வேதபாடங்கள் 26
அன்பு கூருவது அனைத்தையும் மாற்றுகிறது. உதாரணமாக, ஒரு வாலிபப்பெண் தன்னுடைய ஆங்கில படிப்பிற்காக ஒரு பெரிய புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். அது மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. தொடர்ந்து படிப்பது கூடாததாகவும் தோன்றியது.

பின்னர் அவள் ஒரு இளம் பேராசியரை அந்த இடத்தில் பார்த்தாள். பின்னர் அவர்களுடைய நட்பு வளர, அவர்கள் அன்பில் திளைக்கத் துவங்கினர். பின்னர் தான் பாடுபட்டுக்கொண்டிருந்த அந்த புத்தகத்தை எழுதினவர் தன் அன்பர்தான் என்பதை உணர்ந்தாள். அன்று இரவில் அமர்ந்து அந்த முழு புத்தகத்தையும் படித்து முடித்தாள். தான் படித்ததிலேயே மிகவும் சிறந்த புத்தகம் இதுதான் என்றும் புகழ்ந்து கூறினாள். அவளுடைய கண்ணோட்டத்தை மாற்றினது எது? அன்புதானே? இன்றைக்கு அநேகர் வேதவாக்கியத்தை களைப்பூட்டுவதாகவும், ஒடுக்குகிறதாகவும், கவர்ச்சியற்றதாகவும் பார்க்கின்றனர். ஆனால் அதை எழுதினவரை நேசிக்கத் துவங்கும்போது அனைத்தும் மாறுகிறது. அது எவ்விதம் என்பதை இந்த வேதபாடத்தில் நாம் பார்க்கலாம்.
1.வேதவாக்கியங்களின் மூலகர்த்தா யார்?
“உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்;

தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்” – 1 பேதுரு 1:10,11.
பதில்: வேதாகமத்தின் தேவன் (பழைய ஏற்பாட்டின் தேவனும்கூட) எப்போதுமே இயேசு கிறிஸ்துதான். இயேசு இந்த உலகத்தை உண்டாக்கினார் (யோவான் 1:1-13,14; கொலோசெயர் 1:13-17); பத்து பிரமாணங்களை எழுதினார் (நெகேமியா 9:6,13); இஸ்ரவேலரின் தேவனாயிருந்தார் ( 1 கொரிந்தியர் 10:1-4); தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் நடத்தினார் ( 1 பேதுரு 1:10,11). எனவே இயேசுகிறிஸ்துதான் வேதவாக்கியங்களின் மூலகர்த்தா.

2. இந்த பூமியிலிருக்கும் மக்களிடம் இயேசுவின் மனப்பங்கு என்ன?
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” – யோவான் 3:16.
பதில்: விவரிக்கக்கூடாத, நம்முடைய புத்திக்கு எட்டாத, ஏமாற்றாத அன்போடு இயேசு நம் அனைவரையும் நேசிக்கிறார்.
3. நாம் ஏன் இயேசுவை நேசிக்கவேண்டும்?
“அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” – 1 யோவான் 4:19; “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே” – ரோமர் 5:8.

பதில்: நாம் அவருக்கு சத்துருக்களாக இருக்கும்போதே நமக்காக மரிக்குமளவு அவர் நம்மை நேசித்ததினால் நாம் அவரை நேசிக்கவேண்டும்.

4. எவ்விதம் வெற்றிகரமான ஒரு திருமணமும் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஒப்பானவை?
“அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.” – 1 யோவான் 3:22.
பதில்: ஒரு நல்ல திருமணத்தில், ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்பதைப்போன்ற சில காரியங்கள் தவிர்க்கக்கூடாதவை. மற்ற காரியங்கள் மிக முக்கியமானவையாக தோன்றாமலிருக்கலாம். எனினும், அவை தன் துணையை விருப்பப்படுத்துமானால் அவைகளும் அவசியமே. ஒருவேளை விருப்பப்படுத்தாவிடில் அவைகளையும் விட்டுவிடவேண்டும். அப்படியேதான் கிறிஸ்தவ வாழ்க்கையிலும்! இயேசுவின் கட்டளைகளெல்லாம் கட்டாயமானவை. அதோடு வேதவாக்கியங்களில் தம்மை பிரியப்படுத்துகிற நடக்கையின் கொள்கைகளையும் இயேசு குறிப்பிடுகிறார். ஒரு நல்ல திருமணத்தைப் போலவே, தான் நேசிக்கிற இயேசுவை சந்தோஷப்படுத்துகிற காரியங்களைச் செய்வதில்மாத்திரம் ஒரு கிறிஸ்தவனும் மெய்யான மகிழ்ச்சியை கண்டடைவான். அவரை அதிருப்திப்படுத்துகிற காரியங்களை அவன் தவிர்ப்பான்.
5. தம்மைப் பிரியப்படுத்துகிற காரியங்களைச் செய்வதன் விளைவு என்னவென்று இயேசு கூறுகிறார்?
“நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” – யோவான் 15:10,11.
பதில்: கிறிஸ்தவ கொள்கைகளை பின்பற்றுவது ஒழங்கில்லாததும், மந்தமானதும், மதிப்பைக் குறைக்கிறதும், கிரியைகளினால் இரட்சிப்படைவதும் என்று பிசாசு கூறுகிறான். ஆனால் அது நிறைவான மகிழ்ச்சியைக் கொண்டுவருமென்றும் (யோவான் 15:10,11), பரிபூரண வாழ்க்கையைக் கொண்டுவருமென்றும் (யோவான் 10:10) இயேசு கூறுகிறார். பிசாசின் பொய்களை நம்புவது மக்களுக்கு மன உளைச்சலைக் கொண்டுவந்து, “மெய்யான வாழ்க்கையை” இழக்க செய்யும்.

6. கிறிஸ்தவ வாழ்க்கைக்கான குறிப்பிட்ட கொள்கைகளை ஏன் இயேசு நமக்குக் கொடுக்கிறார்?
பதில்: கொடுக்கக் காரணம்:
அ. அவை எப்போதும் நம்முடைய நன்மைக்கானவைகளே (உபாகமம் 6:24). நல்ல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கொள்கைகளை போதிப்பதைப்போல இயேசுவும் தமது பிள்ளைகளுக்கு நல்ல கொள்கைகளைப் போதிக்கிறார்.
ஆ. அவை பாவத்திலிருந்து ஒரு பாதுகாப்பை நியமிக்கிறது (சங்கீதம் 119:11). பாவம் மற்றும் சாத்தானின் ஆபத்தான எல்லைகளில் நுழைவதிலிருந்து இயேசுவின் கொள்கைகள் நம்மை பாதுகாக்கிறது.
இ. அவை கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை எவ்விதம் பின்பற்றுவது என்று நமக்குக் காண்பிக்கிறது (1 பேதுரு 2:21).
ஈ. மெய்யான மகிழ்ச்சியை நமக்குக் கொண்டுவருகிறது (யோவான் 13:17).
உ. அவருக்கான நம்முடைய அன்பை வெளிக்காட்டும் நல்ல சந்தர்ப்பத்தை நமக்குக் கொடுக்கிறது (யோவான் 15:10).
ஊ. மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாயிருக்க நமக்கு உதவுகிறது (1 கொரிந்தியர் 10:31-33; மத்தேயு 5:16).
7. இயேசு கூறுவதன்படி, கிறிஸ்தவர்கள் எவ்விதம் உலகத்தையும் உலகத்தின் தீமைகளையும் பார்க்கவேண்டும்?

