1965ல், ரேடியோ வாயிலாக வெவ்வேறு இடங்களில் வாழும் மக்களை ஈர்க்கும்படி அமேசிங் ஃபேக்ட்ஸ் ஊழியம் துவங்கியது. இவ்வூழியத்தின் முதல் பிரசங்கியார் ஜோ க்ரூஸ் ஆவார். இவர் ஒவ்வொரு ரேடியோ ஒளிபரப்பு நிகழ்ச்சியையும் ஓர் அற்புதமான உண்மையுடன் துவங்குவார். பின்னர், எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அதைச் சார்ந்த வேதாகமக் கருத்தைப் பேசுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும், கேட்பவர்கள் தனிப்பட்ட விதத்தில் தேவனுடைய வார்த்தையைப் படிக்க அவர்களை ஊக்குவிக்கும்வண்ணம் ஒரு இலவச வேதாகம பாடத்தையும் வழங்குவார்.

படிப்படியாக, கிறிஸ்துவை மையப்படுத்தும் அநேகமானப் புத்தகங்களை வெளியிடுவதன்மூலமும், யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும்படி இலவச அஞ்சல் வழி வேதாகமப் பள்ளியை துவங்குவதன்மூலமும் அமேசிங் ஃபேக்ட்ஸ் மக்களுக்குச் செய்யும் ஊழியங்களை விரிவுபடுத்தியது. விரைவில், கவர்ந்தீர்க்கும் வகையில் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதற்காக பயிற்சியளிக்கப்பட்ட வாலிபர்களை சுவிசேஷம் பிரசங்கிக்க நாடுமுழுவதும் அனுப்பத் துவங்கியது.

பிற்பாடு, 1980ம் ஆண்டில், அமேசிங் ஃபேக்ட்ஸ் தனது ஊழியத்தைப் பிரபல ஊடகமான தொலைகாட்சி வழியாக விரிவுபடுத்தியது. தெளிவான, வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்ட தொலைகாட்சி நிகழ்ச்சிகள் உலக அளவில் உள்ள ஆயிரக்கணக்கான நேயர்களுக்கு வல்லமையுள்ள, வாழ்க்கையை மாற்றக்கூடிய செய்திகளாக அமைந்தன.

1994ம் ஆண்டில், ஆற்றல் மிக்கவரும், ஆத்துமா பாரத்தையுடைய ஊழியக்காரரும் எழுத்தாளருமான டக் பேட்சிலர் இவ்வூழியத்தின் கடிவாளத்தை தன் கைகளில் பெற்றுக்கொண்டார். சபைமக்களிடம் மட்டுமல்லாமல், உலக அளவில் உள்ள பிறமதத்தவரிடமும் தொடர்புகொள்ளக்கூடிய அசாதாரணமான ஆற்றலுடைய, புதுமையான பேச்சாளர் இவர். இவருடைய ஆற்றல்மிக்கத் தலைமைத்துவத்தின்கீழ், இவ்வூழியமானது அதிவேகமாக வளர்ந்தது. இவ்வாறு அதிகமான மக்களைப் பல்வேறு வழிகளில் சந்திக்கமுடிந்தது. (போதகர் டக்கின் சாட்சியைக் கேட்கவும்). 

உதாரணத்திற்கு, இன்று அமேசிங் ஃபேக்ட்ஸ் ஊழியமானது பல்வேறு தொலைகாட்சி நிகழ்சிகளையும், நேரடி அழைப்பு ரேடியோ நிகழ்சிகளையும் நூற்றுக்கணக்கான ஊடகத் தளங்களின் வழியாக வேதாகம பதில்களை நேரடியாக உலகம் முழுவதற்கும் கொடுக்கின்றது. மேலும், நியூயார்க், ஆபிரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, மற்றும் தென் அமெரிக்கா போன்ற தேசங்களில் அற்புதமான, ஆத்தும ஆதாயத்தை செய்யக்கூடிய கருத்தரங்குகளைப் போதகர் டக் நடத்தியுள்ளார். இம்முயற்ச்சிகளினால் ஆயிரமாயிரமான ஞானஸ்நானங்கள் கொடுக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகள் உருவாயின.

