அது துன்பத்திலும் வீரக்தியிலுமே முடியும். ஆனால் தேவனுடைய இரட்சிப்பு என்னும் ஈவை அனுபவித்த நபர், தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியும் பாதையில் நடக்க விரும்புவார்.
11. தேவனுடைய பிள்ளைகள் கற்பனைகளைக் கைக்கொள்ளுவது கிரியையினால் பெறும் இரட்சிப்பு அல்ல என்பதில் நான் எவ்விதம் உறுதியாக இருக்கலாம்?
“தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும்” வெளி – 14: 12; “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.” வெளி – 12: 11.
பதில்: கீழ்ப்படிதலை மிஞ்சின செய்கையாக தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மிஞ்சின செய்கை என்பது என்னுடைய நற்கிரியைகளால் இரட்சிப்பைச் சம்பாதிக்க முயற்சிப்பது! வேதாகமத்தில் பரிசுத்தவான்கள் நான்கு குணங்களால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
- கற்பனைகளைக் கைக்கொள்ளுவதால்
- ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தை நம்பியிருப்பதால்.
- தங்கள் விசுவாசத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளுவதால்,
- பாவம் செய்வதைக்காட்டிலும் மரிப்பதை தெரிந்து கொள்ளுவதால். இயேசுவில் அன்பாயிருந்து வாழ்நாள் முழுவதும் அவரைப் பின்பற்ற ஒப்புக்கொடுத்திருக்கிற நபரின் உண்மையான குணங்கள் இவைகளே.
12. கிறிஸ்துவுடனான என்னுடைய திருமணத்தின் விசுவாசமும் அன்பும் தொடர்ந்து உயரும் என்பதைக்குறித்து நான் எவ்விதம் உறுதியாக இருக்கலாம்?

“வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்…” யோவான் – 5: 39; “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” 1 தெச – 5: 17; “ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே….அவருக்குள் நடந்துகொண்டு.” கொலோ – 2: 6; “நான் அநுதினமும் சாகிறேன்…” 1 கொரிந்தியர் – 15: 31.

பதில்: எந்த அன்பின் உறவும் தொடர்பு குறையும்போது செழிக்காது. வேத தியானமும் ஜெபமும் உறவை வளர்ப்பதற்கு அத்தியாவசியமானவை. என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை செழிப்பாக வைத்திருக்கும்படி நான் அனுதினமும் அவருடைய வார்த்தைகளைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
அது அவருடைய அன்பின் கடிதம். அவருடன் உரையாடுவது என்னுடைய பக்தியை ஆழப்படுத்தி, அவர் என்மேல் வைத்திருக்கும் கரிசனையைக் குறித்த சிலிர்ப்பூட்டும் ஆழமான அறிவிற்கு என் மனதைத் திறக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்காக அவர் வைத்திருக்கிற நம்பக்கடினமான ஏற்பாடுகளின் விவரங்களை அனுதினமும் நான் அறியும்போது ஆச்சரியமடைகிறேன்.
13. கிறிஸ்துவுடனான உறவை எந்த சம்பவம் முத்திரிக்கிறது? அதன் பொருள் என்ன?

“மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.” “நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.” ரோமர் – 6: 4, 6;
“நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால்…” 2கொரிந்தியர் – 11: 2.
பதில்:
1) பாவத்திற்கு மரிப்பது.
2) கிறிஸ்துவிற்குள் புதிதாக பிறப்பது.
3) கிறிஸ்துவுடனான திருமண உறவில் நித்தியநித்தியமாக தொடருவது என்று மூன்று குறிப்பான சம்பவங்களை உண்மையான விசுவாசியின் வாழ்க்கையில் ஞானஸ்நானம் அடையாளப்படுத்துகிறது. இந்த ஆவிக்குரிய இணைப்பு காலம் செல்லச்செல்ல, அன்பு தொடரும்வரையிலும் உறுதியும் இனிமையுமானதாக வளரும். எந்தத் திருமணத்திலும் அன்பு குறையுமானால், பரலோகம் நரகமாக மாற, அந்தக் குடும்பம் திருமண சட்டத்தின் கட்டாய கடமைகளினிமித்தம் வெறும் இயந்தரத்தனமாகவே ஒன்றாயிருக்கும். அதேபோல கிறிஸ்தவன் கிறிஸ்துவை முதன்மையாக நேசிப்பதை நிறுத்தும்போது, அவனுடைய மதம் கட்டுப்படுத்தும். சில சட்டங்களுக்காக இணைந்துபோகிற ஒரு இணக்கமாகவே இருக்கிறது.