பதில்: அவருடைய கட்டளைகளும் ஆலோசனைகளும் தெளிவானவைகளும் குறிப்பானவைகளுமாக இருக்கின்றன:
அ. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். தேவனால் உண்டாகாத உலகத்திலுள்ளவைகள்: (1) மாம்சத்தின் இச்சையும் (2) கண்களின் இச்சையும் (3) ஜீவனத்தின் பெருமையுமாம் (1 யோவான் 2:16). அனைத்து பாவங்களும் இவைகளுக்குள் அடங்கியிருக்கிறது. உலகத்தில் அன்புகூரும்படி நம்மை மயக்க சாத்தான் இந்த மூன்று வழிகளை உபயோகிக்கிறான். உலகத்தை நேசிக்கத் துவங்கும்போது நான் தேவனுக்கு சத்துருவாகிறேன் (1 யோவான் 2:15,16; யாக்கோபு 4:4).
ஆ. உலகத்தால் கறைபடாதபடி என்னை நான் வைத்துக்கொள்ளவேண்டும் (யாக்கோபு 1:27).

8. உலகத்தைக் குறித்த என்ன அவசரமான எச்சரிப்பை தேவன் நமக்குக் கொடுக்கிறார்?
பதில்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” (ரோமர் 12:2) என்று இயேசு, கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறார். வேறுவிதமாகச் சொல்லப்போனால், உங்களைச் சுற்றியிருக்கும் உலகம், தான் விரும்பும் வகையில் உங்களை வடிவமைக்க விடாதிருங்கள் என்று பொருள்படும் (ஆங்கில பிலிப் மொழிபெயர்ப்பு இவ்விதம் கூறுகிறது). பிசாசு சமநிலையில் இருப்பவன் அல்ல. அவன் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் தொடர்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறான். இயேசுவின்வழியாக (பிலிப்பியர் 4:13) நான் உறுதியாய் பிசாசின் ஆலோசனைகளை எதிர்த்து நிற்கவேண்டும். அப்போது அவன் என்னைவிட்டு ஒடிப்போவான் (யாக்கோபு 4:7). என்னுடைய நடக்கையை பாதிக்கும் வேறு என்ன காரியத்திலும் என்னை வைக்கும் நிமிடத்தில்தானே நான் வழுவ ஆரம்பிக்கிறேன். கிறிஸ்தவ நடக்கை உணர்வுகளினாலோ அல்லது திரளானவர்களின் நடக்கையினாலோ தீர்மானிக்கப்படக்கூடாது. மாறாக, வேதவாக்கியங்களிலுள்ள இயேசுவின் வார்த்தைகளினால் தீர்மானிக்கப்படவேண்டும்.
9. நம்முடைய எண்ணங்களுக்கு நாம் ஏன் காவல் வைக்கவேண்டும்?
“அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” – நீதிமொழிகள் 23:7.

பதில்: நம்முடைய எண்ணத்தை காவல் காக்கவேண்டும். ஏனெனில் எண்ணங்கள் நம் குணத்தை வடிவமைக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு எண்ணத்தையும் கிறிஸ்துவிற்கு கீழ்ப்படியச்செய்ய தேவன் நமக்கு உதவி செய்ய விரும்புகிறார் (2 கொரிந்தியர் 10:5). அதேசமயம் உலகத்தை நம் எண்ணத்தில் கொண்டுவர சாத்தான் மிகவும் விடாப்பிடியாக முயற்சிக்கிறான். அதை நம்மடைய ஐந்து உணர்வுகள்வழியாக – விசேஷமாக பார்ப்பது மற்றும் கேட்பதின்வழியாகத்தான் செய்யமுடியும். அவனுடைய காட்சிகளையும் ஓசைகளையும் நம் மனதில் திணிக்கிறான். அவன் கொடுப்பவைகளை பார்க்கவோ அல்லது கேட்கவோ பிடிவாதமாக மறுக்காத பட்சத்தில், அழிவிற்கு நடத்துகிற விசாலமான பாதையில் அவன் நம்மை நடத்திவிடுவான். நாம் எதைப் பார்த்து எதை கேட்கிறோமோ, அதாக மாறுகிறோம் (2 கொரிந்தியர் 3:18) என்று வேதாகமம் தெளிவாக கூருகிறது.

10. கிறிஸ்தவ வாழ்க்கைக்கான சில கொள்கைகளைக் கூறுங்கள்?
“உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்திரியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் “ – பிலிப்பியர் 4:8).
பதில்: உண்மை, ஒழுக்கம், நீதி, கற்பு, அன்பு, நற்கீர்த்தி போன்றவை இல்லாத எல்லாவற்றிலிருந்தும் கிறிஸ்தவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ளவேண்டும். அவர்கள்:
அ. ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், திருடுதல், நேர்மையின்றி இருத்தல், வஞ்சித்து காட்டி கொடுத்து பொய்சொல்லும் எண்ணம் போன்ற அனைத்துவிதமான உண்மையின்மையையும் தவிர்ப்பார்கள்.
ஆ. அசுத்தமான அனைத்தையும் தவிர்ப்பர்கள். இது விபசாரம், வேசித்தனம், முறைகேடான எண்ணம், ஓரினசேர்க்கை, அனைத்து விதமான முறைகேடு, நிர்வான படங்கள், அவதூறு, அசுத்தமான வாழ்க்கை, தேவையற்ற பேச்சுக்கள், நடனங்கள், கீழாக்கும் இசை மற்றும் பாடல்கள், தொலைக்காட்சியிலும் திரை அரங்குகளிலும் காட்டப்படுகிற அநேக காரியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்குகிறது.

