நாம் ஒருவருக்கொருவர் ஜெபிக்கவேண்டுமென வேதம் போதிக்கிறது. “நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்” -1 தீமோத்தேயு 2:1


ஜெபம் செய்வதற்கான ஊக்கம்

உலக இரட்சகரும், தேவகுமாரனுமானவரே தமக்கு ஜெபம் இன்றியமையாததென்று உணர்ந்தால், பலவீனம் பாவமுள்ள சாவுக்குரிய மனுஷராகிய நாம் ஊக்கமும் வைராக்கியமுமுள்ள ஜெபம் நமக்கு அவசியமென்று எத்தனை அதிகமாய் உணர்ந்தரிய வேண்டும்!

நம் பரம பிதா தமது ஆசீர்வாதத்தின் நிறைவை நமகருளுவதற்காகக் காத்திருக்கிறார். எல்லையில்லா அன்பின் ஊற்றண்டையில் சென்று அதைத் திருப்தியாய்ப் பருகுவது நமது சிலாக்கியம். 

எவ்வளவு சொற்பமாய் ஜெபிக்கிறோமல்லவா! என்ன விந்தை! தேவன் தம்முடைய பிள்ளைகளில் மிகவும் தாழ்மையானவர்கள் செய்கிற உண்மையான விண்ணப்பத்தைக் கேட்க விருப்பமும் ஆயத்தமுமாயிருக்கிறார். ஆனாலும் நம் தேவைகளைத் தேவனுக்குத் தெரிவிக்க நாம் வெகு அலட்சியமாயிருக்கிறோம். சுபாவத்தின்படி சோதனைகளுக்கு எளிதில் அடிமைப்பட்டு, உதவியின்றி தவிக்கும் மானிடர்களாகிய நாம் அவருடைய அளவற்ற அன்பை உணராமலும்,நாம் வேண்டுவதற்கும் விரும்புவதற்கும் மேலாக உதவ ஆயத்தமாயிருப்பவரை அலட்சியம் செய்தும், அற்பசொற்பமாய் ஜெபித்தும் விசுவாசித்தும் வருகிறதைக் கண்டு பரலோகத் தூதர்கள் நம்மைப்பற்றி என்ன எண்ணக்கூடும்?தேவதூதர்கள் தேவனுக்கு முன்பாகப் பணிந்து தொழுவதை விரும்புகிறார்கள். அவரண்டை நெருங்கி அவர் அருகிலிருக்க ஆசைப்படுகிறார்கள். தேவனோடு நெருங்கி சம்பாஷிப்பதைத் தங்கள் மகா உன்னத இன்பமாகக் கொள்ளுகின்றனர். ஆயினும் இவ்வுலக வாசிகளோ தேவனாலன்றி எவ்வித உதவியும் கதியுமில்லாதிருந்த போதிலும்,அலட்சியமாக, ஆவியின் ஒளியில் நடவாமலும் அவரது பிரசன்னத்தை நாடாமலும், ஒருவாறு திருப்தியடந்தவர்கள் போல் வாழ்வதைக் காணலாம். 

ஜெபத்தை அசட்டை செய்கிறவர்களைப் பொல்லாதவனுடைய காரிருள் மூடிக்கொள்கிறது. காதுக்குள் ஓதும் சோதனைகளினால் சத்துரு அவர்களைப் பாவஞ்செய்யும்படி வசப்படுத்துகிறான். ஏனென்றால் அவர்கள் ஜெபமாகிய திவ்விய ஏற்பாட்டில் தேவன் அவர்களுக்கு கடாட்சித்திருக்கிற சிலாக்கியங்களை உபயோகிக்கிறதில்லை. சர்வவல்லவருடைய அளவிடமுடியாத பொக்கிஷங்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிற பரம பொக்கிஷசாலையைத் திறப்பதற்கு விசுவாசம் என்னும் கையிலே ஜெபம் திறவுகோலாயிருக்கும்போது, தேவகுமாரரும் குமாரத்திகளும் ஜெபிப்பதற்குப் பிரியமற்றிருப்பது ஏன்? 

– கிறிஸ்துவிடம் செல்லும் படிகள், பக்கம் 94

ஜெபக்குறிப்புகள்

உங்கள்(Required)