நம்முடைய ஆவிக்குரிய திருமணத்தை தேவன் முத்தரிக்கிறார்.
நம்முடைய ஆவிக்குரிய திருமணத்தை நித்தியத்திற்கும் முத்தரிப்பதற்காக, என்னை ஒருபோதும் கைவிடாது இருப்பதாகவும் ( சங்கீதம் – 55: 22 ; மத்தேயு – 28: 20; எபிரெயர் – 13: 5), என்னுடைய ஆரோக்கியத்திலும் வியாதியிலும் என்னை கவனித்துக் கொள்வதாகவும் ( சங்கீதம் – 41: 3; ஏசாயா – 41: 10) , என்னுடைய வாழ்கையில் உண்டாகும் ஒவ்வொரு தேவைக்கும் ஏற்பாடு செய்வதாகவும் ( மத்தேயு – 6: 25-34) அவர் வாக்குக் கொடுக்கிறார். விசுவாசத்தினால் நான் அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய வாக்குறுதிகளைப் போதுமானதாகக் காணும்போது, எதிர்காலத்தின் ஒவ்வொரு தேவைக்கும் அவரை தொடர்ந்து நம்புகிறேன். அவர் ஒருபோதும் என்னை கீழே விடுவதில்லை.
14. இயேசுவை உன் வாழ்க்கைக்குள் அழைத்து, புது பிறப்பின் அனுபவத்தைப் பெற வாஞ்சிக்கிறாயா?
உங்கள் பதில்: _______________

சிந்தனைக் கேள்விகள்
1. எவ்விதம் ஒரு மனிதனின் மரணம் மனுக்குலம் அனைத்தின் பாவதண்டனையையும் செலுத்தமுடியும்? நான் பயங்கரமான பாவ வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். மிகவும் தீயவனுக்கு அவர் விசேஷமான மீட்பை செய்ய வேண்டியிருக்கும் என்று நான் எண்ணுகிறேன்?
பதில்: “எல்லாரும் பாவஞ்செய்து” என்று ரோமர் – 3: 23 சொல்லுகிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் – 6: 23) என்பதாலும், “எல்லாரும் பாவஞ்செய்து” என்பதாலும், பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனுக்குமே விசேஷமான மீட்புதான் தேவைப்படுகிறது. மேலும், மனிதர் அனைவருடைய வாழ்க்கைக்கும் இணையான ஒருவரே மனுக்குலத்தின் பாவங்களுக்காக மரிக்கமுடியும். இயேசு கிறிஸ்து சிருஷ்டிகராகவும் வாழ்க்கையின் ஆதாரமாகவும் இருபதால், அவர் கொடுத்த வாழ்க்கை பிழைக்கும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கைக்கும் சமமாயிருக்கிறது. பாவநிவிர்த்தி செய்ய, உண்டாக்கபட்ட அனைத்து ஜீவன்களுக்கும் இணையான ஒருவருடைய வாழ்க்கை பலியாகவேண்டும் என்பது மாத்திரமல்ல, பலியானவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவும் வேண்டும். ஏன்? விசுவாசத்தினால் பாவநிவிர்த்தியின் நன்மைகளை வாஞ்சிக்கிறவர்களுக்கு அதைச் செயல்படுத்தும்படி அவர் வரவேண்டும். ” மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.” எபிரெயர் – 7: 25
2. நான் கிறிஸ்துவையும் அவர் தருகிற மன்னிப்பையும் பெற்றபின் மீண்டும் பாவம் செய்வேனானால் அவர் என்னை மன்னிப்பாரா?