இ. நம்மோடு வரும்படி இயேசுவை ஒருபோதும் அழைக்கக்கூடாத இடங்களான, இரவு கேளிக்கை மற்றும் உணவுவிடுதிகள், சூதாட்ட மற்றும் பொது ஆடல் அரங்கங்கள் எல்லாவற்றையும் தவிர்ப்பார்கள்.
பிரபலமான இசை, நடனம், தொலைக்காட்சி நிகழ்வுகள், படங்கள், அரங்குகள் இவைகளில் இருக்கும் ஆபத்துகளைக் குறித்துப் பார்க்க கொஞ்ச நேரம் செலவிடுவோம்.
இசையும் பாடலும்
அநேக விதமான உலக இசைகள் (rap, country, pop, rock, heavy metal, adult contemporary and dance music) அதிகமாக சாத்தானால் பிடிக்கப்பட்டிருக்கின்றன. அதன் வார்த்தைகள் பலவேளைகளிலே தீமையை மேன்மைப்படுத்தி, ஆவிக்குரிய காரியங்களின்மேலிருக்கும் வாஞ்சையை அழிக்கின்றன. இசையின் வல்லமையைக்குறித்து ஆராய்ச்சியாளர்கள் சில ஆச்சரியமான உண்மைகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். 1. அவை உணர்வுகளின் வழியாக மூளையில் நுழைவதால், காரணப்படுத்தும் வல்லமைகளை தவிர்த்துவிடுகிறது. 2. சரீரத்தின் ஒவ்வொரு வேலையையும் அது பாதிக்கிறது. 3. நம்முடைய நாடித்துடிப்பு, மூச்சு, தானாகவே நடக்கும் எதிர்ச்செயல்களை நாம் உணர்வில்லாமலேயே அது மாற்றக்கூடும். 4. இசையின் தாளத்தில் வரும் அழுத்தங்களை மாற்றுவது, நம்முடைய மனநிலையை மாற்றி, அதைக் கேட்பவரை மயக்கும். வார்த்தைகள் இல்லாதபோதே, ஒரு நபரின் உணர்வுகளையும் விருப்பங்களையும், சிந்தைகளையும் கீழ்த்தரமாக்குகிற வல்லமை இசைக்கு உண்டு. உலக இசையமைப்பாளர்கள் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். ரோலிங் ஸ்டோன்ஸ் –ன் தலைவர் மிக் ஜேகர்: “உங்கள் சரீரத்தில் அட்ரினலின் ஓடுவதை உங்களால் உணரமுடியும். இது ஒருவிதமான பாலியல்”1 என்கிறார். ஹால் மற்றும் ஒட்ஸ் என்னும் அமைப்பிலிருக்கும் ஜான் ஓட்ஸ் என்பவர்: “ராக் அன் ரோல் என்பது 99 சதவிகிதம் பாலுறவு தொடர்பானது”2 என்கிறார். இப்படிப்பட்ட இசைகள் இயேசுவை இன்பப்படுத்துமா? உலகமுழுவதிலும் இருக்கிற புறஜாதிமார்க்கத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறினவர்கள்: இன்று உலகத்திலிருக்கிற இசைகள் அவர்கள் பில்லிசூனியத்திலும் பிசாசு ஆராதனையிலும் உபயோகித்த அதே இசைகளே என்கிறார்கள். “இயேசு என்னைச் சந்திக்க வருவாரானால், எப்படிப்பட்ட இசையை என்னோடு சேர்ந்து கவனிக்க அவரை அழைப்பதில் நான் இன்பமடைவேன்?” என்று உங்களையே கேளுங்கள். நிச்சயமில்லாத எந்த இசையும் கைவிடப்படவேண்டியதே. (உலக இசையைக் குறித்த ஆழமான அறிவிற்கு, கேரல் மற்றும் லோவிஸ் அவர்களின் Notes on Music என்ற ஆங்கில புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்). இயேசுவில் அன்புகூரும்போது நம்முடைய இசையைக்குறித்த ஆசையையும் அவர் மாற்றுகிறார். “நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார். அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்” – சங்கீதம் 40:3. தமது பிள்ளைகளை ஏவி, புத்துணர்ச்சியளித்து, கிறிஸ்தவ அனுபவத்தில் பலப்படுத்துகிற அதிகமான நல்ல இசையை தேவன் வைத்திருக்கிறார். அதற்குப்பதிலாக பிசாசின் கீழ்த்தரமாக்கும் இசையை தெரிந்தெடுப்பவர்கள், வாழ்க்கையின் மேலான ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள்.
நடனம்
நடனம் தவிர்க்கமுடியாதவிதத்தில் இயேசுவிடமிருந்தும் ஆவிக்குரிய வாழ்க்கையிலிருந்தும் நம்மை அப்புறப்படுத்துகிறது. இஸ்ரவேலர்கள் பொற்கன்றுக்குட்டியின் முன் நடனமாடினபோது இயேசுவை மறந்துபோனார்கள் (யாத்திராகமம் 32:17-25). பொல்லாத ஏரோதியாளின் குமாரத்தி ஏரோது அரசன்முன் நடனமாடினபோது யோவான்ஸ்நானகன் சிரச்சேதம் பண்ணப்பட்டான் (மத்தேயு 14:2-12). கீழ்வரும் அதிர்ச்சியூட்டும் கணக்கெடுப்பை கவனியுங்கள்: ஒரு கத்தோலிக்க பாதிரியார், தன்னிடத்தில் விபச்சாரத்தைக்குறித்து மன்னிப்புகோரிய பெண்களில் நான்கில் மூன்று பகுதியினர் தங்கள் தவறுக்கான காரணத்தை நடனத்தின்மீது வைத்தனர் என்றார். மற்ற பாதிரிமார்கள்: நான்கில் மூன்று பங்கு என்பது மிகவும் குறைந்த அளவு, மாறாக, அது பத்தில் ஒன்பது பங்கு இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். கிறிஸ்து உங்களோடுகூட ஒரு செயலில் பங்குபெறுவாரானால் நீங்கள் பாதுகாப்பாயிருக்கமுடியும் என்றறியுங்கள். இல்லாதபோது அதைவிட்டு விலகியிருங்கள்.
தொலைக்காட்சி நிகழ்வுகள், படங்கள், திரை அரங்குகள்
தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ, படங்களிலோ, அரங்குகளிலோ நீங்கள் காண்கிறவைகள், உங்கள் கீழான இயற்கையையா அல்லது உயர்ந்த இயற்கையையா எதைத் தூண்டுகின்றன? இயேசுவின்மேல் அதிக அன்புகொள்ள தூண்டுகிறதா? அல்லது உலகத்தின்மேல் அன்புகொள்ளத் தூண்டுகிறதா? இயேசுவை மகிமைப்படுத்துகிறதா? அல்லது சாத்தானின் தீமைகளை முக்கியப்படுத்துகிறதா? இன்றைய நம்முடைய நாட்களில் உலகத்தாரும் கிறிஸ்தவர்களல்லாதவர்களும்கூட அநேக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படத் தயாரிப்புகளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். சாத்தான் கோடிக்கணக்கானோரின் கண்களையும் காதுகளையும் சிறைப்பிடித்திருக்கிறான். அதன் விளைவாக, உலகத்தை சன்மார்க்கமற்ற, குற்றம்நிறைந்த, பயங்கரங்கொண்ட, நம்பிக்கையற்ற சாக்கடைக்குழியாக உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. “தொலைக்காட்சி இல்லாத பட்சத்தில் அமெரிக்க ஐக்கிய தேசத்தில் ஒரு வருடத்தில், 10,000 குறைவான கொலைகளும், 70,000 குறைவான கற்பழிப்புகளும், 7,00,000 குறைவான தாக்குதல்களும் நடக்கும்””3 என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது. உங்களை நேசிக்கிற இயேசு, உங்கள் சிந்தையை, கட்டுப்படுத்தும் சாத்தானின் காரியங்களிலிருந்து எடுத்து தம்மேல் வைக்கும்படியாக கேட்கிறார். “என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்” (ஏசாயா 45:22) என்று அவர் கூறுகிறார்.
1 Newsweek, “Mick Jagger and the Future of Rock”. Jan. 4, 1971, p. 47.
2 Circus magazine, Jan 31, 1976, p.39.
3 Newaweek, “violence, Reel to Reel”, Dec 11, 1995, p. 47.

11. தொலைக்காட்சியை பார்ப்பதற்கு நடத்துதலாக இயேசு கொடுக்கும் தெளிவான ஒரு அட்டவணை என்ன?
“மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்வைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்” – கலாத்தியர் 5:19-21.
பதில்: தவறாக புரிந்துகொள்ளக்கூடாதபடி வேதவாக்கியம் தெளிவாக இருக்கிறது. ஒரு குடும்பம் மேற்கூறப்பட்டிருக்கிற பாவங்களை உள்ளடக்கும் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நிறுத்தினால், அங்கே பார்ப்பதற்கு மிகக் குறைவானதே இருக்கும். இயேசு உங்களைச் சந்திக்க வருவாரானால், உங்களோடு சேர்ந்து பார்க்கும்படி அவரை அழைக்க எந்த நிகழ்ச்சி இனிமையானதாக இருக்கும்? அவரைத் தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் கிறிஸ்தவர்கள் பார்க்கக் கூடாதவைகளே.
12. தீர்மானமாக சுதந்தரமாக சிந்திக்கக்கூடிய இந்த நாளில், இயேசுகிறிஸ்து உட்பட எவருடைய ஆலோசனையும் அவசியமில்லாதபடி, தாங்களாகவே ஆவிக்குரிய தீர்மானங்கள் எடுக்க தகுதி பெற்றிருப்பதாக அநேகர் நினைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களைக் குறித்து இயேசு என்ன சொல்லுகிறார்?
பதில்: இணையில்லாத இயேசுவின் வார்த்தைகளை கவனியுங்கள். “இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக” – உபாகமம் 12:8; “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” – நீதிமொழிகள் 16:25; “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்” – நீதிமொழிகள் 12:15; “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிவனோ இரட்சிக்கப்படுவான்” – நீதிமொழிகள் 28:26.
13. நம்முடைய வாழ்க்கையின் உதாரணத்தையும் தாக்கத்தையும் குறித்து என்ன பவித்திரமான எச்சரிப்பை இயேசு கொடுக்கிறார்?

