
நமது நம்பிக்கை
வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்றும், அவை உபதேசத்திற்கும்,கடிந்துகொள்ளுதலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2 தீமோ. 3:16ஐ பார்க்கவும்) என்றும் விசுவாசிக்கிறோம்.
இயேசு நித்தியமானவரும் சுயத்தோற்றமுள்ளவர் என்றும், அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்றும் விசுவாசிக்கிறோம். அவர் தேவனாக இருந்தும் பூமியில் வாழும்படி மனுஷ ரூபமெடுத்து நமது பாவங்களுக்காக மரித்தார். மேலும் அவர் மூன்று நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்தார் என்றும் விசுவாசிக்கிறோம்.
மனிதனுடைய பாவங்களுக்கானக் கடன் கல்வாரிச் சிலுவையில் இயேசுவின் மரணத்தில் செலுத்தப்பட்டது என்பதை நம்புகிறோம். “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோமர் 6:23). இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன்மூலம், சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தின் கிருபையை ஏற்றுக்கொள்வதன்மூலம் நாம் நித்திய ஜீவன் என்ற பரிசைப் பெறுகிறோம். “ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” (எபே. 2:9).
அவருடைய தியாகமரணத்திற்காக நாம் கிறிஸ்துவை நேசிப்பதால், அவர் யோவான் 14:15ல் கட்டளையிட்டப் பிரகாரம் அவருக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம். நாம் நமது கிரியைகளினால் இரட்சிக்கப்படவில்லை, ஆனால் நாம் இரட்சிக்கப்பட்டதால், அவருடைய கட்டளைகளை வெற்றிகரமான வாழ்வின் வழிகாட்டியாகக்கொண்டு கைக்கொள்ளத் தீர்மானிக்கிறோம்.
இயேசு வெகு சீக்கிரம் வருகிறார் எனத் தீர்க்கதரிசனம் வெளிப்படுத்துவதை நாங்கள் விசுவாசிக்கிறோம் (மத்தேயு 24:32-51ஐ வாசிக்கவும்).
எங்கள் ஊழியம்
வெளி. 14:6-12 வரை யுள்ள நித்திய சுவிசேஷத்தை இவ்வுலகத்திற்கு அறிவிப்பதும், மீதமான திருச்சபையில் உள்ளவர்களை எழுப்புதலடைய ஊக்குவித்து, இயேசுவின்மீதான விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிப்பு என்ற சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மக்களை வழிநடத்துகிறோம். …
போதகர் டக்கின் வாழ்க்கைப் பயணம்…
டக் பேட்சிலர் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய சூழ்நிலைகளை அதின் உச்சக்கட்டத்தில் சந்தித்துள்ளார். அவருடைய நீண்ட மற்றும் குழப்பமான பயணத்தில் சமூக விரோதியாக, போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த அவர் உலகளாவிய ஊழியத்தின் தலைவராக மாறினார். …