பதில்: நம்முடைய பாவத்திற்காக நாம் மனம் வருந்தி அறிக்கை செய்வோமானால் தேவன் அதை மன்னிப்பார் என்று நாம் நம்பலாம். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” 1 யோவான் – 1: 9.
3. என்னுடைய பாவ நிலைமையில் நான் எவ்விதம் தேவனை நெருங்கமுடியும்? எனக்காக மன்றாட ஒரு ஆசாரியனோ அல்லது ஊழியக்காரனோ இருப்பது மேன்மையல்லவா?
பதில்: இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வாழ்ந்துருந்து “எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டு” இருப்பதினால், நம்மை புரிந்துகொண்டு நம்மிடம் இரக்கமாயிருக்க விரும்புகிற ஒரு தெய்வம் நமக்கு உண்டு. “இரக்கத்தைப் பெற …. தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” என்று எபிரெயர் – 4: 16. சொல்லுகிறது. நாம் எந்த ஒரு மத்தியஸ்தரும் இல்லாமல் இயேசு கிறிஸ்து மூலமாக தேவனை நேரடியாக நெருங்கலாம். அவருடைய இரக்கத்தை நம்பினவர்களாக நாம் தைரியமாக இயேசுவின் நாமத்தினால் அவரிடம் வரலாம் (யோவான் – 14: 14) “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.” என்று 1 தீமோத்தேயு – 2: 5 சொல்லுகிறது.
4. தேவன் என்னுடைய பாவத்தை மன்னித்து என்னை அவருடைய குடும்பத்தில் இணைத்துக்கொள்வாரனால், அது என் பாவங்களுக்கான வருங்கால தண்டனையை அப்புறப்படுத்துமா? அல்லது இன்னமும் நான் நோன்பு போன்ற ஒருவிதமான பரிகாரத்தைச் செய்யவேண்டியதிருக்குமா?
பதில்: “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து … ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” (ரோமர் – 8: 1) என்று வேதவாக்கியம் சொல்லுகிறது. கிறிஸ்து நம்முடைய மீறுதல்களுக்கான முழு பரிகாரத்தையும் செய்திருக்கிறார். அவரை விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் சுத்தமடைவதற்காக நோன்பு இருக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அவர்கள் ஏற்கனவே ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” என்ற மிக அழகான மன்னிப்பின் வாக்குத்தத்தத்தை ஏசாயா – 43: 25 கொடுக்கிறது. “தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.” என்று, மீட்பராகிய தேவனுடைய அழகான குணத்தை, தமது மக்கள்மேல் அவர் கொண்டிருக்கும் அவருடைய நினைவை மீகா – 7: 18, 19 காண்பிக்கிறது.
5. என்னை இரட்சிக்கும்படி நான் தேவனுக்கு ஏதாகிலும் உதவி செய்யக்கூடுமா?
பதில்: இல்லை. அவருடைய திட்டம் முழுவதும் கிருபையினால் ஆனது (ரோமர் – 3: 24; 4: 5 ) “இது தேவனுடைய ஈவு” எபிரெயர் – 2: 8 விசுவாசத்தினாலே தேவன் நமக்குக் கிருபையை அளிப்பதுபோலவே, அவருக்குக் கீழ்ப்படியும்படியான வாஞ்சையையும் பெலத்தையுங்கூட கொடுக்கிறார். இது அவருடைய பிரமாணங்களுக்கு நம்மை இணங்கவைக்கிறது. எனவே இந்தக் கீழ்ப்படிதலுங்கூட தேவனுடைய இலவச கிருபையின் விளைவே. அன்பின் சேவையும் தோழமையுமான கீழ்ப்படிதலே நாம் இயேசுவின் சீஷர்கள் என்பதற்கும், இயேசுகிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தினால் வரும் கனிதருவதுமான பரிட்சையாயிருக்கிறது.