“என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்” – மத்தேயு 18:6; “ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” – ரோமர் 14:13; “நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை” – ரோமர் 14:7.
பதில்: தலைவர்களும், செல்வாக்குகொண்ட மக்களும், புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர்களும், மற்ற பிரபலமான நபர்களும் சமுதாயத்திற்கு ஒரு நல்ல உதாரணத்தை வைத்து, தங்கள் செல்வாக்கை ஞானமாக உபயோகிக்கவேண்டுமென்று நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம்-இது சமுதாயத்திற்கு அவர்கள் செய்யவேண்டிய கடமை. ஆனால் இன்றைய உலகத்தில் முன்னணி மனிதர்களின் விரும்பத்தகாத மற்றும் பொறுப்பில்லாத செய்கைகளினால் நாம் பலவேளைகளில் அதிர்ச்சியடைகிறோம். தம்மையும் தமது இராஜ்யத்தையும் எடுத்துக்காட்டுகிற கிறிஸ்தவர்கள் பிறருக்கு சிலகாரியங்களைச் செய்யவேண்டிய கடனிலிருக்கிறார்கள் என்று இயேசு தெளிவாக ரோமர் 1:14 ல் கூறுகிறார். மேலும், தங்களுடைய செல்வாக்கையும் உதாரணத்தையும் அலட்சியம்பண்ணி மக்களை வழிதவறச் செய்கிற கிறிஸ்தவர்கள், தம்முடைய இராஜ்யத்திற்குள் நுழைய மாட்டார்கள் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

14. ஆடை ஆபரணங்களைக்குறித்த இயேசுவின் கொள்கைகள் என்ன?
பதில்:
அ. அடக்கமாக உடை உடுத்துங்கள். 1. தீமோத்தேயு 2:9,10 ஐ பார்க்கவும். மாம்சம் மற்றும் கண்களின் இச்சையினாலும், ஜீவனத்தின் பெருமையினாலும் உலகம் நம் வாழ்க்கைக்குள் கொண்டுவரப்படுகிறது என்பதை நினைவுகூருங்கள் (1 யோவான் 2:16). அடக்கமில்லாமல் உடை உடுத்துவது, இம்மூன்றிலும் பொருந்துவதால், கிறிஸ்தவன் அணியக்கூடாத ஒன்றாக இருக்கிறது.
ஆ. ஆபரணங்களையும் நகைகளையும் அப்புறப்படுத்துங்கள். “ஜீவனத்தின் பெருமைதான்” இங்கே பெரிய பிரச்சனை.

இயேசுவின் பின்னடியார்கள் வேறுவிதமாக காணப்படவேண்டும். அவர்களுடைய தோற்றம் மற்றவர்களுக்கு சாட்சிபகர்ந்து வெளிச்சம் கொடுக்கவேண்டும் (மத்தேயு 5:16). நகை போன்ற அணிகலன்கள் சுயத்திற்கு கவனத்தைக் கவர்ந்து சுயத்தையே உயர்த்துகிறது. வேதாகமத்தில் அது பின்வாங்குதல் மற்றும் மருளவிழுகையின் அடையாளம். யாக்கோபும் அவன் குடும்பமும் தங்களை ஆண்டவருக்கு மீண்டும் அர்ப்பணித்தபோது தங்கள் ஆபரணங்களை பூமியில் புதைத்தனர் (ஆதியாகமம் 35:1,2,4). வாக்குத்தத்த நாட்டிற்குள் நுழையுமுன் தங்கள் ஆபரணங்களை அகற்றும்படி ஆண்டவர் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார் (யாத்திராகமம் 33:5,6). ஆபரணம் அணிவதினால் (வளையல், மோதிரம், காதணி ஏசாயா 3:19-23) தமது மக்கள் பாவம் செய்வதாக (வசனம் 9) ஏசாயா 3ல் தேவன் தெளிவாக கூறுகிறார். ஓசியா 2:13 ல் இஸ்ரவேல் தம்மை புறக்கணித்தபோது ஆபரணம் அணியத்துவங்கியதாக ஆண்டவர் சொல்லுகிறார். பேதுருவும் பவுலும் தேவனுடைய மக்கள் அணியவேண்டும் என்று அவர் விரும்புகிற ஆபரணங்களாக சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியை குறிப்பிடுகின்றனர். “சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி” – 1 பேதுரு 3:4; “நற்கிரியைகளினாலும்” – 1 தீமோத்தேயு 2:10. இயேசு வெளிப்படுத்தல் 12:1 ல் மெய்யான சபையை சூரியனை (இயேசுவின் மெய்யான நீதியையும் தூய்மையையும்) அணிந்த தூய்மையான பெண்ணாகக் குறிப்பிட்டு, மருளவிழுந்த சபையை, பொன்னினாலும், விலையுயர்ந்த கற்களினாலும், முத்துக்களினாலும் அலங்கரித்த வேசிக்கு ஒப்பிடுகிறார் (வெளிப்படுத்தல் 17:3,4). பாபிலோனிலிருந்தும், சுயத்திற்கு கவனத்தை இழுக்கும் ஆபரணங்கள் உட்பட அது குறிப்பிடுகிற அனைத்திலிருந்தும் தேவனுடைய மக்கள் தங்களை பிரித்துக்கொள்ளவும், இயேசுவின் நீதியினால் தங்களை அலங்கரிக்கவும் தேவன் அழைக்கிறார் (வெளிப்படுத்தல் 18:2-4). இயேசுவில் அன்புகூரும்போது அவருடைய வாழ்க்கைமுறையை பின்பற்றுவது நமக்கு ஆனந்தமும் இன்பமுமாயிருக்கும்.
15. எவ்விதம் நடக்கையும் கீழ்ப்படிதலும் இரட்சிப்போடு தொடர்புடையது?
பதில்: இயேசுகிறிஸ்துவினால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்பதற்கு கீழ்ப்படிதலும் கிறிஸ்தவ நடக்கையும் ஆதாரமாக இருக்கின்றன (யாத்திராகமம் 2:20-26).

ஒருவருடைய வாழ்க்கைமுறை மனமாறுதலுக்குப்பின் மாறவில்லையெனில், அவருடைய மனமாற்றம் உண்மையானதாக இருக்காது. மனம்மாறின நபர், இயேசுவின் சித்தத்தை ஒவ்வொன்றிலும் கண்டுபிடிப்பதில் மிக அதிக மகிழ்ச்சியையும், அவர் நடத்துமிடத்திற்கு அவரைப் பின்பற்றுவதில் சந்தோஷத்தையும் காண்பார்.
விக்கிரகாராதனையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
கிறிஸ்தவ நடக்கையைக் குறித்துப் 1யோவான் பேசுகிறது. அதன் முடிவில் (1 யோவான் 5:21), தமது சீடன் யோவான்மூலம், விக்கிரகங்களிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளும்படி இயேசு நம்மை எச்சரிக்கிறார்.

