வெளி. 14:6-12 வரை யுள்ள  நித்திய சுவிசேஷத்தை இவ்வுலகத்திற்கு  அறிவிப்பதும், மீதமான திருச்சபையில் உள்ளவர்களை எழுப்புதலடைய  ஊக்குவித்து, இயேசுவின்மீதான  விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிப்பு என்ற சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மக்களை வழிநடத்துகிறோம். மேலும்  தேவ வார்த்தையினாலும் சாட்சியினாலும் பிறரை மகிழ்ச்சியுடன்  சபையில் நிலைநிறுத்தி,பிற விசுவாசிகளுக்கு சீஷர்களாக ஊழியம் செய்வதும் வழிநடத்துவதுமே நமது ஊழியமாகும். 

வெளி. 14:6-12

(வச 6) பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும் பாஷைக்காரருக்கும்,ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, 

(வச 7)  மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புகொடுக்கும் வேளைவந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான். 

(வச 8) வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.

(வச 9) அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,

(வச 10) அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.

(வச 11) அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.

(வச 12) தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.

எங்கள் கதை

1965ல், ரேடியோ வாயிலாக வெவ்வேறு இடங்களில் வாழும் மக்களை ஈர்க்கும்படி அமேசிங் ஃபேக்ட்ஸ் ஊழியம் துவங்கியது. இவ்வூழியத்தின் முதல் பிரசங்கியார் ஜோ க்ரூஸ் ஆவார். இவர் ஒவ்வொரு ரேடியோ ஒளிபரப்பு நிகழ்ச்சியையும் ஓர் …

நமது நம்பிக்கை

வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்றும், அவை உபதேசத்திற்கும்,கடிந்துகொள்ளுதலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2 தீமோ. 3:16ஐ பார்க்கவும்) என்றும் விசுவாசிக்கிறோம்.