கேள்விகள்
1. தேவன் மனிதனுக்கான எந்த மாபெரும் ஈவில் பரலோகம் முழுவதையும் ஊற்றினார்? (1) _____ வேதாகமம். _____ அவருடைய சபை. _____ இயேசுகிறிஸ்து. _____ பிரமாணம். 2. இந்த உலகம் கண்டிருக்கிற பேரன்பின் மாபெரும் வெளிப்பாடு: (1) _____ அப்பங்களும் மீன்களும். _____ இயேசுவின் சிலுவை மரணம். _____ பெந்தெகொஸ்தே. _____ பேதுருவின் மனந்திரும்புதல். 3. சிலுவையில் கிறிஸ்துவின் தியாகம் (1) _____ ஒவ்வொருவருக்காகவும். _____ நீதிமான்களுக்காக மாத்திரமே. _____ தீயவர்களுக்கு மட்டுமே. _____ இரட்சிப்பிற்கென்று முன்குறிக்கப்பட்டவர்களுக்காகவே. 4. தேவன் எப்படிப்பட்ட நபரை அதிகம் நேசிக்கிறார்? (1) _____ சபை உறுப்பினரை. _____ வேசிகளையும் திருடரையும். _____ அனைவரையும் ஒரேவிதமாக. _____ மீண்டும் பிறந்த கிறிஸ்தவர்களை. 5. கிறிஸ்து மனித குடும்பத்தில் பிறந்ததன் காரணம்? (1) _____ பாவத்திற்கான தண்டனையைச் சுமக்க. _____ நாம் எவ்வளவு பெலவீனமானவர்கள் என்பதை அறிய. _____ நல்ல தச்சனாக இருக்க. 6. இரட்சிப்பை அடைய ஒரு நபர்: (1) _____ வேதபாடம் படிக்கவேண்டும். _____ சபையில் அங்கத்தினராகவேண்டும். _____ அந்நியபாஷை பேசவேண்டும். _____ அதை ஈவாக ஏற்றுக்கொள்ளவேண்டும். 7. நாம் எதன் வழியாக இரட்சிக்கப்படுகிறோம்? (1) _____ நற்கிரியை. _____ கிருபை. _____ விருப்பம். 8. மன்னிப்பும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் எதற்கு நடத்துகிறது? (2) _____ மறுபடியும் பாவம் செய்வதற்கு. _____ இன்பங்கள் மறுக்கப்பட்டதினால் வருத்தப்படுவதற்கு. _____ மகிழ்ச்சிக்கும் சமாதானத்திற்கும். _____ நித்திய வாழ்க்கையைக்குறித்த நிச்சயத்திற்கு. 9. கீழ்ப்படிதல் எதன்மேல் தளமிடப்படவேண்டும்? (1) _____ நரகத்தைக் குறித்த பயத்தின்மேல். _____ நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தின்மேல். _____ கிறுஸ்துவின் மேலிருக்கிற அன்பின்மேல். 10. கற்பனைகளைக் கைக்கொள்ளும் கிறிஸ்தவ குணம்: (1) _____ மிஞ்சின செய்கை. _____ மெய்யான மனந்திரும்புதலின் ஒரு கனி. _____ முக்கியமானதல்ல. 11. கிறிஸ்துவுடனான திருமணம் எவ்விதம் அடையாளப்படுத்தப்படுகிறது? (1) _____ ஒரு மடத்தில் சேருவதினால். _____ ஞானஸ்நானத்தின் வழியாக. _____ வலது கரத்தில் மாட்டிக்கொள்ளும் திருமண மோதிரத்தின் வழியாக. _____ பிரம்மச்சாரிய வாக்குறுதியை அளிப்பதன் வழியாக. 12. கிறிஸ்துவோடு அன்பிலே நிலைத்திருப்பதற்கான இரண்டு மாபெரும் வழிகள்: (2) _____ அனுதின வேதவாசிப்பு. _____ தாராளமாக காணிக்கை கொடுப்பது. _____ பன்றியிறைச்சியிலிருந்து விலகியிருப்பது. _____ நிலையான ஜெபத்தில் இருப்பது. 13. இயேசுவை என் வாழ்க்கைக்குள் அழைத்து, புது பிறப்பின் அனுபவத்தை பெற வாஞ்சிக்கிறேன். _____ ஆம். _____ இல்லை. _____ ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளேன்.