அவர்மேலிருக்கிற என் அன்பைக் குறைக்கிற, அல்லது இடையில் வருகிற இசை, நாகரீக உடை, சொத்து, அலங்காரம், தவறான பொழுதுபோக்கு போன்றவற்றையும் அவர் குறிப்பிடுகிறார். மெய்யான மனந்திரும்புதலின் இயற்கையான விளைவு, இயேசுவை மகிழ்ச்சியோடு பின்பற்றி, அவருடைய வாழ்க்கை முறையை கடைபிடிப்பதுதான்.
16. கிறிஸ்தவ வாழ்க்கைமுறையை அனைவரும் விருப்பத்தோடு பார்க்கவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கலாமா?
பதில்: இல்லை. தேவனுக்கடுத்தக் காரியங்கள் ஆவிக்குரியவிதமாய் நிதானிக்கப்படுகிறதாகையால், அவைகள் இயற்கையான மனிதனுக்கு பயித்தியகாரத்தனமாகத் தோன்றும் என்று இயேசு கூறினார் (1 கொரிந்தியர் 2:14). நடக்கையைக்குறித்து குறிப்பிட்டபோது, தமது ஆவியினால் நடத்தப்படவேண்டும் என்று தேடுகிற மக்களுக்கான கொள்கைகளை அவர் விளக்குகிறார். அவருடைய மக்கள் அவருடைய ஆலோசனையை நன்றியோடு மகிழ்ச்சியாகப் பின்பற்றுவார்கள். மற்றவர்கள் அதைப் புரிந்துகொள்ளாமற்போகலாம் அல்லது ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்.
17. கிறிஸ்தவ நடக்கைக்கான இயேசுவின் தரத்தை நிராகரிக்கும் ஒரு நபர் பரலோகத்தை எவ்விதம் பார்ப்பார்?
பதில்: அப்படிப்பட்ட ஒரு நபர் பரலோகத்தில் சோகமான நிலையில் இருப்பார். அங்கே இரவு கேளிகை விடுதிகள் இல்லையெனவும், மதுபானம் இல்லையெனவும், நிர்வாணப்படங்கள் பொருட்கள் இல்லையெனவும், வேசிகள் இல்லையெனவும், உணர்ச்சியைத் தூண்டும் இசை இல்லையெனவும், கீழ்த்தரமான புத்தகங்கள் இல்லையெனவும்,முறைகேடானவை இல்லையெனவும், சூதாட்டம் இல்லையெனவும் முறையிடுவார். இயேசுவோடுகூட உணமையான அன்பின் உறவை உருவாக்காதவர்களுக்கு பரலோகம் நரகமாக இருக்கும். எனவேதான் கிறிஸ்தவத் தரங்கள் அவர்களுக்கு அர்த்தமற்றவையாக இருக்கின்றன (2 கொரிந்தியர் 6:14-17).
18. பரிசேயரை, நியாயந்தீர்ப்பவனை அல்லது கிரியைக்காரனைப்போலவோ இல்லாது நான் எவ்விதம் கிறிஸ்தவ ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றக்கூடும்?