ரேடியோ அல்லது தொலைகாட்சி நிகழ்ச்சிகள், அச்சுப்பணி ஊழியம், தீர்க்கதரிசனம் குறித்த செமினார்கள்,பயிற்சியளிக்கும் நிகழ்ச்சிகள், வேதாகமப் பள்ளிகள் அல்லது இணையதள ஊழியம் என்று எந்த ஒரு தளமாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றிலும் அமேசிங் ஃபேக்ட்ஸ் மக்களுக்குத் தேவைப்படும் வேதாகம பதில்களை அவர்களுக்குக் கொடுத்து, கிறிஸ்துவிற்காகத் தீர்மானங்களை எடுக்கவும், பிறரை அவரிடம் வழிநடத்தவும் உதவுகிறது. 

அமேசிங் ஃபேக்ட்ஸின் வெளி ஊழியங்களைக் குறித்த ஒரு கண்ணோட்டம்

சர்வதேச அமேசிங் ஃபேக்ட்ஸ் ஊழியமானது ஓர் உலகளாவிய, பன்முகத்தன்மைகொண்ட ஆத்துமபாரத்தை உடையதும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், வெளி. 14ல்  உள்ள முத்தூதின் சத்தியத்தை அறிவிக்கவும் அர்ப்பணிக்கப்பட்ட ஊழியமாகும். இயேசு கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையை நாங்கள் நம்புவதால், இம்முழு உலகிற்கும் அவரை உயர்த்திப் பிடிக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது. கீழ்க்காணும் வெற்றிகரமான ஊழியங்களுக்குள் உங்களையும் இணைத்துக்கொள்ள உங்களை அழைக்கிறோம். 

அமேசிங் ஃபேக்ட்ஸ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கேபிள் மற்றும் சாட்டிலைட்களான டே ஸ்டார் (Daystar), லைஃப்டைம் நெட்வர்க் (Lifetime Network), ட்ரினிட்டி பிராட்கேஸ்டிங் நெட்வர்க் (Trinity Broadcasting Network), த வேர்ட் நெட்வர்க் (The Word Network), சேஃப் TV (SAFE TV), 3ABN மற்றும் ஹோப் (HOPE) சேனல், இஸ்ரேலில் உள்ள மீ TV(MeTV), இந்தியாவிலுள்ள குட் நியூஸ் TV(Good News TV), மற்றும் ஸ்கேண்டிநேவியாவில் உள்ள லைஃப் TV (Lifestyle TV) மூலம் ஒளிபரப்பபடுகின்றன. உலக அளவில் 2.3 பில்லியன் குடும்பங்களை நாங்கள் சந்திக்கிறோம்.

ரேடியோ: நேரடி வேதாகம பதில்கள், நேரடியாக தொலைப்பேசி வழியாக அழைத்துப் பேசும் போதகர் டக் நடத்தும் நிகழ்ச்சியானது வட அமெரிக்காவில் Sirius XM உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொலைகாட்சி நிலையங்களில் நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7 மணிக்கு (பசிஃபிக் நேரம்) நடைபெறும் இந்நிகழ்ச்சியை இணையதளம் வழியாக உலகின் எந்த இடத்திலிருந்தும் பார்க்கலாம். 