பதில்: நாம் செய்கிற அனைத்தும் இயேசுவிற்கு நம் அன்பையும் கனத்தையும் காண்பிக்க வேண்டும் என்கிற இந்த ஒரு சிந்தையோடே செய்யப்படவேண்டும் (1 யோவான் 3:22). கிறிஸ்து உயர்த்தப்படும்போது (யோவான் 12:32) மக்கள் அவரிடம் இழுக்கப்படுவார்கள். “இயேசு என்னோடு இங்கே ஒருவராக இருந்தால், நான் இதை கேட்பேனா, இதை பாடுவேனா, இதைச் செய்வேனா, இதைப் பார்ப்பேனா, இதைக் குடிப்பேனா, இதை வாங்குவேனா, இதைப் படிப்பேனா, இதைச் சொல்வேனா, அல்லது இங்கே போவேனா?” என்பதும், “இது இயேசுவை கனப்படுத்துமா” என்பதுமே எப்போதும் நம் கேள்வியாக இருக்கவேண்டும். இயேசு என்னோடும் உங்களோடும் இருக்கிறார் (மத்தேயு 28:20). நாம் செய்கிறவைகளைப்பார்க்கிறார். இயேசுவின் கமூகத்தை என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு முகப்பிலும் செயலிலும் நான் உணரவேண்டும். தெளிந்த சிந்தையோடு அவருடன் நேரம் செலவிடும்போது நான் அவரைப்போல மாறுகிறேன் (2 கொரந்தியர் 3:18). சீடர்களுக்குச் செவிகொடுத்ததைப்போல என்னோடிருக்கிற மக்கள் எனக்குச் செவிகொடுப்பார்கள். “ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்று அறிந்துகொண்டார்கள்” – அப்போஸ்தலர் 4:13. அவ்விதம் வாழ்கிறவர்கள் பரிசேயரையோ அல்லது நியாயந்தீர்க்கிறவர்களையோ அல்லது கிரியைக்காரைப்போலவோ இருக்கமாட்டார்கள்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவனுடைய மக்கள் தேவன் கொடுத்த குறிப்பான வாழ்க்கைமுறையை பின்பற்றுவதைக்காட்டிலும் தங்களுடைய அஞ்ஞான அயலகத்தாரைப்போல வாழ்வதையே தெரிந்துகொண்டதினால் தொடர்ச்சியான கலகத்திலேயே இருந்தனர் (உபாகம்ம் 31:16; நியாயாதிபதிகள் 2:17; 1 நாளாகமம் 5:25; எசேக்கியேல் 23:30). இன்றும் அது உண்மையாகவே இருக்கிறது. எவரும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம்செய்யக்கூடாது (மத்தேயு 6:24). உலகத்தோடும் அதனுடைய வாழ்க்கைமுறையோடும் ஒட்டிக்கொள்ளுகிறவர்கள் மெதுவாக சாத்தானால் வடிவமைக்கப்பட்டு, அவனுடைய உணர்வுகளையும் விருப்பங்களையும் பெற்றுக்கொண்டு, இவ்விதமாக இரட்சிப்பை இழந்துபோகும்படியாக குறிக்கப்படுவார்கள். இயேசுவினுடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கான கொள்கைகளைப் பின்பற்றுகிறவர்கள், அவருடைய சாயலாக மாற்றப்பட்டு பரலோகத்திற்கு ஆயத்தப்படுத்தப்படுவார்கள். இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட இடம் இல்லை.
19. கிறிஸ்தவ வாழ்க்கைக்கான அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுவது உங்களுடைய மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஆவதற்கேதுவாக நீங்கள் கிறிஸ்துவை நேசிக்க விரும்புகிறீர்களா?
பதில்: ______________________________
சிந்தனைக் கேள்விகள்
1. நான் என்ன செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிகிறேன். ஆனால் அதைச் செய்ய ஆயத்தமில்லாதிருப்பதாக உணருகிறேன். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்.
பதில்: உடனடியாகச் செய்ய துவங்குங்கள். உணர்வுகளைச் சார்ந்து இருக்காதீர்கள். தேவன் தமது வார்த்தைகளின்வழியாக (ஏசாயா 8:20) நம்மை நடத்துகிறார். உணர்வுகள் பலவேளைகளில் தவறாக நடத்தும். யூத தலைவர்கள் கிறிஸ்துவை கொலைசெய்யவேண்டும் என்று உணர்ந்தனர். ஆனால் அதில் தவறாயிருந்தனர். அநேகர் இயேசுவின் இரண்டாம் வருகையில் இரட்சிக்கப் படுவோம் என்று உணருவார்கள். ஆனால் அதற்குப்பதிலாக இரட்சிப்பை இழந்துபோயிருப்பார்கள் (மத்தேயு 7:21-23). பிசாசால் உணர்வுகளை மாற்றமுடியும். என்னுடைய உணர்வுகளை நான் சார்ந்து இருப்பேனானால் அவன் என்னை அழிவிற்கு நடத்திவிடுவான்.
2. நான் குழப்பத்திலிருக்கிறேன். சில காரியங்களைச் செய்யவேண்டுமென்று நான் அதிகம் விரும்புகிறேன். எனினும் அதன் தோற்றத்தினால் நான் தீமைசெய்வதாக சிலர் உணருவார்களோ என்று யோசிக்கிறேன். நான் என்ன செய்யவேண்டும்?
பதில்: “பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்” – 1 தெசலோனிக்கேயர் 5:22. மாமிச உணவை எடுத்துக்கொள்ளுவது சிலரை காயப்படுத்துமென்றால் மறுபடியும் நான் அதை ஒருபோதும் தொடமாட்டேன் என்று பவுலார் கூறுகிறார் (1 கொரிந்தியர் 8:13). கூடவே, பாதிக்கப்பட்ட நபருடைய உணர்வுகளை அலட்சியப்படுத்தி மாமிச உணவை எடுத்துக்கொள்வதில் தொடருவாரானால் பாவம் செய்வதாகவும் கூறுகிறார்.
3. செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை என்று அநேக காரியங்களை சபைகள் பட்டியலிடுவதாக எனக்குத் தோன்றுகிறது. அது எனக்கு வெறுப்பாயிருக்கிறது. இயேசுவைப் பின்பற்றுவது தானே முக்கியம்?
பதில்: ஆமாம் இயேசுவைப் பின்பற்றுவதுதான் முக்கியம். எனினும் இயேசுவைப் பின்பற்றுவது என்பது ஒரு நபருக்கு ஒன்றாகவும் மற்றொருவருக்கு முற்றிலும் வேறொன்றாகவும் தோன்றலாம். இயேசுவை பாதுகாப்பாக பின்பற்றும் ஒரு வழி, சரியான நடக்கையைக் குறித்த எந்தக் கேள்விக்கும் வேதாகமத்தில் இயேசுவின் பதில் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதுதான். இயேசுவின் கட்டளைகளை அன்போடு பின்பற்றுகிறவர்கள் விரைவில் ஒருநாள் அவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிப்பார்கள் (வெளிப்படுத்தல் 22:14). மனிதன் உண்டாக்கின சட்டங்களைப் பின்பற்றுகிறவர்கள் தவறிப்போய் அவருடைய இராஜ்யத்திற்கு வெளியே நடத்தப்படுவார்கள் (மத்தேயு 15:3-9).
4. ஒரு சில தேவனுடைய கோரிக்கைகள் காரணமற்றதும் தேவையற்றதுமாகத் தோன்றுகிறது. அவை ஏன் முக்கியம் என்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
பதில்: பெற்றோருடைய கோரிக்கைகளை (உதாரணம்: தெருவில் விளையாடாதே) காரணமற்றதாக பிள்ளைகள் பலவேளைகளில் உணருகிறார்கள். ஆனால் பின்நாட்களில் அந்தக் கோரிக்கைக்காக பெற்றோருக்கு நன்றிசொல்லுகிறார்கள். நாம் தேவனைப் பொருத்தவரை குழந்தைகளே. அவருடைய நினைவுகளும் செயல்களும் பூமியைக்காட்டிலும் வானங்கள் எவ்வளவு உயர இருக்கிறதோ, அவ்வளவு உன்னதமானவை (ஏசாயா 55:8,9). நம்முடைய அன்பான பரலோகத் தகப்பனை, நாம் புரிந்துகொள்ளாத சில காரியங்களிலும் நம்பி, அவர் அவ்விதம் கோரினால், “தெருவில் விளையாடுவதையும்” நிறுத்தவேண்டும். நம்மிடமிருந்து எந்த நன்மையையும் அவர் விலக்கவில்லை (சங்கீதம் 84:11). மெய்யாகவே இயேசுவை நேசிக்கும்போது, நான் சந்தேகத்தை அப்புறப்படுத்தி, அவருடைய விருப்பத்தை புரிந்துகொள்ளாவிடினும் எப்போதும் அதைச் செய்வேன். புதுப்பிறப்பே அதற்கான திறவுகோல். நான் மெய்யாகவே மீண்டும் பிறக்கும்போது, உலகத்தை ஜெயிப்பது எனக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனெனில் மனமாறின நபர் எல்லாவற்றிலும் இயேசுவை மகிழ்ச்சியோடு பின்பற்ற விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டிருப்பார் (1 யோவான் 5:4). அவருடைய காரணங்களை புரிந்துகொள்ளாத்தினால் அவரைப் பின்பற்ற மறுப்பது என்னுடைய இரட்சகர்மேல் எனக்கிருக்கும் நம்பிக்கைக் குறைவையே காட்டுகிறது.