பயிற்சி: இயேசுவிற்காக ஆற்றல்மிக்க ஊழியர்களாக மாறவும் ஆத்துமாக்களை ஆதாயம் செய்யவும் வாஞ்சிக்கும் சுயாதீன ஊழியர்களுக்கும் சபைகளுக்கும் அமேசிங் ஃபேக்ட்ஸ் சிறப்பான பயிற்சியை அளிக்கிறது. தி எம்பவர்ட் சர்ச் நிகழ்ச்சிகள் மற்றும் சென்டர் ஆஃப் இவாஞ்சலிசம் போன்றவை எவ்வாறு வேதபாடம் கொடுக்கவேண்டும், வேதாகமக் கோட்பாடுகளில் தேர்ச்சிப் பெறவேண்டும், சபைகளை ஆற்றல்மிக்க வளர்ச்சி மையங்களாக மாற்றவேண்டும், தேவனைத் தேடி வருகிறவர்களை எவ்வாறு மனமாற்றம் மற்றும் ஞானஸ்நானத்திற்குள் வழிநடத்தி சீஷர்களாக்கவேண்டும், புது விசுவாசிகளை எவ்வாறு தக்கவைப்பது, எவ்வாறு ஊழியத்தில் பிரசங்கங்கள் செய்வது என்று இன்னும் அநேகமான காரியங்களுக்கு அமேசிங் ஃபேக்ட்ஸ் பயிற்சியளிக்கிறது. 


இணையதளம்: www.amazingfacts.org வாயிலாக நீங்கள் வேதத்தைப் படிக்கலாம், வல்லமையான கிறிஸ்தவ ஆதாரங்களை ஆர்டர் செய்யலாம், ஊடகம் வழியாக நேரடி ஒளிபரப்புகளை வீடியோ மற்றும் ஆடியோ வழியாகக் கேட்கலாம் பார்க்கலாம்; மேலும் முற்றிலும் இலவசமான ஊக்கமளிக்கும் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் படிக்கலாம். இன்னும் அதிகமான வேதபாடங்களுக்கும், ஆவிக்குரிய ஆதாரங்களுக்கும் www.bibleuniverse.com மற்றும் www.sabbathtruth.orgக்கு வருகைத் தரவும்.

வேதாகமப் பள்ளி: அமேசிங் ஃபேக்ட்ஸின் பல்வேறு இணையதள மற்றும் அஞ்சல்-வழி வேதாகமப் பள்ளிகளில் 1,00,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். இது தனிப்பட்ட விதத்தில் தொடர்புகொள்ளமுடியாதவர்களுக்கானத் தளமாகும். இதன்மூலம் அநேகர் சந்திக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருநாளும் அநேகமான வேதாகமக் கேள்விகள் அனுப்பப்படுகின்றன, அருகாமையிலுள்ள சபைகளுக்கு ஆத்துமாக்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் பாராட்டுகள் பெறப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும், வந்து குவியும் ஈ-மெயில்கள் மாணவர்களுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும் அற்புதங்களையும் பறைசாற்றுகின்றன.

வெளியீடுகள்: சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு ஆழமானத் தகவல்களை பல்வேறு வேதாகமத் தலைப்புகளிலிருந்து கொடுப்பதற்கு அமேசிங் ஃபேக்ட்ஸ் நூற்றுக்கணக்கான புத்தகங்களை, ஒலிநாடாக்களை, வீடியோக்களை வெளியிடுகிறது. இவைகளில் பொதுவாக அனைவரும் கேட்கக்ககூடிய கேள்விகள் அடங்கிய புத்தகங்கள்,  DVDமற்றும் CD-க்களும் உள்ளடங்கும். அண்மையில், தீர்க்கதரிசனத்தின் இறுதி நிகழ்வுகள் என்ற DVDக்களை மில்லியனுக்கும் அதிகமாக அனுப்பியுள்ளோம். மேலும் கட்டணம் ஏதுமற்ற முழுவர்ண கேட்டலாகையும் கேட்போருக்கு மட்டும் வெளியிடுகிறோம். 

நிறுவனத்திற்குள் அனுப்பப்படும் அறிக்கை: இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அனுப்பப்படும் இந்த முழுவர்ணப் பத்திரிகையானது ஊழியத்தைக் குறித்த தகவல்களையும், ஊழியத்திற்காக நடத்தப்படும் ஆர்வமிக்க செமினார்கள் குறித்த அறிக்கைகளையும், தற்போது நடக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடல்களையும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஆத்துமாகளின் உணர்வுப்பூர்வமான சாட்சிகளையும் உள்ளடக்கியதாக வெளியிடப்படும். இயேசுவுடன் உங்கள் வாழ்க்கையை வலுப்படுத்திக்கொள்வதற்கான ஆதாரங்களையும் இங்கே நீங்கள் கண்டறியலாம். 

அருகாமையில் நடக்கும் ஊழியங்கள்: நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அனுபவமிக்க ஊழியக் குழுவானது சுவிசேஷ,எழுப்புதல் மற்றும் தீர்க்கதரிசன கருத்தரங்குகளை ஒவ்வொரு வருடமும் வட அமெரிக்கா முழுவதும் நடத்துகிறது. புதிய ஆத்துமாக்களை நிலைநிறுத்தி, வெற்றிகரமான சீஷர்களாக மாற்றவும் ஆத்துமா ஆதாயம் செய்யவும் அவர்கள் முழுமுயற்சியுடன் செயல்படுகிறார்கள்.

எழுப்புதல்: கிறிஸ்தவ சபைக்கு சேவைசெய்யும் வண்ணம், அமேசிங் ஃபேக்ட்ஸ் “ஓ’ எழுப்புதலுக்காகவும் கிட்டிச்சேரவும்” போன்ற நிகழ்வுகள் மூலம் தேவனுடைய பிள்ளைகள் எழுபுதலடைந்து,சுவிசேஷத்திற்காகவும் ஊழியத்திற்காகவும் எழும்பி பிரகாசிக்க நிகழ்ச்சிகளை ஆயத்தப்படுத்துகிறது.

உலகளாவிய ஊழியம்: உலக அளவில் வெளி ஊழியங்கள் பெரிய அளவில் நடைபெறுவதற்காக அமேசிங் ஃபேக்ட்ஸ் சாட்டிலைட்டு மூலம் தரத்தை நிர்ணயித்துள்ளது.நியூயார்க்கில் நடக்கும் ரீச் இந்தியா மற்றும் மில்லேனியம் ஆஃப் ப்ராஃப்பஸி, மணிலாவில் நடக்கும் ஃபெய்த ஒடிசி போன்ற சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் ஆப்பிரிக்கா, கொரியா,மற்றும் தென் அமெரிக்காவில் நடக்கும் வெளி ஊழியங்கள் மூலம் 1,50,000க்கும் அதிகமான ஞானஸ்நானங்கள் உலக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ‘த ப்ராப்பஸி கோட்’ மற்றும் ‘மோஸ்ட் அமேசிங் ப்ராப்பஸிஸ்’ போன்ற ஆதாரங்கள் உலகம் முழுவதிலும்முள்ள மக்களுடைய பிரச்சனைகளையும் அவர்கள் இருதயங்களையும் குறித்து பேசக்கூடிய சத்தியத்தைக்கொண்டு அவர்களை சந்திக்கும் பணி மூலம் அமேசிங் ஃபேக்ட்ஸ் தன் அர்ப்பணிப்பைத் தெரிவிக்கிறது.  

அமேசிங் ஃபேக்ட்ஸ் நிறுவனம் விசுவாசத்தின் அடிப்படையில் செய்யக்கூடிய ஊழியமாகும். இந்த ஊழியத்தைத் தாங்கும்படி உங்களைப் போன்றவர்கள் மூலம் வேலைசெய்து, முன்செல்ல இது தேவனை முற்றிலும் சார்ந்துள்ளது என்பதை நினைவில்கொள்ளவும். நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

போதகர் டக்கின் வாழ்க்கைப் பயணம்…

டக் பேட்சிலர் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய சூழ்நிலைகளை அதின் உச்சக்கட்டத்தில் சந்தித்துள்ளார். அவருடைய நீண்ட மற்றும் குழப்பமான பயணத்தில் சமூக விரோதியாக, போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த அவர் உலகளாவிய 

நமது நம்பிக்கை

வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்றும், அவை உபதேசத்திற்கும்,கடிந்துகொள்ளுதலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2 தீமோ. 3:16ஐ பார்க்கவும்) என்றும் விசுவாசிக்கிறோம்.