5. இயேசுவின் அன்பின் கொள்கைகள், சட்டங்கள், மற்றும் பிரமாணங்களினால் எனக்கு லாபமுண்டா?
பதில்: நிச்சயமாக! ஒவ்வொரு கொள்கையும் சட்டமும் பிரமாணமும் கட்டளையும் நம்பமுடியாத அளவு ஏராளமான ஆசிர்வாதங்களைக் கொடுக்கிறது. தம்முடைய கீழப்படிதலான பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கும் ஐசுவரியமான பரிசும் (லாட்டரி) இருக்குமிடம் தெரியாது போகிறது. இயேசுவின் சட்டங்களைப் பின்பற்றுவதினால் வரும் லாபங்கள்:
பதில்: நிச்சயமாக! ஒவ்வொரு கொள்கையும் சட்டமும் பிரமாணமும் கட்டளையும் நம்பமுடியாத அளவு ஏராளமான ஆசிர்வாதங்களைக் கொடுக்கிறது. தம்முடைய கீழப்படிதலான பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கும் ஐசுவரியமான பரிசும் (லாட்டரி) இருக்குமிடம் தெரியாது போகிறது. இயேசுவின் சட்டங்களைப் பின்பற்றுவதினால் வரும் லாபங்கள்:
- இயேசு சொந்த நண்பராகிறார்.
- இயேசு தொழிலில் பங்காளியாகிறார்.
- குற்ற உணர்விலிருந்து விடுதலை கிடைக்கிறது.
- மனஅமைதி பெறுகிறேன்.
- பயத்திலிருந்து சுதந்திரம் கிடைக்கிறது.
- விவரிக்கக்கூடாத மகிழ்க்கி கிடைக்கிறது.
- நீண்ட ஆயுள்.
- பரலோகத்தில் ஒரு வீட்டைக் குறித்த நிச்சயம்.
- மேம்பட்ட ஆரோக்கியம்.
- எவ்வித மயக்கமுமிருக்காது.
என்ன ஐசுவரியங்கள்! பூமியிலிருக்கும் மிகப் பெரிய ஐசுவரியவான்கள்கூட வாங்கக்கூடாத பெரிய நன்மைகளை பரலோகத் தகப்பனிடமிருந்து உண்மையான கிறிஸ்தவன் பெறுகிறான்.
6. தரங்களையும் வாழ்க்கை முறைகளையும் மற்றவர்களுக்கு சொல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறதா?
பதில்: நம்முடைய சொந்த வாழ்க்கையைக்குறித்து கவனமாக இருப்பதே நாம் பின்பற்றவேண்டிய மிகச் சிறந்த கட்டளை. உங்களை சோதித்துப்பாருங்கள் என்று 2 கொரிந்தியர் 13:5 ல் வேதாகமம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கைமுறை இருக்கவேண்டியவிதமாக இருக்கும்போது நம்முடைய உதாரணம் மௌனமாக சாட்சியாக இருக்கிறது. எவருக்கும் நாம் போதிக்கவேண்டிய அவசியமில்லை. இயேசுவை எவ்விதம் பின்பற்றவேண்டும் என்று தங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்கும் விசேஷ பொறுப்பை பெற்றோர்கள் பெற்றிருக்கிறார்கள்.
7. இன்றைக்கு கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய ஆபத்துகள் எவை?
பதில்: மாபெரும் ஆபத்துகளில் உண்மையற்ற நிலை ஒன்று. இயேசுவின்மேல் அன்பு, உலகத்தின்மேலும் அதனுடைய பாவப்பழக்கங்கள்மேலும் அன்பு என்று, இருதயத்தை பிரிக்கிற இரண்டு விதமான அன்புகளை கிறிஸ்தவர்கள் பெற்றிருக்கிறார்கள். அநேகர் உலகத்திற்கு நெருங்கியிருந்து, அதே நேரம் கிறிஸ்தவர்களாகவும் இருக்க ஆசைப்படுவதாகத் தோன்றுகிறது. அது உதவாது. எவரும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யமுடியாது என்று இயேசு தெளிவாக எச்சரித்திருக்கிறார் (மத்தேயு 6:24).
8. ஆனால் இந்த கிறிஸ்தவ நடக்கைகளைப் பின்பற்றுவது நம்மைக் கிரியைக்காரராக்காதா?
பதில்: இரட்சிக்கப்படவேண்டுமென்று கிரியை செய்யாதபட்சத்தில் அப்படியாகாது. இரட்சிப்பு இயேசுவின் அற்புதமான இலவச ஈவு. கிரியையினால் (அல்லது நடக்கையினால்) இரட்சிப்பு என்பது இரட்சிப்பே அல்ல. எனினும் இரட்சிக்கப்பட்டதினாலும் இயேசுவை நேசிப்பதினாலும் வாழ்க்கைக்கான அவருடைய தரத்தைப் பின்பற்றுவது ஒருபோதும் கிரியைக்காரராக்காது
9. நம்முடைய வெளிச்சம் பிரகாசிக்க வேண்டும் என்கிற இயேசுவின் கட்டளையோடு தொடர்புடைய ஏதாவது கிறிஸ்தவத் தரமிருக்கிறதா?
பதில்: இருக்கிறது! உண்மையான கிறிஸ்தவன் ஒளியாயிருக்கிறான் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 5:14). கூடவே “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்கிறார். நீங்கள் வெளிச்சத்தைக் கேட்பதில்லை; பார்க்கிறீர்கள். கிறிஸ்தவனுடைய வெளிச்சத்தை அவனுடைய வாழ்க்கை, உடை, நடக்கை, ஆகாரம், குணம், அணுகுமுறை, இரக்கம், தூய்மை, தயவு உண்மையின் வழியாக (இயேசுவின் தரங்கள்) மக்கள் பார்க்கிறார்கள். அவனுடைய வாழ்க்கைமுறையைக் குறித்து அவர்கள் விசாரித்துக் கேட்டு பலவேளைகளில் இயேசுவிடம் நடத்தப்படுவார்கள்.
10. கிறிஸ்தவ தரம் கலாச்சாரம் இல்லையா? அது காலத்துடன் மாறவேண்டுமல்லவா?
பதில்: வழக்கங்கள் மாறலாம்; வேதாகமத்தரம் நிலைத்து நிற்கிறது. “தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” – ஏசாயா 40:8. சபை நடத்திச் செல்லவேண்டும்; பின்பற்றக்கூடாது. அது கலாச்சாரத்தினாலும் மனுஷீகத்தினாலும் அந்த நாளின் வழக்கத்தினாலும் வடிவமைக்கப்படக்கூடாது. சபையை நாம் தவறு செய்யும் மனித தரத்திற்குக் கீழே தாழ்த்தக்கூடாது. மாறாக, இயேசுவின் தரத்திற்கு உயர்த்த வேண்டும். சபை உலகத்தைப்போல வாழ்ந்து, பேசி, பார்த்து, நடக்கும்போது, யார் அதனிடம் உதவிக்காகப் போவார்கள்? “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதை தொடாதிருங்கள்” (2 கொரிந்தியர் 6:17) என்கிற ஒரு முழக்கமான அழைப்பை இயேசு தமது மக்களுக்கும் சபைக்கும் அனுப்புகிறார். இயேசுவின் சபை உலகத்தை பிரதிபலிக்காது. மறுக்கவேண்டும். கோடிக்கணக்கானோரை அழித்துவிட்ட உலகத்தின் குழப்பத்தில் சபை சேர்ந்துகொள்ளக்கூடாது. மாறாக, உயர்ந்து நின்று, தயவுள்ள ஆனால் உறுதியான குரலினால் இயேசுவை கவனித்து அவருடைய தரத்திற்கு வரும்படி மக்களை அழைக்க வேண்டும். அதைக் கேட்கிறவர்கள் இயேசுவை நேசித்து தங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்த அவரிடம் கேட்க, இரட்சகர் அவர்களை பாதுகாப்பாக தேவனுடைய இராஜ்யத்திற்குக் கொண்டுசெல்வார். பரலோகத்திற்கான வேறு வழியே இல்லை.
11. நிச்சயமாக அனைத்து நடனங்களும் தீமையானதல்ல! தாவீது ஆண்டவர் முன்பாக நடனமாடவில்லையா?
பதில்: உண்மை! அனைத்து நடனங்களும் தீமையானவையல்ல. தாவீது ஆண்டவருடைய ஆசிர்வாதத்திற்கான நன்றி துதியின் வெளிப்பாடாக குதித்து ஆண்டவர் முன்பாக நடனம் ஆடினான் (2 சாமுவேல் 6:14-15). கூடவே, அவன் தனியாக நடனமாடினான். தாவீதின் நடனம் இயேசுவினால் குணப்படுத்தப்பட்ட ஒரு முடவன் மகிழ்ச்சியில் குதித்ததைப் போன்றதே (அப்போஸ்தலர் 3:8-10). அப்படிப்பட்ட நடனம் அல்லது குதித்தல் உபத்திரவப்பட்டவர்களுக்கு இயேசுவால் கொடுக்கப்படுகிறது. இயேசு அதை பரிந்துரைக்கிறார் (லூக்கா 6:22,23). (சன்மார்க்கமின்மைக்கும் முறிந்துபோன இல்லங்களுக்கும் வழிநடத்துகிற) எதிர் இனத்தோடு சேர்ந்து நடனமாடுவது வேத வாக்கியத்தால் கடிந்துகொள்ளப்படுகின்றது.
12. ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பு ஆக்கினைக்குட்படுத்துகிறவர்களைக் குறத்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்: “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாகளென்று தீர்க்காதிருங்கள்” – மத்தேயு 7:1,2; “ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்” – ரோமர் 2:1. இதைக்காட்டிலும் எவ்விதம் தெளிவாகக் கூறமுடியும்? நான் என்னைத்தவிர மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்கு என்ன காரணமும் கொடுக்கமுடியாது. இயேசுகிறிஸ்துவே நியாயதிபதி (யோவான் 5:22).மற்றவர்கள்மேல் தீர்ப்பு சொல்லும்போது நியாயாதிபதியாகிய கிறிஸ்துவின் இடத்தை எடுத்துக்கொண்டு, நான் அடையாளமாக அந்திகிறிஸ்து ஆகிறேன் (1 யோவான் 2:18). பயங்கரமான சிந்தனை அல்லவா?
கேள்விகள்
1. இயேசுவை நான் நேசிக்கும்போது வாழ்க்கைக்கான அன்பின் கொள்கைகள் பின்பற்ற இன்பமானவைகளாகின்றன:(1)
_____ ஆம்.
_____ இல்லை.
2. இரட்சிக்கப்பட்டு இயேசுவை நேசிப்பதினால், வாழ்க்கைக்கான அவருடைய தரங்களை பின்பற்றுவது கிரியைத்துவம்:(1)
_____ ஆம்.
_____ இல்லை.
3. வேதாகமத்தின் மெய்யான மூல எழுத்தாளர் இயேசுவே: (1)
_____ ஆம்.
____ இல்லை.
4. உலகத்தில் அன்புகூராதிருங்கள் என்றால் நாம் எதை நேசிக்கக்கூடாது (1)
_____ தேசத்தை.
_____ இந்த பூமியை நம்முடைய கிரகமாக.
_____ பாவ, துன்மார்க்க, பயபக்தியற்ற வழிகளையும் இவ்வுலகத்தின் காரியங்களையும்.
5. ஏன் இயேசு நமக்குக் குறிப்பிட்ட கட்டளைகளையும் பிரமாணங்களையும் சட்டங்களையும் கொடுத்திருக்கிறார்? (5)
_____ எப்போதும் நம் நன்மைக்காகவே.
_____ மற்றவர்களுக்கு எவ்விதம் ஒரு நல்ல உதாரணத்தை வைக்கவேண்டும் என்று நாம் அறிய.
_____ நம்முடைய சுதந்தரத்தை எடுத்துப்போட.
_____ கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்காக.
_____ பாவத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க.
_____ அவருடைய கட்டைவிரலின்கீழ் நம்மை வைத்துக்கொள்ள.
_____ நமக்கு மெய்யான மகிழ்ச்சியைக் கொடுக்க.
6. முறையான கிறிஸ்தவ நடக்கையைத் தீர்மானிக்கும் இரண்டு நல்ல சட்டங்கள்:(2)
_____ வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று கண்டுபிடியுங்கள்.
_____ சபை அங்கத்தினர் என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள்.
_____ அஞ்சன பலகையை ஆலோசியுங்கள்.
_____ உங்கள் உணர்வுகளின்படி செல்லுங்கள்.
_____ இயேசு என்ன செய்வார் என்று உங்களை நீங்களே கேளுங்கள்.
7. ஐந்து உணர்வுகளின் வழியாகவே சாத்தானால் நம்மோடு தொடர்புகொள்ளமுடியும் (1)
_____ ஆம்.
_____ இல்லை.
8. கிறிஸ்தவ நடக்கையின் எந்த முகப்பிற்கு இயேசு குறிப்பிட்ட ஆலோசனைகளையும் நடத்துதலையும் கொடுத்திருக்கிறார்? (5)
_____ எவ்விதம் உடை உடுத்துகிறோம் என்பதற்கு.
_____ ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு.
_____ சரீர அலங்கரிப்புக்கு.
_____ ஒலிம்பிக்கில் சறுக்கு விளையாட்டு விளையாடுவதற்கு.
_____ புசிப்பதற்கும் குடிப்பதற்கும்.
_____ விமானத்தை ஓட்டுவதற்கு.
_____ ஒரு வீட்டை வாங்குவதற்கு.
_____ உதாரணங்களுக்கும் செல்வாக்குகளுக்கும்.
9. எவ்விதம் நடக்கையும் கீழ்ப்படிதலும் இரட்சிப்போடு தொடர்புடையது? (1)
_____ நாம் நடக்கையினாலும் கீழ்ப்படிதலினாலும் இரட்சிக்கப்படுகிறோம்.
_____ இரட்சிக்கப்பட்ட நபர் நடக்கையையும் கீழப்படிதலையும் நெகிழ்ந்தாலும் பரலோகத்திற்கு ஆயத்தமாயிருப்பார்.
_____ ஒரு நபர் மனமாறியிருக்கிறார், மறுபடியும் பிறந்திருக்கிறார் என்பதற்கு நடக்கையும் கீழ்ப்படிதலும் சான்றுகள்.
10. விட்டுவிடும்படி தேவன் கேட்கிற அலங்காரம், இசை, தீய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை நான் விடாவிடில் தேவன் அவைகளை விக்கிரகமாக பார்க்கிறார். (1)
_____ ஆம்.
_____ இல்லை.
11. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நல்ல திருமணத்தைப் போன்றது. அதில் வெற்றி என்பது நாம் நேசிக்கும் நபரை பிரியப்படுத்தும் நமது நோக்கத்தினால் வருகிறது. (1)
_____ ஆம். _____இல்லை.
12. எந்த மூன்று வழிகளில் சாத்தான் மக்களை பாவத்திற்குள் நடத்துகிறான்.(3)
வேதாகமத்தை அவர்களுக்கு மறைப்பதன் வழியாக.
_____ ஜீவனத்தின் பெருமையினால்.
_____ வானத்தில் செய்திகளை எழுதுவதினால்.
_____ மாம்ச இச்சையினால்.
_____ கண்களின் இச்சையினால்.
13. எண்ணங்கள் செயல்களாவதினால் நம் எண்ணங்களை பாதுகாப்பது முக்கியம்.(1)
_____ ஆம்.
_____ இல்லை.
14. இயேசுவை உண்மையாக பின்பற்றுவதினால் வரும் வாக்குத்தத்தமான நன்மைகள் சில:(7)
_____ எவ்விதம் தீர்க்கதரிசனம் உரைப்பது என்பதை அறிவோம்.
_____ நீண்ட காலம் வாழ்வோம்.
_____ விவரிக்க முடியாத மகிழ்ச்சியை உணருவோம்.
_____ மேன்மையான ஆரோக்கியம் இருக்கும்.
_____ உங்கள் தலைமயிர் வெண்மையாகாது.
_____ நீங்கள் கோடீசுவரர் ஆவீர்கள்.
_____ பரலோகத்தில் ஒரு வீட்டைக் குறித்த நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.
_____ பயத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள்.
_____ இயேசுவை உங்கள் சொந்த நண்பராகப் பெறுவீர்கள்.
_____ சமாதானம் அடைவீர்கள்.
15. என் நடக்கை கிறிஸ்தவ சகோதரரை காயப்படுத்தினால் நான் என்னசெய்யவேண்டும்? (1)
_____ அதை அலட்சியம் செய்யவேண்டும்.
_____ அவரோடு நேருக்குநேர் சண்டையிடவேண்டும்.
_____ அந்த சகோதரரை சபையைவிட்டு நீக்கவேண்டும்.
_____ அனைவரிடமும் சொல்லவேண்டும். சபையோர் ஒரு பக்கமாவார்கள்.
_____ பாதிக்கும் காரியத்தை நிறுத்தவேண்டும்.
16. வேதாகம ஆலோசனையைக் கேட்காது, தனது சொந்த வழியை பின்பற்ற தீர்மானிக்கும் நபரை இயேசு எவ்விதம் அழைக்கிறார்? (1)
_____ சுதந்தரமான சிந்தனையாளராக.
_____ ஞானமுள்ள நபராக.
_____ முட்டாளாக.
17. கிறிஸ்தவ வாழ்க்கைக்கான இயேசுவின் தரத்தை நிராகரிக்கும் ஒருநபர்:(1)
_____ பரலோகத்திற்குப் போனதும் ஆவிக்குரிய காரியங்களை சடிதியாக நேசிக்கத் துவங்குவார்.
_____ பரிசுத்த பட்டணத்தில் சில நாட்கள் இருந்தபின்பு தனது இருதயக் கடினத்திற்காக மனம் வருந்துவார்.
_____ பரலோகத்தில் வேதனையோடு இருப்பார்.
18. கிறிஸ்தவ வாழ்க்கைக்கான அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுவது மகிழ்ச்சியும் ஆனந்தமுமாயிருக்குமளவு நான் கிறிஸ்துவை நேசிக்க விரும்புகிறேன்.
______ ஆம்.
_____ இல்லை.